Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி மக்களை பாதுகாக்க அனான் அழைப்பு

Featured Replies

ஐக்கிய நாடுகள் சாபையின் பொதுச்செயலர் கொபி அனான்..யுத்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதுகாப்புத் தேட அனுமதிக்கும் படியும்..சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் என்றும்..பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக ரெயிட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு தொடரும் வன்முறைகள் தொடர்பில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கும் அனான்..வன்முறையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் பேச்சு மேசைக்குத் திரும்பவும் அழைப்புவிடுத்துள்ளார்..!

U.N. Secretary-General Kofi Annan was "profoundly concerned" and urged the government and rebels to return to the negotiating table, allow aid agencies free access and let civilians leave contested areas, a spokesman said overnight.

reuters.com

http://today.reuters.com/news/articlenews....C1-ArticlePage2

ஊரடங்கு உத்தரவை இல்லாமல் செய்வதற்கு ஐ.நா சபையின் தலைவருக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் அழுத்தம் கொடுக்கலாம்.உடனடியாக மணு ஒன்று தயாரித்து அவரது கவனத்திற்கு கொண்டு வரலாம். இல்லையேல் அங்கும் ஓர் அனர்த்தம் நிகழ வாய்ப்பு உண்டு. யாராவது இது சம்பந்தமாக ஆங்கில புலமை உள்ளவர்கள் உடனடியாக மனு எழுதி இணையத்தில் கூட இணைத்து விட்டால் நாங்களும் அம் மணுவை அனுப்பலாம்.

கவனத்தில் எடுப்பீர்களா?

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கு புத்தியே இல்லையா. யாழில் சகல சர்வதேச நிறுவனப்பிரதிநிதிகளும் தங்கியுள்ளனர். மக்களை பாதுகாக்க..தங்களைப் பாதுகாக்க.. மக்கள் தங்கு முகாம்களை பாடசாலைச் சூழலில்..ஆலய சூழலில்...வைத்தியசாலைச் சூழல் ஏன் பல்கலைக்கழக வளாகம் என்று சர்வதேச செஞ்சிலுவையின் ஐநா அகதிகள் அமைப்பின் ஆதரவோடு நடத்த முனையலாமே. இவை மாணவர்களை மட்டுமன்றி..அனைவரையும் பாதுகாக்க உதவும்.

முன்னர் யாழில் யாழ் போதனா வைத்தியசாலைச் சூழலில் 500 மீற்றருக்கு சுற்றாடலுக்கு யுத்த சூனிய வலயம் அமைந்திருந்தது செஞ்சிலுவைச் சங்கத்தின் அணுசரனையோடு. இப்படியான நடைமுறைகளை..குடாநாட்டில் உடனடியாக மேற்கொள்ளத் தூண்டுவதே சிங்கள இராணுவத்திடம் இருந்து வரும் மனிதப் படுகொலைகளுக்கான அச்சுறுத்தலைக் குறைக்க வழி செய்வதோடு..அவர்களின் மனிதப் படுகொலைகளை சர்வதேச சமூகத்தின் முன் உடனுக்குடன் வெளிப்படவும் வகை செய்யும். வெறுமனவே மாணவர்களைக் காணவில்லை..மக்கள் படுகொலை என்று சம்பவங்களும் இழப்புக்களும் பெருக..கண்ணீரும் கருத்தும் சிந்திட்டு இருப்பது மக்களைப் பாதுகாக்க உதவுமா..இல்ல..சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர போராளிகளுக்கு உதவுமா..!

மக்களை இராணுவம் கேடயங்களாகப் பாவிப்பதை தடுப்பதே தற்போது..யாழில் புலிகளின் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது..! இதை யாழில் உள்ள மக்களும்..மாணவர்களும்..மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இந்திய இராணுவ நடவடிக்கைகளின் போது மக்களைப் பாதுகாக்க பாடசாலைகள் எங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு...அவை மக்கள் பரிகரிப்பு நிலையங்களாக தாக்குதலாளிகளுக்கு இனங்காட்டப்பட்டன.. தற்போது கொபி அனானின் கவனம்..படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பக்கம் திரும்பி உள்ள இந்தச் சந்தர்ப்பத்தை யாழில் உள்ள மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சர்வதேச அமைப்புக்களை நாடுவதே சிறந்தது..இழப்புக்களைத் தவிர்க்க உதவும்..! :idea: :idea:

அவசியம் கருதி இச்செய்தி இங்கும் இடப்படுகிறது. யாழில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் உங்கள் உறவுகளுக்கு இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டி பாதுகாப்புத் தேடச் சொல்லுங்கள்..! அங்கு லாண்ட் லைன்ஸ் வேலை செய்கின்றன. குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில்..!

