Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயரின் தலையீட்டினால் முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு கைவிடப்பட்டது!

Featured Replies

TNA_Othe-New.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர்கள் ஒன்பது பேர் முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் எனவும், புறக்கணித்த கட்சிகளிடம் ஆயர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

trans.gif

http://tamilworldtoday.com/home

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எப்போதும் ஒரு மேய்ப்பர் தேவைப்படுகின்றார்.மாகாணசபையில் என்னத்தைக் கிழிக்கப்போறார்களோ

ஆயர் விடும் இரண்டாம் தவறு இது. தேர்தலுக்கு முந்னரும் இப்படித்தான் கோதுமை மா பசை பூசி ஒட்டி விட்டவர். இப்ப திரும்ப அதே பசையோடு வந்து நிற்கிறார், 20 அங்கத்தினர் தேறினாலும் தமிழ் உணர்வோடு உள்ள்வர்களை இணைப்பதில்தான் ஆயர் கவனம் செலுத்த வேண்டும். இப்படி வெக்கம் இல்லாமல் மந்திரி பதவிக்குக்கு எதிர் எதிர் காரணங்களை காட்டிக்கொண்டு தம்முள இணைந்தவர்களை இனியும் கோதுமை படி பூசி கூட்டமைப்புடன் ஒட்டி என்ன பயன்? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் அசோகா கோட்டலிலும் ,மற்றவர் வவுனியா வதைமுகாமிலும் தங்களால் கொல்லப்பட்ட தமிழ்மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டே மாகாணசபைக்கு போகவேண்டும்.இவர்களுக்கு உரிய இடம் முள்ளிவாய்க்காலல்ல

ம்

ஆமோதிக்கின்றேன்

நன்றி வீசூகு, நந்தன், நான் கடந்த சில வாரங்களாக இவர்கள் செய்த கொடுமைகளை இங்கே வந்து எழுதியபோதும் வெறும் மௌனமே பதிலாக இருந்தது. சிலர் அவர்களின் கடந்த கால செயல்களை கிளறி நான் ஏதோ களங்கம் பூசுவது போல அவர்களுக்கு வக்காளத்து வேண்டிக்கொண்டும் இருந்தனர். இந்த உள்ளாக ஜனநாயகமும், தமிழ் தேசியமும் பேசிய பலர் தான் முள்ளியாவைக்கால் முடிந்த கையோடு சரத் பொன்சேகா என்ற யுத்த குற்றவாளிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தெரிவித்த்து முடிவும் எடுத்து அந்த தேர்தலில் வேலையும் செய்தனர். இதட்கு விதிவில்லக்கு திரு. சிவாஜிலிங்கம். அதோடு பாராளுமன்ற தேர்தலில் வென்று 6ம் திருத்தாசாட்தத்ுக்கு இனங்க பதிவிப்பிரமணமும் செய்த்னார். பின்னர் எந்த ஜனாதிபதி எங்களை கொலைசெய்தாரோ அவர் முன்னால் இன்றுது அவரிடமே அது வேணும் இது வேணும் என்று பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். காலமும் உருண்டு போனது
 
அப்ப வராத தமிழ் தேசிய ஓர்மும் இன்று திடீரான அதுவும் அமைச்சு பதிவியை இல்லக்காக வைத்து வந்தால் அதை பார்த்து நாம் அவர்களுக்கு சாமரை வீசவேண்டுமாம். ஆருக்கு இந்த புளுடா?. இந்த புழுடவால் புளகாங்கிதம் அடைந்துள்ள இலங்கை அரசு தேசியா போராடததுக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரியாத தயா மாஸ்டர் என்ற இன்னொரு அரச அடிவருடியூடாக ஜே.வி.பீ, யூ.ன்.பீ என்ன செய்தார்களோ அதே பிரித்தாளும் தந்திரத்தை வடக்கில் பயன்படுத்த துணிகிறது. இந்த புரச்சிக்கு பின்னால் வேறு சில சக்திகள் இருப்பதாக நான் நம்புகின்றேன். காலம் மீண்டும் பதில் சொல்லும்
 
