Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் புலிகள்

Featured Replies

தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள்

[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர்.

சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர்.

படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை நடத்தி இரு உலங்கு வானூர்திகளை சேதமடையச் செய்தனர். விடுதலைப் புலிகளின் விமானங்கள் தங்களது நிலைக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து புலிகள் யாழில் முன்னேறி வருகின்றனர்

http://www.eelampage.com/?cn=28137

  • கருத்துக்கள உறவுகள்

புதினம்

  • தொடங்கியவர்

தென்மாட்சி நோக்கி புலிகளின் படையணிகள் நகர்கின்றன.

தென்முனையில் சிறீலங்கா படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்துக்கொண்டு முகமாலை முன்னரங்க இராணுவ நிலைகள் விடுதலைப் புலிகளின் போராளிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளி படையணிகள் முகமாலையிலிருந்து தென்மராட்சி நோக்கி நகர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

செய்தி உண்மையான விடத்து... இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு அனுதாபத்தை தெரிவித்து கொள்ள வேணும்...

படையியலில் தான் நினைத்ததை செய்விக்கும் ஆற்றல் பெற்றவராக புலிகள் தங்களை நிலை நாட்டினர் என்பதில் இன்னும் ஒரு பரினாமத்தை கொண்டு வந்து விட்டார்கள் என்பதாக சொல்லலாம்...

பல படையியலாலர்கள் மாவிலாற்று பிரச்சினையை இலங்கையின் கௌரவப்பிரச்சினையாக்கி இலங்கைப்படையினர் 15ஆயிரம் பேரை தேவை அற்ற சண்டைக்கு முக்கியம் இல்லாத ஒரு பிரதேசத்தில் நிலையெடுக்க தள்ளபபடுகிண்றனர் எண்று... இப்போ அவசர உதவிக்கு வர மேலதிக படைக்கு எங்கிருந்து இராணுவத்தை அரசாங்கம் பின்வாங்க வைக்கப்போகிறதோ...???

உந்தச் செய்தி எல்லாம் புதினம் பதிவு தமிழ் நெற் எண்டு தமிழரின் தளங்களில மட்டும் தான் வருகுது நான் நம்ப மாட்டன், இன்னும் பிபிசி ஒண்டும் சொல்லேல்ல, தமிழரை யாரும் நம்பிவினமே?

உந்தச் செய்தி எல்லாம் புதினம் பதிவு தமிழ் நெற் எண்டு தமிழரின் தளங்களில மட்டும் தான் வருகுது நான்  நம்ப மாட்டன், இன்னும் பிபிசி ஒண்டும் சொல்லேல்ல, தமிழரை யாரும்  நம்பிவினமே?

எனக்கும் அப்பிடித்தான் என்ன செய்ய ஆனா உள்மனம் கேஎக்க மாட்டன் எண்டுது....! :wink:

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டு காலமாக இறுகக் கட்டின வேலிகள் விரைவாக விழுந்துவிட இராணுவம் விட்டுவிடமாட்டார்கள் என்று ரம்புக்கல்ல சொல்லுவார் நாளைக்கு.

டாங்கிகள், கவச வாகனங்கள் எல்லாம் எல்லைக் கோட்டுக்கு நகர்த்தினவையாம். இலகுவாக எடுத்துக் கொண்டு போங்கோ என்று யாராவது உள்ளாலேயே பிளான் பண்ணிட்டாங்களோ?

புலி நித்திரை கொண்டதா நினச்சுக் கொண்டிருந்தவைக்கு அதிசயமாத் தான் இருக்கும். நாங்கள் நிச்சயமாக வெல்வோம் எண்டு சொன்னதன் அர்த்தம் இனித் தான் வெளிக்கும்.

அண்ணையின் திட்டமிடல் புலிகளின் உபாயங்கள் இனி விரியும் களத்தில் தான் நிதர்சனமாகும், மலைக்கட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு நாரதர் இப்படி அடம் பிடிக்கிறீங்க.....

ஆகாததுகளை அப்படியே அப்பால் தூக்கி எறியுங்க....

என்னாச்சு நாரதர் இப்படி அடம் பிடிக்கிறீங்க.....

ஆகாததுகளை அப்படியே அப்பால் தூக்கி எறியுங்க....

அடம் பிடிக்கிறனா நானா, சொல்லேலாம மனசுக்க பூட்டி இருந்ததுகளை வெளியுல விடுறன் :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த கதை கேள்வி பட்டு இருக்கிறேன்.இப்ப தான் பார்க்கிறேன்.

அடம் பிடிக்கிறனா நானா,  சொல்லேலாம  மனசுக்க பூட்டி இருந்ததுகளை வெளியுல விடுறன் :wink:  :lol:

எல்லாத்துக்கு முன்னம் போராட்டத்தில் ஏற்படும் உயிர் பொருள் இளப்புக்களை நாளைக்கு தூக்கி பிடிக்க சிலர் வர இருப்பதால்.... வரவேற்க வேண்டும் ஏற்பாடு செயுங்கோ....! :wink: :P

தென்மாட்சி நோக்கி புலிகளின் படையணிகள் நகர்கின்றன.

