Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்ததில் பிடித்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததில் பிடித்தது

கடைசி வரிகளில் கண்கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும்

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு
‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார்
அதன் உரிமையாளர்.

அந்தப் பலகை
குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர்.

அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான்.
"நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார்.

அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான்.
"எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான்.

கடை உரிமையாளர் புன்னகைத்து, உள் பக்கம் திரும்பி விசிலடித்தார். நாய்க் கூண்டிலிருந்து ஒரு பெண் இறங்கி நடைபாதை வழியாக ஓடி வந்தாள்.
அவளுக்குப் பின்னால், முடியாலான பந்துகளைப் போல ஐந்து குட்டியூண்டு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன.
ஒரு குட்டி மட்டும் மிகவும் பின்தங்கி மெதுவாக வந்தது.
பின் தங்கி, நொண்டி நொண்டி வந்த அந்தக் குட்டியை உடனே கவனித்த சிறுவன்,
"என்னாச்சு அதுக்கு?" என்று கேட்டான்.

அந்தக் குட்டி நாயைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர், அதற்குப் பிற்பகுதி சரியாக வளர்ச்சி யடையவில்லை. எனவே எப்போதும் நொண்டித்தான் நடக்கும், முடமாகத் தான் இருக்கும் என்று கூறிவிட்டதாக விளக்கினார் கடைக்காரர்.

சிறுவனின் முகத்தில் ஆர்வம்.
"இந்தக் குட்டிதான் எனக்கு வேணும்."
"அப்படின்னா நீ அதுக்குக் காசு கொடுக்க வேணாம். நான் அதை உனக்கு இலவசமாகவே தர்றேன்" என்றார் கடைக்காரர்.

அந்தக் குட்டிப் பையனின் முகத்தில் இப்போது சிறு வருத்தம்.
கடைக்காரரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து விரல் நீட்டிச் சொன்னான்.
"நீங்க ஒண்ணும் எனக்கு இலவசமாகக் கொடுக்க வேணாம். மற்ற நாய்க் குட்டிகளைப் போலவே இதுவும் விலை கொடுத்து வாங்கத் தகுதியானது தான்.
நான் இந்தக் குட்டிக்கு உரிய முழுத் தொகையையும் கொடுக்கிறேன்.
ஆனா, இப்போ எங்கிட்ட 2.37 டாலர்தான் இருக்கு. பாக்கித் தொகையை மாசாமாசம் 50 சென்ட்டா கொடுத்துக் கழிச்சிடறேன்."

ஆனாலும் கடைக்காரர் விடவில்லை.
"பையா... இந்த நாய்க் குட்டியால உனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.
இதால மற்ற நாய்க்குட்டிகளைப் போல ஓடமுடியாது...
குதிக்க முடியாது... உன்னோட விளையாட முடியாது."

உடனே, அந்தப் பையன் குனிந்து தனது இடது கால் பேண்டை உயர்த்தினான்.
வளைந்து, முடமாகிப் போயிருந்த அக்காலில் ஓர் உலோகப் பட்டை மாட்டப்பட்டிருந்தது.
இப்போது அவன் கடைக்காரரை நிமிர்ந்து பார்த்துச் கொன்னான்.
"என்னாலும் தான் ஓட முடியாது... குதிக்க முடியாது. இந்தக் குட்டி நாயின் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிறவங்க தான் இதுக்குத் தேவை!"

வாசிக்க கண் கலங்குது !!! பிடிச்சா பகிருங்க !

  • கருத்துக்கள உறவுகள்

கதை சோகமானதுதான். ஆனால் நீங்கள் கூறுவதுபோல் கண் கலங்கவில்லை. நீங்கள் மிக இளகிய மனம் கொண்டவரா?? அல்லது நான் கடின மனம் கொண்டவளா?? என்று விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் கண்கலங்குது! :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான்  கண் கலங்குது! 

 

நன்றிகள், நுணா!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாய்க்குட்டியின் துன்பத்தை... பாதிக்கப்பட்ட இன்னொருவனே... அறிவான்.
அந்த முதலாளி, நாய்க் குட்டியை... சும்மா கொடுக்க வந்த போதும், அந்தப் பையனின் தன்மானம் சும்மா வாங்க இடம் கொடுக்கவில்லை.
நல்ல தொரு பகிர்வு நுணாவிலான்.

  • 1 month later...

from fb

 

ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண். இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர்.

பெண் குழந்தை உயிர்

பிழைத்தது. ஆனால்..

மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண்

குழந்தையைக் காப்பாற்ற

முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத..

அந்தத் தாய்..

இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார். 

தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன்

குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.

அப்போது..

குழந்தை மெதுவாக

மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன்

மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார்.

மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து.. 

சகஜ நிலைக்குக்

கொண்டு வந்தனர்.சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை..

அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட

தாயின் விரல்களை குழந்தை பிடித்துக்

கொண்டது.

இறந்த குழந்தையை உயிர் பிழைக்க

வைத்தது எது..

ஆம்..

அந்த தாயின் அரவணைப்பு..

இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே...

பிடித்திருந்தால் பகிரவும்

1455972_526058214156236_1428956780_n.jpg
 

 

1469918_528658893896168_1914433097_n.jpg


நல்லா குடுக்குறாங்கையா டீடைலு... — feeling angry.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.