Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் I "m சரோஜா from ஓமந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி election முடிஞ்சிது பாருங்கோ........

இனி உந்த யாழ் தேவி யாழ்ப்பாணம் போகுமோ? இல்லை வவுனியாவோட நிக்குதோ தெரியல்ல பாருங்கோ எண்டாலும் நான் அதில ஒருக்கா ஆசைக்கு ஏறிட்டன் சரி அத விடுங்கோ சனம் தேசியத்த ஆதரிச்சு வாக்கு போட்டாலும் நாங்கள் இன்னும் கவனமா தான் இருக்கோணும் மகிந்தர் இந்த தேர்தல காட்டியே எங்களுக்கு தர வேண்டியத தட்டாமல் இப்பிடியே இழுத்துக்கொண்டு போய்டுவார்.........

அங்க தயாகத்தில மக்கள் தங்கள் அரசியல் நகர்வுகள ஒரு பக்கம் மேற்கொண்டாலும் நாங்கள் புலத்தில இருக்குரனாங்களும் ஒரு பக்கத்தால சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்திட்டு இருக்கணும்

ரெண்டு கையும் சேர்ந்து தட்டினா தான் ஓசை வரும் பாருங்கோ.....

சரி இவள் பிள்ளைய பள்ளிக்கூடத்தால கூட்டிட்டு வரணும் அப்பா நான் வரட்டே

இப்பிடி தான் நான் இடைக்கிடை வருவன் நீங்களும் வந்து உங்கட கருத்துகள மறக்காமல் சொல்லிட்டு போங்கோ என்ன

ரெண்டு கையும் சேர்ந்து தட்டினா தான் ஓசை வரும் பாருங்கோ.....

 

ஊருக்கு போய் பார்த்திட்டு வந்து சொல்லுறன் யாழ் தேவியில் தான் போனேனா என்று. :D

 

இதில் ஒருவிடயம் என்ன என்றால் அரசு ஏமாற்றப்பார்த்தால் விக்கினேஸ்வரன் நேராக இந்தியாவிடம் கேசை எடுக்க வேண்டியதுதான். இந்தியா பளையில் இருந்து காங்கேசந்துறை வரைக்கும் போடுவதற்கான கடைசி ஒப்பந்தத்திலும் சிவசங்கர் மேனன் கையெழுத்து போட்டுவிட்டார்.

 

இந்தியாவை ஒரங்கட்ட போய்த்தான் தேர்தல் வைக்க வேண்டி வந்தது. தேர்தலின் அன்றும் கூட விக்கெனேஸ்வரனுக்கு அது ந்டந்து முடியுமா இல்லை என்பது தெரியாது. ரணில், JVP எல்லோருமேதான் தேர்தல் நடக்காது என்று நினைத்தார்கள். ஆனால் ந்டந்துவிட்டது. இது நடந்து முடிந்த ஆச்சரியமான பொறிமுறையப்பற்றி(அல்லது இரகசியத்தைப்பற்றி) யாருக்கும் திருத்தமான விளக்கம் இல்லை. நாம் நினைக்கிறோம் சிதம்பரம் மட்டும்த்தான் பசிலூடக இலங்கை தொலை தொடர்பு கம்பனிகளில் முதல் இட்டு இருக்கிறார் என்று. யார், யார் இந்தியாவில் உள்ள கம்பனிகளில் முதலிட்டு இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒருநாள் வெளியே வரலாம். அன்று யாழ்தேவி கங்கேந்துறை வரை ஓடலாம். (ஸ்ரேசனடியை ஆமி விட்டுக்கொடுத்தால்)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சரோஜா ....நல்ல முயற்சி பாராட்டுக்கள். அடிக்கடி  வந்து எழுதுங்கோ  நாட்டு நடப்பை அறியலாம். 

ஒரு மாதிரி election முடிஞ்சிது பாருங்கோ........

இனி உந்த யாழ் தேவி யாழ்ப்பாணம் போகுமோ? இல்லை வவுனியாவோட நிக்குதோ தெரியல்ல பாருங்கோ எண்டாலும் நான் அதில ஒருக்கா ஆசைக்கு ஏறிட்டன் சரி அத விடுங்கோ சனம் தேசியத்த ஆதரிச்சு வாக்கு போட்டாலும் நாங்கள் இன்னும் கவனமா தான் இருக்கோணும் மகிந்தர் இந்த தேர்தல காட்டியே எங்களுக்கு தர வேண்டியத தட்டாமல் இப்பிடியே இழுத்துக்கொண்டு போய்டுவார்.........

