Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் பொது அறிவுப் போட்டி - யாழ் களம் 2013

Featured Replies

பிரபாகரன் நேராக வந்து சண்டையிட்டால் கூட சமாளித்துவிடலாம், ஆனால் வந்திருப்பது ----------------------------  இவர் நிலை

கொண்டுவிட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்.. சிங்களத் தளபதி காமினி கெட்டியாராய்ச்சி கொழும்பு படைத்

தலைமைக்காரியாலயத்திற்குச் சொன்ன செய்தி. இந்த யுத்தம் முடிந்து பாசறைக்குத் திரும்பிய இவருக்கு எங்கள் தலைவன்

இத்தொலைபேசி உரையாடலைப் போட்டுக் காண்பித்தார். இதில் கெட்டியாராய்ச்சியால் குறிப்பிடப்பட்டுள்ள இவர் யார்?

Edited by Puyal

  • Replies 500
  • Views 39.4k
  • Created
  • Last Reply

(இந்தத் தலைப்பில் அவதானித்த ஓர் விடயம்..  எம் தேசத்திற்காக உயிர் தந்து போன.. போராடிப் போன.. 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் வரலாறுகளில் இன்னும் எத்தனையோ ஆயிரம் போராளிகளின் வரலாறுகளில்.. நடந்த நடக்கின்ற விடயங்களில் பலவற்றை... எமது போராட்ட கால வரலாற்றில்..நடந்தவற்றை எல்லாம்..  நாம் தேடி அறிந்து பதில் சொல்லும் நிலையில் தான் இருக்கிறோம். இவர்களின் இந்தக் காலத்தில் நிகழ்ந்த... வரலாறுகளை வரலாற்று நிகழ்வுகளை.. ஒரு பெரும் ஆவணமாக்க வேண்டியதும் அது மக்களை இலகுவாக போய் சேர வேண்டியதும்.. எவ்வளவு அவசியம் என்பதை இந்தத் தலைப்பு உணர்த்தி நிற்கிறது. புயல்.. நந்தன்.. அஞ்சரன்... தயாண்ணா போன்ற உறவுகளின் பங்களிப்பு இங்கு உண்மையில் வியக்க வைக்கிறது. தொடருங்கள் உறவுகளே. பல தெரியாத அறியாத விடயங்களைக் கூட இங்கு தான் அறியவும் முடிகிறது. இவை அறியப்பட வேண்டிய விடயங்கள் என்பதையும் உணர முடிகிறது..! இவற்றை விட்டு நாம் தூர விலகிப் போகிறோமோ என்ற அச்சமும் கூட எழுந்து நிற்கிறது.)

தமிழர்களின் கடந்து போன வரலாறுகள் போல இதுவும் ஆவணங்கள் அற்ற சாட்சிகள் அற்ற வரலாறு ஆகிடுமோ என்ற அச்சமே மேலிடுகிறது.

  தனிமனிதனாக என்னால் சேகரிக்க கூடிய பல ஆவணங்களை சேகரித்துள்ளேன், இங்கு கேட்கப்படும் கேழ்விகளுக்கு எனது வேலைப்பழு காரணாமாக உடனடியாக பதில்களை தரமுடியவில்லை. மன்னிக்கவும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா விமானப்படை விமானம் ஒன்றிற்கு எதிராக மேற்கொண்ட முதல் தாக்குதல் எது எங்கே எப்போது நிகழ்த்தப்பட்டது..?!

நவக்கிரி 1995 சரியோ பிழையோ தெரியாது

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  தனிமனிதனாக என்னால் சேகரிக்க கூடிய பல ஆவணங்களை சேகரித்துள்ளேன், இங்கு கேட்கப்படும் கேழ்விகளுக்கு எனது வேலைப்பழு காரணாமாக உடனடியாக பதில்களை தரமுடியவில்லை. மன்னிக்கவும்.

