Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்!

[Monday, 2013-08-12 19:36:13]
erik-solheim-160513-seithy-150.jpg

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத் தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சிங்களவர்கள், முஸ்லிம் மற்றும் ஏனையோரின் ஜனநாயகம், பொருளாதார, சமூக வளர்ச்சியை மீளமைப்பதற்கான முனைப்புகளையும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்.

  

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். காலம் கடந்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் இந்த போர்க்குற்றம் தொடர்பில் உன்னிப்பான பார்வையை செலுத்தி போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை உள்நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய நம்பகமான செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில், சர்வதேச சமூகம், சர்வதேச விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்து நான்கு வருடங்களாகியும் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமத்தை அனுமதிக்க முடியாது. இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வலுவான செய்தியை வழங்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இலங்கையை கொண்டு வருவதற்கான தெளிவான செய்தியை அவர் அரசாங்கத்திற்கும் ஏனையவர்களுக்கு வழங்க வேண்டும். காணாமல் போகும் சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்.

மத தீவிரவாதம் அடக்கப்பட வேண்டும். ஊடக ம் மற்றும் நீதித்துறை என்பன சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றார். எரிக் சொல்ஹெய்ம் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் நடு நிலையாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி - செய்தியிணையம்

இலங்கையில் சிங்களவர்கள், முஸ்லிம் மற்றும் ஏனையோரின் ஜனநாயகம், பொருளாதார, சமூக வளர்ச்சியை மீளமைப்பதற்கான முனைப்புகளையும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். 

500 மில்லியன் டொலரை செலவு செய்து, இலங்கை அரசாங்கத்தின் லாபமூட்டும் பாகமான கொழும்பு துறைமுகத்தில் 85% பங்கையும் சீனா கைப்பபற்றிய பின்னர் அதில் புலம் பெயர் தமிழர் என்ன செய்ய முடியும்? மிகின் எயாரை, மாத்தல விமான நிலையத்தை வைத்து புலம் பெயர் தமிழர் என்ன செய்ய முடியும். இலங்கையில் எப்படி முதலிட வேண்டும் என்ற முடிவு எடுக்கும் அதிகாரத்தை புலம் பெயர் தமிழர் பெற்றுகொள்ளும் வரை அவர்கள் பொறுத்திருக்க முடியாதா? அவர்களின் பணமும் இராணுவ வண்டிகள் வடக்குக்கு போக நெடுஞ்சாலைகட்ட தேவைப்படுகிற்தா?

 

இலங்கை கரையில் சீனா பிடிக்கும் மீன்களை தொழில் இல்லாமல் அலையும் தமிழ் மீனவர்கள் பிடிக்க சொலெயும் அனுமதி பெற்றுத்தருவாரா? 

Edited by மல்லையூரான்

எரிக் சொல்ஹேயம் ஏமாறாமல், இனப்படுகொலைகளுக்கு துணை போகாமல் பொறுப்புடன் தொழில் செய்யப் பழக வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
அனைத்து ஈழத்தோழர்களும் உசாராக இருக்க வேண்டிய தருணம் இது..
 
டிஸ்கி
 
கோட்டான் சும்மா கூவாது...
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான ஆதரவை நோர்வே முன்னின்று தானும் வழங்கி சர்வதேச சமூகத்திடமும் அதைப் பெற்றுத் தந்தால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் போராடப் பின்னிற்கமாட்டார்கள். தூண்டி விட்டிட்டு.. நோர்வே வல்லரசுகளிடம்.. பிராந்திய சக்திகளிடம்.. சரணடைந்தால்.. தமிழர்கள் என்ன செய்வது..??! முள்ளிவாய்க்காலில் நோர்வே தமிழருக்குக் கற்றுத் தந்த பாடமும் இலேசில் மறக்கக் கூடிய ஒன்றல்ல..! அது நோர்வேக்கு ஒரு வரலாற்றுக் கரும்புள்ளி..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.