தென்முனையில் ஆரம்பிக்கப்பட்ட சிறீலங்கா படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்துக்கொண்டு முகமாலை முன்னரங்க இராணுவ நிலைகளையும் இராணுவ வேலிகளையும் இராணுவ மண் அணைகளும் விடுதலைப் புலிகளின் போராளிகளால் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் படையணிகள் முகமாலையிலிருந்து இராணுவ முகாமையும் தாக்கியழித்து தென்மராட்சி நோக்கி நகர்வதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக் ஏற்பட்டுள்ளதாவும் அறியமுடிகிறது.

பதிவிலிருந்து

நம்புபவர்கள் நம்பட்டும் நம்பாவிட்டால் நமக்கென்ன

  • தொடங்கியவர்

யாழை மீட்கும் சமர் ஆரம்பம்!!!???

இன்று சிறிலங்கா இராணுவத்தினர் முகமாலையில் இருந்து வலிந்த தாக்குதலை மேற்கொண்டதை அடுத்து, விடுதலைப்புலிகள் கடும் பதில் தாக்குதலை தொடுத்து சிறிலங்கா இராணுவத்தினரை விரட்டி அடித்தபடி முன்னேறி வருகின்றனர்.

சில மணி நேரங்களிற்கு முன்பு பொதுமக்களை படையினரின் முகாம்களுக்கு அருகில் இருந்த ஒரு கிலோமீற்றர் தள்ளிச் செல்லும் படி விடுதலைப்புலிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினரின் முகாம்களுக்கு அருகில் இருந்த மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறிச் சென்றனர்.

தற்பொழுது விடுதலைப்புலிகளின் படையணிகள் முகமாலைப் பகுதியில் முன்னேறி வருகின்றன.

இதே வேளை இன்று இரவு 9.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் போர்விமானம் ஒன்று பலாலி இராணுவத் தளம் மீது குண்டு வீச்சை மேற்கொண்டது. அத்துடன் பலாலித் தளம் மீது ஆட்லறித் தாக்குதலையும் விடுதலைப்புலிகள் நடத்தினர். இத் தாக்குதல்களினால் பலாலி இராணுவத் தளத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா வான் படையின் இரண்டு உலங்கு வானூர்த்திகள் அழிக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

முகமாலையில் போரிடும் சிறிலங்கா படையினருக்கு உதவிகளை வழங்க முடியாது வண்ணம், விடுதலைப்புலிகளின் வான்புலிகளும், பீரங்கிப் படையணியும் பலாலித் தளத்தை முடக்கிப் போட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

விடுதலைப்புலிகள் விடிவதற்குள் தென்மராட்சிப் பகுதியை மீட்டெடுப்பார்கள் என்று அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

செய்திகள் தொடரும்..............

http://www.webeelam.com/

விடுதலைப் புலிகளின் படையணிகள் முகமாலையிலிருந்து இராணுவ முகாமையும் தாக்கியழித்து தென்மராட்சி நோக்கி நகர்வதாக  போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக் ஏற்பட்டுள்ளதாவும் அறியமுடிகிறது.

முகமாலையால் மட்டும் முன்னேறுகிறார்கள் என்பது நம்பும் படியாக இல்லைத்தான்......

கச்சாய், தனங்களப்பு, கோயிலாக்கண்டி,கைதடி, நாவற்குழி, எல்லாத்தயும் விட்டுட்டார்களா..??? :wink: :lol:

போனதடவை இந்த இடங்களால் எல்லாம் புலிகள் படை தரையிறக்கப்பட்டது.....!

சூறாவளியை கண்ணாடிக்குடுவைக்குள் வைக்க முற்பட்டால் அதன் விளைவை சிங்கள் அரசு உணர்ந்து கொள்ளவேண்டும்

சிங்கள அரசு சிலவேளை நினைக்கும் பிடிச்ச இடத்தை புலிகள் விட்டுத்தருவினம் என்று களத்திலையும் சிலபேர் விட்டுக்கொடுத்தால் அரசாங்கத்துக்கு நல்லது என்று நினைப்பினம் ஆனால் தலைவர் இனிமேல்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கு முன்னம் போராட்டத்தில் ஏற்படும் உயிர் பொருள் இளப்புக்களை நாளைக்கு தூக்கி பிடிக்க சிலர் வர இருப்பதால்.... வரவேற்க வேண்டும் ஏற்பாடு செயுங்கோ....! :wink: :P

அதைத் தூக்கிப் பிடிக்க வருகிறவர்கள் தாயகத்தில் வலிகளுக்குள்

வாழ்ந்திருக்கமாட்டார்கள்.......

வாய்க்குக் கிடைத்த வாய்ப்பாக போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்

பேர்வழிகளை கணக்கிலெடுக்கத் தேவையில்லை

வேதாளம் வேதாந்தம் பேசும்.

