Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருதப் பாட்டு -- வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

மல்லை ஐயா இப்படி இருக்கின்றாரே!

troll.png

 

எனக்கு எதுவும் உங்கள் கைவிரல் நகங்கள் மாதிரிக் கூட கூர்மையாக இல்லை. ஆளை விடுங்க.. ஓடிடுறன்.. <_<

 

கண்டுகொள்ள் முடியாமல் இருக்க முடியாமல் இருந்ததால் தன்னையேதான் எங்கே என்று கண்டுகளாமலே "கண்டுகொள்ளபோவத்திலை" என்று கருத்துவைத்துவிட்டு ஓடவும் வேண்டுமா? ஏற்கனவே உங்களையே நீங்கள் காணமுடியாததால் தேடிக் காணாமலே நீங்கள் ஓடி ஒழிந்த்தில்லையா கருத்துவைத்தீர்கள்.

 

துணிச்சல் இருந்த்திருந்தால் ஒவ்வொரு கருத்தையும் தார்கப்படி ஆராய்ந்துகொண்டு போய் இறுதியில் உங்கள் கருத்தை வைத்திருபீர்கள் இல்லையா.  இன்னும் கூட முதலில் கவிதையில் இருந்து ஆரம்பிக்க நேரம் போகவில்லை. பாடலில் பொருளை வரிக்கு வரி விவரித்துக்கொண்டு ஆரம்பியுங்கள்.

 

முதலில் படைபாளி என்றால் யார் என்று புரிந்துகொள்ள வேண்டும். அரசியல்,சமூக, சீர்திருத்த, மதமுன்னேற்ற வாதி என்றால் யார் என்று புரிந்து கொள்ள. தான் இப்படி இரண்டு வேறு வேறு தளங்கள் இருப்பதை புரியாமல் தடுமாறிக்கொண்டு, பொடி வைத்து கவிதை எழுதிவிட்டு தன்னை தான் காப்பற்ற முடியாமல் தடுமாறுபவரை எப்படி காப்பற்ற முடியும்?

 

ப்டைப்பு வைப்பவர்களில் இன்று சங்ககாலம் மாதிரி தூய படைபுகளை வைப்பார் இல்லை. சகல படைப்புக்களும் தனக்கு என்று ஒரு கொள்கை சார பார்க்கின்றன. கொள்கை சாரா படைப்புக்களில் கூட நோக்கம் இல்லை என்பதல்ல. தருமியால் தனது பாடல் சரி என ங்கீரன் முன்னால் விவாதிக்க முடியவில்லை. பாடலை பற்றி சிந்திக்க வேண்டிய நிபந்தனை தருமிக்கு இருக்க வில்லை. தனது புத்தகத்தை வெளியிட ஒரு கவர்ச்சியான கருத்து மட்டும்தான் வேண்டியிருந்தது தருமிக்குசத்துடன் தான் தயாரில்லாத நிலையில் அரச சபை கேள்விகளை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்தது.

 

இதில் சாடுவோருக்கு இரண்டு தளங்களை தருமி தோற்றுவிக்கிறான். ஒன்று பாடலில் இருக்கும் பொருள். மற்றயது தான் பாட்லை எழுதிய கீழ்தரமான தேவை. நக்கீரன் அரச அந்தஸ்த்தில் இருந்து கொண்டு  சாப்பாடுக்கு அல்லாடிய தருமியை அவனின் நோக்கம் வைத்து சாடவில்லை. ஆனால் அரசனை படைப்பில் பணநோக்கத்தை திணித்து படைப்புக்களை கொச்சை படுத்தியதை சாடினான். ஆனால் சபை முழுவதும் எதிர்த்தும் விடாமல் கடவுளிடம் கூட அவரின் படைபில் இருக்கும் தவறின் தர்க்கத்தை எடுத்துகூறினான். 