அங்க தயாகத்தில மக்கள் தங்கள் அரசியல் நகர்வுகள ஒரு பக்கம் மேற்கொண்டாலும் நாங்கள் புலத்தில இருக்குரனாங்களும் ஒரு பக்கத்தால சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்திட்டு இருக்கணும்

ரெண்டு கையும் சேர்ந்து தட்டினா தான் ஓசை வரும் பாருங்கோ.....

சரி இவள் பிள்ளைய பள்ளிக்கூடத்தால கூட்டிட்டு வரணும் அப்பா நான் வரட்டே

இப்பிடி தான் நான் இடைக்கிடை வருவன் நீங்களும் வந்து உங்கட கருத்துகள மறக்காமல் சொல்லிட்டு போங்கோ என்ன

பாஸ் நல்ல முயற்சி இதை ஒவ்வொரு நாளும் எழுதுங்கோ நாட்டு நடப்பை உங்கள் பார்வையில்  வாழ்த்துக்கள்  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தொடர்ப்பாக இந்திய பத்திரிகைகளில் வரும் வாசகர்களின் பின்னூட்டங்களை பார்க்க சிப்பு சிப்பா வருது....என்னமோ இந்திய மாநிலங்களுக்கு கிடைக்கும் அதிகாரம் எல்லாம் அங்க மாகாண சபையளுக்கு இருக்கு என்ற மாதிரி பேசிட்டு இருக்காங்க ...இல்லை இல்லை அப்பிடி ஒரு பிரச்சாரம் பண்ண படுது அதுவும் குறிப்பா இந்திய பொது தேர்தல் வார இந்த சமயத்தில் மக்கள் திசை திருப்ப படுகின்றார்களோ என்று சந்தேகமா இருக்கு..............தமிழக மக்கள் மத்தியில் ஏற்ப்படிருக்கும் ஈழத்தமிழர் தொடர்பான ஒரு அனுதாப எழுச்சியை இந்த தேர்தலை வைத்து புரட்டி போட சதி நடக்குதோ என்றும் என்ன தோணுது

இனி தினமலரில் வந்த சில வாசகர்களின் பின்னூட்டங்களை பார்ப்போம்

Sanjay Kumar - chennai,இந்தியா

23-செப்-201307:08:38 IST Report Abuse

தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். இனிமேல் உங்கள் வாழ்வில் சுபிக்க்ஷம் தான்.

Mohandhas - singapore,சிங்கப்பூர்

23-செப்-201306:30:30 IST Report Abuse

எது எப்படியோ நல்லது நடந்தால் சரி.. தனி ஈழம் என்றெல்லாம் சொல்லி மக்களை சாகடிக்காமல் சம உரிமைக்காக அற வழியில் போராடுங்கள்.. நிச்சயம் பலனளிக்கும்..தமிழ் நாட்டில் உள்ள சில பேர் பிரிவினைவாதத்தை சொல்லி அரசியல் நடத்துகிறார்கள்,. நம்பாதீர்கள்..

Pannadai Pandian - wuxi,சீனா

23-செப்-201305:41:09 IST Report Abuse

இது ஒரு நல்ல துவக்கம். தமிழர்கள் இலங்கை கூட்டமைப்பில் இருந்து கொண்டே தங்கள் உரிமைகளுக்கு போராடுவது நல்லது. முதலில் தமிழர்கள் தங்களின் வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், ராணுவம், போலிஸ் துறை ஆகியவற்றில் நுழைந்து முன்னேறும் வழியை தேடுங்கள். மேற்கூறியவை கிடைத்தால் மற்றவை தானாக உங்களை தேடி வரும். இந்தியா இனி தன மூக்கை இலங்கை விவகாரத்தில் நீட்டி, ராஜபக்சேவுக்கு துணை போயி இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்காமல் இருந்தால் சரி.

karuvaayan - karimedu,இந்தியா

23-செப்-201300:36:11 IST Report Abuse

அப்பாடி ... இலங்கை தமிழர்கள் எல்லோரும் உங்க நாட்டுக்கு ஓடுங்கப்பா .தமிழ்நாட்டு மக்கள் தினந்தோறும் உங்கள பத்தியே பேசிக்கிட்டு வேல வெட்டிக்கு போகவே மாட்றாங்க

