Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமுருகன் காந்தி தல்மையிலான மே 17 இயக்கத்தை ஏன் யாரும் விமர்சிப்பதிலை?

 

அவர்கள் உண்மையாகவே இதயசுத்தியோடு  ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும், கூடங்குளம் போராட்டமாகட்டும், மாணவர்கள் போராட்டமாகட்டும், சிறையில் வாடும் ஈழத்தமிழர் பிரச்சனையாகட்டும் அத்தனைக்கும் முன்னின்று போராடுபவர்கள். அவர்கள் யாரும் பிரபாகரன் வருவார் ஐந்தாம் கட்டப்போர் வெடிக்கும் என்றோ இல்லை பிரபாகரன் பெயரைச் சொல்லியோ மலிவான விளம்பர யுத்திகளைச் செய்யவில்லை. அதையே தான் நாம் வரவேற்கிறோம். தமது  சுயநல அரசியலுக்காக ஈழத்தமிழரைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் பிழைப்பு வாதிகளையல்ல.. :icon_idea:

  • Replies 80
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் காந்தி தல்மையிலான மே 17 இயக்கத்தை ஏன் யாரும் விமர்சிப்பதிலை?

 

அவர்கள் உண்மையாகவே இதயசுத்தியோடு  ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும், கூடங்குளம் போராட்டமாகட்டும், மாணவர்கள் போராட்டமாகட்டும், சிறையில் வாடும் ஈழத்தமிழர் பிரச்சனையாகட்டும் அத்தனைக்கும் முன்னின்று போராடுபவர்கள். அவர்கள் யாரும் பிரபாகரன் வருவார் ஐந்தாம் கட்டப்போர் வெடிக்கும் என்றோ இல்லை பிரபாகரன் பெயரைச் சொல்லியோ மலிவான விளம்பர யுத்திகளைச் செய்யவில்லை. அதையே தான் நாம் வரவேற்கிறோம். தமது  சுயநல அரசியலுக்காக ஈழத்தமிழரைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் பிழைப்பு வாதிகளையல்ல.. :icon_idea:

முள்ளிவாக்காலில் போராட்டம் மௌனிக்கப் பட்டபின்னர் இன்று வரைக்கும் ஈழம் சார்ந்த எந்த போராட்டம் என்றாலும் தலைவர் பிரபாகரனின் போராட்டத்தையும் அவரின் பெயரையும் சொல்லித்தான் நடத்தி வருகின்றார்கள் அப்படி இல்லாத ஒரு சில போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு வழங்குவது இல்லை அந்த வகையில் சீமான் தலைவர் சொல்லி போராட்டம் நடத்துவதில் என்ன தப்பு ?  

இங்கே இருக்கும் கருத்துக்களை வாசித்தால் இரண்டு குரூப்களும்(சீமான் ஆதரவு, சீமான் எதிர்ப்பு) தங்களின் கடைசி எல்லையில்(Extreme end) தொட்டுக்கொண்டு நிற்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் ஈழப்பிரச்சனையை தங்களின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்காமல் இருக்கவே நிச்சயம் பயன்படுத்துகிறார்கள். அதில் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதில் வேண்டுமானால் கட்சிகளுக்குள் வித்தியாசம் இருக்கலாம்.(இதில் சீமானும், வைக்கோவும் உள்ளடக்கம்)..

 

இங்கிருக்கும் தலைவர்களை (காங்கிரஸ் நீங்கலாக) தங்கள் வசம் அரவணைத்து திருப்பி, ஈழ ஆதரவு தளத்தை புத்திசாதுர்யமாக பயன்படுத்தி இலக்கை அடையும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள முதலில் ஈழத்தின் தலைகளிடையே ஒருங்கிணப்பை கொணர்ந்து ஒற்றுமையுடன் தமிழக தலைகளை தட்டுங்கள், அன்றே வெற்றிபடிகளின் கதவுகள் திறக்கப்படும்...

அதுவரை தமிழக தலைகள் ஈழப் பிரச்சனையை ஊறுகாய்போல்தான் அப்பப்போ தொட்டுக்கொள்வார்கள், பெரிய பயன் ஒன்றும் கிட்டாது.

 

ஒருங்கிணைந்த செயல் முயற்சி, ஈழத்தமிழர்களிடமிருந்தே பிறந்து,தொய்வில்லாமல் தொடரவேண்டும்.

 

தமிழகம் தானாக ஈழம் பெற்றுத் தராது.

 

ஒருவருக்கொருவர் சேறுபூசி சண்டையிடாமல், நல்ல ஈழத் தலைகளை தேடுங்களப்பு. :)

 

இதே சாராம்சப்பட சில முறை எழுதியுள்ளீர்கள். நன்றி.

