Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை : கனடா பிரதமர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

stephen%2520harper.jpg

இலங்கையின் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதையை நிலைமைகளைக் கருத்திற்கொண்டே தான் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தனக்கு பதிலாக கனடாவின் சர்வதேச மனித உரிமைகளுக்கான வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இலங்கை 2013ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அதனை தனது மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்தவும், நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்காகவும் இலங்கை பயன்படுத்தும் என்று நம்பியதாக தெரிவித்துள்ள கனடாவின் பிரதமர், ஆனால், இலங்கை அந்த இலக்குகளை எட்ட முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதை ஊடகங்களுக்கு அறிவிக்கும் முகமாக கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

http://4tamilmedia.com/newses/srilanka/17755-stephen-harper-to-boycott-commonwealth-meeting-in-sri-lanka

  • கருத்துக்கள உறவுகள்

ஒபராய் போய் சர்மாவுடன் கதைத்து என்ன கூத்து நடக்கப்போகுதோ தெரியேல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே எங்களை 65 வருசமாக் கொல்லுற.. சிங்களவர்களோடு.. சகோதரர்கள் ஆகிட்டம். நீங்கள் மட்டும் ஏன் எங்களுக்காக வருந்துகிறீர்கள்.. அப்படின்னு.. விக்னேஸ்வரன் கேட்பார். அதற்கும் பதில் வைச்சிருங்கோ.. கார்பர். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த  கனடிய  உறவுகளுக்கும்

புலம் பெயர் உறவுகளுக்கும்  நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக உழைத்த  கனடிய  உறவுகளுக்கும்

புலம் பெயர் உறவுகளுக்கும்  நன்றிகள்

நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.