இப்பிடி போகுது மக்காள்

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் அதிசயம் இல்லை சுண்டல். இந்திய மாணவர்களின் பொது அறிவை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கண்டு "வி(ப)யந்து"  போய் இருக்கிறேன். :lol: இலங்கையில் என்ன நடக்குது என்றே தெரியாதவர்களுக்கு தேர்தல் நடந்திச்சாம் என்றால் ஏதோ தம்மூரில கோழிப்புரியாணிக்கு.. நடக்கிற தேர்தல் மாதிரின்னு நினைச்சுக்கிறாங்க. அவ்வளவும் தான். :icon_idea:

 

 


  • கருத்துக்கள உறவுகள்

யாருங்க இந்த 'சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................ரோஜா...?'


படம், கிடம் ஏதுமில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

யாருங்க இந்த 'சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................ரோஜா...?'

படம், கிடம் ஏதுமில்லையா?

 

http://www.youtube.com/watch?v=4LMQuApdeD8

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்மண்ணில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் அரசியல் தீர்வுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை வடமாகாண தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கிறது. இலங்கையில் இனி அவர்களுக்கு எது சாத்தியமான போராட்டமோ அதை அவர்களே முன்னெடுத்துக் கொள்வார்கள். இனியும் புலம் பெயர்ந்தவர்களின் / தமிழகத் தமிழர்களின் வெற்று வாய்ச்சவடாலும், வீம்பு வீரக்கூச்சலும் வேலைக்கு ஆகாது.

இது தி மு க வின் முக்கிய ஆதரவாளரும் எழுத்தாளரும் முன்னாள் யாழ் கள உறவும் ஆனா லக்கி லூக்கின் அரசியல் ஆய்வு

அய்யோ என்னால முடியல்லியே.........இந்த யாழ் தேவி க்கு முன்னாடி போய் நிக்க போறன் நானு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே...இலங்கையில் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பாலான இடங்களை கைபற்றி இருப்பது உலகம் முலுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு புது உட்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.''தனி ஈழம் ஒன்றே தீர்வு'' என்ற எண்ணத்தில் தான் போருக்கு பிந்திய தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதனையே இது காட்டுகிறது.மிக மோசமான யுத்தம்...அதனால் ஏற்ப்பட்ட அழிவுக்கு பிறகும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு நிற்பது வியக்கத்தக்கது.வெறி நாய் இராசபட்சேவின் மிரட்டல்,உருட்டல்களை தாண்டி தமிழ் மக்கள் தங்களின் உணர்வை தீர்க்கமாக பதிவு செய்துள்ளனர்.கிட்ட தட்ட இதை ‘’பொதுசன வாக்கெடுப்பாக’’ கூட கருதலாம்.இலங்கையில் இராசபட்சே கும்பல் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்ப்பாகவும் சர்வ தேசம் கணக்கில் கொள்ள வேண்டும்.இந்த தீர்ப்பை சர்வ தேச சமுகமும்,இலங்கையும்,இந்தியாவும் உண்மையிலேயெ மதிக்குமானால் உடனடியாக தமிழ் மக்கள் பகுதியில் இருந்து இலங்கை இராணுவத்தையும்,சிங்களமயமாக்களையும் உடனே நிறுத்தி கொள்ள வேண்டும்.தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விட்டு சிங்களர்களை வெளியேற்றிவிட வேண்டும்.இதனால் தமிழ் மக்களுக்கு என்ன நடந்து விடும்???இது தான் தமிழர்கள் முன்னால் உள்ள கேல்வி...இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தான் மாகாண முதல்வர் இயங்க முடியும் என்பதால்,பெரிய மாற்றத்தை உண்டக்கும் சட்டங்களை உருவாக்கிட முடியாது.அதே நேரம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி பகிவுகளை கூட்டமைப்பு மூலம் செயல் படுத்த முடியும்.தமிழ் மக்களை போரின் பாதிப்பில் இருந்து மீட்க முடியும்.இலங்கை இராணுவத்தை வெளியேற்றி விட்டாலே தமிழர்களுக்கு வெற்றி தான்.ஆனல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ராசபட்சே கைகூலிகளாக இருந்து விடக்கூடது.அது தான் உலக தமிழர்களின் கவலையாகும்.

