Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் கலை, கலாசாரத்தை புரியாத பொலிஸ் தேவையில்லை! விக்னேஸ்வரன்

Featured Replies

WigneshwaranNorth.jpgதமிழர்களின் மொழி, கலை, கலாசாரத்தைப் புரிந்துகொள்ளாத பொலிஸார் வடக்கில் நிலைகொண்டிருப்பது தமிழர்களின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13ஆவது திருத்தத்தை முற்றுமுழுமையாக நடைமுறைப்படுத்துவற்கும் ஆவண செய்யவிருப்பதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

trans.gif

வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

trans.gif

வட மாகாண சபையில் லஞ்ச ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் சீ.வீ.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

தமிழ்கள் மக்கள் எதிர்கொண்டுள்ள மிகக்கொடுரமான பாதிப்புக்களை சிங்கள மக்களும் உலக மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

trans.gif

அத்துடன், வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.தெரிவித்தார்.

"வட மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இடம்பெற இனிமேல் அனுமதிக்க முடியாது. அத்துடன் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வினை விரைவில் காணவுள்ளது.

போரிற்கு பிந்திய வடக்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச சமூகம் வட பகுதி தமிழ் மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.

வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தேர்தல் ஆணையாளரை அரசாங்கம் வழிநடத்த வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் ஓட்டைகள் நிறைந்த பாத்திரம் போல இருக்கின்றதை உணர்ந்திருந்த போதும், நாங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம்.இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது" என்றார்.

ஆளுநராக இராணுவ அதிகாரியை விரும்பவில்லை: விக்னேஸ்வரன்

வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பை  புரிந்துகொண்டு செயலாற்றக்கூடிய ஒருவரே வட மாகாண ஆளுநராக வர வேண்டும் என நாங்களும் மக்களும் விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார். இதனை ஜனாதிபதி கவனத்தில் எடுத்து செயற்படுவார் என தான் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"வட மாகாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இடம்பெற இனிமேல் அனுமதிக்க முடியாது. அத்துடன் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்.  வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வினை விரைவில் காணவுள்ளது.

போரிற்கு பிந்திய வடக்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சர்வதேச சமூகம் வட பகுதி தமிழ் மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும்.

வட மாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சட்ட வரையறைக்குள் தந்திரோபாய அடிப்படையில் முன்னகர்த்தி செல்லவுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தேர்தல் ஆணையாளரை அரசாங்கம் வழிநடத்த வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் ஓட்டைகள் நிறைந்த பாத்திரம் போல இருக்கின்றதை உணர்ந்திருந்த போதும், நாங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டோம்.இந்த சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது" என்றார்.

திறப்பு விழாவில்...

DSC_0248%281%29.JPG

வட மாகாண சபைக்கான புதிய கட்டிடத்தினை மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா)

DSC_0255.JPG

DSC_0283%282%29.JPG

DSC_0625.JPG

DSC_0322%281%29.JPG

DSC_0326%281%29.JPG

DSC_0352%281%29.JPG

DSC_0375%281%29.JPG

Tamilmirror

DSC_0352%281%29.JPG

இவ்வளவு நாளும் யாழ்ப்பாண கொண்டாங்களில் தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் கோமணம் கட்டின கரகாட்டம் மட்டும்தான் காணக்கூடியதாக இருந்தது. 

இதற்காகத்தன்னும் ஒரு தமிழ் மாகாணம் கிடைத்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் போல்.... கண்டிய நடனத்தோடு திறக்கப்பட்டிருக்கும்.. இந்தத் தேர்தலில் ஈபிடிபியோ அல்லது.. மகிந்தவோ வென்றிருந்தால்..! யாழ் சிவப்புக் கம்பள வீதி கூட கண்டிய நடனத்தோடு திறக்கப்பட்டிருந்தது.

தமிழர் கலாசாரத்துக்கு தமிழர் பகுதிகளில் முன்னுரிமை அளிக்கும் முதலமைச்சரை பாராட்டுதல் தகும்.. அந்தப் பணிக்காக. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கில் போல்.... கண்டிய நடனத்தோடு திறக்கப்பட்டிருக்கும்.. இந்தத் தேர்தலில் ஈபிடிபியோ அல்லது.. மகிந்தவோ வென்றிருந்தால்..! யாழ் சிவப்புக் கம்பள வீதி கூட கண்டிய நடனத்தோடு திறக்கப்பட்டிருந்தது.

தமிழர் கலாசாரத்துக்கு தமிழர் பகுதிகளில் முன்னுரிமை அளிக்கும் முதலமைச்சரை பாராட்டுதல் தகும்.. அந்தப் பணிக்காக. :)

இப்பதான் தொடங்கியிருக்கிறார் முதல்வர்.. போகப்போக பாருங்கள் கலக்குவார்

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தருகிற பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள்.... நாவூறு படாமல் இருக்க,
சுமந்திரனும்... தலையைக் காட்டிக் கொண்டிருப்பது... நல்லதாய்ப் போச்சுது. :D  :lol:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.