Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாவில் தொடரும் கடும் சண்டைகள்!!!

Featured Replies

யாழ். எழுதுமட்டுவாளில் புலிகள் தொடர் தாக்குதல்- இராணுவத்துக்கு பாரிய இழப்பு- 5 போராளிகள் வீரச்சாவு

[புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:08 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். கடந்த 24 மணிநேர சமரில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் கொமாண்டோ படையினர்-மற்றும் தாக்குதல் படை இராணுவத்தினர் இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிரான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இதில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

களமுனையில் கொல்லப்பட்ட படையினரை அப்பகுதியிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் புதைத்து வருகின்றனர்.

படைதரப்பு இழப்புகளை சிறிலங்கா இராணுவத்தின் மூடிமறைக்கின்றனர். இந்த களமுனையில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் படைப்பிரிவுகளான 53ஆம் டிவிசன் கொமாண்டோக்களும்-55ஆம்; டிவிசன் தாக்குதலணி படையினரும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பெருமளவில் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இந்த படையினரை ஈடுசெய்ய குடாநாட்டின் ஏனைய பகுதிகளில்படை முகாம்கள் மூடப்பட்டுவருகின்றன.

http://www.eelampage.com/?cn=28234

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெறும் ஆரம்பமே...

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சு நொறுக்கனும்....

  • கருத்துக்கள உறவுகள்

53, 55ம் படையினர் தான், முன்பு ஆனையிறவில் தரித்திருந்தவர்கள் என நினைக்கின்றேன். இலங்கை இராணுவத்தில் உள்ள கூடுதல் பயிற்சி பெற்றவர்களும் அவர்கள் தான்.

சிவராம் எழுதிய கட்டுரை ஒன்றில், ஆனையிறவில், வலிந்த தாக்குதல்களுக்கு அவர்களை அனுப்பி, களத்தில் இருந்து அப்புறப்படுத்தும், செயலை இலஙற்கையரசு செய்வதாக அவர்களின் பயிற்சியாளரான அமெரிக்கர்கள் கவலைப்பட்டு

தெரிவித்தாகப் படித்த ஞாபகம்.

இப்போதும், அவர்களை களத்தில் இருந்து அகற்ற இலங்கையரசு வழி செய்கின்றது. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர்கள் மூலம் தான் யாழ்பாணத்தை ஓரளவு தக்க வைக்க முடியும் என நம்புகின்றது. இப்போது பார்த்தால் ஒரு பட்டிலியனில் உள்ள, ( 5000 பேர் தானே ஒரு பட்டாலியன்??) 1/5 பேர் களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்!

இப்போதும், அவர்களை களத்தில் இருந்து அகற்ற இலங்கையரசு வழி செய்கின்றது. ஆனால் அவர்களுக்கு வேறு வழியில்லை. இவர்கள் மூலம் தான் யாழ்பாணத்தை ஓரளவு தக்க வைக்க முடியும் என நம்புகின்றது. இப்போது பார்த்தால் ஒரு பட்டிலியனில் உள்ள, ( 5000 பேர் தானே ஒரு பட்டாலியன்??) 1/5 பேர் களத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்!

அப்படி இருக்காது.... கிட்டத்தட்ட

45 பேர் ஒரு பிளாட்டூணாகவும்...(2ம் லெப் அல்லது லெப் தர அதிகாரி பொறுப்பாய் இருப்பர்)

330 பேர்தான் இலங்கையின் கொம்பனியாகவும்... (கப்ரன் தர அதிகாரி பொறுப்பாளராக இருப்பர்)

மூண்று கொம்பனிகள் ஒரு பற்றாலியன் ஆகவும்(1000 பேர் வரை)( மேஜர் அல்லது லெப் கேணல் தர அதிகாரி பொறுப்பாய் இருப்பர்)

இரண்டுக்கு மேற்பட்ட பற்றாலியன்கள் ஒரு பிறிகேட் (3000- 6000 பேருக்கு மேல்) (கேணல் அல்லது பிரிகேடியர் பொறுப்பாய் இருப்பர்)

