Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குர்ஹாம் சாக்கீ படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குர்ஹாம் சாக்கீ படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை
18 அக்டோபர் 2013

பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ படுகொலையுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதாரன பத்திரண மற்றும் ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்ட நத்தார் பண்டிகையின் போது தங்காலை ஹோட்டல் ஒன்றில் குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியோ ஆகியோர் மிக மோசமாக தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டதுடன், அவரது காதலி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் உள்ளிட்ட பலர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜனாதிபதிக்கு நெருக்கமான தங்காலை பிரதேச சபைத் தலைவரை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த வழக்கு விசாரணைகளில் நியாயம் கிட்டுமா என்பது சந்தேகமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97790/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய மாநாட்டின் தொல்லையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.. மாநாடு முடிந்ததும் நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்படும்.. :o

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தண்டனை கிடைத்தாலும், அந்த 'தண்டனை' பிரதம நீதி அரசர் மோகன் பீரிசிடம் இருந்து தப்புவது கஷ்டம்.

 

தப்பின்னாலும் கடைசி அடியாக, 'ஜனாதிபதியின் மன்னிப்பு' விழும், அந்த மாதிரி.

 

பாவம் 'தண்டனை'.

  • கருத்துக்கள உறவுகள்

Khuram Shaikh: Six charged with murder over Sri Lanka killing

_68982807_68980526.jpg
 
Khuram Shaikh was killed while on holiday in the resort of Tangalle
 

An "associate" of Sri Lanka's president and five other men have been charged with the murder of an aid worker in the country on Christmas Day 2011.

 

Red Cross worker Khuram Shaikh, 32, from Milnrow, Rochdale was shot and stabbed while on holiday.

 

The men have been charged with offences including murder, possession of unlawful weapons and the gang rape of a woman.

They have been bailed until their next court appearance.

 

A senior official in the Sri Lankan Attorney General's department, who said one of the men had close ties with President Mahinda Rajapaksa, said the men would stand trial "very soon".

 

British officials, including Prime Minister David Cameron and Rochdale MP Simon Danczuk, have previously expressed concern at the slow pace of progress in the case.

 

Sri Lankan authorities said they are fast-tracking the case by omitting a preliminary inquiry, which is usually held.

 

According to reports, possible key witnesses have been threatened, which has led the authorities to move the case from the resort town of Tangalle, where one of the accused men is the council leader, to the capital Colombo.

 

http://www.bbc.co.uk/news/uk-england-manchester-24577971

Edited by nedukkalapoovan

பொதுநலவாய மாநாட்டின் தொல்லையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.. மாநாடு முடிந்ததும் நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைக்கப்படும்.. :o

 

"offences including murder, possession of unlawful weapons and the gang rape of a woman" 

 

குற்றங்கள் டெல்கி பஸ் வழக்குக்கு சரியானது. தூக்கு தண்டனை கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய வழக்கு. எனவே கைது செய்யப்பட்டவர்கள் இனி அ-கைது செய்யப்படுவது தவிக்க முடியாது.

 

ஆனால் பிரச்சனை இப்போது இந்த வழக்கு பிருத்தானியாவிலும் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. இலங்கை அரசு இந்த வ்ழககை சடையும் போது பழமைபேண் கட்சி சும்மா பார்த்துக்கொண்டிருந்தால் தொழில் கட்சி அதை பிடித்துக்கொண்டு அது பிருத்தானியாவின் கௌரவ பிரச்சனை என்று சொல்லப் போகிறது. சூடு அதிகம் பிடித்தால் ரூசிய spy கொலை வழக்குகள் மாதிரி பிருத்தானிய-இலங்கை உறவில் ஒரு துண்டு விழும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.