Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டின் முக்கிய கரையோரங்கள் புலி வீரர் வசம்

Featured Replies

குடாநாட்டு யுத்தம் தொடர்கின்றது.

கரையோரப்பிரதேசங்கள் புலிகள் வசம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டின் பல முக்கிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரையேரப் பிரதேசங்களான மாதகல், கிளாலி, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முகமாலையில் இருந்து முன்னேறிய படையினருக்கும் தாக்குதல் கட்டளை நிலையத்துக்கும் இடையில் இருந்த தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு முன்னேற்ற முயற்சியை மேற் கொண்ட படையினர் புலிகளின் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. யாழ் குடாநாட்டுக்கான தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் கள நிலவரங்கள் பற்றிய உண்மைச் செய்திகளை வெளியிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

athirvu.com

குடாநாட்டு யுத்தம் தொடர்கின்றது.

கரையோரப்பிரதேசங்கள் புலிகள் வசம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டின் பல முக்கிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரையேரப் பிரதேசங்களான மாதகல், கிளாலி, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முகமாலையில் இருந்து முன்னேறிய படையினருக்கும் தாக்குதல் கட்டளை நிலையத்துக்கும் இடையில் இருந்த தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு முன்னேற்ற முயற்சியை மேற் கொண்ட படையினர் புலிகளின் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. யாழ் குடாநாட்டுக்கான தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் கள நிலவரங்கள் பற்றிய உண்மைச் செய்திகளை வெளியிடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

athirvu.com

குருவி..Muhamalai overrun, battle on Mandaithivu எண்டு தமிழ்நெற்..தலைப்புச்சொய்தி போட்டிருக்கு முகமாலை சோதனைச்சாவடி தாக்கியழிக்கப்பட்டதா பதிவு..சங்கதியிலை சொய்திபோட்டு விளாசியிருக்கு.. பிறகு இப்பிடி அதிர்வு செய்திசொல்லுது..எல்லாமே பீலாவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பீலா என்டா உங்களுக்கு பெரிய சந்தோசம் போல

:lol::D:lol:

குருவி..Muhamalai overrun, battle on Mandaithivu எண்டு தமிழ்நெற்..தலைப்புச்சொய்தி போட்டிருக்கு முகமாலை சோதனைச்சாவடி தாக்கியழிக்கப்பட்டதா பதிவு..சங்கதியிலை சொய்திபோட்டு விளாசியிருக்கு.. பிறகு இப்பிடி அதிர்வு செய்திசொல்லுது..எல்லாமே பீலாவோ?

பீலா என்டா உங்களுக்கு பெரிய சந்தோசம் போல

:lol::D:D

இராணுவ பேச்சாளர் இளந்திரயன் அவர்களின் பேட்டியை தொலைக்காட்ச்சி இணையதில் பாத்திருந்தால் எல்லாம் செமிச்சு வயித்துக்கு கலக்கி இருக்கும்... :wink: :lol::D

எமது பெண்களை வீட்டு வளையில் தூக்கில் போடுறதை வேடிக்கை பாக்க நாங்கள் இல்லை எண்டு கடைசியில் ஒரு போடு போட்டார் பாருங்கோ அதுதான் ஹைலைட்...! :wink:

இது ஆரம்பம் கூட இல்லை...!

ஓமோம்.. பிபிஸி க்கு கொடுத்த பேட்டி கேட்டனான்.. வாயைத்திறந்து புலிகள் விமானத்தாக்குதல் நடாத்தினார்கள் எண்டு சொல்ல முடியேல்லை.. குடாநாட்டை பிடிக்கத்தான் தாக்குதல் எண்டுகூட சொல்ல முடியேல்லை.. உதுக்குமேலை என்னத்தை நான் சொல்லுறது?

இப்ப பார்க்கிற மாதிரிக்கு முடிவிலை வெற்றிகொண்ணடாடி பின்வாங்கின செய்தி வரும்போலை கிடக்கு..

:P :D:lol:

திருகோணமலை மாவிலாறையே இன்னும் படை கைப்பற்றேல்லை.. என்னண்டப்பா யாழ்ப்பானத்திலை உங்கடை அடிக்கு தாக்குப்பிடிக்கிறது.. :wink:

பீலா என்டா உங்களுக்கு பெரிய சந்தோசம் போல

:D:D:D

இராணுவ பேச்சாளர் இளந்திரயன் அவர்களின் பேட்டியை தொலைக்காட்ச்சி இணையதில் பாத்திருந்தால் எல்லாம் செமிச்சு வயித்துக்கு கலக்கி இருக்கும்... :wink: :D:lol:

எமது பெண்களை வீட்டு வளையில் தூக்கில் போடுறதை வேடிக்கை பாக்க நாங்கள் இல்லை எண்டு கடைசியில் ஒரு போடு போட்டார் பாருங்கோ அதுதான் ஹைலைட்...! :wink:

இது ஆரம்பம் கூட இல்லை...!

ஓமோம்.. பிபிஸி க்கு கொடுத்த பேட்டி கேட்டனான்.. வாயைத்திறந்து புலிகள் விமானத்தாக்குதல் நடாத்தினார்கள் எண்டு சொல்ல முடியேல்லை.. குடாநாட்டை பிடிக்கத்தான் தாக்குதல் எண்டுகூட சொல்ல முடியேல்லை.. உதுக்குமேலை என்னத்தை நான் சொல்லுறது?