ஒரு தடவை மாவீரர் வாரத்தின் போது யாழ் இந்துக் கல்லூரியில் ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். அங்கு ஒரு மண்டபம் முழுக்க பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்று ஈழம் தொடர்பான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தான பதிப்புகள் தொடங்கி.. புலம்பெயர் நாடுகளில் வெளியான சஞ்சிகைகள் வரை காணக் கிடைத்தது. இப்போ அவை எல்லாம் அழிந்து போயிருக்கும். இப்படி இன்னோரென்ன வரலாற்றியல் பொக்கிசங்களும்.. இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அழிந்து போயுள்ளன.. அல்லது அழிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இயன்றவற்றையாவது சேமிக்கனும்.. பாதுகாக்கனும். உணர்வில்.. நினைவில்.. சாட்சியங்களாக உள்ளவற்றை சரியான நேர்த்தியான வடிவில் பதிவு செய்யவும் வேண்டும். சிலர் வியாபாரத்திற்காகவும்.. புகழிற்காகவும்.. காழ்ப்புணர்ச்சியை கொட்டவும் பதிவு செய்பவற்றை எல்லாம் ஆதாரம் என்றோ வரலாற்று ஆவணம் என்றோ கொள்ள முடியாத நெருக்கடி நிலையில்.. உங்கள் போன்றோரின் சிறு முயற்சிகளும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டும். தொடர்ந்து இந்தச் சேவையை செய்யுங்கள். அவற்றின் பெறுமதியை ஓர் நாள் இந்தச் சமூகம் உணர்ந்து உங்களைத் தேடி வரும். :icon_idea:

பிரபாகரன் நேராக வந்து சண்டையிட்டால் கூட சமாளித்துவிடலாம், ஆனால் வந்திருப்பது ----------------------------  இவர் நிலை

கொண்டுவிட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்.. சிங்களத் தளபதி காமினி கெட்டியாராய்ச்சி கொழும்பு படைத்

தலைமைக்காரியாலயத்திற்குச் சொன்ன செய்தி. இந்த யுத்தம் முடிந்து பாசறைக்குத் திரும்பிய இவருக்கு எங்கள் தலைவன்

இத்தொலைபேசி உரையாடலைப் போட்டுக் காண்பித்தார். இதில் கெட்டியாராய்ச்சியால் குறிப்பிடப்பட்டுள்ள இவர் யார்?

 தளபதி பிரிகேடியர் பால்ராஜ்

கிழக்கில்,

அ) முதன் முதலில்

      அரச கட்டமைப்பில், புலிகள் நடத்திய மீட்புத் தாக்குதல் எது?

ஆ) முதன் முதலில்

       அரச படையினரை மாத்திரம் குறி வைத்து புலிகள் நடத்திய கரந்தடிப்படை தாக்குதல் எது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா விமானப்படை விமானம் ஒன்றிற்கு எதிராக மேற்கொண்ட முதல் தாக்குதல் எது எங்கே எப்போது நிகழ்த்தப்பட்டது..?!

1986 ஊர்காவற்றுறை பருத்தியடைப்பு என்ற இடத்தில் கடல் விமானம்(என் செல்லரித்துப்போன ஞாபகப்பதிவிலும்,அனுபவத்திலும் இருந்தே இப்பதில்களைத் தருகின்றேன் தவறாயின் மன்னிக்கவும்)

ஒரு தடவை மாவீரர் வாரத்தின் போது யாழ் இந்துக் கல்லூரியில் ஒரு கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். அங்கு ஒரு மண்டபம் முழுக்க பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்று ஈழம் தொடர்பான ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தான பதிப்புகள் தொடங்கி.. புலம்பெயர் நாடுகளில் வெளியான சஞ்சிகைகள் வரை காணக் கிடைத்தது. இப்போ அவை எல்லாம் அழிந்து போயிருக்கும். இப்படி இன்னோரென்ன வரலாற்றியல் பொக்கிசங்களும்.. இந்த போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அழிந்து போயுள்ளன.. அல்லது அழிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இயன்றவற்றையாவது சேமிக்கனும்.. பாதுகாக்கனும். உணர்வில்.. நினைவில்.. சாட்சியங்களாக உள்ளவற்றை சரியான நேர்த்தியான வடிவில் பதிவு செய்யவும் வேண்டும். சிலர் வியாபாரத்திற்காகவும்.. புகழிற்காகவும்.. காழ்ப்புணர்ச்சியை கொட்டவும் பதிவு செய்பவற்றை எல்லாம் ஆதாரம் என்றோ வரலாற்று ஆவணம் என்றோ கொள்ள முடியாத நெருக்கடி நிலையில்.. உங்கள் போன்றோரின் சிறு முயற்சிகளும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டும். தொடர்ந்து இந்தச் சேவையை செய்யுங்கள். அவற்றின் பெறுமதியை ஓர் நாள் இந்தச் சமூகம் உணர்ந்து உங்களைத் தேடி வரும். :icon_idea:

