Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறந்து வைப்பார் ஜெயலலிதா?

Featured Replies

தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த, தமிழர்கள் நினைவாக, தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில், தமிழ் அன்னையின் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்று கோரி, ஈழத்தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு சின்னத்தை திறந்து வைப்பதன் மூலம், உலக தமிழர்களின் அன்பை பெற முடியும் என்பதாலும், ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகள், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்புவிழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

http://goldtamil.com/?p=7760

  • கருத்துக்கள உறவுகள்

மன்னராட்சியில் மக்கள் மந்தைகளாகப் பார்க்கப்பட்டனர். மக்களாட்சியிலும் அது தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Options Loyolahungerstrike · 34,487 like this. 2 hours ago · அறிவித்தல் ! வணக்கம் உலகத் தமிழ் மக்களே ! தமிழர்கள் நெஞ்சங்களில் பொறிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா பற்றி தவறான செய்திகளை சிலர் பரப்புகின்றனர் . முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா திகதி இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை , இந்த நிலையில் சில இணையங்கள் , பத்திரிகைகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர் . முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா பற்றி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அய்யா அவர்கள் உத்தியோக பூர்வமாக எந்த தேதியில் யார் யார் வருகிறார்கள் என்று அறிவிக்கும் வரை எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று உலகத் தமிழ் மக்களைக் கேட்டுகொள்கின்றோம். நன்றி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் https://www.facebook.com/mullivaikkalmutram அறிவித்தல் ! வணக்கம் உலகத் தமிழ் மக்களே ! தமிழர்கள் நெஞ்சங்களில் பொறிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா பற்றி தவறான செய்திகளை சிலர் பரப்புகின்றனர் . முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா திகதி இன்றுவரை முடிவு செய்யப்படவில்லை , இந்த நிலையில் சில இணையங்கள் , பத்திரிகைகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர் . முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா பற்றி உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அய்யா அவர்கள் உத்தியோக பூர்வமாக எந்த தேதியில் யார் யார் வருகிறார்கள் என்று அறிவிக்கும் வரை எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று உலகத் தமிழ் மக்களைக் கேட்டுகொள்கின்றோம். நன்றி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் https://www.facebook.com/mullivaikkalmutram

  • கருத்துக்கள உறவுகள்

மன்னராட்சியில் மக்கள் மந்தைகளாகப் பார்க்கப்பட்டனர். மக்களாட்சியிலும் அது தொடர்கிறது.

 

ஈழத் தமிழர்கள் கேணையல் தானே :rolleyes: எம் மக்கள் இறக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் சமாதியை யார் திறப்பதில் என்பதில் போட்டி போடுகிறார்கள்

கட்டியவர்களுக்குள்ளும்  திறப்பவர்களுக்குள்ளுமிடயிலான பந்தயம். ஜெயலலிதாவை முன்னைய தேர்தல்களில் ஆதரித்தவர்கள் இதில் அவருடன் பேச முனவரவேண்டும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

றஜனிகாந் தொழிலதிபராக நடித்த ஒரு படம்பார்த்தேன் அதில் அவருடன் முரண்பட்ட பத்திரிகையாளர் ஸ்ரீதேவி, றஜனி ஒரு குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக ஒரு பொய்யான செய்தியைப் பரப்பினார். தனது கெளரவத்தைக் காப்பற்றுவதற்காக அத்தொகையை அவர் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அய்யா அவர்களைம் அத்தகைய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கியுள்ளனர். திறப்பு விழா பதில் கூறும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த நினைவு சின்னத்தை திறந்து வைப்பதன் மூலம்,

உலக தமிழர்களின் அன்பை பெற முடியும் என்பதாலும்,

ஈழத்தமிழர் ஆதரவு வாக்குகள், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு கிடைக்கும் என்பதாலும்,

 

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன திறப்புவிழாவில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்த கணக்கெடுப்புநிலை  என்று மாறும்.......... :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.