இரண்டுக்கும் மேற்பட்ட பிரிகேட்டுக்கள் ரெஜிமன் (படைப்பிரிவு) என்பார்கள்....( இதுக்கு மேஜர் ஜெனரல் தர அதிகாரி பொறுப்பாளர்)

இலங்கையின் இராணுவத்துக்கு "லெப்ரினன் ஜெனரல்" தர அதிகாரிதான் பொறுப்பதிகாரியாக இருக்கிறார்கள்... "ஜெனரல்" தர அதிகாரியை வைத்த்ருக்கும் வலிமையான நிலையில் இலங்கை இல்லை... அதுக்கு படையணியில் பல குரைப்பாடுகள் இருக்கிறது....

இப்படி முன்னர் இருந்தது இப்போதும் அப்பிடி இருக்கிறார்களா தெரியாது....! ஆனால் கட்டமைப்பை அதுக்கு அண்மையாகத்தான் மாற்ற முடியும்...!

படை பிரிவுகள் என்னும் போது இராணுவத்தில் 45 பேர் இருந்தால் அதில் நேரடியாக சண்டை இடுபவர்கள்... வெறும் முப்பது அல்லது முப்பத்தைந்து பேர்தான் மற்றவர்கள் நிர்வாகிகளும் பராமப்பாளர்களாகும்... அதிகரியின் உதவியாளர்களும் ஆகும்..

யாழ் குடாவில் தொடரும் கடும் சண்டைகள்!!!

இன்று யாழ்குடாவில் சண்டைகள் கடுமை அடைந்திருக்கின்றன. முகமாலையில் இருந்த கொடிகாமம் வரையான பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.

கொடிகாமத்தை அண்டிய பகுதிகளில் இன்று விடுதலைப்புலிகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் நடந்து வருவதாகவும் விடுதலைப்புலிகள் கொடிகாமத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றைய சண்டையில் சிறிலங்கா இராணுவத்தின் 3 யுத்த டாங்கிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் டாங்கி எதிர்ப்பு படையணியால் முதலில் ஒரு டாங்கி கடும் சேதமாக்கப்பட்டது. வேறொரு டாங்கி அந்த டாங்கியை இழுத்துச் செல்ல வந்தது. இதற்கு பாதுகாப்பாக இன்னும் ஒரு டாங்கி தாக்குதலில் ஈடுபட்டது. கடைசியில் விடுதலைப்புலிகளின் டாங்கி எதிர்ப்பு படையணியினரால் மூன்று டாங்கிகளுமே அழிக்கப்பட்டன.

இறந்த, காயமடைந்த படையினரை ஏற்ற வந்த உலங்கு வானூர்த்தியும் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. ஆயினும் உலங்கு வானூர்த்தி மயிரிழையில் தப்பி விட்டது.

தற்பொழுது மோதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. சிறிலங்கா இராணுவத்தின் அகோரமான பல்குழல் எறிகணை வீச்சால் கிளிநொச்சியில் இருக்கின்ற கண்ணாடிகள் கூட வெடித்துச் சிதறுகின்றன. இதனால் பலர் வீடுகளுக்கு வெளியில் வந்த நின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது நாள் வரை நடந்த மோதல்களில் இன்று நடந்து கொண்டிருக்கிற மோதலே மிகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.

யாழ் குடாவில் ஒரு வாரமாக சண்டைகள் நடந்து வருகின்றன. இம் முறை விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வமான தகவல்களை பெற முடியாது இருக்கின்றது. விடுதலைப்புலிகள் எதிரியின் இழப்புக்கள் குறித்த தகவலைக் கூட வெளியிடுகிறார்கள் இல்லை. "புலிகளின் குரல்" வானொலியும் இராணுவத்தினரின் இழப்புக்கள் குறித்து சிறிலங்கா அரசின் தரவுகளையே கூறுகிறது.