இப்ப பார்க்கிற மாதிரிக்கு முடிவிலை வெற்றிகொண்ணடாடி பின்வாங்கின செய்தி வரும்போலை கிடக்கு..

:P :D:lol:

திருகோணமலை மாவிலாறையே இன்னும் படை கைப்பற்றேல்லை.. என்னண்டப்பா யாழ்ப்பானத்திலை உங்கடை அடிக்கு தாக்குப்பிடிக்கிறது.. :wink:

அப்ப மண்டை தீவை பிடிக்கேல்லை எண்டுறீயள்.... உங்கட ஆக்கள் அல்லை பிட்டியில தவளுகினமாம்....! கேள்விப்பட இல்லையே...! அராலி தாண்டி ஊர்காவல்துறைக்கு ஓடுற பிளான் இருந்தா பிளானை மாத்த சொல்லுங்கோ.... காரைநகர் கட்டுப்பாட்டில வந்திடும் எண்டு... !

தீவகத்தி உங்கட ஆக்கள் காப்பாத்தவேணும் எண்டா உங்கட ஆக்கள் யாழ்ப்பாணத்தை விட்டுட்டு வரவேணும்... இப்ப மாவிலாத்துக்கு உங்கட ஆக்களை கொண்டு போகேக்கையே சொன்னவை முக்கியம் இல்லாத ஒரு பகுதியை கைப்பற்ற எண்டு முயற்சித்து மீட்ப்பு இராணுவமாக மேலதிகமாக இருந்த இராணுவத்தை கொண்டுபோய் முடக்கிப்போட்டு கஸ்ரப்படப்போகினம் எண்டு... இப்ப உங்கட ஆக்களால மாவிலாற்று சண்டையையும் நிப்பாட்ட ஏலாது அங்கை இருக்கிறவையையும் எடுக்க ஏலாது.... இப்ப மண்டை அராலியை காப்பத்தவேணும் எண்டா யாழ்ப்பாணத்தில இருந்துதான் எடுக்க வேணும்...! ஆனா ஆராலியை விட்டா காரைநகர் அம்பேல்....! பிறகு இந்திய கப்பல்கள் கூட காங்கேசன் துறை வர ஏலாது... உங்களை காப்பாத்த....!

எதுக்கும் இப்போதைக்கு ஒண்டையும் நம்பாதேங்கோ... புலிகள் ஆனையிறவை பிடிக்க இல்லை எங்கள் கட்டுப்பாட்டில் எண்டுதானே கடைசி வரை சொல்லுறது....! ஒண்டை கவனியுங்கோ இது மனிதாபிமானத்துக்கான சண்டை எண்டு சொல்ல இல்லை....!

ஆனாலும் மக்களின் பாதுகாப்பில்த்தான் இந்த சண்டையின் முடிவு தங்கி இருக்கிறது.... அவர்கள் பாதுகாப்பாய் வெளியேற ஆவன செய்தார்களாயில் வெற்றி பெறுவது கடினம் இல்லை....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ந.க்.ஸ் மடிவதனா!

நோகும்தான்! :lol: ... என்ன செய்கிறது! :wink: .. உதே உந்த நோ நொந்தால் இனி வரப்போறதிற்கு மண்டையை அல்லோ போடப் போறாய்!! :D:lol: .... ஆனால் நுயூஸுகளை கேட்காமல் இருந்தால் தப்பலாம்!!! :idea: ... தப்பத்தான் வேணும்!! :shock: ஏனெனில் நாளை உதைக்க ஒரு ஆள் குறையக் கூடாதல்லோ!!!! :D:D .. நல்ல நக்கிக் கிக்கி தெம்பாயிரு :!: :?: :!: :?: சூடு, சொரணை ஏதும் :?: :?: :?: :?: இருந்தால் தமிழனாக மட்டுமல்ல மனுசனாகவும் இருந்திருப்பாய்!!! :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் தந்த செய்தியில் மண்டைதீவைத்தவிர மற்றவை முழுமையாக உறுதிப்படுத்தப்படாதவை. நேற்று கச்சாயில் தரையிறக்கிய புலிகள் அணிதான் சண்டை செய்துள்ளது. எனவே அதுவரை கிளாலி புலிகளிடம் விழவில்லையென்று கொள்ளலாம். கச்சாயில் தரையிறங்கிய புலியணியின் தாக்குதல்களின்பின் கிளாலிக் கடற்படைத்தளம் விழலாம்.

இதில் மாதகல் கைப்பற்றப்பட்டதாக வந்த செய்தி ஆச்சரியமளிக்கிறது. செய்தியில் நம்பிக்கையுமில்லை. எப்படி? தரையிறக்கம் மூலமாகவா? தீவகமே முழுமையாகக் கைப்பற்றப்படாத நிலையில் மாதகலில் அணியை வைத்திருப்பது சாத்தியமில்லை. காரைநகர்ப் படைத்தளத்தையும் தாண்டி வினியோகங்கள் தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பது சிக்கல். சிலவேளை ஊடுருவல் அணிகளாக சிறு அணியொன்று இறக்கப்பட்டிருக்கலாம். நிலத்தைக் கைப்பற்றியிருக்க இப்போது சாத்தியமில்லை.