ஆயர் விடும் இரண்டாம் தவறு இது. தேர்தலுக்கு முந்னரும் இப்படித்தான் கோதுமை மா பசை பூசி ஒட்டி விட்டவர். இப்ப திரும்ப அதே பசையோடு வந்து நிற்கிறார், 20 அங்கத்தினர் தேறினாலும் தமிழ் உணர்வோடு உள்ள்வர்களை இணைப்பதில்தான் ஆயர் கவனம் செலுத்த வேண்டும். இப்படி வெக்கம் இல்லாமல் மந்திரி பதவிக்குக்கு எதிர் எதிர் காரணங்களை காட்டிக்கொண்டு தம்முள இணைந்தவர்களை இனியும் கோதுமை படி பூசி கூட்டமைப்புடன் ஒட்டி என்ன பயன்? :(

News

கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் பின்பற்றப்படாமை எதிர்காலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: சித்தார்த்தன்-virakesari.lk

நீர் எல்லாம் ஜனநாயகம் பற்றி கதைக்கலாமா..? வவுனியாவில் நீர் செய்த அட்டூழியங்களை  நினைத்து பாரும்.., இறுதி யுத்தம் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்த மக்களை , பிரித்தெடுத்து இராணுவத்திடம் கொடுத்த கர்ண கொடூரன் நீர் , கோத்தபாயாவின் மிக நெருங்கிய நண்பன் நீர், `கோத்தாவின் யுத்தம் `நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளில் நீயும் ஒருத்தன், அங்கு நீ பேசிய பேச்சு.....? எவ்வளவு பெரிய கொடூரன் நீர் , என்னைப் பொருத்த வரை நீர் தமிழனே இல்லை.........,பிறகு எப்படி தமிழ் கூட்டமைப்பில் இருக்கலாம் ? தற்போதய பிரச்சினைகளுக்கெல்லாம் ட நீரும் ஒரு முக்கிய காரணம்., நீர் கோத்தபாயாவின் கட்டளைகளை நிறைவேற்றவே கூட்டமைப்பினுள் நுழைந்துள்ளீர், அப்படி செய்யாவிடின் நீர் சிவராமின் கொலை வழக்கில் உ ள்ளே செல்ல வேண்டி வரும் என்பதும் எமக்கு தெரியும். தவறு செய்தவர்களை மறக்கலாம், மன்னிக்கலாம், ஆனால் தமிழர் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கும் போது எதிரிக்கு துணை நின்ற கொடூரண்களுக்கு இந்த விதி பொருந்தாது,.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கு வினாயகத்தின் திருவிளையாடல்கள் ஆரம்பம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் அமைச்சர்களான ஜி எல் பீரிஸ், ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரது நெருங்கிய நண்பருமான ரத்மலான இந்து கல்லூரியின் சர்ச்சைக்குரிய முன்னால் அதிபரான மன்மதராஜன் சிவி விக்னேஸ்வரனால் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார். இவர் சிவி விக்னேஸ்வரனுக்கு மச்சான் முறையானவர். யாழ் மாவட்டத்த்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2011 ஆம் அண்டு நடைபெற்ற போது அமைச்சர் ஜிஎல் பீரிசுடன் இவர் யாழ்ப்பாணம் சென்று யாழ் கச்சேரி முன்பாகவுள்ள அரச கட்டடத்தில் பல வாரங்கள் தங்கி நின்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக பிரசாரம் செய்திருந்தார். அத்துடன் ரத்மலான இந்து கல்லூரியில் இவர் அதிபராக இருந்து ஓய்வு பெற்ற போது தகைமைகள் எதுவும் அற்ற தனது மனைவியை அதிபராக ஆக்குவதற்கு இவர் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் கடந்த வருடம் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன.

இதேவேளை, மற்றொரு நெருங்கிய உறவினரான நிமலன் கார்த்திகேயனையும் சிவி விக்னேஸ்வரன் செயலாளர்களில் ஒருவராக நியமித்திருக்கிறார். இவர் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி லங்கசிறீ இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டது.

தயவு இணைப்பை தாருங்கள். இந்த செய்தி உண்மையில் சங்கதியில் தான் வந்திருந்தது முதலில். 
 
