Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈ.பி.ஆர்.எல்.எவ் அறிவிப்பால் புனிதரானார் ஐங்கரநேசன் -

Featured Replies

ingaranesan-150x150.jpgவடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமது கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்துடன் இருக்கும் வரை கொலைக்கலாசார பாவங்கள் தன்னுடனும் ஒட்டிக்கொண்டிருந்ததாகவும் இனிமேல் அந்த பாவங்கள் தன்னை தொடராது என ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது தம்பி சர்வேஷ்வரனுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடம் ஏற்கனவே கோரி இருந்தார் என்றும் அவரின் தம்பிக்கு அமைச்சு பதவி தரமுடியாது என தமிழரசுக்கட்சி தெரிவித்ததை அடுத்து ஐங்கரநேசனுக்கு அமைச்சு பதவி வழங்க கூடாது என கோரியிருந்தனர்.

எனினும் ஐங்கரநேசனுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவரை தமது கட்சியிலிருந்து நீங்கிவிட்டதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அறிவித்துள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் ஐங்கரநேசனுக்கு ஒரு துளி கூட நட்டம் ஏற்படாது என்றும் மாறாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்தவர் என்ற களங்கம் நீக்கப்பட்டு விடும் என்றும் ஐங்கரநேசனுக்கு நெருக்கமானவர்கள் கூறிகின்றன

- See more at: http://www.thinakkathir.com/?p=53062#sthash.9cp4QvMp.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சேர் நீங்க போய் எதுக்கு இதுங்களோட சேர்ந்திக்க என்று விளங்க. இருந்தாலும்.. சரி ஏதோ தப்புப்பண்ணீட்டிங்க. விடுங்க. எனியாவது.. சனியன் தொலைஞ்சுது என்றிட்டு.. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்க..! :)

 

இது உங்களின் முன்னாள் மாணவனாக அன்பான வேண்டுகோள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

13852_663811096977173_1697022120_n.jpg

இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா....! Sorry ..ஐங்கரநேசா

சேர் நீங்க போய் எதுக்கு இதுங்களோட சேர்ந்திக்க என்று விளங்க. இருந்தாலும்.. சரி ஏதோ தப்புப்பண்ணீட்டிங்க. விடுங்க. எனியாவது.. சனியன் தலைஞ்சுது என்றிட்டு.. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்க..! :)

 

இது உங்களின் முன்னாள் மாணவனாக அன்பான வேண்டுகோள். :icon_idea:

நெடுக்குஸ் நீங்கள் இவரின் முன்னால் மாணவர?. இவரின் ஆற்றல்கள் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றுவார் என்று எழுத்முடியுமா. எனக்கு ஐங்கரநேசன் பற்றி அதிகம் தெரியாது. அறிய விரும்புகின்றேன். 
  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்குஸ் நீங்கள் இவரின் முன்னால் மாணவர?. இவரின் ஆற்றல்கள் எந்த துறையில் நிபுணத்துவம் பெற்றுவார் என்று எழுத்முடியுமா. எனக்கு ஐங்கரநேசன் பற்றி அதிகம் தெரியாது. அறிய விரும்புகின்றேன். 

 

 

இந்தப் பதிவை பார்த்தீர்கள் என்றால் விபரம் தெரியும்.. :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130218&page=1

இந்தப் பதிவை பார்த்தீர்கள் என்றால் விபரம் தெரியும்.. :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130218&page=1

 

மிக்க நன்றி நெடுக்க்ஸ். நான் ஊர்ப்புத்ினம் தாண்டி மற்ற பக்கம் போனததிலை. அவர் மீது பலர் நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு சுரேஷ் முடிவெடித்துள்ளார் போல தெரியுது. இஙகே அவர்பற்றிய பதிவுகளின் சுருக்கம்

 
Nathamuni Posted 03 October 2013 - 06:46 AM
 
எனினும் சிறந்த நிர்வாகியாயும் அதேவேளை தன்னைப் புகழ்பெற வைக்கும், சில தானதர்ம நடவடிக்கைகளை செய்யும் போது எல்லோரும் கவனிப்பதை உறுதி செய்வார்.
 
 
nedukkalapoovan, on 03 Oct 2013 - 6:47 PM, said:
 