இது மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையே என்று அறிவித்துவிட்டு புலிகள் பழைய நிலைகளுக்குத் திரும்பி வந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன். நடக்கும் சண்டையும் புலிகளின் முழு அளவிலான யுத்தம் போலத் தெரியவில்லை. அரசியல் ரீதியில் அதற்கான காலம் வந்துவிட்டதாகப் புலிகள் கருதவில்லையென்றே நினைக்கிறேன். முறைப்படி ஒப்பந்தம் முறிக்கப்பட்டதாக அறிவித்து நோர்வே விலகியபின்னர்தான் அதுசாத்தியப்படுமென்று நினைக்கிறேன். இப்போது நடப்பது நிலமீட்புச் சண்டையே என்றால் மகிழ்ச்சிதான்.

ஆனால் தமிழர்கள் குதிக்கும் குதியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்.. பிபிஸி க்கு கொடுத்த பேட்டி கேட்டனான்.. வாயைத்திறந்து புலிகள் விமானத்தாக்குதல் நடாத்தினார்கள் எண்டு சொல்ல முடியேல்லை.. குடாநாட்டை பிடிக்கத்தான் தாக்குதல் எண்டுகூட சொல்ல முடியேல்லை.. உதுக்குமேலை என்னத்தை நான் சொல்லுறது?

இப்ப பார்க்கிற மாதிரிக்கு முடிவிலை வெற்றிகொண்ணடாடி பின்வாங்கின செய்தி வரும்போலை கிடக்கு..

:P :D:lol:

திருகோணமலை மாவிலாறையே இன்னும் படை கைப்பற்றேல்லை.. என்னண்டப்பா யாழ்ப்பானத்திலை உங்கடை அடிக்கு தாக்குப்பிடிக்கிறது.. :wink:

இதென்ன பகிடியாகக் கிடக்கு! கருணா கும்பலைப் போல, ஆமி செய்ததை தான் செய்தது என்றோ, கொழும்பில் இருந்தபடி தரவையில் கொடி ஏத்தினோம் என்று பெருமையடிக்கின்றதென்றோ, இந்தியாவில் ஒளித்துக் கொண்டு, மட்டக்களப்பு களத்தில் இருப்பதாக புழுகு மூட்டை அவிழ்க்கின்ற வேலையையா புலிகள் செய்கின்றாரகள்;. உருப்படியா கொள்ளை இலட்சியத்தோடு போராடப் போயிருந்தால், தானே உண்மை தெரியும்.

குடாநாட்டைப் பிடிக்கின்றதோ, இல்லையோ என்று செயலில் தான் காட்ட இயலும். 5 000 பேர் இருக்கின்றதாகச் சொல்லி, 5 பேரோடு ஓடின கதையையும், தங்களின் வீரம் எப்படிப்பட்டது என்று செயலில் காட்டும் புலிகளும் நிறைய வித்தியாசமோய்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் சொல்வது உண்மையாக இருக்கலாம். இளந்திரையன் கூட, இராணுவநடவடிக்கையை தடுத்துநிறுத்தும் பதிலடி, என்றவாறே சொல்லியிருக்கின்றார். ஆனால் பின்வாங்கல் சாத்தியப்படுமா என்பது ஜயமே! அவ்வாறு யாரும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வைத்து நெருக்கடி கொடுக்கும்போது, மாவிலாற்றையும் விட்டு சிறிலங்கா அரசும் வெளியேற வேண்டி வரும். அதை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை.

தலைவரின் சிந்தனைகள் எப்படி அமைந்தாலும், இது ஒரு தற்பாதுகாப்புத் தாக்குதல் என்றாலும் கூட, ஆரம்பமே இப்படி இருக்கின்ற சந்தோசம் பலருக்கு உண்டு. எந்தத் துரோகிகளாலும், தலைவரையோ, தமிழீழ மக்களையோ அசைத்து விட முடியாது. விடக் கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறு பின்வாங்கல் ஒரு தந்திரம்தான். நீரைத்திறந்துவிடுவதென்று முடிவெடுத்தபின் பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டு அப்பகுதியைத் தக்கவைக்க வேண்டிய தேவையில்லை. அத்தோடு அப்பகுதியை இழப்பதன்மூலம் புலிகளின் நிலமீட்பை நியாயப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையே மாவிலாறு இழப்பு.

புலிகள் மூதூர் நோக்கி முன்னேறியபோது 'பழைய நிலைகளுக்குத் திரும்பும்படி' அறிவுறுத்திய சொல்ஹெய்ம், இப்போது எதுவும் சொல்லவில்லை. காரணம் மாவிலாறை அரசாங்கம் கைப்பற்றி வைத்திருப்பதுதான்.

ஆனால் புலிகளால் முக்கிய இடங்கள் கைப்பற்றப்பட்டால், அவர்களைப் பின்வாங்க வைப்பதற்காக அரசு மாவிலாறைக் கைவிடும்.

அச்சந்தர்ப்பத்தில் சிங்களவர்களுக்குப் பதில் சொல்லிமாளாது அரசாங்கத்தால்.

எப்படிப்பார்த்தாலும் தமிழருக்கு நன்மைதான்.

செய்தி நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறை விசரைக்கிழப்புகிறது.

மக்களை உசுப்பேத்துவதுதான் இவர்களுக்கு வேலை. புலிகளே இது நிலமீட்பென்று சொல்வில்லை. அதிகாரபூர்வமாக ஒரு நடவடிக்கைப் பெயர்வைத்து வெளியிடவி்ல்லை. இன்ன இன்ன இடங்களைக் கைப்பற்றினோம் என்றும் எதுவும் சொல்லவில்லை. இது உண்மையில் ஒரு நிலமீட்பு நடவடிக்கையென்றால் ஓயாத அலைகளின் தொடர்ப்பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ அறிவித்து நடவடிக்கை செய்வார்கள். மேலும் வழிநடத்துநர், பிரதித்தளபதிகள், படையணிகள் என்று விவரங்கள் வெளியிட்டுச் செய்வார்கள். இதுவரை அப்படியில்லை.

