Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெண்டுல்கார் சிறந்த வீரர் என்பது பச்சைப் பொய்…..

Featured Replies

இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும்.

 

சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத்  தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை.

 

புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது. 

 

துடுப்பாட்ட புள்ளிவிபரத்தில் பல சாதனைகளைப் புரிந்த ஒருவராக சச்சின் இருந்தாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு என்பது குறித்த சந்தேகம் நிலவத் தான் செய்கிறது. குறிப்பாக உண்மையான திறமையை வெளிக்காட்டும் கிறிக்கெற் பொட்டி வகை எனக் கருதப்படும் டெஸ்ட் கிறிக்கெற் போட்டிகளில் தனியொருவராக இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த ஒரு போட்டியைக் கூட என்னால் உடனடியாக நினைவில் கொள்ள முடியவில்லை. (நான் தவறாக இருப்பின் வாசகர்கள் திருத்திக் கொள்ள உதவுங்கள்).

 

அது மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளில் கூட சச்சின் ஐம்பது சதங்களை அண்மித்திருந்தாலும் அவற்றில் தனியொருவராக அணியை வெற்றிக்கு அழைத்து வந்த போட்டிகள் மிக மிகக் குறைவு. சார்ஜாவில் இடம்பெற்ற ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அடுத்தடுத்து அடித்த இரண்டு சதங்கள் மட்டும் என் நினைவில் உடனடியாக வருகிறது.

 

ஆனால் இதே காலப்பகுதியில் சச்சினை விடச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஒரு வீரர் பெரும் ஆர்ப்பாட்டங்களோ அலட்டலோ இன்றி தொடர்ந்து அசத்தி வருகிறார்.  அவர் வேறு யருமல்ல. தென்னாபிரிக்க அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜக் காலிஸ் தான் இந்தச் சாதனையாளர்.

 

இதிலே பலருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் பொதுவான் ஆட்டக்காரராக அன்றி துடுப்பாட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டாலும் காலிஸே முன்னணியில் திகழுகின்றார்.

 

டெஸ்ட் போட்டிகளில் இருவருடைய துடுப்பாட்டப் புள்ளிவிபரத்தையும் பாருங்கள்.

 

 

 

சச்சின் தெந்துல்கார் 198 போட்டிகளில் 15837 ஓட்டங்களை 53.86 என்ற சராசரியுடன் பெற்றிருக்கின்ற அதே நேரத்தில் 162 போட்டிகளில் மட்டுமே விளையாடி 13128 ஓட்டங்களை 56.10 என்ற சராசரியுடன் காலிஸ் பெற்றிருக்கின்றார்.

 

 

துடுப்பாட்டத்திற்கு அப்பால் 224 டெஸ்ட் விக்கெற்றுகளை தனது வேகப் பந்து வீச்சின் மூலம் கைப்பற்றியு;ள்ள காலஜஸ் ஒரு நம்பிக்கைக்குரிய பந்து வீச்சாளராக மட்டுமன்றி சிலிப் பகுதியீல் ஒரு மிகச் சிற்ந்த பிடியாளராகவும் இருக்கிறார். இதுவரை அவர் 194 பிடிகளையும் டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருக்கிறார்.

 

ஆனால் சச்சின் தெந்துல்கார் 45 விக்கெற்றுக்களை மட்டுமெ கைப்பற்றியு;ள்ளதுடன் 115 பிடிகளையும் எடுத்துள்ளார்.

 

 

சரி! டெஸ்ட் போட்டிகளில் எப்படியிருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் சச்சின் தனக்கு நிகர் இல்லாதவர் என்று சச்சீன் பிரியர்கள் உங்களுக்குள் சொல்லிக கொள்வது கேட்கிறது.

 

உண்மை என்னவென்றால் அங்கேயும் காலிஸ் சச்சின் தெந்துல்கரை விட முன்னணியிலேயே உள்ளார். இதோ புள்ளிவிபரங்களைப் பாருங்கள்

 

குறிப்பாக துடுப்பாட்டகாரர்களுக்குச் சாதகமான இந்திய ஆடுகளங்களில் தன்னுடைய போட்டிகளில் அதிகமானவற்றை ஆடியுள்ள தெந்து;லகரை விட கரிசின் ஆட்ட சராசரி அதிகமாகவே உள்ளது. அது மட்டுமன்றி ஆரம்பத் துடு;பபாட்டக்காரராக ஒருநாள் போட்டிகளில் ஆடுபவர்களுக்கு அதிக ஓட்டங்களையும் அதிக ஆட்டச் சராசரியையும் பெறுவது இலகுவானது என்பது கிறிக்கெற் அரிச்சுவடி தெரிந்தவர்களுக்கே தெரியும் நிலையில் மத்திய கள வீரராக அதிகமான போட்டிகளில் ஆடியுள்ள காலிஸ் தெந்துல்கரை விஞ:சியிருப்பது தெந்துல்காரே சிறந்த வீரர் என்ற மாயையில் நாம் பல காலம் இருந்துள்ளதைத் தெளிவாக உணர்த்துகிறது.

 

டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒரு நாள் களத்திலும் பந்து வீச்சிலும் அசத்தும் காலிஸ் 270 விக்கெற்றுகளைப் கைப்பற்றியுள்ள அதே நேரத்தில் சச்சின் கைப்பற்றியுள்ள விக்கெற்றுகளின் எண்ணிக்கை 154 மட்டுமே.

