Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தத்தில் பொது மக்கள் காணாமல் போகவில்லை: கெஹெலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

b1957877aaab6c84aa1d94622242ae69.jpg

 யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

 
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
 
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
 
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தக் குழுவில் பராக்கிரம பரன்னகம மனோ ராமநாதன் மற்றும் பிரியந்தி சுரஞ்னா வித்தயாரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மாறாக இந்த நியமனத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கும் அல்லது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலங்கயில் நடைபெறுகின்ற விடயத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
இந்தக் குழுவானது நியமிக்க்பபட்ட தினத்திலிருந்து ஆறு மாத காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாகும். விசாரணை நடத்தும் முறைமை மற்றும் சாட்சிகளை பெறும் விதங்கள் குறித்து இந்தக்குழு தீர்மானிக்கும். அதாவது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை போன்று இதன் செயற்பாடுகள் அமையலாம். விரிவான அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
 
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. காரணம் அக்காலப் பகுதியில் அங்கு சட்டம் இருக்கவில்லை. மாறாக பயங்கரவாதமே இருந்தது.
 
ஆனால் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சில குழுக்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்கள் குறித்தே விசாரரணை செய்யப்படும். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சமப்வங்கள் குறித்தே விசாரணை நடத்தப்படும் என அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=271432241416762112#

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம்பிள்ளை  ஹெகலியவின் புழுகு மூட்டைகளை உடைத்து உண்மைகளை நிலை நாட்ட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஹெகலியவுக்கு கிலி பிடித்து உளறுகிறார் 
 
உண்மையை கன நாளைக்கு மறைக்க முடியாது வெளி வந்தே தீரும்   
  • கருத்துக்கள உறவுகள்

அவர் சரியாகத்தான்  சொல்கிறார்

மக்கள்  இறக்கவில்லை

தமிழர்கள்தான்  இறந்தார்கள் :(

போர் ந்டந்த போது ஐ.நாவின் போர் நேரக் கணக்கீடு 15,000 என்று நினக்கிறேன். நவவீதம் பிள்ளை அதற்கான ஆதரங்களை, இறந்த உடம்புகளை, நட்ட ஈடுகளை உறவினர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் ந்டந்த போது ஐ.நாவின் போர் நேரக் கணக்கீடு 15,000 என்று நினக்கிறேன். நவவீதம் பிள்ளை அதற்கான ஆதரங்களை, இறந்த உடம்புகளை, நட்ட ஈடுகளை உறவினர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நட்ட ஈட்டை வாங்கிக் கொடுத்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து தீர்ந்து விடுமா

சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்ககப்பட வேண்டியதில்லையா

 

13 முடிந்து மாகாண சபையில் வந்து இனி நட்ட ஈட்டுடன் தமிழர் பிரச்சனை இலங்கையில் முடிந்துவிடும் :)

  • கருத்துக்கள உறவுகள்

போர் ந்டந்த போது ஐ.நாவின் போர் நேரக் கணக்கீடு 15,000 என்று நினக்கிறேன். நவவீதம் பிள்ளை அதற்கான ஆதரங்களை, இறந்த உடம்புகளை, நட்ட ஈடுகளை உறவினர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

 

கவனியுங்கள்  வாத்தியார்

இது ஒரு ஆரம்பமாக இருக்கும்

நட்ட ஈட்டை வாங்கிக் கொடுத்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து தீர்ந்து விடுமா

சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்ககப்பட வேண்டியதில்லையா

அது ஐ.நா. பிரச்சனை.

 

நவநீதம் பிள்ளை, ஐ.நா தனது முழு விசாரணையை நடத்த முதல், இப்போது ஐ.நாவின் கையில் இருக்கும் மூன்று முதலிடங்களினால் உறுத்திப்படுத்தப்பட்ட இறப்புகளின் பட்டியல் ஒன்று வைத்திருக்கிறார்கள். அதற்கு தன்னும் நட்ட ஈட்டை ஜனாதிபதியிடம் நவநீதம் பிள்ளை கேட்க வேண்டும். இவை ஐ.நாவால் ஏற்கனே ஊர்ஜிதம் செய்யப்பட்டவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசபயங்கரவாதிகள் காலத்தை கடத்தி இழுத்தடித்து பிரச்சனையின் தீவிரத்தை குறைப்பதில் காலகாலமாக வெற்றி கண்டுள்ளார்கள் அந்தவகையில் இப்போது உள்ள பிரச்சனையையும் இழுத்தடிக்க முயற்சிப்பார்கள் அதற்க்கு ஐநா உட்பட உலகநாடுகளும் ஒத்துழைத்து வருகின்றன என்பது துரதிஸ்ரவசமானது. :(  

நட்ட ஈட்டை வாங்கிக் கொடுத்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து தீர்ந்து விடுமா

சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்ககப்பட வேண்டியதில்லையா

 

13 முடிந்து மாகாண சபையில் வந்து இனி நட்ட ஈட்டுடன் தமிழர் பிரச்சனை இலங்கையில் முடிந்துவிடும் :)

 

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சர்வதேச நியதிகளுக்கமைய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்வது "ஜனநாயக" தீர்வின் மிக முக்கியமான ஒரு அம்சம்.

படுகொலைகள், ஊனப்படுத்துதல், சொத்து அழிப்புகள், ஆக்கிரமிப்புக்கள், வன்கொடுமைகள்  அனைத்துக்கும் சர்வதேச நியதிகளுக்கமைய நட்ட ஈட்டைப் பெற்றுக்கொள்வது மிக முக்கியமான ஒரு அம்சம். இது பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமை என்பதுடன் சிங்கள கொலைகார அரசுகளின் கைகளைக் கட்டிப்போடும்.  எல்லாத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்ப வழிபிறக்கும்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் உட்பட சொகுசாக தப்பி வாழ்ந்தவர்களுக்கு நட்ட ஈட்டின் அருமை தெரியாது. சிங்கள அரசை நட்டஈடு கொடுக்க வைப்பதன் மூலம் ஓரளவு கட்டிப்போட முடியும். இது அவசியம்.நீண்டகாலமாக  (1956, 63, 77, 83, ... ) தமிழர் செய்த தவறுகளில் ஒன்று, நட்ட ஈடுககளை  கேட்டுப் பெறாதது.  ஒவ்வொரு கலவரங்களின் போதும் வசதியானவர்கள் சிலர்  தாய் நாட்டை விட்டு தப்பியோடுவதை பெரும் பாக்கியமாக கருதியவர்கள். தமிழனின் அழிவுக்கு இந்த மனநிலையும் ஒரு காரணம். 

இவ்வாறான சம்பவங்களை வைத்து நாட்டைவிட்டு தப்பியோடும் மனநிலை உடையவர்கள் நட்டஈட்டைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

இது தான் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்துவிடும் என்று நினைப்பது பேதைமை.

 

Edited by Sayani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.