ஆமா செல்வின் தனது சகா செர்வேக்கு பதிவி கிடக்காதபடியால் முனைனாள் ஆளுநரின் செயலர் ஊடக தனது திருவிடயல்களை ஆரம்பித்துள்ளைமை பற்றி நேற்று தான் லண்டனில் ஒரு நிகழ்வில் இருந்து செய்திகள் கசிந்தன.முன்னால் அரச அதிபர் மௌனகுருவின் செயலர் செல்வினை ஆலோசகரா கொண்ட பிரமச்சந்திரனின் தம்பி, யாழில் முன்னர் சந்திரஸ்ரீக்கு செயலர் ஆக இருந்தவரை விக்கிக்கு கீழே பதிவிக்கு போட முயற்சித்து கடந்தவாரம் அது தோல்வியில் முடிந்தது. ஆக ஓட்டுமொத்தமாக மகாணசபையை தனது கையாட்களின் மூலம் நடத்த்த மூட்பட்டு பின்னர் இப்போ எல்லா பூதாகரமாக வெடித்ததும் தெரிந்ததே.
இந்த பேர்வழி செல்வினுடன் நெருங்கிய உறவுகளை பேஅனிவருவதுடான் ஆளுநருக்கு சேவகம் செய்யும் தமிழ் அரச ஊழியர்களிடமும் தகவல்களை பரிமாறி வருகின்றார். ஆளுநாரும் பெரும்பான்மயை கொண்ட தேசிய கூடமைப்பு தன்னை அகற்றாமல் இருக்க பிளவுகளை ஊக்குவிக்கின்றார் என்று செய்திகள் வருகின்றன. அதே வேளை தனது தமிழ் விசுவாசிகளை தக்க இடங்களுக்கு போட்டு முதலைச்சசருக்கும் சொல்லாமல் விளையாட்டுகள் நடக்கின்றன.
 
இதனால் தான் தனக்கு பரிட்சயப்படவர்களை விக்கியார் தான் தொழிலுக்கு புதுசு என்பதால் அவர் உதவிக்கு அழைத்திருந்தார். இந்த பின்னணியில் தான் அவர் வீரசிங்கம் மதபத்தில் நடந்த நிகழ்வில் தன்னிடம் வரும் ஒவொருவரும் என்ன நோக்கில் வருகின்றார் என்று தெரியாமல் என்னை வழிதவறி கொண்டுசெல்ல முனைகிறார்களா என நான் சதா காலமும் விழிப்புடன் செயல்பட வேண்டியுளாதது என்றார். அத்ததோடு கஷ்டத்துடான் செயல் படவேண்டியுளாதது என்றும் தனது நிலமையை சொன்னார். இத்தோடு அண்மையில் சிங்கள ஊடகங்களில் வந்த செய்திகளின் பின்னர் இவரின் பாதுகாப்பு பற்றி பலர் 
அதிக்க கரிசனை கொள்ளவேண்டியுளாதது. கூடமைப்புக்கு தேர்தலில் உதவ சென்ற எனது தந்தை இவரின் நிலமை பற்றி பகிர்ந்தவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துளஏன்.
 
இந்த பாடசாலை அதிபர் ஒரு ஊழல் பேர்வழி என்றால் முத்லமைச்சர் நிச்சயமாக இவருக்கு உதை கொடுப்பார்.ஆனால் அங்கே பலர் வெளிநாடுகளில் இருந்து வந்து கூடமைப்புக்கு தேவையான ஆட்பளத்தை வழக்குகிறார்கள். அது தொடர வேண்டும். இதிலும் எத்தனை புல்லுருவிகள் இருப்பார்களோ .........
  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

குறித்த உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் நடைபெறவிருந்தது. எனினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலையீட்டினை அடுத்து சத்தியப்பிரமாண நிகழ்வு கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளியவாய்க்கால் சேதமடைந்த பொது நோக்கு மண்டபத்திற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

தனது கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை முல்லைத்தீவுக்குச் சென்ற சிவாஜிலிங்கம் வைத்திய கலாநிதி கே. மயிலேறும்பெருமாள் முன்னிலையில் வடமாகாணசபை உறுப்பினராக பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார்.

இது தொடர்பில் சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,

வடமாகாணசபையை நான் எதிர்க்கவில்லை. வடமாகாணசபையில் அமைச்சு நியமனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த தன்னிச்சையான தீர்மானங்களை எதிர்த்தே முதலமைச்சர் முன்னிலையில் இடம்பெற்ற பதவிப்பிரமாணத்தை புறக்கணித்தேன்.