பொதுவாக சண்டையில் தமக்கும் ஏற்படும் இழப்புக்களையும் தோல்விகளையுமே மறைப்பார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் தமது கள வெற்றிகளை மறைக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயமாக தென்பட்டாலும் அதற்கு ராஜந்திரரீதியான காரணங்கள் உண்டு. விடுதலைப்புலிகள் முன்னேறுகிறார்கள் என்ற செய்தி விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச அழுத்தங்களை கொடுக்கக்கூடும்.

இதுவரை 80இற்கும் மேற்பட்ட போராளிகள் யாழ் குடா சண்டையில் வீரச் சாவடைந்திருக்கிறார்கள். இந்த அதிகப்படியான இழப்புக்கள் அங்கே நடந்து கொண்டிருக்கின்ற சண்டையின் வீரியத்தை உணர்த்துகின்றன.

நாம் முன்பே சொன்னது போன்று இராணுவத்தினர் சிறிய முகாம்களை மூடிவிட்டு பெரிய தளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். யாழ் குடாவிற்குள் ஊடுருவியிருக்கும் விடுதலைப்புலிகளின் சிறிய குழுக்கள் பல பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் முகமாலையினூடாக முன்னேறுகின்ற புலிகள் சிறிலங்கா இராணுவத்தினரை சிதைத்தபடி இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் இந்த புதிய வியூகம் யாழ்ப்பாணத்தை மீட்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தல!

குழப்பத்திற்கு மன்னிக்க

பலாலிக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்கள படைகள் மோதல்?

யாழ் பலாலி படைத்தளத்தில் நேற்றிரவு தொடர்ச்சியாக கடும் குண்டிவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சிங்கள இராணுவமும் மோதிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி படைத் தளத்தில் நேற்றிரவு குண்டுவெடிப்புக்களையடுத்து தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டெரிந்துள்ளன. பலாலி படைத் தளத்தினுள் நேற்று இரவு 6.45 மணி முதல் இன்று அதிகாலை 2.00 மணி வரைக்கும் குண்டுவெடிப்புக்களும் ரொக்கெட் வீச்சுகளும் நீடித்துள்ளன.

பாரிய குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் பலாலி விமானத் தளத்திலிருந்து உலங்குவானூர்திகள் புறப்பட்டுச் செல்லும் சத்தங்கள் கேட்டதாகவும் இக் குண்டுவெடிப்புச் சத்தங்களையடுத்து பலாலி தளத்திலிருந்து நடத்தப்பட்டு வந்த எறிகணை மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் பலாலித் தளத்திற்குள் நேரடி மோதல்கள் நடைபெற்றமை தொடர்பாக விடுதலைப் புலிகள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

http://www.nitharsanam.com/2006/08/17/50148.php

பலாலியில் நேரடி மோதல் - உறுதிப்படுத்தியது படைத்தரப்பு

பலாலிப் பகுதிக்குள் புதன்கிழமை இரவு முதல் இன்று அதிகாலை வரை மோதல்கள் நடைபெற்றதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. பலாலிக்கு அருகே மோதல்கள் நடைபெற்றதை உறுதிசெய்துள்ள ஸ்ரீலங்கா படைத்தரப்பு பலாலி தளத்திற்குள் உள்நுழைய முயன்ற விடுதலைப் புலிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளது.

பலாலியில் உள்ள இராணுவ அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதி செய்ததாக தமிழ்நெட் தெரிவித்துள்ளது.

எனினும் பலாலித் தளத்திற்குள் நேரடி மோதல்கள் நடைபெற்றமை தொடர்பாக விடுதலைப் புலிகள் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இரவு தொடர்ச்சியாகக் கேட்ட குண்டுச் சத்தங்கள் கேட்டதுடன் அப்பகுதியில் தீப்பிழம்புகளும் சில மணிநேரம் தெரிந்ததாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இதன்பின்னர் விடுதலைப் புலிகளால் பலாலித் தளத்தின் மீது உக்கிர எறிகணை வீச்சும் மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் பலாலித் தளத்தில் இருந்து முகமாலை கிளாலி உள்ளிட்ட களமுனைகள் நோக்கிய ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல் என்பன முற்றாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் பொது மக்கள் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.tamilwin.net/index.php?subactio...amp;ucat=1&

இலங்கையில் தொடர் விமானத் தாக்குதல்

நாடு முழுவதும் விழிப்பு நிலை.

