Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர்

Featured Replies

"நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர்
27 ஆகஸ்ட் 2013
 

 

Saththa_CI.jpg

"பிரபாகரனின் தந்தை வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரியே இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இவரின் வரு­கை­யா­னது இலங்­கைக்கு பாத­க­மா­ன­தொரு விளை­வி­னையே நிச்­சயம் ஏற்­ப­டுத்தும்." என்று இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார். 

இலங்கை சிங்­கள நாடு இங்கு வேற்று இனத்­த­வ­ருக்கு இட­மில்லை. இலங்­கைக்கு பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் நவ­நீ­தம்­பிள்­ளை­யினை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர. 

நவிப்பிள்ளை விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வாளர் அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர் அவர் பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வதை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார். 

சனல் 4 காணொ­ளி­களைப் பார்த்து விட்டு இலங்கை மீது குற்றம் சுமத்­து­வதை ஏற்க முடி­யாது. அமெ­ரிக்கா பல நாடு­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளது. ஆப்­கா­னிஸ்­தானில் அமெ­ரிக்­கா­வினால் செய்­யப்­பட்ட படு­கொ­லைகள் தொடர்பில் ஏன்  நவி­ப்பிள்ளை குரல் கொடுக்க வில்லை? எனவும் கேள்வி எழுப்பினார். 

நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு எப்­போது வேண்­டு­மென்­றாலும் வரலாம். அவர் ஓய்­வெ­டுக்க விடு­மு­றை­யினை அனு­ப­விக்க இலங்­கைக்கு வரலாம். ஆனால் இலங்­கையை எதிர்த்து அறிக்கை சமர்ப்­பிக்க அவர் வர முடி­யாது என்றும் இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95816/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் கடை விரிக்கும் காவித்தீவிரவாதம்
 
Pothupalasena.jpg
 
 அது திறந்தவெளி அரங்கம்ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் சிறு மைதானம்நிரம்பி வழிகிறதுகாவிதரித்த புத்த பிக்குகள் அமைதியாய் வீற்றிருக்கஅதற்குபின்னால் மக்கள் நின்றுக் கொண்டிருக்கிறார்கள்அத்தனைபேர் பார்வையும்மேடையை நோக்கி குவிந்திருக்கிறது.
 
இதோ மேடைக்கு வருக்கிறார் ஒரு புத்த பிக்குபூசின மாதிரி உடம்புபுன்னகைதவழும் உதடுகள்,  தெய்வகளை சுமந்த முகம்குரலில் கூட மென்மையைகுழைத்து,  அரங்கம் அதிர சொல்கிறார்.
 
பிச்சுபிச்சூனி...உபாசிக...உபாசிகாவனி.....பின்வத்துணி என்கிறார் சிங்களத்தில்.
 
அதாவதுபுத்தர் வழிநடக்கும் பிக்குகளே ( ஆண் ) பிச்சூனிகளே ( பெண் )தவமேற்றும் உபாசர்களே ( ஆண் ) உபாசிகாவனி ( பெண் ) புண்ணியஆத்மாக்களே ( பொது மக்கள் ) என்று பொருள்.
 
buthist.jpg
 
 
மேலும் தொடர்கிறார்புத்தரின் அன்பு வழி போதனைஅறவழி செயல்,நன்னடத்தைதனிமனித ஒழுக்கம் பற்றி அவர் பேச்சு களைகட்டுகிறதுகுழுமி இருந்தவர்கள் மெய்மறந்து அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
உரை முடிந்தது.  கூட்டம்  கலைந்ததுதிரைவிலகியதுசற்று நேரத்தில்பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்இப்போது முகத்தில் இறுக்கம்குரலில்கடுமை தொனிக்க இப்படி வருகிறது வார்த்தை.
 
இந்தியாவினால் பலவந்தமாக ஏற்படுத்தப்பட்டுமக்களின் பணத்தை அழிக்கும்இந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை வடக்கில் மாத்திரமல்லஎந்தமாகாணத்திலும் நடத்தக் கூடாது.
 
