Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் நடைபெறுவது அரை இராணுவ ஆட்சி நாமல் ராஜபக்ஸ முதலமைச்சராகினாலும் எதுவும் செய்ய முடியாது

Featured Replies

'பாடசாலையில் அரங்கேற்றும் நாடகத்திற்கான ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டும்'

jvp%20vip_CI.jpg

 

வடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது.

இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தேசியப்பிரச்சினைக்கு தீர்வுக்கான அணுகு முறைகள் எனும் கருப்பொருளில் நாளை யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் ஜேவிபியினது பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னறிவிப்பு பற்றிய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகைய கருத்தினை முன்வைத்திருந்தார்.

எவர் ஆட்சிபீடமேறினாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தடுப்புக்களிலும் சிறைகளிலுமுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படப் போவதில்லை. காணாமல் போனோhர் திரும்பப்போவதில்லை. அன்றாட விலைவாசிகள் குறையப் போவதில்லை. இத்தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றினதும் விலைகள் கூட்டப்படப் போகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஏனைய மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதை தவிர வேறு வழிகளில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எனைய மக்கள்தான் பிரச்சனையே அவர்களுடன் எப்படி ஒன்றிணைத்து போராடுவதாம்....

இந்த JVP 1970 களில் தனது தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மூடி மறைக்கிறது. மூன்றாம் சக்தியாக வளர்ந்த JVP யை கண்டு அதிசயித்து பிளேக், தூதுவராலயத்திற்கு வரமறுத்த JVP உறுப்பினர்களைச் சந்திக்க அவர்களின் இடங்களுக்கு தேடிப்போனார்.  நேற்றுவரை அரசில் ஒட்டிக்கொண்டிருந்து மகிந்தாவால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிங்கள மக்களால் தூக்கி எறியப்பட்டுவிட்ட JVP இப்போ தமிழ் மக்களிடம் பிச்சை கேட்கிறது. 

 

150,000 மக்கள், 40,000 போராளிகளை கொடுத்து தமிழர் தங்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனையை உலகறிய செய்த்திருக்கிறார்கள். இலவச கல்வி, இலவச அரசி,மா, பருப்பு, இலவச மருத்துவம் இவ்வளவற்றையும் தோட்ட தொழிலாளர் உழைப்பிலிருந்து திருடி UNP யின் டட்லி அரசாங்கம் சிங்கள் இளைஞர்களுக்கு கொடுக்க அதை சுகமாக அனுபவிக்க தெரியாமல், அதை தந்த தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்தாமல், தமிழர்களை இந்தியாவிற்க்கு துரத்த வேண்டும் என்று பிரசாரம் செய்த இடது சாரிகள் JVPக்கள் மட்டுமே. அதில் 150,000 இளைஞர்களுக்கு மேல் கொடுத்து எங்கும் போய் சேராமல் இப்படி ஒரு கட்சி அமைத்தவர்கள் இவர்கள்.

 

இலங்கை இடது சாரிகள் போலிக்கோ அல்லது சோசலிச கொள்கை ஒப்புகோவாகத்தன்னும் தமிழ் மக்களுக்கும் சம உரிமை பற்றி இடை இடை பேசியதுண்டு. ஆனால் JVP  சிறில் மத்தியூ, R.G. செனநாயக்க போன்ற எந்த சிங்களக்கட்சியும் காட்டாத தமிழர் எதிர்ப்புப் காட்டிய கட்சி. சொந்த இனத்து சிங்கள ராஜதந்திரத்தால், மகிந்தாவின் கத்தியால் முதுகில் குத்து வேண்டியவர்கள். அரசனை நம்பி புருனை கைவிடும் பேதமையைப் பற்றி சொல்வார் உண்டு. அரசனையும் புருசனையையுமே ஒரே தடவையில் கைவிட்ட கோமாளிகள் JVPயினர். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்  ஊரில்  இருந்து வந்தவர்  மிகவும்  கவலையுடன்   சொன்னது

 

அவரது மகளது பாடப்புத்தகத்தில்  பின்  பக்கத்தில்   நாமலுடைய  படம்  பொறிக்கப்பட்டிருக்கிறதாம்

அதைக்காட்டி  இது யாரென்று தெரியுமா  என்று தன்னைக்கேட்டதாம்

தாம்  சொன்னாராம்

இது மகிந்தவின் மகன்  நாமல்  என்று

பிள்ளை  உடனே  கோபத்துடன்  சொல்லிச்சாம்

இல்லை

இது எங்கட   நாமல்  அண்ணா என்று...........

எப்படி  எல்லாம் புகுத்துகிறார்கள்  என்று கவலைப்பட்டார். :(  :(  :(

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"வடக்கில் நடைபெறுவது அரை இராணுவ ஆட்சி இனி யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது"

 

 

 

2010 ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வந்த ஒருவர் சொன்ன வசனம் இது. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை.... அழிக்க,
சிங்கள ராணுவத்துக்கு, ஒத்துழைப்புக் கொடுத்த ஒட்டுக் குழுக்களே....
வரிசையாக... வந்து, பதில் சொல்லுங்க....
 

  • கருத்துக்கள உறவுகள்

மணல் கொள்ளையடிச்சதுக்கு உன்னைக் கணக்குக் கேட்கவில்லை...
மக்களை.... ஏன், கொள்ளை அடிக்கிறாய்.
டக்ளசு... நீயும், நானும் தமிழன் தானே...
கடைசியில்...  ஏனாபா.. உனக்கு இந்தத் தொழில்.
வாழ்க்கையில்.... நீ... திருந்தவே... மாட்டியா?

  • கருத்துக்கள உறவுகள்

மணல் கொள்ளையடிச்சதுக்கு உன்னைக் கணக்குக் கேட்கவில்லை...

மக்களை.... ஏன், கொள்ளை அடிக்கிறாய்.

டக்ளசு... நீயும், நானும் தமிழன் தானே...

கடைசியில்...  ஏனாபா.. உனக்கு இந்தத் தொழில்.

வாழ்க்கையில்.... நீ... திருந்தவே... மாட்டியா?

 

 

என்ன  சிறி

உங்களாலேயே  முடியலையா????

நீங்க  மட்டும்தானே

இவர்களை இங்கு  கேள்வி  கேட்பவர்............ :(

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த யாருக்குத்தான் ஆசை இல்லை .
மக்களுக்குத் தெரியாத மாஜாயாலங்களை இங்கு யாரும் காட்டவில்லை .

அது அவர்களுக்கும்  தெரியும் இருந்தாலும் அவர் அரசியல்வாதி அல்லவா .

சிலவேளைகளில் எழுதி வைத்திருக்கும் கடதாசிப் பேப்பர் மாறுப்பட்டிருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.