என்ன தான் சொன்னாலும்... ஐங்கரநேசன் சேர் எங்களின் தனிப்பட்ட சில கோரிக்கைகளை நிறைவு செய்தவர். அன்றைய காலத்தில் வறுமைக்கோட்டில் இருந்த மாணவர்கள் சிலருக்கு நாங்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் இலவசக் கல்வி அளித்தவர். இதில.. கேட்டுக் கொண்ட நாங்க.. பெரிய ஆக்கள் அல்ல. வறுமைக் கோட்டில் இருந்த மாணவர்கள் ஆண்டு 7 என்றால்.. நாங்க ஆண்டு 9.  சின்னப் பிள்ளைகளின் கோரிக்கை.. என்று தட்டிக்கழிக்காமல்.. தேவை என்ன.. என்பதை அறிந்து ஆராய்ந்து ஊக்குவிக்கும் பண்பு நிச்சயம் மற்றைய ஆசிரியர்களை விட ஐங்கரநேசன் சேரிடம் அதிகம் உள்ளது. அதற்கு எப்போதும் நாங்க மதிப்பளிக்கிறம். இங்கு லண்டனில் அவர் இருந்த போதும்.. சமூக நோக்கோடு செயற்பட்டிருக்கிறார். 
 
ஈசன் Posted 03 October 2013 - 10:47 PM
 
ஐங்க்ஸ் நல்ல மனுசன். தாவரவியல் ஐங்கரநேசன்

ஐங்கரநேசனை எனக்கு மிக நன்றாக தெரியும் ,உங்களுக்கும் விரைவில் தெரியவரும் .

ஐங்கரநேசனை எனக்கு மிக நன்றாக தெரியும் ,உங்களுக்கும் விரைவில் தெரியவரும் .

என்ன அர்ஜூன், ஒரே சஸ்பென்சா கிடக்கு உங்கள் கருத்த்து. கொஞ்சம் ஹின்ட்ஸ் (hints) தாருங்களேன் :) 

ஒரு சஸ்பென்சும் இல்லை ,என்னுடன் படித்தவர். அது அந்த காலம் .பின்னர் அவருடன் இருந்தவர்கள் சொன்ன பல விடயங்களும் இருக்கு .டியூட்டரியை திறம்பட நடாத்தியதாகத்தான் கேள்விப்பட்டேன் .இவர் எழுதிய "ஏழாம் ஊழி " முழு தமிழரும் படிக்கவேண்டிய அற்புத படைப்பு .மந்திரியாவதற்கு ஏற்ற தகமையும் நிறைய இருக்கு ஆனால் பொதுவாக நம்மவர் "பிழைக்க தெரிந்தவர் " என்று ஒரு வார்த்தை சொல்வார்கள் அது இவருக்கு மிக பொருந்தும் .சரவணபவன் ரகம் .

சித்தருடனும் லண்டன் ,இந்தியா என்று ஒன்றாக அலைந்தவன் .

அவருக்கு எதை பற்றியும் எதுவித அக்கறையுமில்லை .பக்கத்தில் படித்திருக்கும் நண்பனை யாரும் சுட்டாலும் ஏன் வில்லங்கம் என்று திரும்பி படுத்துவிடுவார் .உட்கட்சி பூசல்களால் புளொட் நிரம்பி வழிந்த காலங்களில் ஒரு கூட்டத்திற்கு கூட வந்ததில்லை .ஒரு பிளேன் டீ,வாய்ப்பானுடன் உயிர் வாழக்கூடியவர் .ஓடுற நீரோட்டத்துடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும் அது எதுவாக இருந்தாலும் அவருக்கு அக்கறை இல்லை .அதனால் தான் அவர் ஆசைப்பட்ட மாதிரி ஒருமுறை இலங்கை பாராளுமன்ற எம்.பி ,இப்போ மாகாணசபை உறுப்பினர் .மந்திரி கிடைத்தால் நல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை .அவர் கோபப்பட்டு நான் வாழ்க்கையில் பார்த்தில்லை .

"இதுக்குதானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா " என்பதுதான் பல தமிழர்களின் வாழ்வின் குறிக்கோள் .

அருச்சுன் ஒருவரை பற்றி மனம் விட்டு உவ்வளவு எழுதினால், அவர் பறுவாய் இல்லை என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

 

எதற்கும் குடும்ப கொளைகளுக்கு தமிழரசுக்கட்சி அங்கத்தவர்கள் விட்டுக்கொடுக்காதது மகிழ்சியே. 

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த கட்சி தலைமையை மதிக்க தெரியல்ல

கட்சி கொள்கையில் ஈடுபாடு இல்லை

கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை புரிஞ்சுக்க தெரியல்ல

தனக்கு பதவி வந்தா காணும் இப்பிடியே தானும் தன்னோட குடும்பமும் செட்டில் ஆகிடலாம் என்று நினைக்கிற இதுகள் எல்லாம் வடக்கு மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்ப்படுத்த போகுதுகலாம்

ஏனுங்க தனிய விட்டுட்டங்காலா  :D வாத்தியாரை கண்டவுடன் மாணவன் கவுண்டுட்டரா  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.