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கு புத்தியே இல்லையா. யாழில் சகல சர்வதேச நிறுவனப்பிரதிநிதிகளும் தங்கியுள்ளனர். மக்களை பாதுகாக்க..தங்களைப் பாதுகாக்க.. மக்கள் தங்கு முகாம்களை பாடசாலைச் சூழலில்..ஆலய சூழலில்...வைத்தியசாலைச் சூழல் ஏன் பல்கலைக்கழக வளாகம் என்று சர்வதேச செஞ்சிலுவையின் ஐநா அகதிகள் அமைப்பின் ஆதரவோடு நடத்த முனையலாமே. இவை மாணவர்களை மட்டுமன்றி..அனைவரையும் பாதுகாக்க உதவும்.

அது தான் இன்று 2 பல்கலைகழகமாணவர்களை போட்டு த்Hள்லிட்டார்களே இது மேல என்ன செய்ய முடியும்

யாழில் இராணுவத்தால் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 15 ஓகஸ்ட் 2006, 16:36 ஈழம்] [யாழ். நிருபர்]

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவரை சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

யாழில் ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை சில மணி நேரம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதையடுத்து முற்பகல் 11.30 மணியளவில் பொருட்களைக் கொள்வனவு செய்ய மாணவர்கள் வெளியே சென்றனர். அப்போது குடிசார் உடையிலிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்தனர்.

பல்கலைக்கழக மருத்துவப்பீட இறுதி ஆண்டு மாணவரான கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் உயர் தொழில்நுட்ப மாணவரான கரவெட்டியைச் சேர்ந்த பிரதீபன் (வயது 19) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28196

நன்றி குருவி உங்கள் தகவல்களுக்கு.

கோபிஅனான் வெறும் கோரிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மூலமாக இதுசம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் பெற முயற்சிக்க வேண்டும்.

நன்றி குருவி உங்கள் தகவல்களுக்கு.

கோபிஅனான் வெறும் கோரிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதி மூலமாக இதுசம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் பெற முயற்சிக்க வேண்டும்.

வசம்பு அண்ணா அவர் வேறும் கோரிக்கை மட்டும் தான் விடுவார் சரி கோவி அண்ணன் பதிவில் இருந்த காலத்தில் எந்த நாட்டில் சண்டை நிப்பாட்டி இருக்கார் ஒரு ஜ நா சபை தலைவராக இருந்து கொண்டு?

ஏன் கடைசியில் லெபனான் இஸ்ரேல் சண்டை கூட 1000 பேருக்கு மேல உயிர் போன பின் அதுவும் காஸ்புல்லா பெரிய ரோக்கேட் எல்லாம் பாவிக்க தொடங்கிய பின் அமெரிக்காவும் பாரிஸும் சேர்ந்து போட்ட நாடக யுத்த் நிறுத்தம்( அதுவும் நடமுறைக்கு வந்து சில நேரத்தில் இஸ்ரேல் கஸ்புல்ல காரரி சுட்டு கொண்றதாக சொன்னார்கள் இங்கு செய்தியில்) :P :roll: :idea: :?: :!:

ஐநா என்பது சும்மா. அமெரிக்கா போன்ற நாடுகளின் குரல். அவர்களின் அநுமதி இன்றி இதனால் ஒன்றும் செய்யமுடியாது. இஸ்ரவேலுக்கு எதிராக ஐநா தீர்மானதில் கடுமையான வார்தைகள் பாவிக்க அமெரிக்காவால் தடை விதிக்கபட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

இவர்கள் எவருமே எமது மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை எவ்வாறு கிஸ்புல்ல போரளிகளின் போராட்டம் அமெரிக்காவுக்கும்,இசுரேலுக்

தமிழ் ஈழ வான் படையை வளர்ப்பதிலும் ஏவுகணைத் தளங்களை அமைப்பதுவும் புலம் பெயர் தமிழர் கைகளில் தான் இருக்கிறது. ஒன்று பட்ட முயற்ச்சியும் பொருளுதவியும் அதற்கு அவசியம்.

இதுதான் உண்மையானதும் நிதர்சனமானதும் ஆகும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.