இது இயக்குனர் மு களஞ்சியத்தோட கருத்து இப்பிடியும் தமிழர்களை புரிந்து கொண்டவர் இருக்கிறதால யாழ் தேவி க்கு முன்னாடி போய் நிக்கிறதா இரத்து செய்றன் :D :d

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.youtube.com/watch?v=4LMQuApdeD8

 

 

நல்லா வடிவா இருக்கு!. (இருக்கையை சொன்னேன்!) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பயந்திட்டன் நல்ல காலம் இருக்கையா போய்ட்டுது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வெற்றியானது 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வெற்றியிலும் பார்க்க மகத்தானது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வெற்றியும் சிறப்பானதுதான். எனினும் அது தொகுதிவாரியான தேர்தலின் கீழ் கிடைத்த வெற்றி. மாகாணசபைத் தேர்தலில் இப்போது கிடைத்திருக்கும் வெற்றி விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்கீழ் பெற்ற வெற்றி. இவ்வாறு விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்கீழ் கிடைத்த வெற்றி என்பத நிச்சயம் 1977 இல் பெற்றுக்கொண்ட வெற்றியைவிட மேலானது.

ஊடகவியலார் மகாநாட்டில் திரு.சம்பந்தர் கூறிய இக் கருத்துத் தொடர்பாக தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சம்மந்தன் ஐயா என்ன சொல்ல வாரார் அதாவது மக்கள் வட்டுகோட்டை தீர்மானத்திலும் பார்க்க இந்த தேர்தலில் அமோகமாக வாக்களித்ததன் மூலம் மாகாண சபையே போதும் என்று சொல்லிட்டினம் எண்டு சொல்ல வாராரோ......

இவங்கள புரிஞ்சுக்க முடியலையே....

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள புரிஞ்சுக்க முடியலையே....

 

ஒன்று மட்டும்  சொல்லமுடியும்  சுண்டல்

பேச்சை  நிறுத்தி

செயலை அதிகப்படுத்தணும் இவர்கள்.

பேசுவதால்

செயல்த்திறன் குறைவடைகிறது

ஒரு அரசியல்வாதி

மேடையில் பேசுவதை தான் செய்து விட்டதாக எடுத்துக்கொள்வானாம்.

அதனால்தான் அவற்றை 

ஒன்றையுமே செய்வதில்லையாம்.

 

 

இந்த மகத்தான வெற்றி  என்பது ஒவ்வொன்றின் தொடர்ச்சியே  தவிர

இது தனி  வழியல்ல.

கூட்டமைப்புக்கு  மட்டுமல்ல

சம்பந்தருக்கும் இதுதான் கடைசி முறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான தீர்வை குழப்பும் முஸ்லிம் கட்சிகள் இலங்கையில் இருகின்றன. உதாரணமாக புலிகளுடன் சிங்கள அரசு பேச்சுவார்த்தைக்கு வரும் போது சும்மா கிடக்கும் இவர்கள் தங்களுக்கும் தனி அளகு வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். அவர்களுக்கு தனி அந்தஸ்த்து கொடுத்தால் தங்களுக்கும் தனி அந்தஸ்துடன் கூடிய பிரதேசம் வேண்டும் என்று கூவுவார்கள். அதே நேரத்தில் தங்களது மொழியாக சிங்களத்தையும் தமிழையும் கொண்டுள்ளார்கள். இவர்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அத்தனை பெரும் மந்திரிகள் தான். இலங்கை நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் சுவிசேர்லந்து போனாராம் அங்கே கடல்சார் அமைச்சரை சந்தித்து பேசினாராம் கடலே இல்லாத நாட்டில் எதற்க்கு கடல் சார் அமைசர் என்று கீட்டாராம். அதற்க்கு கடல்சார் அமைசர் சொன்னாராம் நீதி அமைச்சராக இருக்கும் நீங்கள் உங்கள் நாட்டில் நீதி இல்லை என்று ஏன் பேசுகின்றீர்கள் என்று கேட்டாராம். இவர் வாய் மூடி மௌனியாகி விட்டாராம். சந்தர்ப்பதிட்க்கு ஏற்றவாறு த்னக்ளுக்கு கிடைக்காவிட்டாலும் பரவா இல்லை தமிழர்களுக்கு எதுவும் கிடைத்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படும் முஸ்லிம் கட்சிகள் இங்கே காண படுகின்றன. தமிழ் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மகிந்த கட்சி 14 இடங்களை பிடித்து. தமிழர் கட்சி 11 இடங்களை பிடித்து. முஸ்லிம் கட்சி 7 இடங்களை பிடித்து. சிங்களவர்களின் ஆட்சி அமைவதை தடுக்க தமிழர்கட்சி 7 இடங்களை மட்டும் பெற்ற முஸ்லிம் கட்சிக்கு முதலவர் பதவியை தருவதாகவும் கூட்டாட்சி அமைக்க கோரியது, அதற்க்கு இந்த முஸ்லிம் கட்சி தனக்கு முதலவர் பதவி இல்லா விட்டாலும் பரவா இல்லை நாங்கள் மகினதவிட்க்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறி சிங்கள ஆட்சியை அமைக்க துணை போனது. இப்படியான தமிழ் இனம் இருக்கும் வரை எப்படி தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும்..? சிங்கள இனாம் கொடுக்க முற்பட்டால் கூட அதை தடுக்க இப்படியான ஒரு இனம் ஸ்ரீ லங்காவில் வாழுகின்றது.