போருக்கு முன்னர்வடக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றாதுதேர்தலை நடத்துவது சிங்கள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
 
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களுடன் வட மாகாண சபைத் தேர்தல்நடத்தப்பட்டால்பிரபாகரன் மேற்கொண்ட பாதிப்புகளுக்கு மேலான பாதிப்புகள்ஏற்படும்,  இதனை மத்திய அரசாங்கத்தினால் கூட தடுக்க முடியாது போகும்.
 
srilangkan+buthist1.jpg
 
இத்தோடு நிற்கவில்லை அந்த ஆவேசம், இந்தியா நோக்கி திரும்புகிறது.கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காகஐந்தாயிரம்  பேரை அழைத்துச் சென்று அந்த தீவில் குடியேற போகிறோம்என்றும்  அதிரடி சரவெடிகளை கொளுத்தி போடுகிறார் இராவணா சக்திஅமைப்பின்  இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர்.
 
ராவண சக்தி இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தினால், உள்ளூர் முஸ்லிம்களை குறி வைக்கிறது பலசேனா. ஆன்மீகவாதிகள் அரசியல் பேசினால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புத்த புக்குகளின் நடவடிக்கை உலகிற்கு உணர்த்துகிறது.
srilangkan+buthist2.jpg
 
 
இனவெறி துவேஷ குற்றசாட்டில் இருந்து இன்னும் இலங்கை விடுபடவில்லை.  சொந்த நாட்டு மக்களையே சூரையாடி சுடுகாட்டிற்கு அனுப்பிய குற்றம், இன்னும் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. இந்நிலையில் இன்னொரு துவேஷ நெருப்பு வளருவது இலங்கைக்கு ஆபத்து. ஆனால் தமிழர்களை கொன்று தனிபெருமை தேடிக்கொண்ட ராஜபக்ஷே அதை உணர்ந்தவராக இல்லை.
 
அமெரிக்க அதிபர்ன்னா பெரிய கொக்கா? ஒபாமாவே... உன்னை எச்சரிக்கிறேன். திருந்து...! இல்லாவிட்டால் திருத்துவோம் என்று,  தெரு முனை பிரச்சாரத்தில் வீரம் காட்டும் உள்ளூர் பேச்சாளர்கள் மாதிரி, தன் மந்திரி பிரதானிகள் பேசுவதை கண்டும் காணாமல் மௌனமாக இருக்கிறார் ராஜபட்ஷே.
 
ராவண சக்தி முழுக்க முழுக்க இந்திய எதிர்ப்பு நிலையை கையில் எடுத்திருக்கிறது. ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தால், தமிழ் படங்களை தடை செய் என்று மகஜரோடு  போகிறார்கள்.
 
இலங்கைக்கு ஆதரவாக இல்லையா, இந்திய பொருள்களை இலங்கையில் இறக்க விடமாட்டோம் என்று கடுப்பு காட்டுகிறார் அதன் தலைவர். இந்திய பொறியாளர்களுக்கு இலங்கையில் என்ன வேலை, வெளியே அனுப்பு என்று தொழிற்சங்க தலைவர் மாதிரி ஏகத்திற்கும் எரிந்து விழுகிறார்.
gotabaya+and+rajapatshe.jpg
 
 
இலங்கை இந்தியாவிற்கு பணிந்து போகிறது என்று ஆளும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டுகிறார். உண்மையில் கோத்தபாய ராஜபக்சேயின் ஆசிர்வாதமும், ராஜபக்ஷேவின் மனசாட்சி என்றும் வர்ணிக்கப்படுவதுதான் ராவணசக்தி.
 
இலங்கையை பொறுத்தவரை மதம் பிடித்தாட்டுவது ஒன்றும் புதிதல்ல. 2002 ல் நார்வேயின் முயற்சியின்  பேரில் நடைமுறைப் படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக களத்தில் குதித்தது சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என்ற இரு அமைப்புகள்.
 
உள்ளூர் கிளர்ச்சியாளர்களான ஜே.வி.பி யை அரசு களையெடுக்க தொடங்கிய போது, அரசுக்கு ஆதரவாக களமிறங்கியது தேசம் பிரேமி என்ற பௌத்த இயக்கம்.
 
gotabaya.jpg
 
 
இன்று,   யுத்த சுவடு இன்னும் மாறவில்லை. செத்த பிணங்களின் மேல் செயலிழந்து தவிக்கிறது தமிழினம். வறுமை, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பற்ற சூழலில் சொந்த வீடுகளையும், விவசாய நிலங்களையும் சூரையாடுவதை தட்டிக் கேட்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழினம். 
 
இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது   மாதிரி இனவெறி பிடித்து கிளம்பி இருக்கிறது பொதுபல சேனா மற்றும் ராவணசக்தி.
 