நடவடிக்கை பற்றி அவர்கள் வெளியிட்ட தகவல்கள்தாம் யதார்த்தமானவை.

செய்தி இணையம் நடத்துபவர்கள் யாழ்ப்பாணத்தில் யாரிடமாவது தொலைபேசியில் பேசுவார்கள். அவர்கள் சொல்லும் ஒரு தகவலைச் செய்தியாக்கிப் பரப்பிவிடுவார்கள். ஒரு இணையம் எழுதுவதை உடனே மற்றவர்கள் படியெடுத்துப் பரப்புவார்கள். இதுதான் நடக்கிறது.

நான்கூட குருநகருக்கு எடுத்துக் கதைத்தபோது, காலையில் இயக்கத்தைக் கண்டதாகச் சொன்னார்கள். கல்முனையிலிருந்து வந்து இறங்கியதாகச் சொன்னார்கள். ஆனால் கூர்ந்துபார்த்தால் அது தரையிறக்கமோ, நிலமீட்போ இல்லை. நாலைந்துபேர் வந்துபோயிருக்கிறார்கள். அங்கு இராணுவத்தினர் இல்லை. இதுவே ஒரு செய்தி இணையமென்றால், குருநகர், பாசையூர், கொழும்புத்துறை எல்லாம் மீட்கப்பட்டதாகவும் யாழ் நகரையும் கோட்டையையும் நோக்கி அணிகள் முன்னேறுவதாகவும் அவசரமாக ஒரு செய்தி போட்டிருப்பார்கள்.

புலிகளின் அணிகள் சிறுகுழுக்களாக ஊடுருவது யதார்த்தம். அது தாக்குதலோடு சம்பந்தப்பட்ட வேறு தேவைகளுக்காக. மாதகலிற்கூட அப்படியொரு சிறுகுழு சென்றிருக்கலாம். அதை யாராவது பார்த்திருக்கலாம். வெளிநாட்டிலிருந்து அங்குக் கதைத்த ஒருவருக்கு அதைச் சொல்லியிருக்கலாம். பேனைப் பெருமாளாக்கும் எங்கட சனத்துக்குச் சொல்லவா வேண்டும்?

கச்சாயிற்கூட அப்படியொரு சம்பவம்தான் நடந்திருக்குமென்று நினைக்கிறேன்.

கிளாலி, நாகர்கோவில் படைத்தளங்கள் தாக்கப்படுவதாக செய்தி போட்டு 30 மணித்தியாலங்களுக்கும் மேலாகிவிட்டது. இதைப்பார்ப்பவர்களுக்கு, இவ்வளவு நேரமும் தாக்குதல் நடத்தி இன்னும் கைப்பற்றவில்லையா என்ற கேள்வி வருவதில்லையா? இப்படியான செய்திகள் மூலம் இராணுவம் பலமான எதிர்த்தாக்குதல் தொடுப்பது போன்றும் புலிகள் பலவீனப்பட்டது போன்றும் ஒரு எண்ணத்தை இவர்களே விதைக்கிறார்கள்.

திருகோணமலையில் புலிகளின் முன்னேற்றத்தை வைத்து ஆகோ ஓகோ என்று குதித்து, இந்தா தலைநகர் கைக்கு வந்துவிட்டது என்று கூத்தாடியவர்களுக்கு இயக்கம் வைத்த ஆப்பின் பிறகாவது திருந்துவார்கள் என்று பார்த்தேன். நடக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை, மண்டைதீவில் தரையிறக்கியதுதான், இதுவொரு நிலமீட்பு நடவடிக்கையாயிருக்குமோ என்ற ஐயத்தைத் தருகிறது. மற்றும்படி முகமாலை முன்னரங்கக் காவலரண் வரிசையைப் பிடித்தது, எவ்விதத்திலும் நிலமீட்பு நடவடிக்கைக்கான சமிக்ஞை அன்று.

புலிகள் பின்வாங்க மாட்டார்கள் என்றேதான் நான் நினைக்கிறேன். இவ்வளவு பெருமெடுப்பில் வெடிப்பொருட்களைப் பாவித்துவிட்டு அதற்கு எந்தப்பலனுமின்றி இடங்களைவிட்டுப் பின்வாங்குவது பொருளாதார அடிப்படையில் தீமையானது.

அதேநேரம் முழுஅளவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையை இப்போதைக்குத் தொடர்வார்கள் என்றும் நினைக்கவில்லை. கொஞ்சநாட்கள் நிலைமை இப்படியே இழுபடலாம்.

அப்படியாயின் நல்லவன் இந்த ஊடுருவல்களின் நோக்கம் என்ன? மண்டைதீவில் நிலை கொள்வதன் நோக்கம் என்ன?

