Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க முடியாது - அரசு!

Featured Replies

தமிழர் பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு அதிகாரம் அளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பதற்கு புதிதாக தெரிவாகியுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைப்பது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்று வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டால் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசின் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவோம் என்று வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமையும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் மீள அமைப்போம் என்று வாக்குறுதி வளங்கிய வேட்பாளர்களின் ஆதாரங்கள் அனைத்தும் பதிவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi24.com/news/33586/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

( இந்த ஒலிநாடாவில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் மாவீரர் துயிலும் இல்லம் குறித்த ஊடகவியலாளரின் கேளிவிக்கு சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் வழங்கிய பதில் இணைக்கப்பட்டு உள்ளது.)

மாவீரர் கல்லறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அங்கீகாரம் வழங்கியதாக தமிழ் ஊடகங்கள் ஒருசிலவற்றில் செய்திகள் வெளிவந்துள்ளன. அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களும் வெளியாகி உள்ளன. உண்மையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு தம் இன்னுயிர் நீந்த அனைத்து போராளிகளின் நினைவுகளும் பேணப்பட வேண்டியவை. அவர்களின் தியாகங்கள் தமிழ் மக்களின் வராலாறு முழுவதும் பேசப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் வெளிப்படையாக இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டு உள்ள சீ.வீ விக்னேஸ்வரனும் வழங்கிய குரல் வழி செவ்வியை பொறுப்பற்ற விதத்தில் திரிவுபடுத்தி நமது தமிழ் ஊடகங்களே வெளியிடுவதாக இருந்தால் செவ்விகளை - செய்திகளை திரிவுபடுத்துவதாக இந்துப் பத்திரிகை பற்றியும் தெற்கின் சிங்கள ஊடகங்கள் பற்றியும் விமர்சிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மகாண சபை வெற்றியின் பின் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஊடக மகாநாடொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி இதுதான் ...

ஊடகவியலாளர் - அழிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களை மீள புணரமைக்க இந்த மாகாண சபை அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில் – சம்பந்தன் – மகாண சபை தொடர்பாக அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாக நான் பதில் கூறுவது தப்பு அந்த அதிகாரம் எமக்கு இல்லை.. அவ்விதமான கோரிக்கை மகாண சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டால் அது விடயம் சம்பந்தமாக மாகாண சபை சிந்திக்கும். ஆனால் நிச்சயமாக எமது மக்களுடைய உணர்வுகளைபுரிந்து அதனை மதித்து செயலாற்றக் கூடிய வகையில் மாகாண சபை தனது கருமங்களை முன்னெடுக்கும்..

ஊடகவியலாளர் – மன்னிக்கவேணும் சில வேட்பாளர்களின் மேடைப் பேச்சுகளில் இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டு இருந்தன.

சம்பந்தன் – அது விடயமாக நான் பேசுவது தப்பு.. கட்சியினுடைய தலைவராக இருக்கிறேன். மகாண சபை உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்திருக்கிறியல். உங்களுடைய முதலமைச்சரை நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள்..உங்களுடைய முதலமைச்சர் சில நாட்களில் பதவியேற்பார். அவரது அமைச்சரவையை அவர் தீர்மானித்து முடிவெடுப்பார். இந்தக் கருமத்தை அவர்கள் கையாள வேண்டும். அவர்களுக்காக நான் பதில் கூறுவது பிழை. ஆனால் நிட்சயமாக எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்து நாங்கள் நடந்துகொள்வோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

ஊடகவியலாளர் – இல்லை வேட்பாளர்களின் பேச்சுக்களில் தொடர்ந்தும் இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன ...

விக்னேஸ்வரன்... – மகாண சபை கூடியதன் பிற்பாடு இப்பேற்பட்ட விடயங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம். தலைவர் கூறியது போன்று மக்களுடைய உணர்வுகளை மதித்து மாகாண சபை உறுப்பினர்கள் நடந்து கொள்வார்கள். அவ்வளவுதான் இப்ப கூற முடியும். ( முழுமையாக ஒலிவடிவில் இணைக்கப்பட்டு உள்ளது.

"இந்தப் பதில்கள் எவ்வளவு ஆழமானவையாகவும் பொறுப்பான பதில்களாகவும் இருக்கின்றன"

இப்படி இருக்க அவர்கள் சொன்னதனையே தலைகீழாக மாற்றி மாவீரர் துயிலும் இல்லங்களை மீழக் கட்டிஎழுப்ப தலைமை அங்கீகாரம் என முதலாவது சந்திப்பிலேயே கூறினார் என தமிழ் ஊடகங்கள் சொன்னால் இதனை எப்படியெல்லாம் சிங்கள ஊடகங்கள் திரிவு படுத்தி எழுதி வட மகாண சபையை சட்டச்சிக்கலுக்குள் தள்ளி விடுவா்கள்.