இன்று மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை மதித்து முள்ளியவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்துள்ளேன். எமது மக்களின் விடிவுக்காக போராடிய 50,000 மாவீரர்களினதும் யுத்தத்தின் போது இறந்த மக்களினதும் அர்ப்பணிப்புக்களினாலும் தியாகங்களினாலுமே நாம் இன்று இந்த வெற்றியைப் பெற்றோம். சர்வதேசம் இன்று எம் மீது கவனம் செலுத்துவதற்கும் இதுவே காரணமாகும்.

எனவே மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை பயன்படுத்தி சிறிலங்கா அரசுக்கு எமது பிரச்சனையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுப்பேன். மாறாக சிறிலங்கா அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தாத பட்சத்தில் சர்வதேசத்திடம் முறையிட்டு ஜக்கியநாடுகள் ஸ்தாபனம் ஊடாக தீர்வைப் பெற முயற்சிப்பேன் எனவும் முள்ளியவாய்கால் மண்ணில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி இலகுராஜா. J.V.Pயும் தமிழில் ந்யூஸ் போடுறங்களா.

முதலமைச்சர் பொது வேட்பாளர் அல்லவா?. அப்ப உங்கள் காரணம் பொருத்தமானதா?

அது சரி. சத்தியப்பரமாணம் எடுட்தபோது இலக்ையின் இறைமையை பேணிப் பாதுகாப்பேன் என்று உறுதி எடுத்திருப்பீர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு,
நந்தன், நான் கடந்த சில வாரங்களாக இவர்கள் செய்த கொடுமைகளை இங்கே வந்து எழுதியபோதும் வெறும் மௌனமே பதிலாக இருந்தது. சிலர் அவர்களின் கடந்த கால செயல்களை கிளறி நான் ஏதோ களங்கம் பூசுவது போல அவர்களுக்கு வக்காளத்து வேண்டிக்கொண்டும் இருந்தனர். 

வணக்கம் புதல்வன்

உங்கள்  கருத்துக்களை வாசித்து வருகின்றேன்

பதில் தர தற்பொழுது முயல்வதில்லை

காரணம்

தமிழர் தமது முகங்களை (மட்டும்)

மாற்றவேண்டிய  சூழலில்  உள்ளோம்.

அதற்குள் எல்லோரும் வரவேண்டும் என்ற  கோசம்  வேறு.

உச்ச போராட்ட காலத்தில்

களத்தில்  எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஆதரித்தவன் என்றே  இங்கு எழுதிவருகின்றேன்

அதன்படி எல்லோரது கடந்த காலமும் தெரியும்.

எங்களை  விடவில்லை

விட்டால் செய்திருப்போம் என்றவர்களுக்கான காலமிது.

இக்காலம் அவர்களுக்கானது

செய்யணும்

அல்லது முடியாது என்று சொல்லணும்.

எனவே அவர்களது நடவடிக்கைகளை  விமர்சித்து 

தற்பொழுதும் இடைஞ்சல் செய்கின்றோம் என 

நீலிக்கண்ணீர் வடிக்க நேரம் கொடுக்கக்கூடாது.

ஆனால் போகிற  போக்கில்  பார்த்தால்

மக்களிடம் அடி வாங்கப்போகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் முன்னாள் போராளிக்குழுக்கள் கடந்த கால போராட வரலாற்றில் பல தவறுகளை செய்து இருக்கலாம் ஆனால் இன்று தமிழ் தேசியத்தையும் அதன் ஒற்றுமையையும் உணர்ந்து ஒன்றாக வரும் போது நாம் கடந்த காலத்துக்குள் நின்று அவற்றை பேசுவதால் எமது மக்களுக்கு எதுவும் கிடைத்துவிட போவதில்லை, இதை உணர்ந்து தான் தேசியத்தலைவர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி அதில் இந்த அமைப்புக்களையும் சேர்த்தார். இன்று மக்களும் கடந்த கால தவறுகளை மறந்து ஒரு பிள்ளை தவறு செய்தால் அதை எப்பிடி ஒரு தாய் மறக்கின்றாலோ அப்பிடி ஒரு தாய் உள்ளத்தோடு அவற்றை கடந்த காலத்துக்குள் விட்டுவிட்டு தமிழ் தேசியத்தின் ஒற்றுமை கருதி அவர்களுக்கு பெருவாரியாக வாக்களித்து அவர்களையும் தங்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆகவே நாம் பழைய அசோகா ஹோட்டல் கதைகளையும், வவுனியா முகாம் கதைகளையும் பேசிக்கொண்டு இருக்காமல் தவறுகளை உணர்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராட ஓன்று சேர்ந்தவர்களை எம் இரு கரங்களால் அரைவனைத்தே ஆகவேண்டும்.