நம்புவதற்கு நாமென்ன முட்டாளா?

தல இப்ப நாங்கள் பின்பக்கத்தாலை போகமாட்டம் வாலிலை அடிக்காமல் தலையிலைதான் அடிக்கிறம் வான்புலிகளையும் வைத்துக்கொண்டு வாலிலை அடிச்சால் கெளரவமா? :evil: :evil: :evil: :evil:

மாற்றுக்கருத்துக்கள் எண்டு புறப்பட்டாலே சிலவற்றை களட்டி எறிந்து விடவேண்டும்.... முக்கியமா சொந்த இனத்தின் மீதான பாசம், எதிர்கால சந்ததியின் மீதான் அக்கறை.... இது எதுவும் இல்லாட்டால் மாற்றுக்கருத்து வந்து ஒட்டிவிடும்... அவர்களால் மட்டும்தான் எதிர்கால பிஞ்சுகளுக்கு எச்சமாய் அடிமைத்தத்தை விட்டு போக முடியும்...!

எதிர்கால சந்ததிகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவன் தன்னை வருத்துகிறான்.... தன்னைப்பற்றி யும் நிகள்காலத்தயும் சிந்திப்பவன் மற்றவனை சாகடிக்கிறான் சந்ததிகளையும்கூட...!

பதிவில் இறுதியாக இணைக்கப்பட்ட செய்திகளின்படி கிளாலி நாகர்கோவில் முன்னரங்குகளும் தகர்க்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது :lol:

தல இப்ப நாங்கள் பின்பக்கத்தாலை போகமாட்டம்  வாலிலை அடிக்காமல் தலையிலைதான் அடிக்கிறம் வான்புலிகளையும் வைத்துக்கொண்டு  வாலிலை அடிச்சால் கெளரவமா? :evil:  :evil:  :evil:  :evil:

எங்கை அடிக்கிறது எண்டது முக்கியம் இல்லை சனம் வெளியால வந்து பாதுகாப்பாய் இடம்பெயரவைக்க கூடிய வாறு அடிக்க வேணும்...!

நம்மாக்களுக்கு சொல்லிக்குடுக்கிற அளவுக்கு எனக்கு சரக்கு பத்தாட்டாலும் நிலமை விளங்கினதால சொன்னன்....!

  • கருத்துக்கள உறவுகள்

   சிங்கள அரசு சிலவேளை நினைக்கும் பிடிச்ச இடத்தை புலிகள் விட்டுத்தருவினம் என்று களத்திலையும் சிலபேர் விட்டுக்கொடுத்தால் அரசாங்கத்துக்கு நல்லது என்று நினைப்பினம்  ஆனால் தலைவர் இனிமேல்

விட்டுத் தரச் சொல்லிக் கேட்டால் மாவிலாற்றுப் பகுதியாலும் சிங்கள இராணுவம் வெளியேற வேண்டுமல்லவா? எனவே கேட்க மாட்டார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் கைவிட்டு பல காலம் ஆகிவிட்டது. இனிப் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட வேண்டியதுதான். அது இரு நாடுகளுக்கிடையில் என்றதாக அமைய வேண்டும்..

அதுதான் புலியள் முகாமுக்கு பக்கத்திலை இருக்கிறயைளை வெளியேறச்சொன்

அதுதான் புலியள் முகாமுக்கு பக்கத்திலை இருக்கிறயைளை வெளியேறச்சொன்

பெரிய முகாம்களுக்கு பக்கத்தில இருந்து ....! எல்லாரையும் வன்னிக்குள் அளைக்க வேண்டும்...! அதுக்கு தக்கவாறு சமர் அமைய வேண்டும்...!

அதனால்த்தான் சொல்கிறேன் பூனகரியால் தரயிறக்கம் இருக்கும் எண்று...!

யாழ்ப்பாண தரையமைப்பு உங்களுக்கு தெரியும்தானே...! முகமாலை உடைச்சால் பின்னால நாவற்குளி வெளியும், இந்தப்பக்கம் கப்பூது , சுட்டிபுரம் கரையும் வெட்ட வெளிகள் தாண்டி ஓடி வலிகாமம் போறது சுலபம் கிடையாது....! வடமராட்ச்சியும் அப்பிடித்தான் வல்லை வெளி தாண்ட வேணும்... குறைஞ்சது தொண்டமனாறு ஆவது... !

ஊடறுத்து தாக்குவது எனும் சண்டையில் புலிகள் மிகவும் துல்லியம் வாய்ந்த தன்மையை நிறையத்தடவை நிறூபித்து இருக்கிறார்கள்....!

தல யாழிலை ஊரடங்கு சட்டம் போட்டிருக்காம்

சிலவேளை இராணுவம் தப்பியோடாமல் முகாமிலை இருக்கச் செய்யவோ என்ன இழவோ அநேகமாக இராணுவத்துக்குதான் போட்டிருப்பினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.