 நன்றி  நெடுக்காலபோவான் (அண்ணாவோ அல்லது தம்பியோ)

நான் சேகரித்தவற்றை சிலர் வியாபாரத்திற்காகவும்.. புகழிற்காகவும்.. காழ்ப்புணர்ச்சியை கொட்டவும் என்னிடம் உள்ளவற்றை ஒரு பிரதிஎடுத்து தருமாறு கேட்டார்கள், நான் கொடுக்கவில்லை, ஒருபோதும் கொடுக்கவும் மாட்டேன்.

 தளபதி பிரிகேடியர் பால்ராஜ்

மிகவும் சரியான பதில்

சிறிக்கு உணர்வுபூர்வமான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவக்கிரி 1995 சரியோ பிழையோ தெரியாது

வாழ்க வளமுடன்

அதற்கும் பல ஆண்டுகள் முன்னரே.. நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்று உள்ளது..! 1990 இல் கோட்டை முற்றுகையின் போது..இத்தாலிய சியாமா செட்டியை புலிகள் யாழ் கோட்டைக்கு அருகில் வைத்து பண்ணைக் கடலுக்குள் சுட்டு வீழ்த்தி இருந்தனர். அதன் பின்னர் ஆகாய கடல் வெளி தாக்குதலின் போது Y12 ரக சீன விமானத்தையும் சுட்டு வீழ்த்தி இருந்தனர்.

முதலாவது தாக்குதல் 1978 இல் சிறீலங்காவின் விமானப்படை தளமான இரத்மனாலையில் நின்ற விமானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என்பதுவே சரி என்று நினைக்கிறோம்.

தவறாக இருந்தால் கள உறவுகள் சுட்டிக்காட்டுங்கள்.

உங்கள் பங்களிப்புக்கு நன்றி புயல் மற்றும் நந்தன்.

Edited by nedukkalapoovan

முதலாவது தாக்குதல் 1978 இல் சிறீலங்காவின் விமானப்படை தளமான இரத்மனாலையில் நின்ற விமானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என்பதுவே சரி என்று நினைக்கிறோம்.

'அவ்ரோ' விமானத்தில் குண்டு வைத்து நடத்திய தாக்குதல்.  

முதலாவது தாக்குதல் 1978 இல் சிறீலங்காவின் விமானப்படை தளமான இரத்மனாலையில் நின்ற விமானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என்பதுவே சரி என்று நினைக்கிறோம்.

தவறாக இருந்தால் கள உறவுகள் சுட்டிக்காட்டுங்கள்.

.

சரியான தகவல்.

சரியான தகவல்.

தற்போது ஞாபகத்திற்கு வந்துள்ளது. தங்களின் விடை மிகவும் சரி.

வாழ்க வளமுடன்

கிழக்கில்,

அ) முதன் முதலில்

      அரச கட்டமைப்பில், புலிகள் நடத்திய மீட்புத் தாக்குதல் எது?

ஆ) முதன் முதலில்

       அரச படையினரை மாத்திரம் குறி வைத்து புலிகள் நடத்திய கரந்தடிப்படை தாக்குதல் எது?

இந்தக் கேள்வி விடுபட்டுக் கொண்டு போகின்றது. நண்பர்களே இதற்கான விடையை முயற்சியுங்கள்

வாழ்க வளமுடன்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம் தாக்குதல்

இது சரியா தப்பிலி

விமானப்படை மீது தாக்குதல் என்பதுதான் கேள்வி என்றால் குறிப்பிட்ட குண்டுத் தாக்குதல் ஒரு பயணிகள் விமானம் மீது மேற்கொள்ளப்பட்டது அல்லவா?

பழ.நெடுமாறன் அவர்கள் 1983ஆம் ஆண்டு ஈழத்திற்கு பயணம் செய்த பொழுது நடந்த சம்பங்களை ஒரு புத்தகமாக எழுதியிருந்தார். அதில் சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்த்தி ஒன்றை சுட்டு வீழ்த்திய புலிவீரன் அதன் பாகம் ஒன்றை தனக்கு காட்டியதாக எழுதியிருந்தார்.