"Yesterday is History, Tomorrow a Mystery, Today is a Gift, Thats why it's called the Present"

இதே கொள்கையை நீங்கள் ராஜபக்ஷவுக்கும் அதட்கு முன்னர் கொடுமை செய்த சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் அமுல்படுத்த்தாவிடால் நல்லது.
 
மனித உரிமையாளர்களில் பெரிதும் போற்றப்படுகின்ற, எலீ வீஸல், சொன்னார் இறந்தவருக்கும், வாழ்பவருக்கும் நாம் ஒப்ருவரும் சாட்சிகளாக இருங்கவேண்டும் என்று. அதாவது நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து நடந்த, நடக்கிற உரிமை மீறல்களை உதாசீனம் செய்யாமல் நாங்கள் சாட்சியங்களாக மாறவேண்டும் என்று. அவர் மேட் கண்ட கருத்த்தை யூத இனப்படுகொலை தொடர்பிலும் அதில் ஈடுபட்தொரை சட்டம் முன் கொண்டுவர செய்த முயட்சிகளின் பின்னணியில் கூறினார். மூலம்: http://www.goodreads.com/author/show/1049.Elie_Wieselhttp://www.goodreads.com/quotes/tag/holocaust
 
அடுத்ததாக ஒரு குவோட்தை பாவிக்கும் போது அது எந்த பின்னணியில் சொல்லப்பட்தது என்பது மிகமுக்கியமானது. நீங்கள் சொன்னால் அந்த குவொட்ட் "நேரம் என்பது ஒருவனுக்காக நிட்பதிலை" என்ற தலைப்பில் உருவான ஒரு கவிதையில் வந்தது. இதோ அதன் முழு வடிவம்:
 
"The clock is running. Make the most of today. Time waits for no man. Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That's why it is called the present." 
 
இந்த கவிதையின் சாராம்சம்: நேரம் ஆருக்காகவும் நிப்பதிலை. எனவே நேற்றையாது வரலாறு. நாளை புதினமானது. இன்றைய நாள் உனக்கு கிடைத்த பரிசு. 
 
மேட் கூறப்பட்த கவிதை ஒரு மனித உரிமை விடயத்தில் எப்படி பொருந்தும்?. நடந்த கொடூரங்களை இந்த கவிதையினூடு பார்த்தால் சர்வத்சம் எங்களை சமர்சம் செய்து, எல்லாவற்றையும் மறந்து ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்த்திட்டு போங்கோடப்பா என்று சொல்வதில் அர்த்தமுள்ளதாக தெரியுமல்லவா?. 
 
நான் நேரம் கிடைக்கும் போது Transitional Justice முறையால் எப்படி கடந்தகால உரிமை மீறல்களை நாங்கள் கவனித்தில் எடுத்து எமது மக்களுக்குள் நல்லிணக்கம் கொண்டுவரலாம் என்று எழுதுகின்றேன்

வணக்கம் புதல்வன்

உங்கள்  கருத்துக்களை வாசித்து வருகின்றேன்

பதில் தர தற்பொழுது முயல்வதில்லை

காரணம்

தமிழர் தமது முகங்களை (மட்டும்)

மாற்றவேண்டிய  சூழலில்  உள்ளோம்.

அதற்குள் எல்லோரும் வரவேண்டும் என்ற  கோசம்  வேறு.

உச்ச போராட்ட காலத்தில்

களத்தில்  எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஆதரித்தவன் என்றே  இங்கு எழுதிவருகின்றேன்

அதன்படி எல்லோரது கடந்த காலமும் தெரியும்.

எங்களை  விடவில்லை

விட்டால் செய்திருப்போம் என்றவர்களுக்கான காலமிது.

இக்காலம் அவர்களுக்கானது

செய்யணும்

அல்லது முடியாது என்று சொல்லணும்.

