Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -27)

Featured Replies

இக்கதையின் முன்னைய பகுதிகளை வாசிக்க...

 

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part - 22 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -25)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -26)

 

 

2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், 

அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக்  கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது.

ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை

 

very-impressive-eyes-kajal-agarwal.jpg

 

'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே  இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவள் நினைவுகள் மட்டுமே நிரம்பியிருக்கும். ஆனால் அவனது சூழ்நிலைகள் அதற்கு உடனடியாக இடங்கொடுக்காமல் போனமைக்கு முக்கியமான ஒரு காரணமும் இருந்தது.

 

 

அதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் 'லண்டனுக்கு ஏத்திறன்...!' என்று சொன்ன

ஒரு கள்ள ஏஜென்சியிடம் தெரியாத்தனமாக குறிப்பிட்டளவு தொகைப் பணத்தினைக் கொடுத்து.....இழந்திருந்தான். அது அஞ்சலிக்கும் தெரியாது.

 

ஒரு இன்ப அதிர்ச்சியாக அவள் முன்னால் போய் நிற்போம் என நினைத்திருந்தவன்... எதிர்பார்த்திராத  அந்த ஏமாற்றத்தை அஞ்சலியிடம் சொல்லாமலேயே விட்டுவிட்டான். 'அஞ்சலி வருத்தப்படுவாள்' என நினைத்து அவளிடம் இறுதிவரை சொல்லாமல் மறைத்த விடயங்களில் அதுவும் ஒன்று.

 

 

அதன் பின்னர் அவனுக்கு பொருளாதார ரீதியாகவும் கொஞ்சம் இறுக்கமான சூழ்நிலை இருந்துவந்தது. மீண்டும் இன்னொரு ஏஜென்சியிடம் பணத்தைக் கொடுத்து முயற்சி செய்யவும் தயக்கமாக இருந்தது. பயணத்தின் இடையில் ஏதாவது இடத்தில் மாட்டினாலும் பிரச்சினை. நாட்டுக்கும் திரும்பிப் போக இயலாத இக்கட்டான நிலை. நிதானமாக செயற்படவேண்டிய சூழ்நிலை அவனைச்சுற்றி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

 

அந்தக் காலகட்டத்தில் மலேசியாவிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு கப்பல்களில் அகதிகளாக போய்க்கொண்டிருந்தார்கள். அதில் ஏறிப் போக அவ்வளவு பணம் செலவாகாது. 'இப்படியே இருவரும் நிரந்தர இடமில்லாமல் பிரிந்திருப்பதைவிட... அங்குபோனால் கொஞ்சநாட்களில் காட் கிடைச்சதும் அஞ்சலியையும் கூப்பிடலாம்தானே..!?' என யோசித்தவன் அதைப்பற்றி அஞ்சலியிடம்  கூற... அதிலுள்ள ஆபத்தை நினைத்து  அஞ்சலிக்கு அவ்வளவு இஷ்டம் இருக்கவில்லை.

low_in_the_water1.jpg

 

அது முற்றிலும் பாதுகாப்பில்லாத பயணம். உயிருக்கு எந்தவித உத்தரவாதமுமில்லாத ஆழ்கடல் பயணம். தனியாளாக அவன் இருந்திருந்தால் யோசித்திருக்கமாட்டான். ஆனால் இவன்தான் தனியாள் கிடையாதே. இவனை நம்பி ஒரு ஜீவன் காதலுடன் காத்துக்கொண்டிருக்கிறதே...! இப்படியான பயணத்தின்போது  தனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்... அஞ்சலி தனியாய்  துடித்துப்போவாள்...பாவம்!  என எண்ணியவன் அந்த எண்ணத்தை அறவே அடியோடு கைவிட்டுவிட்டான்.

 

 

அதன்பின்னர் ஒருநாள் அஞ்சலியே கேட்டாள்... " நாங்கள் Husband and Wife தானேடா...!? நாங்கள் ஒருக்கால்  Dependent வீசாவுக்கு போட்டுப் பாப்பமே...?! . என்னோட படிக்கிற ஃப்ரண்டின்ர வைஃப் அந்த வீசாவிலதான் வந்தவ. நீங்கள்  அதுக்கொருக்கா Apply பண்ணிப் பாருங்கோவன். கிடைச்சாலும் கிடைக்கும். கிடைச்சால் உடன நீங்கள் என்னிட்ட வந்திரலாந்தானே..! தேவையான எல்லா  Documents ஐயும் நான் உடன அனுப்பி விடுறன்" என்றாள்.