புலிகள் இது ஒரு தற்காப்புத் தாக்குதல் என்று சொல்வது போர் நிறுத்த ஒப்பந்தந்தத்தைப் பாதுகாக்க பேண விரும்புவதால்.அந்த ஒப்பந்தம் புலிகளுக்கு சட்டவியல் ரீதியக மிகவும் அனூகூலமன ஒரு ஒப்பந்தம்.அத்தோடு போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் வரை வெளிச் சக்த்திகள் தலை இடுவதற்கான அதாவது போரைச் சாட்டி மக்களைக் காக்கப்போகிறோம் என்று சொல்லி தலை இடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கும்.இதற்காகவே இதனை ஒரு தற்காப்புத் தாக்குதல் என்ற தோற்றப்பாட்டை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்போது நடை பெறும் ஊடுருவல்கள் ஒரு தாக்குதல் உபாயாம் என்றே எனக்குப் படுகிறது, இதற்கு அடிப்படைக் காரணம் மக்கள் செறிந்து வாழும் யாழ்க் குடா நாட்டுக்குள் மரபுவழித் தாக்குதல்களை நடாத்த முடியாது என்னும் யதார்த்தமே.இவ்வாறு மரபு வழி நடை பெற்ற முன்னைய தாக்குதல்களால் சாவகச்சேரி எவ்வாறு அழித்து ஒழிக்கப்பட்டது என்று நினைத்துப் பாருங்கள்.அவ்வாறான ஒரு நிலயை முழு குடா நாட்டிற்கும் ஏற்படுத்த புலிகள் விரும்பவில்லை. நீங்கள் நில மீட்பு என்றால் அது மரபு வழித் தாக்குதலாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.எனக்கு இது ஒருவகை புதிய உபாயமாகப்படுகிறது.எதிரியின் பக்கத்தில் நின்று கொண்டு அவன் அறியாமலையே அவனின் கழுத்தை நெரித்துக் கொல்லும் உபாயமாகவே படுகிறது.

கள நிலமைகள் இன்னும் சில தினக்களில் தெளிவாகும் தானே அதுவரை பொறுத்திருப்போம்.

மேலும் போர் தொடங்கினால் போர் நிறுத்த உடன் படிக்கையை முறித்துக்கொள வேண்டிய அவசியம் இல்லை.உடன் படிக்கை அப்படியே இருக்கும், நில மீட்பின் பின் போர் நிறுத்த உடன் படிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள புலிகள் கட்டுப்பாடுப்பிரதேசம் விரிவடைந்து இருக்கும்.அதன் பின்னர் ஏற்படும் புதிய கள நிலவரத்தின் அடிப்படயில் பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் ஊடாகத் தொடரும்.

,மீட்க்கப்பட்ட நிலங்களில் இருந்து பின்வாங்க அரசு கோரினால் போர் நிறுத்த உடன் படிக்கயில் குறிப்பிட்டவாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோருவார்கள்.அதாவது அப்படி வலயங்கள் தொடர்ந்தும் இருக்குமாயின்.இல்லாது விடின் உடன் படிக்கையின் படி தாமே இந்த வலயங்களை அகற்றி விட்டதாக புலிகள் கூறலாம்.எப்படிப் பார்த்தாலும் நில மீட்பு போர் நிறுத்த உடன் படிக்கையின் ஊடாகவே நடந்து கொண்டு இருக்கும்.

திருகோணமலை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள், இன்று யாழுக்கான வழங்கலை நடாத்த முடியாத படி திருகோணமலை முடக்கப்பட்டுள்ளது.திருகோணம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்,

இது புலிகளின் வலிந்த தாக்குதல் என்பதில் எனக்கு ஐமில்லை.

முகமாலையில் படையினர் தான் முதலில் முன்னேற முயன்றதாகவும் அதைத்தொடர்ந்தே அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுவதை நான் ஏற்கவில்லை. (பலரது நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும்). நீங்களே சொன்னது போல் நல்ல பிள்ளையாக நடிக்கவேண்டியதன் ஒரு கட்டமே இராணுவம் முன்னேறியது என்று சொல்வது.

மண்டைதீவில் தரையிறக்கியதுதான் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கைக்கு புலிகள் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இதை முன்னைய கருத்திலும் சொல்லியிருக்கிறேன். ஆனால் முகமாலையில் படையினரின் முன்னணிக்காவலரண் வரிசையைக் கைப்பற்றியதை வைத்து எவ்விதத்திலும் நிலமீட்பு நடவடிக்கை பற்றி எதிர்வுகூட முடியாது. குறைந்தபட்சம் கிளாலி, நாகர்கோவில் தளங்களைக் கைப்பற்றியிருந்தாலாவது சொல்லலாம்.

மக்களைக் கருத்திற்கொள்வதென்ற உங்கள் கருத்துச் சரியே. முழுமையாக உடன்படுகிறேன். முன்புபோல் முழுக்கமுழுக்க மரபுவழியில் முழுச்சண்டையையும் செய்யக்கூடாத நிலைமையை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் கிளாலி, நாகர்கோவில் தளங்களைக் கைப்பற்றாமலிருப்பதற்கு, மக்கள் பாதுகாப்பைக் காரணம் சொல்ல முடியாதல்லவா? அதைவிட வலப்பக்கம் இராணுவத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்க