 

நியாமான அந்த விவாதங்களால் இறைவனுக்கு ஒன்று தெரிந்தது. தருமிக்கு தேவை பிழைப்பு அதை கொடுத்தான். ஆனால் நக்கீரன் தமிழ் உள்ள அளவும் தன் புகழ் அழியாமல் இருக்க வேண்டியவன் என்பதை புரிந்துகொண்டான். அப்போதுதான் முருகனை அழைத்து சொன்னான் " மகனே: தருமி நாங்கள் பணம் கொடுத்தவுடன் மட்டற்ற மகிழ்சியுடன் வாயை மூடிக்கொண்டு போய்விடுவான். நக்கீரன் போகமாட்டான். இந்த நக்கீரன் நானும் நீயும் இருவரும் ஒருவர் மற்றவரிடம் சீஷ்சையர்களாக இருந்து கற்றுகொண்ட தமிழ் முழுவதையும் கற்றுகொள்ள தகுதியானவன். இவனை அகத்தியனிடம் அழைத்து செல்" என்றான். இந்த மாதிரி தமிழை தோற்றுவித்தவனும், தமிழை காத்தவனும் சேர்ந்து ஒரு சபையில் மதிக்கப்படவன்தான் தான் கொள்கையில் சரியாத நக்கீரன். படைப்பை விற்க முன்வராதவன் அவன். 

 

படைப்பு தூய படைப்பு என்ற நிலை மாறி இலட்சியங்களுக்குள் புகுமாயின், படைப்பாளன் தூய்மையும், நேர்மையும் உள்ளவன் தான் என்றதை நிரூபித்தாக வேண்டும். படைப்பாளன் என்ற நடிப்பில் பல விஷ்ங்களை தெளிக்க முயல்வோர் எளிமையான பாதைகளை எதிப்பார்க்க முடியாது.  உங்களுக்கு தூய படைப்பு எது பொடி வைத்து எழுதும் சிலேடைகள் எவை என்றதை ஆர்ரய முடியவில்லை. அல்லது உங்களை நீங்கள் காணமலே அந்த உண்மை இருப்பதை எதிர்கிறீர்கள். 

 

பொடி வைத்து எழுதிய கவிதையை பற்றிக்கருத்து கூறிய போது தனது படைப்பை நியாயப்படுத்த முடியாமல் சேறடிக்க முயன்றார் படைப்பாளி. இதை மூடி மறைக்க ஒவ்வ்ரொ கருத்துத்தாக யார், என்ன சொன்னார்கள் என்றதை கவிதையில் இருந்து ஆரம்பித்து ஆரார நீங்கள் மறுக்கிறீர்கள். 

 

உங்களின் காழ்ப்புணர்வுக்கு காரணம் படைப்பு எது, அரசியல் ஆய்வு எது, இந்த இரண்டு கருத்து தொடைகளும் எந்த இடைவெட்டில் ஒன்றின் மேல் ஒன்று சாயும் என்பதை விளங்க்கிக்கொள்ள முடியாமையே. இதனால் திருட்டுத்தனமான ஆரசியல் ஆய்வொன்றை தூய படைப்பாக நியாப்படுத்த முயல்கிறீர்கள். படைப்பில் ஆம்பலின் கீழ் மறைந்திருக்கும் வாரல்களை,  அந்த அரசியல் கருத்து மீது கருத்துவைத்தால்,தன்னிடம் பதில் இலலாத படைப்பாளி சேறடிக்கிறார். இதை சுட்டிக்காட்டுவது காழ்ப்புணர்வு என்று உங்கள் காழ்புணர்வை காட்டுகிறீர்கள். படைப்பாளி தனது கவிதையில் அரசியல் சாயம் இல்லை என்று மறுக்கவில்லை அல்ல, அவர் உண்மை இல்லாத, என்னுடன் தொடர்பே இல்லாத அரசியல் பொய்களை வைத்து அது நானேதான் என்று நிறுவ முயலும் முட்டாள் தனத்தில் இறங்குகிறார். 

 

இதில் உங்களுக்கு மிகவும் பிரச்சனையான பகுதி " புலிகள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, கப்பல் வருகிறது என்று சொல்லி மக்களை கடல்கரைக்கு வாருங்கள்  என்று சிலர் சொல்ல புலிகள் அதை செய்தார்கள்" என்ற படைப்பில் நீங்கள் காணும் பற்றே.  இப்படியான படைப்பு மாற்றுக்கருத்து அரசியல் ஆய்வுகளில் உங்களுக்கு அலாதிப் பிரியம். வழமையில், முன்னர் பலதவைகள், உங்கள் தோல்வி மனப்பானமையால் மாற்றுக்கருத்துகளின் படைப்புகளை அரசியல் ஆய்வு என்று தடுமாறி நீங்கள் இங்கே கொண்டுவந்து பதிந்தீர்கள். அவை உண்மை இல்லாத படைப்புகள் என்றதையும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அவை படைபுக்களே அல்லாமல் சரித்திரம், அரசியல் ஆய்வு அல்ல் என்றதை நீங்கள் கண்டுகொள்ள விரும்பவில்லை.  அதே போல் படைப்பாளி என்ற போர்வையின் கீழ ஏமாற்றி அரசியல் ஆய்வு செய்பவர்களை நீங்கள் அறிந்திருந்தும் பக்கச் சார்பாக அவர்களை அப்பாவி படைப்பளிகள் என்கிறீர்கள்.