எனவே அவர்களது நடவடிக்கைகளை  விமர்சித்து 

தற்பொழுதும் இடைஞ்சல் செய்கின்றோம் என 

நீலிக்கண்ணீர் வடிக்க நேரம் கொடுக்கக்கூடாது.

ஆனால் போகிற  போக்கில்  பார்த்தால்

மக்களிடம் அடி வாங்கப்போகிறார்கள் என்று மட்டும் தெரிகிறது... :(  :(  :(

நன்றி விசு. உங்கள் செயல்பாடுகள் பற்றி நான் யாழினூடகா அறிந்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது விபரமாக பதில் போடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

இதே கொள்கையை நீங்கள் ராஜபக்ஷவுக்கும் அதட்கு முன்னர் கொடுமை செய்த சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் அமுல்படுத்த்தாவிடால் நல்லது.

மனித உரிமையாளர்களில் பெரிதும் போற்றப்படுகின்ற, எலீ வீஸல், சொன்னார் இறந்தவருக்கும், வாழ்பவருக்கும் நாம் ஒப்ருவரும் சாட்சிகளாக இருங்கவேண்டும் என்று. அதாவது நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து நடந்த, நடக்கிற உரிமை மீறல்களை உதாசீனம் செய்யாமல் நாங்கள் சாட்சியங்களாக மாறவேண்டும் என்று. அவர் மேட் கண்ட கருத்த்தை யூத இனப்படுகொலை தொடர்பிலும் அதில் ஈடுபட்தொரை சட்டம் முன் கொண்டுவர செய்த முயட்சிகளின் பின்னணியில் கூறினார். மூலம்: http://www.goodreads.com/author/show/1049.Elie_Wiesel; http://www.goodreads.com/quotes/tag/holocaust

அடுத்ததாக ஒரு குவோட்தை பாவிக்கும் போது அது எந்த பின்னணியில் சொல்லப்பட்தது என்பது மிகமுக்கியமானது. நீங்கள் சொன்னால் அந்த குவொட்ட் "நேரம் என்பது ஒருவனுக்காக நிட்பதிலை" என்ற தலைப்பில் உருவான ஒரு கவிதையில் வந்தது. இதோ அதன் முழு வடிவம்:

"The clock is running. Make the most of today. Time waits for no man. Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That's why it is called the present."

மூலம்: http://answers.yahoo.com/question/index?qid=20071130182336AA7qVmv

இந்த கவிதையின் சாராம்சம்: நேரம் ஆருக்காகவும் நிப்பதிலை. எனவே நேற்றையாது வரலாறு. நாளை புதினமானது. இன்றைய நாள் உனக்கு கிடைத்த பரிசு.

மேட் கூறப்பட்த கவிதை ஒரு மனித உரிமை விடயத்தில் எப்படி பொருந்தும்?. நடந்த கொடூரங்களை இந்த கவிதையினூடு பார்த்தால் சர்வத்சம் எங்களை சமர்சம் செய்து, எல்லாவற்றையும் மறந்து ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்த்திட்டு போங்கோடப்பா என்று சொல்வதில் அர்த்தமுள்ளதாக தெரியுமல்லவா?.

நான் நேரம் கிடைக்கும் போது Transitional Justice முறையால் எப்படி கடந்தகால உரிமை மீறல்களை நாங்கள் கவனித்தில் எடுத்து எமது மக்களுக்குள் நல்லிணக்கம் கொண்டுவரலாம் என்று எழுதுகின்றேன்

உங்களுடைய அபிமான அரசியல் கட்சியான தமிழ் அரசுக்கட்சி நான் சொல்லுறத்துக்கு முதலே இதை எல்லாம் சொல்லிட்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் இனத்தையும் விடுதலைப்புலிகளையும் படுகொலை செய்த சரத் பொன்சேகாவுடன் கூட்டு வைத்து

மற்றது மகிந்தவின் காலடியில் விழுந்து பதவி ஏற்று......

உங்களுடைய சம்மந்தன் செய்தால் சாணக்கியம்

நாங்கள் சொன்னால் மனித உரிமை மீறல் எல்லாம் வந்து போகுதோ?