இது ரகு என்ற ஒரு சென்னை தமிழர் தினமலரில் எழுதியது

இந்திய தமிழர்களுக்கே புரிந்த விடையங்கள் சில நம்ம தமிழருக்கு புரிதில்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரமும் , கடந்த வாரமும் "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டின் பத்தி எழுத்தாளர் "Rosie DiManno" இலங்கை நிலவரங்களை நேரில் சென்று அவதானித்துக் கட்டுரைகளை அங்கிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். இன்று அவர் எழுதி "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தலைப்பு "New era begins after Tamils win key election". அந்தக் கட்டுரையில் // Tamils were not bought off by the extensive reconstruction, all the multi-millions - from China, mostly-poured into new roads , new infrastructure, new hospitals, new commercial buildings, even a new sports stadium that's going up outside the new trail station.// இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

Nadarajah Muralitharan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி இந்தியா நினைச்சத சாதிச்சு முடிச்சாச்சு

புலிகள அழிச்சாச்சு

அவர்களின் மாகாணசபை முறைய கொண்டுவந்தாச்சு ......

30 வருட போராட்டம்

இழப்புகள்

தியாகங்கள்

பொருளாதார நஷ்டங்கள் எல்லாம் இந்த வெற்றி மூலமா மூடி மறைக்கப்பட்டிருக்கு

இந்தியா நினைக்கிறது அதன் கொள்கைவகுப்பாளர்களின் திட்டங்களுக்கு இணங்க நல்லாவே நடந்திட்டு இருக்கு.....

இனி இந்த தேர்தல வைச்சே காங்கிரசும் அதன் கூட்டணிகளும் மத்திய தேர்தலை சந்திக்கும்......,

சீமான் வைக்கோ போன்றவர்களின் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை பற்றிய பிரச்சாரங்களும் மழுங்கடிக்க பட்டிருக்கு........

இவளவு காலமும் மாணவர்கள் அரசியல் கட்சிகள் என்று போராடி ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு அனுதாப அலை வடக்கு தேர்தல் என்ற சுனாமி மூலம் அடித்து செல்லப்பட்டிருக்கு.......

மாகாண சபை தேர்தல் அதன் அதிகாரம் இதனால் தமிழர்களுக்கு கிடைக்க போவது என்ன என்று மறுபடியும் தமிழக மக்களுக்கு புரிய வைத்து ரொம்ப கடினமா இருக்க போகுது

இந்த வடக்கு தேர்தலை வைத்து சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இப்பொழுதே தங்கள் அறிக்கைகள் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடக்கி விட்டார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி இந்தியா நினைச்சத சாதிச்சு முடிச்சாச்சு

புலிகள அழிச்சாச்சு

அவர்களின் மாகாணசபை முறைய கொண்டுவந்தாச்சு ......

30 வருட போராட்டம்

இழப்புகள்

தியாகங்கள்

பொருளாதார நஷ்டங்கள் எல்லாம் இந்த வெற்றி மூலமா மூடி மறைக்கப்பட்டிருக்கு

இந்தியா நினைக்கிறது அதன் கொள்கைவகுப்பாளர்களின் திட்டங்களுக்கு இணங்க நல்லாவே நடந்திட்டு இருக்கு.....

