Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்!

Gunnar Sørbø - (தமிழாக்கம்: ரூபன் சிவராஜா)

'போருக்குப் பின்னான சிறிலங்கா' எனும் தலைப்பில் மூத்த நோர்வேஜிய ஆய்வாளரும் கிறிஸ்தியான் மிக்கல்சன் ஆய்வு மையத்தின் - Christian Michelsens institutt (CMI) முன்னாள் பணிப்பாளருமான Gunnar S&oslash;rb&oslash; அவர்கள் அண்மையில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். <em>Morgenbladet</em> (The Morning Paper) எனும் நோர்வேஜிய வார இதழில் இவ்வாய்வு வெளிவந்தது.

***

இரத்த வெள்ளத்தோடும், தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்குமிடையிலான நீண்டநெடிய உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.

விடுதலைப்புலிகளின் தலைமை முற்றாகத் அழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசாங்கத்திற்குச் சாதகமான நிலையில் போர் தீவிரமடைந்து, சிறியதொரு துண்டு நிலத்திற்குள் ஒதுக்கப்பட்ட மக்கள் மனிதக்கேடயங்களாக ஆக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டது. ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. உயிர்களைக் காக்கின்ற தனது கடப்பாட்டிலிருந்து அனைத்துலக சமூகம் மீண்டுமொருமுறை தோற்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று பதிவானது.

நோர்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க தொகையான தமிழ்ச் சமூகம் வாழ்கின்ற மற்றும் இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் நீண்ட காலமாக நோர்வே ஈடுபட்டிருந்த புறநிலைகளிலும் கூட, போருக்குப் பின்னான இலங்கைத் தீவின் முரண்பாட்டுச் சூழல், மறக்கப்பட்ட ஒன்றாகவே நோர்வே மட்டத்தில் ஆகிவிட்டது.

போர் முடிந்து விட்டது. உல்லாசப்பயணம் மீண்டும் செழிக்கத் தொடங்கிவிட்டது. நாடு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டது. ஆதலால் அக்கறைப்பட வேண்டிய தேவை என்ன இருக்கின்றது என்ற போக்கு பரவலாக நிலவுகின்றது.

அக்கறை செலுத்துவதற்கு அவசியமான மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தேறிய கொடூரங்களுக்கு இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. மே 2009 இல் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டதாக ஐ.நா பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிட்டிருந்தது. 'தாக்குதல் தவிர்ப்பு வலையம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிக்குள்ளேயே பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரச படைகள் எறிகணை மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை நடாத்தின. மருத்துவமனைகளும் தாக்கப்பட்டன. போர் முடிவுக்கு வந்த பின்னரும், இடைத்தங்கல் முகாம்களுக்குள்ளும் தமிழ்ப் பொதுமக்கள் மீது, மோசமான மீறல்கள் நடாத்தப்பட்டன. போர் நடைபெற்ற பகுதிகளிலிருந்து வெளியேற முற்பட்ட தமது சொந்த மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தினர்.

அரசாங்கம் தனது சொந்த ஆணைக்குழுவினை நியமித்து, அதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூற முயன்றது. ஆனால் அந்த ஆணைக்குழு சுயாதீனமானதாகவோ அன்றி நடுநிலையானதாகவோ இருக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகள், இராணுவ நீக்கம் குறித்த நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வு நோக்கி முன்செல்லக்கூடிய சில அடிப்படைகளை அதன் பரிந்துரைகள் கொண்டிருந்த போதும், அந்த ஆணைக்குழுவானது பொறுப்புகளைச் சுட்டிக்காட்டுவதில் நழுவல் போக்கினை வெளிப்படுத்தியது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இவ்விவகாரம் பலமுறை மேசைக்கு வந்துள்ளது.

இரண்டாவது, பெரும்பான்மைத் தமிழர் வாழும் வடபகுதியில் அரசியல் இயல்புநிலை ஏற்படுத்துவதற்குரிய சமிக்ஞைகள் மிக அரிதாகவே தென்படுகின்றன. இராணுவப் பிரசன்னம் மிகையளவில் உள்ளதோடு, பாரிய பாதுகாப்புச் சிக்கலை நிலைகொள்ளச் செய்துள்ளது. சிங்கள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இராணுவத்தினரை உள்ளடக்கிய பாரிய இராணுவத் தளங்கள், சோதனைச் சாவடிகள், கண்காணிப்பு வலையங்கள் வடக்கில் உள்ளன. கிளர்ச்சிக்குழுக்கள் இல்லாத புறநிலையில் கூட இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி வானளாவியதாக, கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்படுவதை விட அதிகரித்துள்ளது.

தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய அச்சம் சற்று மிகைப்படுத்தலாக இருந்தாலும், சாலைகள் மற்றம் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்படுகின்றள. இராணுவ நினைவுச்சின்னங்கள், புத்தர்சிலைகள் தொடர்ச்சியாக அமைக்கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசங்களின் சிவில் நிர்வாக அலகுகளில் சிங்களவர்கள் அதிகளவில் பணிக்கமர்த்தப்படுகின்றனர் என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழர் பிரதேசத்திற்கு 'ஒரு வகையான சுயாட்சி' வழங்கப்படுமென போர் வெற்றிக்கு முன்னர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார். இந்த உறுதிமொழிக்கு அமையவே ராஜபக்சவின் போருக்கு இந்தியா மவுன ஆதரவளித்தது. இந்தியாவின் தமிழ்நாட்டில் 60 மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜூவ் காந்தி கொலைக்குக் காரணமான புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதில் இந்தியாவும் உறுதியாக இருந்தது.

தற்பொழுது வட மாகாணசபைக்கான தேர்தல் நெருங்கி வருகின்றது. தமிழ்ப் பிரதேசங்களுக்கு எந்த வகையான அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதில் இன்னமும் தெளிவில்லை. வட மாகாணத்திற்கு தனியான காவல்துறை அதிகாரம் வழங்கப்பட மாட்டாது, காணி மற்றும் நிலம் சார்ந்த நிர்வாக அதிகாரங்களும் வழங்கப்படமாட்டாது என்பது ஆட்சியாளர்களின் அண்மைய கூற்றுக்களிலிருந்து தெளிவாகியுள்ளது.

போருக்குப் பின்னான நிலைமைகள் உண்மையில் நேர்மறையான பாதையில் வளர்ச்சி கண்டுள்ளது. போர் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி வெற்றிக்களிப்புடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, சிறுபான்மையினர் என்பதை அரசாங்கம் தனது சொல்லதிகாரத்திலிருந்து நீக்கி விட்டது என்று கூறினார். இலங்கையில் இரண்டு வகையான மக்கள் மட்டுமே உள்ளனர். ஓன்று தாய் நாட்டை நேசிக்கும் மக்கள். மற்றையது தாய் நாட்டை நேசிக்காத 'சிறிய குழுக்கள்' என்றும் சொன்னார்.

'அபிவிருத்தி' அரசியல் தீர்வுக்கான மாற்றீடான மூலோபாயமாக கையாளப்படுகின்றது. உட்கட்டுமான வேலைத்திட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்படுகின்றது. தெற்கிற்கும் வடக்கிற்குமிடையிலான வணிக உறவு விரிவுபடுத்தப்படுகிறது. பயிர்ச்செய்கை மற்றும் மீன்பிடியில் வளர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால் அதிகார மையப்படுத்தலும் அதிகாரக் குவிப்பும் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

மகிந்த ராஜபக்சவினதும் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச ஆகிய அவரது இரண்டு சகோதரர்களின் அதிகாரக் கைகளுக்குள்ளேயே நாடு பெரிதும் ஆளப்படுகின்றது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென்ற சட்டம் நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு மகிந்தவினால் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாகத் தொடர்கின்ற வாய்ப்பு மகிந்தவிற்கு உள்ளது.

பசில் ராஜபக்ச 'புதிய அமைச்சகம்' ஒன்றிற்கு தலைமை தாங்குகின்றார். கிராமங்களின் அபிவிருத்திக்கான அந்த அமைச்சகம் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளின் செயல்வெளியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரங்களை மத்தியில் குவிப்புச் செய்கின்றது.

இதற்கு அனைத்து மாகாண சபைகளின் அனுமதி பெறவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பதவியிலிருந்து தூக்கப்பட்டு, ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

எதிர்க்கட்சிகளும் விசர்சனங்களை முன்வைக்கும் ஊடகங்களும் அடக்கப்படுகின்றன. ஐந்து நாட்களுக்கு ஒரு நபர் கடத்தப்படுவதாக அல்லது காணாமல் போவதாக கடந்த ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.

நோர்வேயின் சமாதான அனுசரணை முயற்சி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் நாடு பிரிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதோடு, எந்தவொரு வெளித் தலையீட்டிற்கும் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் போக்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடும் விசனம் அடைந்திருப்பதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தினைக் கொண்டு வந்ததன் மூலம், ராஜபக்ச ஆட்சி பீடத்தின் போக்கினை மாற்றுவதற்குரிய அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகித்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடியப் பிரதமர் Stephen Harper ஏலவே அறிவித்துள்ளார்.

'தமிழர் பிரச்சினை' என்பது இறைமையுடைய நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று ராஜபக்ச தொடர்ந்தும் சூளுரைத்து வருகின்றார். இப்படிக் கூறும் ராஜபக்ச மேலைநாடுகளில் பெருந்தொகை தமிழ் சிதறுகைச் சமூகத்தின் (Tamil Diaspora) இருப்பு மற்றும் இந்தியா ஆகிய தரப்புகள் 'தமிழர் பிரச்சினைக்கு' அனைத்துலகப் பரிமாணத்தினைக் கொடுக்கின்ற யதார்த்தத்தை மறந்து விடுகின்றார்.