----------------------------

இலங்கையின் விமானப் படை நேற்றும் புலிகள் நிலை கள் மீது தாக்குதல் நடத்தி யது. யாழ்ப்பாண தீபகற்பத் துக்குத் தெற்கே இருக்கும் புலிகளின் வன்னி பகுதியில் விமானப் படை விமானங்கள் குண்டுகளைப் போட்டதாக ராணுவ அதிகாரிகள் சொன் னார்கள்.

பல இலக்குகளைக் குறி வைத்து விமானப்படை குண்டுபோட்டது என்றும் ஆனால் உயிருடற்சேதம் பற்றிய விவரங்கள் இல்லை என்றும் ராணுவம் கூறியது.

அதே நேரத்தில் யாழ்ப் பாணத்தில் அரசு கட்டுப்பாட் டில் இருக்கும் பகுதிகளுக்குள் புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவம் தேடுதல் நடவடிக் கையை அமலாக்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் நாடு முழு வதிலும் துருப்புகள் முழு விழிப்பு நிலையில் வைக்கப் பட்டு இருக்கின்றன. பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டு இருக் கின்றன. முல்லைத் தீவு தாக்குதலுக்குப் புலிகள் பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக எங்கும் முழு விழிப்பு நிலை இருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே இலங்கைப் படையினரின் கொலை வெறி யாட்டத்திற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் பதிலளிப் பார் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்து இருக் கிறார்கள்.

முல்லைத்தீவில் மாணவி கள் படுகொலை செய்யப்பட் டது தொடர்பில் விடுதலைப் புலிகளின் ராணுவப் பேச் சாளர் ராசையா இளந்திரை யன் பி.பி.சி தமிழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார்:-

முன்பொரு காலம் இருந்தது. சிங்களக் காடை யர்கள் எங்களைத் தடியாலும் கத்தி யாலும் தாக்கியபோது எம்மால் திருப்பித் தாக்க முடியாத காலம் ஒன்று இருந் தது. தலைவர் தலைநிமிர்ந்த பொழுது அந்த நிலைமை எவ்வளவு துìரம் மாறியிருக் கிறது என்பதை நாம் அறி வோம்.

எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. எங்கள் தலை வரிடம் எல்லாவற்றுக்கும் பதில் உண்டு என இளந் திரையன் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஐரோப் பிய ஒன்றிய பேராளர்களை யும் ஐக்கிய நாடுகள் பேராளர் களையும் சந்தித்து வடக்கு கிழக்கின் நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இதேவேளை பிற்பகல் இலங்கைகான ëஜர்மனி துìதரைச் சந்தித்து அவர்கள் கலந்துரையாடினர்.

முல்லைத்தீவில் மாணவி கள் கொல்லப்பட்டது, வான் தாக்குதல்கள், யாழ்ப்பாணத் தின் ஊரடங்கு அமல், முகாம்களுக்கு அருகில் உள்ள மக் களை இடம்பெயர அனுமதிக் காதது, வாகரை மக்கள் உணவு மற்றும் அடிப் படை வசதிகள் இன்றி தவிப் பது உட்பட பல அம்சங்கள் குறித்து அலைத்துலகச் சமூகத்தினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகத் தெரி விக்கப்படுகிறது.

இதற்கிடையே கடந்த டிசம்பர் முதல் நடந்துவரும் மோதலில் 135,000 பேர் இடம்பெயர்ந்து இருக்கிறார் கள் என்று ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும் கடந்த சில நாட்களாக நடக் கும் மோதலில் மேலும் பலர் தங்கள் வீட்டைவிட்டு ஓடு கிறார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில் செவ் வாய்க்கிழமை 24 புலகளைத் தாங்கள் கொன்றதாக ராணுவம் நேற்று கூறியது.