 

நான் இதுவரை கிறிக்கெற் களத்தி;ல அவதானித்த வகையிலும் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும் காலிசே தெந்துல்கரை விட சிறந்த வீரர் என்றால் அதில் மிகையொன்றுமில்லை.

 

 

முழுமையான புள்ளிவிபரங்களைப் பார்வையிட: http://muhila.blogspot.ca/2013/09/blog-post_20.html

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அண்ணா 90 ஓட்டத்தில் இருந்து 100 ஓட்டத்தை கடக்கும் மட்டும் இவரின் உடம்பு புள்ளா நடுங்கும்....99 ஓட்டம் எடுத்து இருக்கேக்க கூட ஒரு சில‌ தடவை அவுட் ஆக்கி வெளிய போனவர்....பல தடவை 100 அடிக்கும் வாய்பையும் இழந்தவர்

  • தொடங்கியவர்

கருத்திற்கு நன்றி பையன்! 

அவருடைய துடுப்பாட்டத்தின் சில சொட்களை நான் ரசிப்பேன். குறிப்பாக  Straight drive & Cover drive.  ஆனாலும் நீங்கள் சொல்வது போல கொஞ்சம் சுயநலமான வீரர். 


என்னுடைய பதிவில் உள்ள புள்ளிவிபரங்கள் சரியாக அமைவுறவில்லை. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. யாராவும் வல்லுனர்கள் உதவுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிவிபரங்கள் மட்டும் ஒருவரைச் சிறந்த விளையாட்டுக்காரன்

எனத் தெரிவு செய்ய உதவுமா
வேறு விபரங்கள் தேவையில்லையா
குழுவில் ஒரு வீரனுடைய பங்களிப்பு, வழி நடத்தல் போன்றன எடுபடாதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
என்னைப்பொருத்தவரையில் ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுவது  
நல்லதல்ல .ஆனால் ஒவ்வொருவருமே மிகச் சிறப்பானவர்கள்.டெண்டுல்கார் ஸ்பின்னுக்கு நன்கு விளையாடக்கூடியவர்.கலிஸ் ஒரு மிகச் சிறந்த சகலதுறை வீரர்.லாரா அந்த மாதிரி.பொண்டிங் விரைவு பந்துக்கு நன்றாக விளையாடக்கூடியவர்.
விவியன் ரிச்சேட் சொல்லிவேலையில்லை. அரவிந்தடி சில்வா,மியன்டாட்,இன்சி,கிரெய்க் சப்பல் யாகியோரும் சளைத்தவர்கள் இல்லை.
( இவை வெறும் எனது கணிப்பு) 
  • தொடங்கியவர்

புள்ளிவிபரங்கள் மட்டும் ஒருவரைச் சிறந்த விளையாட்டுக்காரன்

எனத் தெரிவு செய்ய உதவுமா

வேறு விபரங்கள் தேவையில்லையா

குழுவில் ஒரு வீரனுடைய பங்களிப்பு, வழி நடத்தல் போன்றன எடுபடாதா

 

வழிநடத்தல் மற்றும் தலைமைத்துவப் பண்பு என்பவற்றில் இருவருமே கோட்டை விட்டு விட்டனர் என்பதே எனது கணிப்பு.

 

ஆனால் அணியின் வெற்றிக்கான பங்களிப்பு என்ற விடயத்தில் காலிஸ் மேலே இருக்கிறார் என்பதே எனது கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாற்பது ஓட்டம் எடுத்தாலும் அணியை வெற்றிபெறச் செய்தாரா என்றுதான் பார்ப்பேன்.. அந்தவகையில், சத்திரசிகிச்சை வெற்றி; நோயாளி பரலோகம் என்கிற அளவு விளையாட்டுத்தான் சச்சினுடையது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இதை நான் எப்போவோ சொல்லி விட்டேன்.சச்சின் எப்பவும் தனக்காகத் தான் விளையாடுவார் அணியின் வெற்றி எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான் :lol:
 
  • கருத்துக்கள உறவுகள்
0srg.jpg
 
cricinfo
  • தொடங்கியவர்

புள்ளிவிபரங்களை ஒழுங்கான முறையில் இணைத்தமைக்கு நன்றி... நான் என்னுடைய பதிவில் இருந்து அலங்கோலமாக இருந்த பள்ளிவிபரங்களை அழித்து விட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில் ராகுல் டிராவிட் டெண்டுல்கரைவிட சிறந்த டெஸ்ட் போட்டியாளர். இந்தியா தோற்கும் நிலையில் இருக்கும் போது பல போட்டிகளில் தனது அபார ஆட்டத்தினால் இந்தியாவை வெற்றிகொள்ளச் செய்தார். உ+ம்- லக்சமனுடன் சேர்ந்து 2001ல் அவுச்திரெலியாவுக்கு எதிரான போட்டி

புள்ளிவிபரங்களை வைத்து ஒருவரின் திறமையினைச் சொல்லமுடியாது. வங்காளதேசத்துக்கு எதிராக 200 அடிப்பதை விட, தென்னாபிரிக்கா மைதானத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 50 ஓட்டங்களைப் பெறுவது கடினமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.