மேலும் நில மீட்பு என்பதை மரபு வழி இராணுவ நடவடிக்கைகள் மூலம் நிகழ்த்துவதாயின் அதற்கு எதிரியை விட மிக்க கூடியளவிலான ஆளனிகள் அவசியம்.புலிகள் நிலத்தை மீட்டது, எதிரியை அழித்து ஒழித்தன் மூலம் அல்லது எதிரியை வேறு களங்களுக்கு நகர்தியதன் மூலமே.புலிகளின் இராணுவ உபாயங்கள் எப்போதும் தமது பலம்,பலவீனம் என்ற நிலைகளில் இருந்தே வகுக்கப் படுகின்றன.அதனாலயே அவர்கள் வெற்றிகளைக் குவித்து உள்ளனர்.பிரபாகரனின் இந்த திட்டமிடல் அல்லது உபாயம் வகுக்கும் திறனை மரபு வழி கொரில்ல வழி என வகைப்படுத்தி விட முடியாது.அது இரண்டினதும் கலவையே.அதனாலயே மரபு வழி சிந்தனை உடைய சிங்கள இராணுவ கொள்கை வகுப்பளர்களால் பிரபாகரனின் உபாயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.அதுவே அவர்களை பல முறை பொறிகளுக்குள் விழ வைத்துள்ளது தொடர்ந்தும் விழ வைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கம் எங்கு தனது படைகளைக் குவிப்பது என்பதைத் தீர்மானிக்க முடியாதபடி புலிகள் செய்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் குவித்துப் பலப்படுத்தினால் திருமலையைத் தாக்க புலிகள் தயார். அல்லது மணலாறு.

மணலாறும் யாழ்ப்பாணமும் புலிகளுக்கு மிகவசதி. காரணம் ஒரே மூலங்களை வன்னியின் இருபக்கங்களிலும் பாவித்துக்கொள்ளலாம். அரசுக்கு அப்படியன்று.

புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிக்கப்படாமல் சண்டை தொடரும் சாத்தியத்தை ஒத்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிலும் முக்கியமானது, சர்வதேச அழுத்தங்களுக்கு எவ்வளவு இணங்கிப்போவது எவ்வளவு மீறிப்போவது என்று புலிகள் தெரிவுசெய்வதிலுள்ளது.

என்ன இருந்தாலும் புலிகளின் கைஓங்கும்போது சர்வதேசம் துள்ளிக்குதிக்கத்தான் செய்யும். அதையே இராணுவம் செய்தால் சத்தம்போடாமல் இருக்கும். திருமலையோ, யாழ்ப்பாணமோ, சர்வதேசம் கூடுதல் அக்கறை எடுக்கும் இடங்கள். யாழ்ப்பாணத்தைவிட திருமலை புலிகளைப்பொறுத்தவரை மிகுந்த சிக்கல் நிறைந்த இடம்.

பார்ப்போம் களநிலைகள் என்ன சொல்கின்றனவென்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலம் கைப்பற்றாமலே இன்று திருமலைத்துறைமுகத்தை புலிகள் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவந்துள்ளார்கள். உண்மைதான். ஆனால் ஆட்லறி வைத்துத்தாக்கவேண்டிய நிலப்பகுதியான சம்பூரை மையமாகக் கொண்ட பகுதி சிறிய நிலப்பரப்பாகவே உள்ளது. செறிவான வான்தாக்குதல், எறிகணைத்தாக்குதல் என்பவற்றுள் அதிககாலம் அங்கிருந்து ஆட்லறித்தாக்குதலை நடத்திக்கொண்டிருப்பது சிரமம். அங்கிருந்து அரசு எதிர்கொள்ளும் சவால் மிகப்பெரியதாகத் தோன்றும்பட்சத்தில் எப்பாடுபட்டாவது அப்பகுதியைக் கைப்பற்ற முயலும்.

அப்படி அரசு தன் முழு வளத்தையும் பயன்படுத்த முனையும்போது சம்பூரால் தாக்குப்பிடிப்பது சிரமமே. எனவே கட்டுப்பாட்டுப்பகுதியைப் பெரிதாக்கி வலுவான தளத்தை அங்கு நிறுவவேண்டியது நீண்டகால அடிப்படையில் முக்கியம். திருகோணமலையிலுள்ள முக்கியமான தளப்பிரதேசமான ஈச்சிலம்பற்றையுடன் நிலவழித் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. அந்நடவடிக்கையில் சில சிங்களக்கிராமங்கள் கைப்பற்றவேண்டி வரும்.

உங்கள் நோக்கம் விளங்குகிறது, ஈற்றில் ஊடகங்களும் உபாயத்தின் ஒரு அங்கம் தானே? எதிரியும் குழம்புவான், சர்வதேசமும் குழம்பும்.புலிகளின் அடிப்படை நோக்கம் பற்றி மக்களுக்கு இருக்கும் விழிப்பு மக்களைக் குழம்ப விடாது, என்பதுவே எனது கருத்து.அரசியல் விழிப்புணர்வு என்பது அது தான்.அதற்காகவே நாம் எழுத வேண்டும். அரசியல் விழிப்புணர்வு உள்ளவ்ர்கள் அன்றைய ஊடகச் செய்திகளுக்கு அப்பால் சிந்திக்கக் கூடியவர்கள். யாழ்க்களத்திலும் இந்த குழம்பல் மன நிலை உள்ளவர்களுக்கு எதிராக நான் எழுதுவதும் இது தான் நோக்கம். தெளிவுள்ளவன் குழம்ப மாட்டான். தெளிவற்றவனை தெளிவுள்ளவனாக்க முயற்ச்சிப்போம்.

மேலும் முதன்மைக் களம் பற்றி நீங்கள் கூறியதை ஏற்கிறேன்.

முதன்மைக் களம் என்பது நிலையானது இல்லை.அது கள நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடுவது. புலிகளின் அடிப்படை நோக்கம் நில மீட்பு, அதற்கான உபாயம் எதிரியை அழித்தல் என்றால், எதிரியின் அசைவுகளை ஒட்டியே முதன்மைக் களம் தீர்மானிக்கப்படும்.எங்கு நகர்வதன் மூலம் எதிரியை பொறிக்குள் சிக்க வைக்கலாம், எங்கு நகர்வதன் மூலம் எதிரியின் வளங்களை முடக்கலாம் என்பதில் இருந்தே முதன்மைக் களம் தீர்மானிக்கப்படுகிறது.