சந்திரனில் இருந்து கல் எடுத்து வந்தது போல் பழ நெடுமாறன் குறிப்பிட்ட வானூர்த்தியின் பாகத்தை எடுத்து வந்து காட்டியதாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் ஒருவர் (கலைஞர் கருணாநிதி என்று ஞாபகம்) பாராட்டியதாகவும் நினைவில் இருக்கிறது.

ஆனால் குறிப்பிட்ட தாக்குதல் பற்றி மேலதிக தகவல்கள் எனக்குத் தெரியவில்லை.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம் தாக்குதல்

இது சரியா தப்பிலி

அ) இரண்டாவது மட்டக்களப்பு சிறையுடைப்பு தாக்குதல் (1983). வெலிக்கடை சிறைச் சாலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை மீட்ட முதலாவது சிறையுடைப்புத்  தாக்குதலின் பின், சிறிலங்காப் படைகளால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையை உடைத்து கைதியை மீட்டது. குறுகிய நேரத்தில்  குறைந்த ஆள் வலு, ஆயுத வலு கொண்டு, இராணுவ உடையணிந்து சென்று பரமதேவா அண்ணனால் நடத்தப்பட்டது.

புலிகளுக்கு வெற்றிகரமான தாக்குதலாக இருந்தாலும் பின்னாலில் தலையிடியைக் கொடுத்தது.

மீட்கப்பட்டவர் நிர்மலா அக்கா.    :D

ஆ) கழுவான்ஞிக்குடி பொலிஸ் தாக்குதல். மாலையில் பகலில் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கிழக்குப் பொறுப்பாளர் பரமாததேவாவுடன் வாமதேவனும் (ரவி) வீர மரணமடைந்தார்கள். இந்த தாக்குதலில் மார்ஷலும் (இளந்திரையன்) பங்கு பற்றினார்.

மட்டக்களப்பு சிறையுடைப்பை விடுதலைப் புலிகள் மட்டுமா செய்தார்கள்? புளொட் இயக்கம் இதற்கு உரிமை கோரியிருந்ததாக ஒரு ஞாபகம். பின்பு நிர்மலா நித்தியானந்தனை மீட்டதைப் பற்றி புலிகளின் ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் 1983இல் நடந்த அந்த சிறையுடைப்பில் புலிகளின் பங்களிப்பு பற்றி சரியான தகவல்கள் இல்லை. நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா விமானப்படை விமானம் ஒன்றிற்கு எதிராக மேற்கொண்ட முதல் தாக்குதல் எது எங்கே எப்போது நிகழ்த்தப்பட்டது..?!

இத்தாக்குதல் பலாலியில் இருந்து சென்ற விமானத்துக்கு நேரக்கணிப்பு குண்டு வைக்கபட்டதா கேள்விப்பட்டேன் அதை கொண்டு சென்று வைத்தவர் பேபி சுப்பிரமணியம் அதுவே முதலாவது விமானம் மீதான தாக்குதலா இருக்கலாம் .

காதுவழி செய்தி மட்டுமே தெரிந்தவர்கள் உறுதி படுத்துங்கள் நன்றி .

மட்டக்களப்பு சிறையுடைப்பை விடுதலைப் புலிகள் மட்டுமா செய்தார்கள்? புளொட் இயக்கம் இதற்கு உரிமை கோரியிருந்ததாக ஒரு ஞாபகம். பின்பு நிர்மலா நித்தியானந்தனை மீட்டதைப் பற்றி புலிகளின் ஊடகங்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் 1983இல் நடந்த அந்த சிறையுடைப்பில் புலிகளின் பங்களிப்பு பற்றி சரியான தகவல்கள் இல்லை. நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

முதலாவது சிறையுடைப்பு பலரால் சேர்ந்து நடத்தப்பட்டது. இதில் பொது மக்களின் பங்களிப்பும் மிகப் பலமாக இருந்தது. உள்ளிருந்த பரந்தன் ராஜன் இன் பங்கும் நிறைய இருந்ததால் 'புளொட்' அமைப்பு உரிமை கோரியிருந்தது. 'பனாகொடை' மகேஸ்வரனின் பங்களிப்பும் இருந்தது.  'ஈபிஆர்எல்எஃப் இன் பங்களிப்பும் இருந்தது. பெயரிற்குத்தான் இயக்கங்களின் பெயரே ஒழிய, அது பலரின் கூட்டு முயற்சி.