கள நிலவரங்களை சரியாக கணிப்படாமல் சுயமான அரசியல் லாபங்களுக்காகவும் களத்தில் நித்தமும் உயிருக்கு அஞ்சி தமது வாழ்வையும் இலட்சியங்களையும் விலைபேசாமல் சொந்த மண்ணிலேயே வாழுகின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் வைத்து அரசியல் - ஊடக வியாபாரத்தை தொடரலாமா?

நாளாந்தம் மக்களை உசுப்பேத்தி இணையங்களுக்குள் உலாவருவதற்காகவும், அதன் மூலம் வியாபாரத்தை வழமாக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், மாவீரர்களையும், அவர்களின் குடும்பங்களையும் இலங்கை அரசாங்கத்தினதும் அவர்களின் புலனாய்வாளர்களிடமும் காட்டிக் கொடுக்கும் சூட்சுமங்களை ஏன் மக்கள் இனம்கண்டு கொள்கிறார்கள் இல்லை என்பது புரியவில்லை என யாழ் ஊடக மகாநாட்டில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஊடகங்களாலேயே நேற்று உருவாக்கப்பட்ட செய்திக்கு இன்று அரசாங்கம் மறுப்பு வெளிட்டு உள்ளதாம். மாவீரர் துயிலும் இல்லங்களை மீளக் கட்டி எழுப்ப அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க மாட்டாதாம். எப்படி இருக்கு ஊடக வியாபாராம்?

குறிப்பு:- இந்த செய்தி எந்த ஊடகங்களையும் கொச்சைப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை... மாறாக முள்ளி வாய்க்காலுக்குள் மூழ்கடிப்பட்ட தமிழ்மக்கள் மெல்ல மெல்ல எழுந்து வரும் போது மீண்டும் ஹம்பாந்தோட்டைக் கடலுக்குள் அமிழ்த்தும் வேலையை தெரிந்தோ தெரியாமலோ தமிழ் ஊடகங்களை நடத்தும் நாமும் செய்யக் கூடாது என்பதன் நோக்கமே இந்தக் குறிப்பு,

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96953/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் ஊடகங்கள் எப்போ தமிழ் மக்களுக்கு சேவை செய்துள்ளன? புலிகள் காலத்தில் கல்மடுவில் ஆயிரம் இராணுவம் பலி என்பதில் தொடங்கி விக்கினேஸ்வரன் மாவீரர் இல்லங்களை மீளமைப்போம்,இராணுவத்தை வேளியேற்றுவோம் என கூறியதாக சொல்வது வரை ஒரே சுத்து மாத்து தான்.ஒரு சில ஊடகங்கள் விதிவிலக்காக இருக்கலாம்.
 
சிங்கள/ஆங்கில ஊடகங்கள் எது  சாதகமாக நடக்கிறதோ அதனை சிங்களவர்களுக்கு சாதகாமாக திசை திருப்பி விடுவார்கள்.

இந்த மாவீரர் துயிலும் இல்லங்கள்  பற்றி கையில் எடுத்துள்ள தமிழ் ஊடகங்களை முதலில் பாராட்டுகிறேன்... 

 

எந்த நாட்டிலும் நடக்காத அடக்கு முறையின் சின்னங்களாக தோண்டி எடுக்கப்பட்ட மாவீர் துயிலும் இல்லங்கள் இப்போது விளங்குகின்றன...   அது உயிரோடு இருந்த மக்கள் மட்டும் அல்ல கல்லறைகளை கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை என்பதை சர்வதேசம் திரும்பி பார்க்கும் காலங்களில்  தெளிவாக உரைப்பது தமிழர்களின் கடமை... 

 

இந்த மாவீரர் துயிலும் இல்லங்களை கூட்டமைப்பால் அமைக்க முடியும் அல்லது முடியாது என்பதுக்கு அப்பால் மீள் அமைப்பு எனும் சொல்  ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட எனும் பொருளின் வரும் என்பதால் அதை சொல்வதில் யாருக்கும் தயக்கம் இருக்க வேண்டியதில்லை...  சிங்களத்தை தோலுரித்து காட்டும் இந்த சொற்தொடர்கள் எந்த பிழையும் இல்லாதவை... 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.