Jump to content

கடவுளைக் காண...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளைக் காண..!

 

 

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

"ஐயா! பெரியவரே..! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.

"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''

"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா..! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

"தம்பீ, காண முயலுகின்றேன்.''

"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''

"இல்லை.''

"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?''

"இல்லை.''

"ஐயா..! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன பிழை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை, கையால் தொட்டீரில்லை, காதால் கேட்டீரில்லை, இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும், மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?''

"தேன் பாட்டில்.''

"தேன் இனிக்குமா, கசக்குமா?'

"என்ன ஐயா..! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை, இனிக்குமா கசக்குமா? என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.''

"தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா..? சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.''

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா, சிவப்பா? என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது? என்று திக்கித் திணறினான்.

"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, சடப்பொருளான தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்."

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''

"தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா??''

 

"இல்லை.''

"என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை, கையால் தொட்டாயில்லை, அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி.. பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப் பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ்செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.''

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''

"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

 

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?''

"என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?''

"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

"ஆம்! தெரிகின்றன.''

"முழுவதும் தெரிகின்றதா?''

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

 

"தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''

மாணவன் விழித்தான்.

"ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது, தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

 

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.''

"அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ..? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டாய். கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

"அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும், அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும், குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.''

 

 

- அஞ்சலில் வந்தது.

Link to comment
Share on other sites

கதை நல்லாத்தான் இருக்கு.. ஆனால் வாதப் பிரதிவாதங்களில் சத்து இருப்பதாகத் தெரியவில்லையே..

இருந்தாலும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ராசவன்னியன் அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்ஞானத்தில் சஞ்சரிக்கும் மக்கள் யாருக்கும் மெய்ஞானத்தில் கடவுளைக் காண விருப்பமில்லை போலும்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்ஞானத்தில் சஞ்சரிக்கும் மக்கள் யாருக்கும் மெய்ஞானத்தில் கடவுளைக் காண விருப்பமில்லை போலும்! :lol:

 

அதுதான் உண்மை அண்ணா :D

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.