TAMILMURASU-SINGAPORE

இங்கு தமிழகத்தில் சன் செய்தி சேனலில் புலிகள் பலாலி படைத்தளத்தை அன்மித்துவிட்டதாக தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். ராணுவத்தரப்பில் கடும் சேதம் என்றும் சொல்கிறார்கள்.

காட்சிகளை தமிழிழ தேசிய தொலைக்காட்சியிலிருந்து எடுத்து ஒளிபரப்புகிறார்கள் - ஆனால் அதற்கும் நன்றி - courtsy என்றோ போடுவதில்லை.

என்னமோ போ! எதாவது சொன்னா லக்கி வருவாரு வரிஞ்சு கட்டிகிட்டு , அப்புறம் கருத்து நீக்கபடும். :roll: :roll: :roll:

காட்சிகளை தமிழிழ தேசிய தொலைக்காட்சியிலிருந்து எடுத்து ஒளிபரப்புகிறார்கள் - ஆனால் அதற்கும் நன்றி - courtsy என்றோ போடுவதில்லை.

என்னமோ போ! எதாவது சொன்னா லக்கி வருவாரு வரிஞ்சு கட்டிகிட்டு , அப்புறம் கருத்து நீக்கபடும். :roll: :roll: :roll:

நேற்றய தினம் சுதந்திர தினத்துக்காக இலவசமாக சண் தொலைக்காட்ச்சி ஒளிபரப்பினார்கள்.... செய்திகளின் போது தமிழிழ தேசிய தொலைக்காட்ச்சியின் இலச்சினையோடு காட்ச்சிகளைக்காட்டினார்கள்..

அதாவது அந்த இலச்சினையை மறைத்து காட்டினால்த்தான் அது தவறு எந்த தொலைகாட்ச்சியின் மூலம் எடுக்கப்பட்டது என்பதை காட்டினால் அது பிழையாக இருக்காது....

அதையும் தாண்டி தமிழீழ தொலைக்காட்ச்சியை செய்தி சேகரிப்பாக காண்பிக்கும் போது அனுமதி பெறாமல் காட்டி இருக்க மாட்டார்கள் அப்படி பெறாவிட்டாலும் தொலைக்காட்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டாது.... எங்களின் பிரச்சினைகள் உலகறிய வேண்டும் என்பதே இண்றைய தேவை அதுக்காக ஆரம்பிக்க பட்ட தொலைக்காட்ச்சியின் காட்ச்சிகள் பெரும்பான்மை தமிழருக்கு போய்ச்சேருவது மகிழ்ச்சியான் விடயமே....! :P

அதையும் தாண்டி தமிழீழ தொலைக்காட்ச்சியை செய்தி சேகரிப்பாக காண்பிக்கும் போது அனுமதி பெறாமல் காட்டி இருக்க மாட்டார்கள் அப்படி பெறாவிட்டாலும் தொலைக்காட்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டாது.... எங்களின் பிரச்சினைகள் உலகறிய வேண்டும் என்பதே இண்றைய தேவை அதுக்காக ஆரம்பிக்க பட்ட தொலைக்காட்ச்சியின் காட்ச்சிகள் பெரும்பான்மை தமிழருக்கு போய்ச்சேருவது மகிழ்ச்சியான் விடயமே....! :P

உடன்படுகிறேன் தல ! உங்கள் கருத்தில்

சன் தொலைக்காட்சியைத் தவிர வேறு எந்த தொலைக்காட்சியிலும் புலிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இல்லை.... அனுமதி பெறாமலா ஒளிபரப்புவார்கள்?

சன் தொலைக்காட்சியைத் தவிர வேறு எந்த தொலைக்காட்சியிலும் புலிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இல்லை.... அனுமதி பெறாமலா ஒளிபரப்புவார்கள்?

பெரிய நிறுவனம் தனீச்சையாக நடந்து கொள்ளாது... தவிர அனுமதி பெறாவிட்டாலும் (அவசர தோவையாக) அவலங்களை காட்டும்போது அது தவறு ஆகாது....

ஜெயா டீவியிலும் சமயத்தில் ஒளிபரப்புவார்கள் ,ஆனால் இலச்சியினை மறைத்து விடுவார்கள்.