 

ஈழத்தின் தலைகளிடையே ஒருங்கிணப்பை கொணர்ந்து ஒற்றுமையுடன், ஈழ ஆதரவு தளத்தை புத்திசாதுர்யமாக பயன்படுத்தி இலக்கை அடையும் ராஜதந்திரம் தெரிந்திருந்தால் எப்பவோ தனிநாடு கண்டிருப்போம். அது எங்களுக்கு ரொம்பக் கம்மி. அநியாயத்திற்கு சிங்களவர்கள் இதில் மிக திறமைசாலிகள். அவர்களுக்கு எதிரியைக் கூட தனக்கு ஆதரவாகச் செயல்பட வைக்கும் வித்தை தெரியும். எங்களுக்கு தமிழனுக்குள்ளேயே எதிரியை உருவாக்கும் வித்தை தெரியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தமிழர்கள் இப்படி இரண்டு மூன்று அணிகளாகப் பிரியனும். அடிபடனும். தமிழீழ இலட்சியத்தை மறக்கனும்.. அடிமைகளாக இருக்கும்.. என்று விரும்பிற எதிரிக்கும் அவனைச் சார்ந்த சர்வதேச சக்திகளுக்கும் அவர்களுக்கு அடிவருடும் எம்மினத் துரோகளுக்கும்.. தான்..தமிழீழம் மீதும் தமிழ் மக்களின் விடுதலை மீதும் கருசணை கொண்ட மக்கள் நாங்கள் கருத்துக்களால் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கும்.

 

சீமான்.. வை.கோ.. நெடுமாறன்.. திருமாவளவன்.. ராமதாஸ் போன்றவர்கள் எல்லோருமே எமது துயரின் பால் அக்கறையுள்ள தமிழக அரசியல் சக்திகள் தான். இவர்களை விட வேறு பல ஈழத்தமிழ் உணர்வேந்திய உறவுகளும் அங்குள்ளார்கள். எமது விடுதலைக்காக எம் துயரை தமிழகமும் உலகும் அறியனும் என்பதற்காக.. தம்மை தீயில் கொழுத்தியோர் தமிழகத்தைச் சேர்ந்தோர் தான் அதிகம்..!

 

அண்ணன் சீமான்.. அடிப்படையில் தேசிய தலைவரையும்.. தமிழீழத்தையும்.. தமிழ் தொண்மை மிகு புலி அடையாளத்தையும்.. ஈழத்தமிழர் துயரையும்.. நாம் தமிழர் என்ற உணர்வையும் திராவிட மேலாதிக்கத்திற்கு காங்கிரஸ் பணநாயகத்திற்கு மேலால் றோ உளவாளிகளின் திட்டமிட்ட நாசகாரங்களுக்கு மேலால் நிலைநிறுத்த மிகவும் பாடுபட்டு வருகின்றவர்களில் அடங்குபவர்.

 

இங்கு சீமான்.. தேசிய தலைவரை தலைவராக உச்சரிப்பதையே விரும்பாத சக்திகள்.. அவரை படிப்பறவற்றவர் என்று சொல்லவும் செய்கின்றனர். காங்கிரஸில் இடம் கேட்ட.. விஜயை அறிவாளி என்றும் கூற முற்படுகின்றனர்.

 

நாங்கள் சீமானை திட்டுவதன் மூலம்.. இந்த வகையான துரோகிகள் சந்தர்ப்பம் பார்த்து நச்சுக்களை விதைக்கவே இடமளிக்கிறோம்.

 

சீமான் தேசிய தலைவர் மீது கொண்டுள்ள மதிப்பின் அடிப்படையில்.. நாம் கடவுள் மீது கொண்டுள்ள பக்தியின் அடிப்படையில்.. கடவுளிடம் ஆசீர்வாதம் பெறுவது போல பெற்றுக் கொள்கிறார்.

 

இதே இடத்தில் சீமான் கன்னடப் பெரியார் இராமசாமியிடம் ஆசீர்வாதம் வாங்கி இருந்தால் பல பேர்.. அதனை அறிவுபூர்வம்.. முற்போக்கு.. பகுத்தறிவு என்று போற்றிப் புகழ்ந்துவிட்டுப் போயிருப்பார்கள்.

 

ஆனால்.. கன்னடப் பெரியாரின் ஆதிக்கத்துக்குள் ஒரு காலத்தில் கட்டுண்டு கிடந்த சீமானை.. நாம் தமிழர் என்ற உணர்வேந்தலோடு தமிழக மக்களை தமிழனாக உணரச் செய்த பெருமை.. தேசிய தலைவரையும் எமது போராட்டத்தையும்.. அது கொண்டிருந்த நீதியான இலட்சியத்தையும் சாரும். அதனை தமிழகத்தில் வாழ்ந்த சீமான் ஏற்றுக் கொண்டு.. அதன் கீழ் இன்று வரை ஒரு கட்டுக்கோப்போடு செயற்படுவதை நாம் உண்மையில் பாராட்ட வேண்டுமே தவிர அவரில் குறைபிடித்து அவரை எம்மில் இருந்தும் விலக்கி வைக்க முயல்வது.. எதிரிகளுக்கும்.. எதிரிகளுக்கு வால்பிடிக்கும் துரோகிகளுக்கும்.. எமது இன இருப்பை அழிக்க நினைக்கும்.. ஆதிக்க சக்திகளுக்குமே  நாம் உதவி செய்பவர்களாகி விடுவோம்.