இனி இந்த தேர்தல வைச்சே காங்கிரசும் அதன் கூட்டணிகளும் மத்திய தேர்தலை சந்திக்கும்......,

சீமான் வைக்கோ போன்றவர்களின் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை பற்றிய பிரச்சாரங்களும் மழுங்கடிக்க பட்டிருக்கு........

இவளவு காலமும் மாணவர்கள் அரசியல் கட்சிகள் என்று போராடி ஏற்படுத்தி வைத்திருந்த ஒரு அனுதாப அலை வடக்கு தேர்தல் என்ற சுனாமி மூலம் அடித்து செல்லப்பட்டிருக்கு.......

மாகாண சபை தேர்தல் அதன் அதிகாரம் இதனால் தமிழர்களுக்கு கிடைக்க போவது என்ன என்று மறுபடியும் தமிழக மக்களுக்கு புரிய வைத்து ரொம்ப கடினமா இருக்க போகுது.

இந்த வடக்கு தேர்தலை வைத்து சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இப்பொழுதே தங்கள் அறிக்கைகள் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடக்கி விட்டார்கள்......

 

ஓ' மந்தை சரோசா, கரீக்டா தான் சொல்லிக்கிதுபா!

 

இத்த பத்தி அப்பிடித்தான் இங்கோ பேசிக்கிரானுக.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரா இருக்கிற ரணில் பதவி விலக போவதாக ஒரு கதை அடிபடுது....

தொடர்ந்தும் அவர் தலைமையில் தேர்தலை சந்திக்கும் அந்த கட்சிக்கு தோல்வி மேல் தோல்வி தான்.......

ஒரு பக்கம் அந்த கட்சியின் சிறந்த இரண்டாம் தர முக்கிய பல மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களும் இந்த கட்சியில் தொடர்ந்து இருந்தால் எங்கே தங்கள் அரசியல் வாழ்வே கேள்வி குறி ஆகி விடுமோ என்று அரசு பக்கம் தாவி நல்ல பதவிகளைய்ம் பெற்று விட்டார்கள்.

தொடர்ந்தும் அந்த கட்சியின் தலைவரா இருப்பதிலும் ரணில் அவர்கள் பதவி விலகி வேறு நல்ல தலைவர்களிடம் கட்சியை வழங்குவது தான் இலங்கையில் பலமான எதிர்க்கட்சி ஓன்று இருக்க வழி செய்யும், செய்வாரா ரணில் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபையில் தொடரப்போகும் இழுபறிகளும் வெளிவரப் போகும் உண்மைகளும்.

இலங்கையின் மாகாண சபைகள் இலங்கை அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டம், மாகாணசபைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டது. 13வது திருத்தத்திற்கு திருத்தம் கொண்டுவர இலங்கைப் பாராளமன்றில் மூன்றி இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாகாண சபைச் சட்டத்தை சாதாரண பெரும்பான்மையினரின் ஆதரவுடன் மாற்றி அமைக்கலாம்.

அதிகாரமில்லா அதிகாரப் பரவலாக்கம்.

இலங்கையின் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி அன்று நடேசன் சத்தியேந்திராவும் இன்று குமாரவடிவேல் குருபரனும் போதிய அளவு சொல்லிவிட்டார்கள். இது பற்றிக் காண கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்:

1. சந்தியேந்திரா

2. குருபரன்

இந்த இணைப்பில் இருப்பவை சட்டம் பற்றியவை என்றாலும் அவற்றை ஒவ்வொரு தமிழ் மகனும் திருப்பி திருப்பி வாசித்தும் திருப்பித் திருப்பிக் கேட்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அது பெரிதும் உதவியாக இருக்கும்.

ஒரு சட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன: 1. சட்டவாக்கம், 2. சட்ட அமூலாக்கம், 3. சட்ட வியாக்கியானம்.

இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் இலங்கைப் பாராளமன்றத்திடமும், சட்ட அமூலாக்கம் குடியரசுத் தலைவரிடமும், சட்ட வியாக்கியானம் நீதித் துறையிடமும் இருக்கின்றன.

மாகாணசபைச் சட்டவாக்கம் எப்படி நடந்தது?