வெறும் பார்வையாளாரான எங்களால் எது முதன்மைக்களம் என்று அனுமானிக்க முடியாது, அது நியாமும் இல்லை.ஆகவே விரியும் கள நிலவரங்களின் அடிப்படையில் எது முதன்மைக் களமாகும் என்பதை புலிகள் தீர்மானிபார்கள், அதுவரை பார்த்துக்கொண்டு இருப்போம்.

பேசாம இருங்கப்போ..............

எல்லாரும் பேசாம இருங்க.................

அவசர பட்ட விமர்சனம்......................

ம்ம்..........

மேலும் முதன்மைக் களம் பற்றி நீங்கள் கூறியதை ஏற்கிறேன்.

முதன்மைக் களம் என்பது நிலையானது இல்லை.அது கள நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடுவது. புலிகளின் அடிப்படை நோக்கம் நில மீட்பு, அதற்கான உபாயம் எதிரியை அழித்தல் என்றால், எதிரியின் அசைவுகளை ஒட்டியே முதன்மைக் களம் தீர்மானிக்கப்படும்.எங்கு நகர்வதன் மூலம் எதிரியை பொறிக்குள் சிக்க வைக்கலாம், எங்கு நகர்வதன் மூலம் எதிரியின் வளங்களை முடக்கலாம் என்பதில் இருந்தே முதன்மைக் களம் தீர்மானிக்கப்படுகிறது.

வெறும் பார்வையாளாரான எங்களால் எது முதன்மைக்களம் என்று அனுமானிக்க முடியாது, அது நியாமும் இல்லை.ஆகவே விரியும் கள நிலவரங்களின் அடிப்படையில் எது முதன்மைக் களமாகும் என்பதை புலிகள் தீர்மானிபார்கள், அதுவரை பார்த்துக்கொண்டு இருப்போம்.

அதியும் விட மக்கள் எந்த வளியால் வெளியேறுகிறார்கள் என்பதை பொறுத்து அமையும்.... யாழில் இருக்கும் அண்ணளவான 6 லட்ச்சம் மக்களின் வெளியேற்றம்தான் இளப்புக்களை குறைத்து பிரதேசத்தை கைக்குள் கொண்டுவரும்....!

நீண்ட நாள் முற்றுகையிட்டு கைப்பற்ற இது யாழ் கோட்டை இல்லை யாழ் மாவட்டம்.. மக்களுக்கு உணவு பொருட்களும் , அத்தியாவசிய வைத்திய சேவைகளும் கிடைக்க வேண்டும்.... இதை எல்லாம் இளந்து மக்களையும் துன்பட வைத்து தான் நீண்ட போர் முடிவுக்கு வருமானால் நல்லதல்ல....!

மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சண்டை பிடிப்பது நல்லதும் அல்ல....! மக்கள் வெளியாற்றத்தை தான் புலிகள் எதிர்பார்க்கிறார்கள் போல் இருக்கிறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்.. பிபிஸி க்கு கொடுத்த பேட்டி கேட்டனான்.. வாயைத்திறந்து புலிகள் விமானத்தாக்குதல் நடாத்தினார்கள் எண்டு சொல்ல முடியேல்லை.. குடாநாட்டை பிடிக்கத்தான் தாக்குதல் எண்டுகூட சொல்ல முடியேல்லை.. உதுக்குமேலை என்னத்தை நான் சொல்லுறது?

இப்ப பார்க்கிற மாதிரிக்கு முடிவிலை வெற்றிகொண்ணடாடி பின்வாங்கின செய்தி வரும்போலை கிடக்கு..

:P :D:lol:

திருகோணமலை மாவிலாறையே இன்னும் படை கைப்பற்றேல்லை.. என்னண்டப்பா யாழ்ப்பானத்திலை உங்கடை அடிக்கு தாக்குப்பிடிக்கிறது.. :wink:

விமானத் தாக்குதல் நடத்தினா கட்டாயதம் மதிவதனனுக்கு தனிமடல் அனுப்பி வைக்க வேண்டும் போல. :D:D:D

அதைவிட அவங்க அடிச்சம் எண்டா கூட நம்புவியளாக்கும். :):) பேசாம உங்க ஆக்கட செய்தியை பாத்திட்டு படும். புலியளின் செய்தியை கேட்டிட்டு புசத்தமா இருங்கோ. மூளை கலங்கியிடும் தொடர்ந்து புலியளின்ர செய்தியை வாசித்தால். எல்லாம் உங்க நன்மைக்குத்தான்.

பீலா எண்டா எவ்வளவு சந்தோசமோ அதே மாதிரித்தான்

பின்னாடி வந்தாலும் இருக்கும் எண்டது வடிவா தெரியுது. ஆனா எந்த செய்திக்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கோ. உங்களுக்கு நல்ல செய்தி எப்பேனும் ஒருக்கா தானே வாறது.

யாழ்ப்பாணத்தின் தெற்குப் பகுதியை மீட்கும் முயற்சியில் புலிகள்

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள், ராணுவத்திடமிருந்து யாழ்ப் பாணத்தின் தெற்குப் பகுதியைக் கைப்பற்றும் தீவிர முயற்சியுடன் கடும் போரில் குதித்திருக்கின்றனர்.