 

கருத்துக்களை தனி தனி ஆராந்து கருந்து சொல்ல முடியாமல் அவஸ்த்தைப்படும் உங்களின் காழ்ப்புணர்வுத் தீர்ப்பை நாம் கண்டு கொள்ளட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?  கருத்துக்கு கருத்துவைக்காமல் சேறடிப்பத்தால் காலம் தள்ளுவது சிலரின் பொழுது போக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுக்கு. எனக்கு தலைக்குமேலே வேலை இருக்கு. ஒரு நாவல் - 1824ல் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பித்ததில் இருந்து மலேசிய புலப்பெயர்வு இன்றைய புலப்பெயர்வுகள் வரைக்கும் மாறிவரும் எங்கள் பெண்கள் பற்றி - 350 பக்கம் எழுதி நெடுநாளாக கிடப்பில் இருக்குது. அதை எழுதி முடிக்கவேனும். இலங்கை தமிழர்களின் சமூக வரலாறு தொடர்பான என் கட்டுரைகலையும் சேர்த்து இன்னும் எழுதி ஒரு நூலாக்கவேணும். என் ஆய்வுப் பயணங்களுக்கு  பணம் திரட்ட நடித்தாக வேணும். நன்றி விசுக்கு. எனக்கு தலைக்குமேலே வேலை இருக்கு.

 

 

நன்றி  தங்களது  கனிவான  பதிலுக்கு.....

உங்களது பயணம்  தொடர  வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  மல்லை

கனகாலமாகத்தொடரும  இதற்கு ஒரு முற்றுப்புள்ளி  வைக்கவே

இங்கு இடையில் வந்தேன்

நீங்கள்  சிலவற்றில் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்பது தங்களது உரிமை.

அதனை  நான் மறுப்பதற்கு இல்லை.

உங்களில் மேல்  வைத்திருக்கும்

அளவு கடந்த மதிப்பால்

உள்ளே  வந்தேனோ  தெரியவில்லை.

இதனால்  தங்களுக்கு இடைஞ்சல்  வந்திருந்தால்

மன்னித்தருள்க.

 

 

 

இதில் உங்களுக்கு மிகவும் பிரச்சனையான பகுதி " புலிகள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, கப்பல் வருகிறது என்று சொல்லி மக்களை கடல்கரைக்கு வாருங்கள்  என்று சிலர் சொல்ல புலிகள் அதை செய்தார்கள்" 

 

இதற்கான கேள்வியை  நானும் கேட்டிருந்தேன்

அவரிடமிருந்து அதற்கான பதிலோ

ஆதாரமோ இல்லை

அவரிடமிருந்து பதிலில்லாதபோது

மௌனம்  சம்மதம்  என்றரீதியில்

அவருக்கு அது பற்றி

எதுவும் தெரியவில்லை என 

அதை முடிவுக்கு கொண்டு வந்திருந்தேன்.

அவ்வளவு  தான்.

 

அவர்  அதற்கான ஆதாரங்களைத்தேடும் முயற்சியில்   கூட  இருக்கலாம்.

என்றாவது தனது கூற்றை  நிரூபிப்பார்

அல்லது

மீளப்பெறுவார் என எதிர்பார்க்கின்றேன்.

 

நன்றி

மீண்டும்  மீண்டும்

தங்களது நேரத்தை எம்மினத்தின்  தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் மல்லை.

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நிர்வாகத்துக்கு, நாகரீகமற்ற ஆத்திரத்தில் நானும் நாகரீகம் தவறிய இந்த திரியை அகற்றிவிடுமாறு கோருகிறேன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் கவிதையை நீக்கியிருந்தாலும் முன்னரே படித்திருந்தேன். அவர்மீது விமர்சனம் என்ற போர்வையில் ஆத்திரத்தை உண்டுபண்ணிய மல்லை ஐயாவுக்கு வெற்றி. வெற்றியை விரல்களை நெட்டி முறித்துக் மசாஜ் செய்து கொண்டாடுங்கள்!
 