 

எம்மை பல வழியிலும் பலப்படுத்த வேண்டிய நேரத்தில்.. சின்னச் சின்ன விடயங்களில் அநாவசிய சிரத்தை எடுத்து.. சினத்தை வளர்த்து ஒற்றுமையை மேலும் மேலும் குலைக்க விரும்பும் சக்திகளுக்கு நாமே எமது பலவீனத்தைக் காட்டி நிற்பது எமது இன இருப்புக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

 

அந்த வகையில்.. நாம் எல்லோரும் ஒன்றுபடும் இடமாக இந்தத் தலைப்பு மாற்றப்படுவதையே நாம் இப்போ செய்ய வேண்டும்.

 

சோழியன் அண்ணாவும் சரி.. ஜீவாவும் சரி.. பையனும் சரி.. சுண்டலும் சரி.. எல்லோருமே எமது போராட்ட நியாயத்தை ஏற்றுக் கொண்ட..புரிந்து கொண்ட உறவுகள். அவர்களிடையே வேற்றுமைகளை வளர்க்க சிலர் செயற்படுகின்றனர். அவர்கள்.. எமது போராட்ட நியாயத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் என்பதை நாம் இலகுவாக அடையாளம் கண்டும் இருக்கிறோம். அவர்களே இவ்வாறான திரிகளில் எமது போராட்ட ஆதரவு சக்திகளை அந்நியப்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். இது எதிரிக்கே நிச்சயம் பலம் சேர்க்கும். அதுதான் அவர்களின் நோக்கமும் கூட.

 

ஆகவே இவற்றைப் புரிந்து கொண்டு கள உறவுகள்.. தேவையற்ற விடயங்களில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து.. சந்தேகங்கள் இருப்பின் அவற்றை சீமானிடமே நேரடியாகக் கேட்டு உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். சீமான் ஒன்றும் சங்கரி.. சித்தார்த்தன்.. டக்கிளஸ் தேவானந்தா.. கோத்தபாய.. சோனியா காந்தி.. கருணாநிதி போன்ற ஒருவரல்ல..! மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க விரும்புகின்ற ஒரு தலைவர். எனவே சந்தேகங்கள்.. வினாக்கள் இருப்பின் சீமானை தொடர்பு கொண்டு உங்களுக்குரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதே சாலச் சிறப்பு. அதுவும் இன்று தமிழர்கள் மத்தியில் சந்தேகங்களை விதைத்து அவர்களைப் பலவீனப்படுத்த எதிரியும்.. பிற சக்திகளும் முனைப்புக் கொண்டுள்ள இந்த வேளையில்..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

கயல்விழிக்கு யாரும் டிக்கெட் போட தேவையிருக்காது அவரே இனி சீமானுக்கும் சேர்த்து டிக்கெட் போடுவார் .தி.மு க, அ தி மு க இரண்டிலும் இருந்து பணம் பார்த்த பரம்பரை .

சீமான் அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார் .இனி அவர் ஈழப்பார்வை டெசோ லெவலுக்கு போய்விடும் .

19/08/2013.

 

எப்போ சொன்னீர்கள் என்று பலர் கேட்பார்கள் அதுதான் திகதி போட்டு பதிந்திருக்கு .

 

கப்பலிலை ஆயுதம் வருகுது  வந்த உடனை தமிழீழத்தை அடிச்சு பிடிச்சு தாறம் எண்டவைக்கு சோத்து பாசலும் குடுத்து பிள்ளையளையும் குடுத்த சனத்துக்கு அந்த பிள்ளையளை பெட்டியிலை கூட குடுக்காதவை இருக்கினம்...      

 

அந்த ஏமாற்றத்தையே தாங்கின சனம் எங்களுடையது.... 

 

சீமான் கப்பலிலை ஆயுதம் கொண்டு வந்து தமிழீழம் பிடிச்சு தாறன் எண்டு எங்களுக்கு சொல்லவும் இல்லை  எங்கட ஆக்கள் அவருக்கு சோத்து பாசலும் குடுக்கேல்லை...   பின்னை அவர் என்ன செய்தால் எமக்கு என்ன...?? 

 

நல்லது ஏதும் செய்தால் மகிழ்ச்சி ,நன்மை செய்யாது தீமை செய்யாது இருந்தாலும் மகிழ்ச்சி , இல்லை கருணாநிதி மாதிரி சிங்கள அரசுக்கு ஆதவாக இருந்து இன்னும் ஒரு படுகொலையை செய்தாலும் ஏற்கனவே நடந்தவை தான்... !  

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.