அந்த வட்டாரத்தில் உள்ள ராணுவத்தின் முக்கியக் கடற்படைத் தளத்தைச் சனிக்கிழமை அன்று புலிகள் தாக்கியதாக ராணுவ அதி காரிகளும் புலிகளும் தெரிவித்தனர்.

புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் இந்த மூர்க்கமான போரில் நேற்று இரவு வரை குறைந்தது 127 பேர் மாண்டனர் என்றும் மேலும் 280 காயம் அடைந்தனர் என்றும் ராணு வம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தின் தெற்கே சுமார் 500 விடுதலைப் புலிகள் கடுமையாகத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

“எங்களைப் பொறுத்தவரை 100 முதல் 150 புலிகள் கொல்லப் பட்டிருப்பர், 200 முதல் 250 பேர் காயம் அடைந்திருப்பர் என்று மதிப்பிட்டிருக்கிறோம்” என்று ராணுவப் பேச்சாளர் ஜயவர்த்தனே சொன்னார்.

ராணுவத்தின் தரப்பிலும் சேதம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், மூன்று அதிகாரிகள் உட்பட 27 பேர் மாண்டனர் என்றார்.

யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் தற்காப்பு அரண்களைப் புலிகள் முறியடிப்பதற்காகக் கடுமையாகச் சண்டையிட்டு வருவதால் 2002ம் ஆண்டின் சண்டை நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையில் மூண்டிருக்கும் ஆக மோசமான போர் இது.

ஈழப்புலிகளின் தற்காப்பு அரண்கள் மீது அரசாங்கத்தின் ëஜட் விமானங்கள் குண்டுகளை வீசின. இதன் காரணமாக ஆயிரக்கணக் கான குடியிருப்பாளர்கள் தேவாலயங்களுக்குள் ஓடிப் புகலிடம் தேடியிருக்கின்றனர்.

கடல் புலிகள், ராணுத்தைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஈழப்புலிகளுக்குச் சொந்தமான ஐந்து படகுகள் யாழ்ப் பாணக் கடற்கரையோரம் மூழ்கடிக்கப்பட்டதாக ராணுவம் கூறியது.

“மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது” என்று ஆயுதமற்ற சண்டை நிறுத்தக் கண்காணிப்பு அமைப்பின் ரோப்பன் நிசோன் சொன்னார்.

யாழ்ப்பாணத்தின் முழுப் பகுதியும் இன்னமும் தங்களது கட்டுப் பாட்டில் இருப்பதாகக் கூறிய ராணுவம், “100 புலிகளைக் கொன்று விட்டோம். இருப்பினும் சில புலிகள் ஊடுருவியிருக்கலாம்” என்றது.

புலிகளின் வசமுள்ள பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட யாழ்ப் பாணத்தில் மட்டும் 40,000 துருப்புகளை ராணுவம் நிறுத்தி யிருக்கிறது. பாரம்பரியமாக இலங்கையின் 3.2 மில்லியன் சிறுபான் மையினராகிய தமிழ் மக்களின் பகுதியாக யாழ்ப்பாணம் திகழ்கிறது. இது ராணுவத்தின் வசமிருக்க, புலிகளின் பகுதி அதனைச் சூழ்ந் திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளிலிருந்து வெளிவராமல் இருப் பதற்காக ராணுவம் காலவரம்பின்றி ஊரடங்கு பிறப்பித்திருப்பதாகச் சம்பவம் நடைபெறும் இடத்திலிருக்கும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனத்தின் செய்தியாளர் சொன்னார்.

இதற்கிடையே புலிகளின் வானொலி, கிழக்கு யாழ்ப்பாணத்தில் 10 மைல் தொலைவில் உள்ள ராணுவ வசமுள்ள பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு குடியிருப்பாளர்களுக்கு உத்தர விட்டிருக்கிறது.

“அவர்கள் குண்டுகளைப் போட்டு எங்களுடைய எல்லையைக் கடக்க முயல்கின்றனர்” என்று கிளிநொச்சியில் உள்ள புலிகளின் ராணுவப் பேச்சாளர் ராசையா இளந்திரையன் சொன்னார்.

கிளிநொச்சியில் நுழைய முயலும் ராணுவத்தைத் தடுத்து நிறுத்தவே பதிலடி கொடுக்கிறோம் என்றார் அவர்.

ஆனால் புலிகள் ஆத்திரமூட்டி வருகின்றனர் என்று ராணுவம் குற்றம் சாட்டுகிறது.

கிழக்கில் பிரச்சினைக்குரிய ஆற்றை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை ஓய மாட்டோம் என்று மேலும் ராணுவம் சூளுரைத்திருக்கிறது.

TAMILMURASU-SINGAPORE

“எங்களைப் பொறுத்தவரை 100 முதல் 150 புலிகள் கொல்லப் பட்டிருப்பர், 200 முதல் 250 பேர் காயம் அடைந்திருப்பர் என்று மதிப்பிட்டிருக்கிறோம்” என்று ராணுவப் பேச்சாளர் ஜயவர்த்தனே சொன்னார்.

இராணுவம் கூறிய கணக்கின்படி கடந்தஇருவாரங்களில் கிட்டத்தட்ட 2000 புலிகளை அவர்கள் கொன்றிருப்பார்கள் போலிருக்கு. இப்படியே போனால் சரத்பொன்சேகா ஒரிரு மாதங்களில் 7000 புலிகளையும் (வாயால)கொன்று வெற்றியடைந்திடுவார் போலிருக்கு. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.