கவிதை பிடித்திருந்தது. அதனை உருவாக்கும்போது கவிஞர் என்ன மனநிலையில் இருந்தார்; என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தார் என்பதெல்லாம் அவருக்குத்தான் தெரியும். அதெயெல்லாம் கவிதையில் உள்ள சொற்களுக்கூடாக அரசியல் பிணக்கூற்றாய்வு செய்யும்போது புதுப் புது அர்த்தங்கள் வருவது வழமைதானே. அவற்றில் சில படைப்பாளிக்கே புதிதாகவும் புதிராகவும் இருக்கலாம். கவிதையில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்குமான அரசியலைத் தேடும்போது நாம் எமக்கு வசதியான இடத்தில் ஒளித்து வைத்ததைத்தான் வெளியே எடுத்துக் காட்டுகின்றோம், படைப்பாளி வைத்ததை எடுத்துக் காட்டுவது எப்போதும் சாத்தியப்படாது.

கவிஞர்களை கவிதையும் எழுதி அதற்கான பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை, விரிவுரை போன்றனவற்றையும் எழுதச் சொல்லிக் கேட்க முடியாதுதானே! வாசகன் எதுவித புரிதலும், இரசனையும் அற்ற கடதாசியை வைக்கோல் என்று உண்ணும் மாட்டைப் போன்ற வெறும் நுகர்வாளனாக இருப்பதில்லையே! எனவே கவிதையைப் நுகர்பவர்கள்/முகர்பவர்கள் தங்களது கொள்ளளவிற்கு ஏற்ப இலக்கிய/அரசியல் உணர்நரம்புகளை முடுக்கி, தங்களது கற்பனைகளையும் கலந்து திளைக்கின்றார்கள் அல்லது கொதிக்கின்றார்கள்.


படைப்பாளியைப் பற்றி சு.ரா. பின்வருமாறு கூறுகின்றார்:

ஒரு படைப்பாளி வாழ்க்கையைப் பொதுவாகவும் தன் மொழி சார்ந்த கலாச்சாரத்தைக் குறிப்பாகவும் புரிந்து கொள்வதில் தீவிர முனைப்போடு இருக்கின்றான். வாழ்க்கை மீது படைப்பாளி கொண்டிருக்கும் தீவிர உறவுதான் செயல்பட உந்து சக்தியாக அவனிடம் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தான் வாழும் காலத்தையும் சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கு அவசியமான பாதிப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் அவன் திறந்த மனதுடன் இருந்தாக வேண்டும். அவனுடைய நோக்கம் சிக்கலாகத் தோற்றம் தரும் வாழ்க்கையைப் பற்றிச் சில தெளிவுகளுக்கு வந்து அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். தத்துவத்தின் மீதும் பிற அறிவுத் துறைகளின்மீதும் அவன் கொள்ள விரும்பும் உறவு இந்நோக்கத்தை முக்கியமாகக் கொண்டதே. எந்த தத்துவத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதோ, தத்துவத்தைக் காப்பாற்றும் அசெளகரியமான பொறுப்பை ஏற்று, பொதுப் புத்திக்குத் தெரியும் உண்மைகளைக் கூட மூடி மறைத்துக் கொண்டிருப்பதோ அவனுடைய பணி அல்ல.


இறுதியாக அமெரிக்கன் கப்பல் அனுப்புவது பற்றிய கதையாடலுக்கும் இருக்கின்றார்/இல்லை என்ற கதையாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால் உண்மை தெரிந்தவர்கள் ஒன்றில் இல்லை, இருப்பவர்களும் (சொல்ஹையிம், உருத்திரகுமாரன்) ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் புலிகளின் தலைமையும் பல்லாயிரம் மக்களும் கொல்லப்பட்டது நிதர்சனம். அதுவும் தீர்க்கதரிசனம் மூலம் முதலிலே தெரியப்படுத்தப்பட்டதுதான் என்ற கதையையும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  • 3 weeks later...

தேர்தலின் முன்னர் அனந்தியை ஆதரிப்பதாக காட்டிக்கொண்டு புலிகள் மீது சேறடிக்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. அதாவது "அரசு குண்டு போட்டு தாக்க இலகுவாக இருக்கட்டும் என்று மக்களை கடல்கரைக்கு புலிகள் அழைத்து சென்றார்கள்" என்றது போன்ற மாயை எழுத்தக்க ஒரு கதையை உண்மை என் நிரூபிக்க முயன்றமை. 