சிவசக்தி ஆனந்தன் - மன்னார் ஆயர் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்கால் செல்லக் காரணம்: எம்.கே.சிவாஜலிங்கம்
[ திங்கட்கிழமை, 14 ஒக்ரோபர் 2013, 07:28.05 PM GMT ]
sivaaa.jpg
முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் கூட்டாக முடிவெடுத்த சிவசக்தி ஆனந்தனுக்கு மன்னார் ஆயர் செய்தி அனுப்பியதால் கைவிடப்பட்டதாக கூறினார், ஆனால் அவரும் என்னிடம் கூறவில்லை. மன்னார் ஆயரும் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம் என விபரிக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம்

  :rolleyes:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130718

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய வராலாறு கலய் பேசியும் நாளைய புனிதமான நாட்களுக்காக காத்து இருப்பதிலும் பார்க்க இன்றைய நிகழ்கால சந்தர்பங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அதை நான் இங்கு இணைத்ததற்கு காரணம்....

அவர்களின் கடந்த கால தவறுகளை உணர்ந்து தமிழ் தேசியத்தின் கீழ் இன்று ஒன்றினையும் போது அவர்களை வரவேற்பது தான் காலம் இட்ட கட்டளை எங்கள் தலைவன் கொண்ட எண்ணக்கரு....

பொன்சேக்காவை கூட்டமைபே ஆதரித்தது. தமிழரசுக் கட்சியல்ல. அந்த நேரம் மற்றைய இருகட்சிகளும் மந்திரிப்பதவி தேவை வராதால் தமிழரசுக் கட்சியுடனேயே இருந்தார்கள்.பிரதானமாக சுரேசை மேற்குநாடுகள் அங்கீகரிக்கவில்லை. மேலும் அவர் இந்தியாவுடன் கூடுதலும். எனவே அந்த நேரம் சம்பந்தர் பிளேக்கிடமிருந்து பொன்சேக்காவை ஆதரிக்கும் படி அழுத்தத்தை பெற்றுக்கொண்டிருந்த நேரம், இந்தியா "நாம் சொன்னால் இலங்கை கேட்குதில்லையே" என்று கூறி கூட்டமைப்பை கைகழுவி விட்டுக்கொண்டிருந்த காலம். இதனால் மற்றைய இருகட்சிகளும் பெரிதாக தூக்கி அடிக்காமல் தமிழரசுக்கட்சியுடன் இருந்தார்கள். இப்போ தேர்தல் வந்தது இந்தியாவால். இதனால் சுரேஸ் சற்று பலமாக உணர்கிறார். இதனால் கூட்டமைபை முறிக்க முயன்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு என்பது பேரளவில் தான் மற்றும்படி அங்கே கூட்டமைப்பு கட்சிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை சம்மந்தனின் தான் தோன்றி தனமான செயல்ப்பாடும் மக்களை சந்திக்காமல் பின்கதவு வழியால் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனும் மற்றும் வெளியே தெரியாத சம்மந்தன் தலைமையை ஆட்டுவிக்கும் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழும் சில வியாபாரிகளும் தான் அந்த கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கின்றார்கள் குறிப்பா அந்த கட்சியின் செல்வாக்கு மிக்க மக்கள் தலைவர் மாவைக்கே மதிப்பில்லை........

கூட்டணிக்கட்சிகள் என்ன செய்வது என்று தமிழ் மக்களின் விடிவிற்காக உள்ளே இருக்கின்றார்கள்

கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சி இருக்கவில்லை.  நூர்ந்து போன திரியை மீடும் பற்றவைக்க வேண்டிய தேவையை கொண்டு வந்தர்கள் மற்றக்கட்சிகளே. (ஆனந்தசங்கரியின் திருவிளையாடல்) தேர்தலில் நிற்க வேறு ஒரு சின்னம் கிடைக்காத்தால் வீட்டுடன் ஒத்து போகவேண்டியும் வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியில் இருந்த பெருன்பான்மை தலைகள் எல்லாம் ITAK தானே இன்றும் தமிழ் தேசியக்கூடமைப்பிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் அவர்கள் தான்

கூட்டனியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கட்சி தலைமை வகிக்கும் ஒரு கட்சி மற்றைய சிறு கட்சிகளை மதிக்கத்தேரிந்து இருக்க வேண்டும் அது தான் ஆரோகியாமான கூட்டணி சிறந்த தலைமைப்பண்பு ஆகும் மாறாக தமிழ் அரசுக்கட்சி செய்வது மற்ற கட்சிகளை bullying பண்ணுறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.