இலங்கைத்தீவில் நிகழ்பவை சார்ந்து நாம் அக்கறை கொள்ள வேண்டியதன் மூன்றாவதும் முக்கியமானதுமான காரணி இதுவாகும். போர்முடிவுக்கு வந்த நான்காம் ஆண்டு நினைகூரலின் போது பிரித்தானிய எழுத்தாளரான Aatish Taseer தமிழர் பிரதேசங்களுக்குப் பயணம் செய்திருந்தார். பின்னர் The New York Times இதழில் தனது பயண அனுபவங்கள் பற்றி அவர் எழுதும் போது, 'பல பத்தாண்டு காலப் போரினாலும் இடப்பெயர்வினாலும் பாதிக்கப்பட்ட - மன உளைச்சலுக்குள்ளான - பிளவுபட்ட மக்களாக தமிழ்ச் சமூகம் உள்ளது' எனப் பதிவு செய்துள்ளார்.

அத்தோடு மிக அடர்த்தியான இராணுப் பிரசன்னம் மூலம் அவர்கள் ஒரு தோற்றுப்போன மக்களென நினைவூட்டப்பட்டுக் கொண்டிருப்பதோடு, தன்னாட்சி பற்றிய அவர்களது கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளன. தன்னாட்சி பற்றிய கனவு கொழும்பு ஆட்சிபீடத்தினால் மட்டும் சிதைக்கப்படவில்லை எனவும் தனிநாட்டுக் கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற, பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாயிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அதில் பங்குண்டு என்கிறார் பிரித்தானிய எழுத்தாளர் Taseer.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் தனது பிடியைக் கெட்டியாக வைத்திருந்தாலும், மாற்றமடைந்துவரும் மக்கட்தொகைச் சமநிலை (Demographic development), தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைவடையச் செய்யும் புறச்சுழலில், தமிழ் மக்களின் அரசியல் குரலை குழிதோண்டிப் புதைக்கின்ற சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை.

'நாங்கள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம்' என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கலைஞர் ஒருவர் எழுத்தாளர் Taseer இற்கு கூறுகின்றார். 'ஆனால் அது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. முன்னர் மக்கள் எங்களை சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள். தமிழன் என்றால் பயங்கரவாதி என்ற பார்வை இருந்தது. ஆனால் இன்று எங்களை 'வெறுமையானவர்களாக' பார்க்கின்றார்கள்' என்று அந்தக் கலைஞர் மேலும் கூறியிருந்தார்.

எது எப்படியிருப்பினும் இறுதியாக, இது இலங்கைத் தீவின் தமிழ் மக்களுடைய தலைவிதி பற்றியது. இதுவே நாம் கரிசனை கொள்ள வேண்டியதற்கான முதன்மைக் காரணியாகின்றது.

***

Gunnar M. Sørbø அவர்கள் நோர்வேயின் மூத்த ஆய்வாளர்களில் ஒருவரும் Christian Michelsens institutt (CMI)ஆய்வு மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் ஆவர். நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மீளாய்வு அறிக்கை உருவாக்கற் குழுவிற்கு இவர் தலைமை தாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=8&contentid=d8b6cefc-79c8-4b13-a60e-123daa8f02da

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்க்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய அச்சம் சற்று மிகைப்படுத்தலாக இருந்தாலும்

 

 

புத்தர் சிலையை விட உண்மையான புத்தர் வந்தால் தான் அது மிகைப்படுத்தப்படவில்லை என எழுத்தாளர் எண்ணுகிறாரா என எண்ண தோன்றுகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள்  எதையும் இழக்கவில்லை
எல்லாவற்றையும் இழந்து விட்டீர்கள் என அவர்கள் மீது திணிக்கப்படும்

ஒருவிதமான அடக்குமுறையால்
அவர்களும் ஒரு உறங்கு நிலையில் இருக்கின்றனர்.
 

நம்பியவர்கள் எல்லாம் எதிரிகளான நிலைகண்டு
வெறுமையான சிந்தனையற்ற மயக்கநிலையில் இருக்கின்றார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்கு தற்சமயம் ஒரு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய

ஆச்சரியமான நிகழ்வின் வருகை அவசியம்.
 

ஒரு சிறு பொறியில் இருந்துக்கூட ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம்.

அப்போது மக்களின் போராட்டவலு உலக மக்களையே அதிர்வடையச்செய்யும்  

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள்  எதையும் இழக்கவில்லை

எல்லாவற்றையும் இழந்து விட்டீர்கள் என அவர்கள் மீது திணிக்கப்படும்

ஒருவிதமான அடக்குமுறையால்

அவர்களும் ஒரு உறங்கு நிலையில் இருக்கின்றனர்.

 

நம்பியவர்கள் எல்லாம் எதிரிகளான நிலைகண்டு

வெறுமையான சிந்தனையற்ற மயக்கநிலையில் இருக்கின்றார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்கு தற்சமயம் ஒரு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய

ஆச்சரியமான நிகழ்வின் வருகை அவசியம்.

 

ஒரு சிறு பொறியில் இருந்துக்கூட ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம்.

அப்போது மக்களின் போராட்டவலு உலக மக்களையே அதிர்வடையச்செய்யும்  

 

சரியான கருத்து வாத்தியார்.. பச்சை போட முடியவில்லை..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.