Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்லாந்தில் தேசியத்தலைவர் அவர்களின் குடும்பத்துடனான முதல்தர தபால் வெளியீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில் பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும் சிறப்பையும் சேர்த்துள்ளார்.

இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும் அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் வெளியிட்டேதீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு பின்லாந்து அரசினை நாடி இது பற்றிப் பேசி சம்மதிக்க வைத்து தமிழர்களின் விடிவிற்காகப் போராடிய வீரத்தலைவன் என்ற அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர் குடும்பத்துடன் இருக்கின்ற படத்தினை தபால் தலை ஊடாக வெளியிட்டு தமிழர்களின் வீரப் போராட்டத்தையும் தமிழர்களின் ஒரே தலைவன் பிரபாகரன் என்பதையும் இத்தபால் தலை ஊடாக சொல்லிச் சிறப்பித்திருக்கிறார்.

பின்லாந்து அரசும் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களை ஏற்று முதல் தரமான (first class) தபால் தலை வெளியிட்டு எங்கள் தேசியத் தலைவரையும் அவரின் குடும்பத்தையும் கௌரவப்படுத்தியுள்ளது.

கடந்த வருடங்களில் தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட தபால் தலைகள் பிரான்ஸ் பிரித்தானியா அமெரிக்கா நோர்வே ஜேர்மனி ஆகிய நாடுகளில் அந்த நாட்டு அரசாங்கங்கள் ஊடாக ஈழத்தமிழர்கள் வெளியிட்டு சிறப்பித்து கௌரவப்படுத்தியிருந்தது யாவரும் அறிந்ததே...

இதே வரிசையில் இப்போது முதன் முறையாக ஈழத்தமிழர்கள் அரிதாக வாழும் பின்லாந்தில் வாழ்ந்து கல்வி கற்று வருகின்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் அந்த நாட்டு அரசு ஊடாக மேற்குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டு தமிழர்களின் ஒரே தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரன் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி கௌரவப் படுத்தியுள்ளார்.

தமிழீழச் சின்னங்கள் பதிக்கப்பட்ட பல தபால் தலைகள் பல நாடுகளில் வெளிவந்திருந்தாலும் தலைவர் அவர்கள் குடும்பத்தினருடன் இருப்பது போன்ற தபால் தலை வெளிவருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி சுரேஷ்கண்ணன் தெரிவிக்கையில்...

'எல்லா நாடுகளிலும் தபால் தலைகள் வெளிவரும் போது நான் வாழுகின்ற நாட்டிலும் எப்பாடுபட்டாவது இதே போன்ற தபால் தலைகள் வெளியிட்டே தீர வேண்டும் என்ற வெறி எனக்குள் பற்றிக் கொண்டது.நான் இந்த நாட்டுக்கு வந்து ஒரு சில வருடங்களே ஆகிறது அதனால் கடந்த வருடம் பல தடவைகள் முயற்சி செய்தும் நான் நான் தோல்வியே அடைந்தேன். இருந்தும் நான் மனம் தளரவில்லை. இங்கு ஈழத்தமிழர்கள் குறைவு அதனால் எனக்குப் பக்க பலமாக யாரும் இல்லை இருந்தும் விடுவதில்லை என்று இம்முறையும் பல தடவைகள் முயற்சி செய்து இறுதியில் வென்று விட்டேன்.

என் தேசத்திற்காக என்னால் முடிந்த பங்களிப்பையும் புலம் பெயர் தேசத்தில் இருந்து செய்ய வேண்டும் என்ற கனவுகள் எனக்கும் நிறைய உண்டு. அதில் தபால் தலை வெளியிடுவதும் ஒரு பெரிய கனவாகவே இருந்தது. தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவரின் வரலாற்றுச் சிறப்புக்களையும் தமிழர்களின் ஒரே தலைவன் தேசியத் தலைவர் பிரபாகரன்தான் என்பதையும் இந்த பின்லாந்து அரசு ஊடாக எல்லா நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இன்று (22.10.2013) வெளியிட்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

இதே போல் எல்லா நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்கள் உறவுகள் அவரவர் நாடுகளில் தபால் தலைகள் வெளியிடுவதால் எங்கள் தமிழீழத்திற்கு சர்வதேசத்தில் சிறப்புக் கௌரவமும் அங்கிகாரமும் கிடைக்கும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மைகள் ஒரு போதும் அழியாது! இறுதியில் தர்மமே வெல்லும்! தமிழீழம் மலரும்!

-வல்வை அகலினியன்

036.jpg

 

 

http://www.sankathi24.com/news/34773/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து அரசுக்கும் தபால்துறைக்கும் முயற்சி எடுத்த எம் தமிழ் உறவுக்கும் நன்றிகள் பல..! சிங்கள அரசு இதற்கும் எதிராக சீறும் நகர்வுகளைச் செய்யும். அதனையும் தடுக்க பின்லாந்தைக் கேட்டுக்கொள்ள.. முயற்சிக்க வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது காலத்தின் கட்டாயமும் கூட.