அரச குலத்தில் பிறந்தும் அதை துறந்து ஞானம் தேடி போன புத்தரின் பாதையை பின்பற்றுவதாய் நடிக்கும்  புத்த பிக்குகள், அரசியல் வெறி பிடித்து அலைகிறார்கள். இலங்கையில் பௌத்த ஆட்சிமுறையை அமுல்படுத்தும் நோக்கத்தில், ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு ஆட்கடத்தல், கொலைமிரட்டல், எச்சரிக்கை என்று காவி தாண்டவம் கடைவிரித்திருக்கிறது.
 
இதை சுட்டிக் கட்டினால் ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. தாக்குதல் நடத்தும் புத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குற்ற வழக்குகளை பதிவதும் இலை. பெயரளவு விசாரணை, பெருமளவு உபசரிப்பு என்ற ரீதியில் கனிவு காட்டுகிறது காவல்துறை.
 
srilangkan+buthist5.jpg
 
இந்நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முதல் நெருப்பை கொளுத்திப் போட்டது பொதுபலசேனா.  அது ஹலால் சான்றிதழ். முஸ்லிம் உணவுவகைகளில் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை பௌத்தர்கள் தலையில் கட்ட முயல்வது தவறு என்று தான் முதல் முழக்கம் ஆரம்பமானது. 
 
அது வழிமாறி,  வழிப்பட்டு ஸ்தலங்களை  தாக்குவது, வியாபார நிறுவனக்களை சூரையாடுவது என்று திசைமாறிப் போகிறது.
 
புத்தம் சரணம் கட்சாமி என்று சமத்துவம் பேசிய பிக்குகள் பேட்டை ரவுடிகள் மாதிரி ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்வது கேவலத்தின் உச்சக்கட்டம்.
 
கடைசியாக கட்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது ராவணசேனா.  இப்போது பௌத்த அமைப்புகள் ஆடிக்கொண்டிருப்பது ஆபத்தான ஆட்டம் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுத்தால் குட்டி நாடு இலங்கை, உலக நாடுகளால் தட்டி வைக்கப்படுவது நிச்சயம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

"நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர்
27 ஆகஸ்ட் 2013
 
 

 

Saththa_CI.jpg

நவிப்பிள்ளை விடு­தலைப் புலி­களின் ஆத­ர­வாளர் அவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புலம்­பெயர் தமி­ழர்­களின் செயற்­பா­டு­களை ஆத­ரிப்­பவர் அவர் பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வதை நாம் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார். 

 

நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கைக்கு எப்­போது வேண்­டு­மென்­றாலும் வரலாம். அவர் ஓய்­வெ­டுக்க விடு­மு­றை­யினை அனு­ப­விக்க இலங்­கைக்கு வரலாம். ஆனால் இலங்­கையை எதிர்த்து அறிக்கை சமர்ப்­பிக்க அவர் வர முடி­யாது என்றும் இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர்  தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95816/language/ta-IN/article.aspx

 

ஓய்வெடுக்க என உல்லாசப் பயணம் வந்த எத்தனை வெளிநாட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள் என்பதும் அம்மையாருக்குத் தெரியும்

இருந்தாலும் அவர் அடக்கித்தான் வாசிப்பார்

பிக்குகள் பயப்படத் தேவையில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் தலிபானைவிட மோசமாய் வருவாங்கள்.

"நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர்

10024_645618752129741_795310764_n.jpg

//இவனை சிறையில் அடைத்து அரைப்பிடி கட்டெறும்பை காதுக்குள் விடுங்க....
அவ்வளவும் மறுகாதுவழியாக வரவேண்டும்...
அதை நான் மறுநாள் வந்து பார்க்கவேண்டும்....//

  • கருத்துக்கள உறவுகள்
"நவிப்பிள்ளையல்ல வேலுப்­பிள்­ளையின் சகோ­த­ரி புலிப்பிள்ளையே" - சத்தாதிஸ்ஸ தேரர்
இன்னும் 40 வருடங்களின் பின்பு இப்படி கன புலிப்பிள்ளைகள்......அவுஸ்ரேலியா பிரதமர்,கனடா பிரதமர்,அமெரிக்கா வெளிவிவகார செயலர்,அமேரிக்காவின் பாதுகாப்பு செயலர் என்று வந்தாலும் வரும் :D ... புத்தம் சரணம் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.