1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தார். திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். இதனால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடும் ஆத்திரம் அடைந்தார். அவர் தமிழர்களின் இலங்கை அரசுக்கு எதிரான படைக்கலப் போராட்டத்தை தீவிரப்படுத்தி இலங்கை அரசின் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்தார். எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டமும் மாகாணசபைச் சட்டமும் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது. இதற்குச் சிங்களமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போது இலங்கை அரசு உழங்கு வானூர்தியில் இருந்து சிங்களவர்கள் மீது தாக்குதல் நடாத்தியது. ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் திகதி இடப்படாத பதவி விலகல் கடிதம் அப்போது அதிபர் ஜே ஆர் ஜெயவர்தனேயின் கையில் இருந்தது. சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இந்த இரு சட்டங்களும் இயற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களையும் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழர்களை இந்தியா கடுமையாக மிரட்டி சம்மதிக்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்லப் போவதாகவும் இந்தியா மிரட்டியது.

சட்ட அமூலாக்கம்

13வது திருத்தத்தையும் மாகாண சபைச் சட்டத்தையும் 26 ஆண்டுகள் நிறைவேற்றாமல் இழுத்தடித்தது. மாகாண சபை என்பது ஒரு மாடு என்றால் அதன் மூக்கணாங்கயிறாக மாகாண ஆளுனரும் அந்த மூக்கணாங் கயிற்றைப் பிடிப்பவராக இலங்கைக் குடியரசுத் தலைவர் இருப்பார். மாடு எவ்வளவு தூரம் மேயலாம் என்பதையும் எதை மேயலாம் என்பதையும் குடியரசுத் தலைவர் தீர்மானிப்பார். தேவை ஏற்படின் மாட்டை கட்டியும் போடலாம். அது மட்டுமல்ல தேவை ஏற்படின் மாட்டை இறைச்சிக்கு விற்று விடவும் முடியும். அதாவது 13வது திருத்தம், மாகாண சபைச் சட்டத்தையும் இலங்கை பாராளமன்றம் இரத்துச் செய்யலாம்.

சட்ட வியாக்கியானம்

உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் என் சில்வா 13வது திருத்தத்தின் படி வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைத்தது பிழையானது என்ற வியாக்கியானத்தை வழங்கினார். இது தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு விழுந்த முதலாவது அடி. 2013-09-26-ம் திகதியான தியாகி திலீபனின் நினைவு நாளில் மகாண சபைக்கு அரச காணிகளுக்கான அதிகாரம் இல்லை என்ற வியாக்கியானத்தை இலங்கை உச்ச நீதி மன்ற நீதியரசர் வழங்கினார். இலங்கை அரசமைப்பின் 18வது திருத்தத்தின் பின்னர் நீதித் துறை இலங்கை குடியரசுத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வந்து விட்டது எனப்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 18வது திருத்தத்தின் படி:

The President can seek re-election any number of times;

The ten-member Constitutional Council has been replaced with a five-member Parliamentary Council;

Independent commissions are brought under the authority of the President; and,

It enables the President to attend Parliament once in three months and entitles him to all the privileges, immunities and powers of a Member of Parliament other than the entitlement to vote. In short, it is all about arming the President with absolute power.

இழுபறியில் உண்மைகள் வெளிவரும்

இப்போது வட மாகாண சபைக்கு என்று ஒரு பணிமனை கூடக் கிடையாது. அது இனி எங்கே கூடப் போகிறது? அது நிறை வேற்றப் போகும் நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி அனுமதிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி இனி நாங்கள் பார்க்கலாம். இனி நிறைய முரண்பாடுகள் இழுபறிகள் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் வரப் போகிறது. அதில் யாருக்கு வெற்றி கிடைக்கப்ப் போகிறது என்பதை நாம் பார்க்கலாம். இந்த முரண்பாடுகள் தொடர்பாக நீதித் துறையிடம் முதலமைச்சர் செல்லும் போது நீதித் துறை எப்படியான வியாக்கியானங்களைச் செய்யும் என்பதையும் இனி நாம் பார்க்கலாம். சத்தியேந்திராவும் குருபரனும் சொன்னவற்றின் உண்மைத் தன்மையை இனி நாம் நடை முறையில் காண நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

Thanks to Vel Tharma

சுண்டல்: இணைப்புக்கள் சரியாக வரவில்லை.