 

 

அப்பிடி ஒரு வீசா இருக்கு. அதன்மூலம் முயற்சி செய்தால் அவன் லண்டனுக்கு போகலாம்' என அவனுக்கு முதலிலேயே தெரியும். ஆனால்... அவனுக்கு அதன்மூலம் போவதில் அவ்வளவும் இஷ்டம் இருக்கவில்லை.

ஆனால்  அதனை ஆரம்பத்திலேயே முயற்சித்துப் பார்க்காமல் இருந்ததற்கு என்ன காரணமென்று அவனுக்கே  தெரியவில்லை. அஞ்சலியிடம் எல்லாவிதத்திலும் உரிமையெடுத்துக் கொள்பவன்.... அஞ்சலியிடம் இதை எப்பவோ கேட்டிருக்கலாம். ஆனால் அவன் அதை அப்போது விரும்பியிருக்கவில்லை. அதற்கு அவனது சுயமரியாதைகூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். ஒரு கணவன் மனைவிக்கிடையில் அது இருந்திருக்கக் கூடாது. ஆனால் எதற்காகவும் சுயமரியாதையை  இலகுவில் விட்டுக்கொடுக்காதவன் இவன்.

 

 

ஆனால் இப்பொழுது நிலைமை வேறு... இருவரும் பிரிந்து மூன்று வருடங்களுக்குமேல் ஆகப்போகின்றது. எப்படியாவது இந்தப் பிரிவினை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும்.

காதலில் நீண்ட பிரிவானது இடைவெளியை ஏற்படுத்திவிடலாம். நீண்ட இடைவெளிகளால் காதலின் நெருக்கமும் இறுக்கமும் குறைந்துபோகவும் வாய்ப்புள்ளது எனபதையும் இவன் அறிவான். அஞ்சலியின்மேலும் அவர்களின் காதலின்மீதும் அளவுகடந்த அன்பும் நம்பிக்கையையும் வைத்திருந்தாலும் இந்த இடைவெளியை இனிமேலும் இப்படியே நீட்டிக்க  அவன் விரும்பவில்லை.

Darling-Making1.jpg

 

 

அஞ்சலி ஒவ்வொரு முறை இவனுடன் கதைக்கும்போதும் "எப்படா நாங்கள் திருப்பியும் ஒண்டுசேருறது?" என ஏக்கத்துடனும் கவலையுடனும் கேட்கும்போதெல்லாம்... இவனுக்கு ஏதோ போலிருக்கும். மனதுக்குள் ரொம்பவும் வேதனைப்படுவான். "வெகுவிரைவில் எல்லாம் சரியாகிவிடும்... ஒண்டாச் சேர்ந்து வாழுவம் செல்லம். ஒண்டுக்கும் யோசிக்காதம்மா" என்று சொல்லி ஒருவாறு அவளைச் சமாதானப்படுத்துவான்.

 

 

ஆனால் அதற்குரிய எல்லாவழிகளும் கிட்டத்தட்ட அடைபட்டுக் கிடந்த சந்தர்ப்பத்தில்தான்,  இப்பொழுது அஞ்சலியின் விருப்பத்துக்கமைய UK விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முடிவெடுத்தான். அந்த ஒரு வழிதான் அப்போதைக்கு உகந்ததாகப் பட்டது. அதற்குமேலும் அவன் தனது வீறாப்பினைத் தொடர விரும்பவில்லை. அது அஞ்சலியையும் தன் காதலையும் பாதிக்கும் என்பது அவனுக்கு அப்பொழுது புரிய ஆரம்பித்திருந்தது.

அஞ்சலியும் அவள் சொன்னமாதிரியே அனைத்து ஆவணங்களையும் அனுப்பிவைத்திருந்தாள்.