இரண்டாவது தாக்குதல், முதலாவது தாக்குதலில் தப்பிச் சென்ற பரமதேவாவாவால் நடத்தப்பட்டது. இது முற்றாக புலிகளாலே நடத்தப்பட்டது. பரமதேவா  எழுபதுகளின் மத்தியில் கிழக்கில் தனியாக இயங்கினார். இவருடன் பொத்துவில் எம்பி யின் மகன் ரன்ஞன் போன்றவர்களும் சேர்ந்திருந்தார்கள். செங்கலடி வங்கிக் கொள்ளையில் சிறை சென்ற இவர்கள் பின்பு புலிகளில் சேந்து இயங்கினார்கள்.

1<தளபதி கேணல் கிட்டு பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன ?

2<கேணல் கிட்டு வீரச்சாவு அடைத்த ஆண்டு என்ன ?

1<தளபதி கேணல் கிட்டு பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன ?

2<கேணல் கிட்டு வீரச்சாவு அடைத்த ஆண்டு என்ன ?

தளபதி கேணல் பயணம் செய்த கப்பலின் பெயர் M. V அகத்

கேணல் கிட்டு வீரச்சாவடைந்த ஆண்டு 1993

வாழ்க வளமுடன்

கொக்கிளாய் இராணுவ முகாம் தகர்ப்புச் சம்பவத்தை விபரித்து வெளிவந்த நூலின் பெயர் என்ன?

அதற்கும் பல ஆண்டுகள் முன்னரே.. நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்று உள்ளது..! 1990 இல் கோட்டை முற்றுகையின் போது..இத்தாலிய சியாமா செட்டியை புலிகள் யாழ் கோட்டைக்கு அருகில் வைத்து பண்ணைக் கடலுக்குள் சுட்டு வீழ்த்தி இருந்தனர். அதன் பின்னர் ஆகாய கடல் வெளி தாக்குதலின் போது Y12 ரக சீன விமானத்தையும் சுட்டு வீழ்த்தி இருந்தனர்.

முதலாவது தாக்குதல் 1978 இல் சிறீலங்காவின் விமானப்படை தளமான இரத்மனாலையில் நின்ற விமானம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் என்பதுவே சரி என்று நினைக்கிறோம்.

தவறாக இருந்தால் கள உறவுகள் சுட்டிக்காட்டுங்கள்.

உங்கள் பங்களிப்புக்கு நன்றி புயல் மற்றும் நந்தன்.

உங்களின் தகவல் சரியானதுதான்...   இரத்மலானை அவ்ரோ விமானத்தின் மீதான குண்டுத்தாக்குதலை நடத்தியவர்  லெப் கேணல் ராதா அண்ணா..  முதலில் தாக்குதல் நடத்திய ராதா அண்ணாவின் பெயரில்   புலிகளின்  ராதா வான்காப்பு பிரிவு ஆரம்பிக்க பட்டது ...

அதோடு நீங்கள் சொன்ன தகவல்களின் யாழ் கோட்டை சமர் சியமாசெட்டிக்கு  பின்னர் பிறகு 1991 ம் ஆண்டு  வன்னி விக்கிரம நடவடிக்கைக்கு எதிராக வவுனியா பாவற்குளத்தில் வைத்து  சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் வான்காப்பு பிரிவால் ஒரு ஹெலி ( Bell  214) சுட்டு வீழ்த்தப்பட்டது ... 

கொக்கிளாய் இராணுவ முகாம் தகர்ப்புச் சம்பவத்தை விபரித்து வெளிவந்த நூலின் பெயர் என்ன?

ராதா புலிகளில் சேர்ந்ததே 83 கலவரத்தின் பின்னர் தான் .

பிளேனுக்கு கொண்டுவைத்தது குலனும் ராகவனும் .

மட்டகளப்பு சிறையுடைப்பு பலரால் சேர்ந்து நடாத்தப்பட்டது ,ஜெயில் அதிகாரிகளினதும் வெளியில் இருந்தவர்களினதும்  பங்கும் தான் அதிகம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.