 

இவ்வாறான விடயங்கள்தான் புலத்துக் கண்மணிகளை மகிழ்வாக வைத்திருக்கக்கூடிய விடயங்களும் ஆகும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் விபுலாநந்தருக்கு, காந்திக்கு பாதர் லோங்குக்கு அரசுகளே வெளியிட்டதுபோல கெளரவ தபால்தலை அல்ல. சில நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், novelty stamp என்று நாங்கள் விரும்பும் படத்தை பொதுவாக செல்லப்பிராணிகளின் படத்தை போட்டு கொஞ்சம் ஸ்டாம் பிரிண்ட் பண்ணி கொடுப்பார்கள்.

மற்றும்படி ஈயூவினால் பயங்கரவாதிகளாக தடைசெய்யபட்டுள்ள ஒரு இயக்கத்தலைவரை பின்லாந்து முத்திரை வெளியிட்டு கெளரவிக்கிறது என்று சொன்னால், அதை நம்பும் நாம் தான் முட்டாள்கள்.

ஒரு அரசு ஒரு மனிதனை கெளரவிக்க முத்திரை வெளியிடுவ்ச்தென்றால், அவரின் முழுக்குடும்பத்துக்குமா வெளியிடும்?

சிரிப்பாக இல்லை.

புலிகள் இருந்த போது இப்படி சில்லறத்தனக்கள் செய்யவில்லை. இப்போ அவர்களின் காசை சுருட்டி வாழுபவர்கள், தம் வியாபாரத்தை மேலும் பெருக்க இப்படி லூசுத்தனமாக வேலை செய்து அந்த்ஹாளின்ற மானத்தையும் கப்பலேத்துகிறார்கள். இதற்க்கும் விசிலடிக்க இங்கே இருக்கிறார்கள் புலத்து வியாபாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.royalmail.com/personal/stamps-and-collecting/smilers

மேலே உள்ளது யூகேயின் ராயல் மெயிலில் நீங்கள் விரும்பிய படத்தை போட்டு முத்திரை அடிக்கும் சேவை.

இதில் நீங்கள் நமிதாவின் படத்தை போட்டும் முத்திரை அடிக்க முடியும்.

கீழே உள்ளது பிரான்ஸில்! யூகேயில் இது போல் முன்பு நடந்தவை பர்ரிய செய்தி

http://khabarsouthasia.com/en_GB/articles/apwi/articles/features/2012/01/11/feature-02

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் விபுலாநந்தருக்கு, காந்திக்கு பாதர் லோங்குக்கு அரசுகளே வெளியிட்டதுபோல கெளரவ தபால்தலை அல்ல. சில நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், novelty stamp என்று நாங்கள் விரும்பும் படத்தை பொதுவாக செல்லப்பிராணிகளின் படத்தை போட்டு கொஞ்சம் ஸ்டாம் பிரிண்ட் பண்ணி கொடுப்பார்கள்.

மற்றும்படி ஈயூவினால் பயங்கரவாதிகளாக தடைசெய்யபட்டுள்ள ஒரு இயக்கத்தலைவரை பின்லாந்து முத்திரை வெளியிட்டு கெளரவிக்கிறது என்று சொன்னால், அதை நம்பும் நாம் தான் முட்டாள்கள்.

ஒரு அரசு ஒரு மனிதனை கெளரவிக்க முத்திரை வெளியிடுவ்ச்தென்றால், அவரின் முழுக்குடும்பத்துக்குமா வெளியிடும்?

சிரிப்பாக இல்லை.

புலிகள் இருந்த போது இப்படி சில்லறத்தனக்கள் செய்யவில்லை. இப்போ அவர்களின் காசை சுருட்டி வாழுபவர்கள், தம் வியாபாரத்தை மேலும் பெருக்க இப்படி லூசுத்தனமாக வேலை செய்து அந்த்ஹாளின்ற மானத்தையும் கப்பலேத்துகிறார்கள். இதற்க்கும் விசிலடிக்க இங்கே இருக்கிறார்கள் புலத்து வியாபாரிகள்.

 

நீங்கள் இதை எழுதாமல் போயிருந்தால்.......... இந்த விடயம் யாருக்குமே தெரியாமல் போயிருக்கும்.
வாசித்து உலக தபால் மற்றும் முத்திரை அறிவை வளர்த்து கொண்டோம்.
நன்றிகள் !
  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

Please don't measure others with your own yardstick. எல்லார்க்கும் என்று சொல்லாதீர்கள். சாதாரன மனித மூளை உள்ள அனைவரிற்க்கும் மேற்சொன்ன செய்தியின் பித்தலாட்ட்த்தனம் நாம் சொல்லாமலே விளங்கி இருக்கும். நான் எடுத்து சொன்னது விளக்கம் குறைந்த சிலருக்கும் விளங்கவேண்டும் எனும் பொது நலன் கருதியே.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி,

Please don t  measure others with your own yardstick. எல்லார்க்கும் என்று சொல்லாதீர்கள். சாதாரன மனித மூளை உள்ள அனைவரிற்க்கும் மேற்சொன்ன செய்தியின் பித்தலாட்ட்த்தனம் நாம் சொல்லாமலே விளங்கி இருக்கும். நான் எடுத்து சொன்னது விளக்கம் குறைந்த சிலருக்கும் விளங்கவேண்டும் எனும் பொது நலன் கருதியே.

Please don t  measure others with your own yardstick

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.