 

இலங்கையின் மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி அன்று நடேசன் சத்தியேந்திராவும் இன்று குமாரவடிவேல் குருபரனும் போதிய அளவு சொல்லிவிட்டார்கள். இது பற்றிக் காண கீழுள்ள இணைப்பில் சொடுக்கவும்:
1. சந்தியேந்திரா
2. குருபரன்
இந்த இணைப்பில் இருப்பவை சட்டம் பற்றியவை என்றாலும் அவற்றை ஒவ்வொரு தமிழ் மகனும் திருப்பி திருப்பி வாசித்தும் திருப்பித் திருப்பிக் கேட்டும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் அது பெரிதும் உதவியாக இருக்கும்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கூட்டமைப்பு வென்றதை வைத்து என்னமோ தமிழ் ஈழம் கிடைத்த கணக்கா துள்ளுவதை என்ன என்று சொல்வது?

அனைத்துமே சிங்கள ராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப நன்றாகவே நடக்கிறது

இந்த மாகாண சபைக்கு இந்தியாவின் நகராட்சிகளுக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லை

அன்று தொடக்கம் இன்று வரை சிங்கள ராஜதந்திரம் என்பது தமிழர்களை நன்றாக குஷிப்படுத்தி பின்பு பெரிய ஒரு ஆப்பு அடிகின்றதாவே இருக்கு

என்ன ஓன்று இவளவு துயரங்கள் இடம் பெயர்வுகள் இழப்புகள் அழிவுகள் மத்தியிலும் தமிழ் மக்கள் தேசியத்தின் பால் அளவுகடந்த அசைக்க முடியாத பற்றுடன் இருந்து கூட்டமைப்பிற்கு அமோக ஆதரவை கொடுத்தது தான் சற்று ஆறுதலான விடையம்

அதுவும் இலங்கையின் நீதி துறை என்பது முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது அதனால் சுயாதீனமாக இயங்க முடியாது அரசு என்ன நினைக்கிறதோ அவைகள் தான் தீர்ப்பாக வரும் மறுக்கும் பட்ச்சத்தில் பதவிகள் பறிக்கப்படும் நல்ல உதாரணம் முன்னாள் நீதி அரசர் ஷிராணி வடக்கு மகான சபை எடுக்கும் ஒவொரு முடிவையும் ஹெல உருமையவில் இருந்து பொது பல சேனாவரை அரசின் தூண்டுகோளுடன் நீதிமன்றம் போகும் அங்கே தடைகள் ஏற்ப்படுத்தப்படும் அதன் முதல் கட்டமே மாவை சேனாதி ராஜா நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சறோ அக்கா: .......என்ன தம்பி சுண்டல் யாழ்ப்பாணம் உதயன் விருந்தினர் மாளிகையில் கூடின தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் அமைச்சு பதவிக்கு ஒரு அக்கப்போரே நடாத்தி இருகினமாமே........

சுண்டல் : என்னது அக்கா அமைச்சு பதவிக்கு அக்கபோரா? அந்த பதவியில தான் எதுவுமே இல்லையே எதுக்கு சண்டை?

சறோ அக்கா: அது தான் தம்பி மாவை சேனாதி ராஜாவும் சொல்லி எல்லாரையும் சமாதானப்படுத்த பாத்தவராம் ஆனாலும் ஒரே கூச்சலும் குழப்பமுமாம்

பாதியில கூட்டத்தில இருந்து சுமந்திரன் எங்க அடிதடியில முடிய போகுதோ என்று எஸ்கேப் ஆக நடக்கிற சண்டைய பாத்திட்டு முதல்வர் விக்கி கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராம் ஒரு கட்டத்தில அமைச்சர்கள் இல்லாமலே ஆட்சி நடத்த முடியும் எண்டு எச்சரித்தாராம்

சுண்டல்: அப்போ எல்லாரும் ஆடிப்போய் இருப்பினமே ?

சறோ அக்கா: ஹ்ம்ம் அந்த மனுஷன் செய்தாலும் செய்யும் எண்டு பயந்து போய் தான் இருப்பினம்........நல்லகாலம் டா தம்பி இன்னும் 2 , 3 கட்ச்சியல உள்ள எடுத்து இருந்தா கல்லால தான் எறிபட்டு இருப்பினம் போல

சரி தம்பி நான் ஒருக்கா கடைக்கு போகணும் வரட்டே.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.