 

2009 நவம்பர் மாதம்

 

மலேசியாவிலுள்ள  UK வீசா விண்ணப்ப நிலையத்தில்( VFS Kualalumpur ) தனது வீசா விண்ணப்பத்தினைக் கையளித்தான். அப்பொழுது பெரும்பாலும்  Dependent வீசாவுக்கான விண்ணப்பங்களை நிராகரிக்காமல் வீசா வழங்கிக் கொண்டிருந்தமையால் எப்படியாவது வீசா கிடைக்கும்... இன்னும் ஒரு சில மாதங்களில் இருவரும் சந்திக்கலாம்.... என்ற கனவோடு அவனும் அஞ்சலியும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்தனர். நாட்கள் நகர்ந்தன....  வீசா விண்ணப்பத்தினை பரிசீலிக்க வழமைக்கு மாறாக அதிகமாக சில நாட்கள் எடுத்துக் கொண்டார்கள் .

myhc_14456.jpg

 

2009 டிசம்பர்  09 ஆம் திகதி வீசா கிடைக்குமா கிடைக்காதா..? என்று அறிந்துகொள்ளவேண்டிய நாள்.

காலையிலேயே அஞ்சலிதான்  ஃபோனடித்து எழுப்பிவிட்டாள். "சீக்கிரம் வெளிக்கிட்டுப் போடா செல்லம்" என்றவளிடம் "குளிச்சிட்டு வெளிக்கிடுறன்" என்று இவன் சொல்லவும்...  "குளிக்க எல்லாம் வேணாம்டா... போயிட்டு வந்து குளிக்கலாம். என்ன சொல்லப் போறாங்கள் எண்ட கலக்கத்தில... நான் இங்க தூங்காமல் இருக்கிறன். ப்ளீஸ்டா... கெதியாப் போ செல்லம்...." என செல்லமாக அதட்டியவளின் வார்த்தைகளில் இருந்த அவளது ஏக்கமும் காதலும் இவனுக்கு நன்கு புரிந்தது.

 

kajal-stills-01058.jpg

 

"ஓகே செல்லம்.... சீக்கிரமா வெளிக்கிட்டுப் போறன்..." என சொல்லிவிட்டு மிகவிரைவாக குளித்துவிட்டு

இவனது மாடிக்குடியிருப்புக்கு பக்கத்திலிருந்த அம்மன் கோயிலில் "விசா கிடைச்சிடோணும்" என மனதார வேண்டிவிட்டு... வீசா அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டான்.

 

அன்றைய நாளின்  அந்த முடிவுதான் அவனது வாழ்க்கையையே புரட்டிப்போடுவதாய் அமையப்போகின்றது என்பதனை அவன் தாயாக வணங்கும் அந்த அம்மாளாச்சி கூட அவனுக்கு சொல்லவில்லை.

 

அன்றைக்கு அவனுக்கு அந்த வீசா  கிடைத்திருக்குமானால்...

அவன் உயிருக்குயிராய் நேசித்த அஞ்சலியுடன் அவன் வாழ்க்கை  இனிமையாய் அமைந்திருக்கும். ஆனால்.......

 

மனிதன் ஒன்று நினைக்கிறான்.... தெய்வம் வேறொன்று நினைக்கிறது......!!!

தொடரும்...

 

இக்கதையின் தொடர்ச்சிக்கு:

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -28)

 

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கண்ணதாசன் எப்போதோ எழுதி வைத்தது எல்லோருக்கும் பொருத்தமான வரிகள். இதைவிட இந்தக் கதையை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று வலிகளை வகைப்படுத்த முடியவில்லை.
 
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை நீங்கள் கதையைத் தொடர்வதற்கு

ஒரு கதவு மூடினால் வேறு ஒரு பாதை திறப்பற்கே . அதைக் காலம் இன்று உங்கள் கண் முன்னே காட்டியுள்ளது . உங்கள் சோகத்திற்கு பச்சை வழங்க நான் தயாராக இல்லை .

  • தொடங்கியவர்

கவிதை கண்ணதாசன் எப்போதோ எழுதி வைத்தது எல்லோருக்கும் பொருத்தமான வரிகள். இதைவிட இந்தக் கதையை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று வலிகளை வகைப்படுத்த முடியவில்லை.

 

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

 

உண்மைதான்  சாந்தி அக்கா...!  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் யாரும் தெய்வத்தை நினைக்கப்போவதில்லையே!

 

கவிஞர் கண்ணதாசனின் வரிகள் எக்காலத்துக்கும் பொருந்தும் அற்புதமானவை.

நன்றி அக்கா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.