ஆமாம் ! செஞ்சோலைச்சம்பவம் குறித்து ஜெயலலிதா அம்மையாருக்கு இன்னும் செய்தி எட்டவில்லையோ. கண்டனமோ வருத்தமோ தெரிவித்தது போல் தெரியவில்லையே

பெரிய நிறுவனம் தனீச்சையாக நடந்து கொள்ளாது... தவிர அனுமதி பெறாவிட்டாலும் (அவசர தோவையாக) அவலங்களை காட்டும்போது அது தவறு ஆகாது....

நான் அவலக்காட்சிகளை சொல்லவில்லை தல ! தாக்குதல் காட்சிகளைத்தான் குறிப்பிட்டேன்

நேற்று சன் செய்திகளில் தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் நெடுமாறன் அவர்களையும் சென்னைக்கான இலங்கைத் தூதரையும் நேருக்கு நேராக மோத வைத்தார்கள்.... புலிகள் அமைப்பு சார்பாக நெடுமாறனும், சிங்கள அரசு சார்பாக அந்தத் தூதரும் காரசாரமாக மோதிக் கொண்டார்கள்....

அதன்பின்னர் சிறிது நேரம் ஈழத்தமிழர்கள் படும் துன்பங்களை சில வீடியோ காட்சிகளில் காட்டினார்கள்....

அதன்பின்னர் ஒரு முன்னாள் "ரா" அதிகாரி புலிகள் எவ்வளவு பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகியிருக்கிறார்கள் என்று விளக்கினார்....

சன் டிவிக்கு யாரோ புலிகள் தரப்பில் செய்தித் தொடர்பாளர் கிடைத்திருக்கிறார் போலிருக்கிறது.... :lol:

மார்க்கட் டிரென்டுக்கு ஏற்றவாறு மாறிவிடுவதுதானே நல்ல வியாபாரிக்கு அழகு ! :P

மார்க்கட் டிரென்டுக்கு ஏற்றவாறு மாறிவிடுவதுதானே நல்ல வியாபாரிக்கு அழகு ! :P

அண்ணன் அவர்கள் வைகோவை பற்றிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.... :lol:

அண்ணன் அவர்கள் வைகோவை பற்றிச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.... :lol:

அவரின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஈழ பிரச்சினையில் அவரின் உறுதி தமிழ்நாட்டு தமிழரை நெஞ்சு நிமிர்த்தவே செய்கிறது

அவரின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஈழ பிரச்சினையில் அவரின் உறுதி தமிழ்நாட்டு தமிழரை நெஞ்சு நிமிர்த்தவே செய்கிறது

இல்லை அண்ணே... தேர்தலுக்கு முன்னால் அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் கப்-சிப் என்றுதானே இருந்தார்.... (கலைஞரிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறார் :lol: )

தோழர் திருமா தான் இந்த விஷயத்தில் தேர்தலுக்கு முன்பும் சரி... பின்பும் சரி.... உறுதியாக இருக்கிறார்....

சண் தொலைக்காட்சி ஐரோப்பிய நாடுகளில் கால் ஊன்றுவதற்கு பெரும் அமளிப்படுகிறது. அது புலம் பெயர் ஈழத்தமிழர் ஆதரவு உண்டென்றால் தான் முடியும் ஆகவே இன்றைய யுத்த நிலை சாதகமாக உள்ளது. எது எப்படியோ எமது மக்களின் துயரை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தினால் சரி

ஆம் தோழர்.திருமா பாராட்டுக்குரிவர்தாம்

அதில் எள்ளவும் சந்தேகமில்லை...........

அவருக்கு செவ்வணக்கங்கள்

ஆம் தோழர்.திருமா பாராட்டுக்குரிவர்தாம்

அதில் எள்ளவும் சந்தேகமில்லை...........

அவருக்கு செவ்வணக்கங்கள்

திருமா மட்டும் இல்லை இப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸை தவிர எல்லா தமிழ் கட்சியும் தான்

இது தொடரவேனும் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.