 

 

இறுதியாக அமெரிக்கன் கப்பல் அனுப்புவது பற்றிய கதையாடலுக்கும் இருக்கின்றார்/இல்லை என்ற கதையாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எவரும் தங்கள் வசதிக்கு ஏற்ப சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால் உண்மை தெரிந்தவர்கள் ஒன்றில் இல்லை, இருப்பவர்களும் (சொல்ஹையிம், உருத்திரகுமாரன்) ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் புலிகளின் தலைமையும் பல்லாயிரம் மக்களும் கொல்லப்பட்டது நிதர்சனம். அதுவும் தீர்க்கதரிசனம் மூலம் முதலிலே தெரியப்படுத்தப்பட்டதுதான் என்ற கதையையும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

வடக்கில் இருப்பவர்களுக்கு நடந்தை பற்றி அறிவு இல்லை என்று கூறுவது எற்றுகொள்ள கஸ்டமான விவாதம்.

 

பச்சைப் புலியாக இருக்கும் அனந்தியின் அபார வெற்றி, புலிகள் தங்களுக்கு கடல் கரையில் குழி பறித்தார்கள் என்றதை மக்கள் ஒத்துகொள்ளவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

எப்படி விக்கினேஸ்வரனின் வெற்றி சாதனையோ, அப்படி ஒரு சாதனை அனந்தியிடையதும்.  தன்னை போராளியாக காட்டிகொள்ளும் சித்தார்தனும், போரை எதிர்த்த ஆனந்த சங்கரியும் பெற்றிருக்கும் வாக்குகள், மக்கள் போரை பற்றி கவலை அடையவில்லை, போரே வேண்டாம் என்று கூறவரவில்லை, உரிமையைபற்றித்தான் கவலை அடைகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. அவர்கள் போலிகள் சமாதனம் பேசும் போது அவர்களை எட்டி உதைக்க தயாராக இருக்கிற்ர்கள். அனுபவம் மிக்க ஆனந்தசங்கரி படித்த பாடம் இது.

 

அரசியல் பரம்பரை என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு ஒத்துவராதது. படிப்பறிவு, அரசியல் சமர்த்தியம், அரசியல் சாணக்கியம், உண்மை, நேர்மை, தலைவணங்கா திடகாத்திர நடத்தை, கொள்கையில் ஆழமான பிடிப்பு, குடும்ப நடவடிக்கை  எல்லாமே ஈழத்து அரசியல் தலைமையிடம் எதிர்பார்க்கப்படும் பண்புகள். அனந்தியிடம் "இவை எல்லாம் உனக்கும் இருக்கா" என்ற கேள்வியை கேட்காமல் 90,000 மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது அவ பச்சைப் புலி என்பதால் கொடுக்கபட்ட  வாக்காக கொள்ள வேண்டுமேயல்லாமல், தமிழ்மக்கள் வழமையாக கேட்க்கும் தராதரங்களை வைத்து அளிக்கப்பட்ட வாக்குகளாக கருத முடியாது. ஆதாவது அனந்தியின் பிரதான qualification  எழிலனின் மனைவி என்பதுதான் என்றது கவனிக்கப்பட வேண்டும்.  குறைந்தது 90,000 வாக்காளர்கள் புலிகள் கடற்கரையில் தங்களுக்கு குழி பறித்தார்கள் என்பதை கட்டுக்கதையாக மட்டுமே கொள்கிறார்கள் என்றுதான் எடுக்க வேண்டும். இவர்கள் 90,000 பேரும், மக்களை கடல்கரையில் தவிக்க விட்டுவிட்டு தான் தப்பிக்க எழிலன் அரசிடம் சரண் அடைந்தார்  என்ற கதையை நம்பவில்லை.

 

அதாவது (1).தலைவர் இருக்கிறாரா/இல்லை கதையும் (2).கடல் கரை கதையும் ஒப்பிடத்தக்கவை இல்லை. நியாயமான தொகை மக்கள் கடல்கரைக்கு புலிகள் ஏன் அழைத்துச்சென்றார்கள் என்ற்தை விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் தலைவருக்கு நடந்தது என்ன என்பது பலருக்கு தெரியாது. இரண்டாவது கதை பொய் என்று மக்கள் நம்புவதாகத்தான் இந்த தேர்தல் சொல்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.