Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் பெரியார் சிந்தனைப்பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த தலைமுறையை தியாகத் தலைமுறை ஆக்குவோம்...
அடுத்த தலைமுறை விடுதலைத் தலைமுறை ஆகட்டும்....- பழ.நீலவேந்தன்
 
ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் பெரியார் சிந்தனைப்பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் மரணம்
 
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதிவைத்துவிட்டு பெரியார் சிந்தனைப்பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
 
தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆதித்தமிழர் பேரவையில் இணைந்து போராடிவந்த தோழர் பழ. நீலவேந்தன் தீக்குளித்து மரணித்துள்ள செய்தி தமிழுணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈழவிடுதலை ஆதரவுப்போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் தோழர் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு பெரும்பங்கு. 
 
ஈழவிடுதலைப்போர் நடந்துகொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தோழர் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார். கோவை, திருப்பூர் மாவட்டம் என்றில்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தமது அனல் கக்கும் பேச்சால் தமிழ் மக்கள் பிரச்சினையை அனைவருக்கும் கொண்டு சென்றவர்.
 
தமிழகத்திலுள்ள அமைப்புகள் அம்பேத்கரையும், பெரியாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதைப்போல எனது தலைவர்கள் அண்ணன் கொளத்தூர் மணியும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களும் ஆவார் என்று எப்பொழுதும் கூறுவார். 
 
தங்கள் வாழ்வாதாரத்திற்கே தமிழகத்தில் நாள்தோறும்  போராடிக்கொண்டிருக்கும் அருந்ததியர் மக்களை தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுத்தியதில் பெரும்பங்கு தோழர் பழ..நீலவேந்தனுக்கே.
 
"அருந்ததியினருக்க்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை.
 
படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும், சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள். மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன்.
 
உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன்."  என்று நீலவேந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
 
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட மருத்துவமனை அனைத்துக் கட்சி, அமைப்புத்தோழர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் சக்தியை இந்த சமூகம் மறுபடியும் இழந்திருக்கிறது...
 
இந்த தலைமுறையை தியாகத் தலைமுறை ஆக்குவோம்...
அடுத்த தலைமுறை விடுதலைத் தலைமுறை ஆகட்டும்....- பழ.நீலவேந்தன் [நேற்றிரவு முகநூலில் அவர் பதிந்த நிலைத்தகவல்]
 
தோழமையுடன்
 
பெரியார்தளம் அகரன்
 
1375243_414813381958016_1300747345_n.jpg
 
 

neelaventhan_001.jpg

neelaventhan_002.jpg

neelaventhan_003.jpg

neelaventhan_004.jpg

neelaventhan_005.jpg

 

 

 
 

நான் எழுதி அனுப்பிய இச்செய்தியினை அப்படியே வெளியிட்ட சங்கதி இணையத்துக்கும் எடிட் செய்து வெளியிட்ட தமிழ்வின் இணையத்துக்கும் நன்றிகள்..

 

http://www.sankathi24.com/news/33637/64//d,fullart.aspx

 

http://www.tamilwin.com/show-RUmryJRaMXjt6.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா  நடக்குது.............

இன்னொன்றா????

 

செய்வதற்கும்

கொழுத்துவதற்கும் எவ்வளவோ  இருக்க

நம்மை நாமே  கொழுத்தலாமோ............ :(  :(  :( 

 

அன்னாரின்  ஆத்ம   சாந்திக்காக வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மனவருத்தமளிக்கும் செய்தி..! அவரது கோரிக்கை நிறைவேறி ஆன்மா அமைதி பெறட்டும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையற்ற தற்கொலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.