Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திலுள்ள ஈழத்து இளைஞர்களின் ஆதங்கம்!!!

Featured Replies

youth_1647902h.jpg

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, தற்போது 112-ஆக உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 68 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள்.

இவர்களில் சிலர் சமீபக் காலமாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரை பயில்கின்றனர். இளங்கலை மற்றும் முதுகலை, தொழில்நுட்பம், பொறியியல் பட்டங்களைப்  பெற்றிருந்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

 

அகதிகள் என்கிற முத்திரையால் உரிய வேலைக் கிடைக்காமல், கிடைக்கின்ற வேலைக்குச் செல்லும் கூலிகளாக இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தல் அகதிகள் முகாமில் வசிக்கும் பொறியியல் பட்டதாரி தேவ ஸ்டாலின் வயது 26 கூறியதாவது: சிறு வயதில் இருந்து படிப்பு மீது ஆர்வம் அதிகம்.

10ம் வகுப்பில் 428 மதிப்பெண், பிளஸ் 2 வகுப்பில் 870 மதிப்பெண் பெற்று, செய்யாறில் உள்ளத் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயம் பெற்று, பின்னர்த் திருநெல்வேலியில் உள்ளத் தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்தாண்டு க‌ணினி அறிவியல் பிரிவில்  பட்டம் பெற்றேன். கல்லூரி நிர்வாக கட்டணச் சலுகை செலவை,  நடிகர் சத்தியராஜ் செலுத்தி உதவினார்.

 

பட்டம் பெற்று நல்ல வேலைக்காகப் பெரிய நிறுவனங்களில் விண்ணப்பித்த போது,இலங்கையைச் சேர்ந்த அகதி என்பதால், நேர்காணலுக்கு அழைப்பு வரவில்லை. இதனால், எந்த நாட்டுக்காரர் என்ற இடத்தை நிரப்பாமல் விண்ணப்பித்தேன். அதன்பிறகு, நேர்காணலுக்கு அழைப்பு வந்து அதிலும் தேறிய பின்னர், பிறந்த இடம் இலங்கை என்றதும் பிறகு பதில் அனுப்புகிறோம் எனக் கூறி அனுப்பிவிடுகின்றனர்.

 

எங்களைத் தீவிரவாதக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்ற நிலை இருப்பதால் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறோம் என்றும், ஆனால் பிற நாடுகளில் அப்படியில்லை. அகதிகள் என்பதால், இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கும் செல்ல முடியாது. தற்போது மின்சார பொருட்களைப் பழுது பார்க்கும் சிறிய நிறுவனத்தில் சொற்ப ஊதியத்திற்குப் பணியாற்றுகிறேன்.

 

அகதிகள் முகாம்களில் ஆண்டு பன்னிரண்டு தேர்வில் 1170 மதிப்பெண்ணும், 10ம் வகுப்பில் 480 மதிப்பெண்ணும் பெற்றவர்கள் உள்ளனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். என்றாவது ஒருநாள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டால் படிப்பு முக்கியமானதாக இருக்கும் என அவர் கூறினார். முகாம்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.

அதிகாரிகள் கூப்பிடுகின்றபோது வர வேண்டும். அதனால் பல நேரங்களில் வேலையை இழக்க நேரிடுகிறது. இலங்கை தமிழர்களுக்காகத் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அதில் ஈழப் பட்டதாரிகளுக்கும் நல்ல எதிர்காலத்தை அமைக்கும் குரல் ஒலிக்காதா என ஏங்குகின்றனர் இளைஞர்கள் என தெரிவித்துள்ளார்.

 

http://tamilworldtoday.com/home

Edited by Kashni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Apartheid of Srilanka Government:

PM of India has taken a political decision.  Whether PM participate or not Tamils in Srilanka (Eelam) are not going to get anything as long as the Apartheid of Srilanka Government  continues. Sri Lanka is following an apartheid towards its section of citizens through its Sinhala Only Act 1956. Due to this

1) 1,47,769 people were killed or missing in the war during 2009 as per UN Report.
2) Thirty (30) years development of SriLanka is completely halted. Around 2 Lakh people were killed during the 30 year struggle. The root is still existing as it is without any change. ie) Sinhala Only Act 1956.
3) Tamils living in Eelam (Eastern & Northern) area are treated as 2nd grade citizens.
4) Srilanka had completely devastated in economics and other wealth have been in complete disorder.
5) Independent country to the Tamils is a only hope now.
6) The International Community must create this independent country.
7) The countries participating the Commonwealth are uplifting the Apartheid of Srilanka.

The root cause of the problem should be rectified or a Free Nation "Tamil Eelam" should be created by bifurcating Today's Srilanka. Could you hear this feeble voice ????????????
 

இது தான் மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள வேறுபாடு. வேலை கொடுக்க தேவையில்லை. பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்துவரும் ஏன் இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்துவரும் ஈழ அகதிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியையாவது கொடுத்திருக்கலாம். என்ன செய்வது புவியியல் ரீதியில் இந்தியா என்ற கேவலமான நாட்டுக்கு பக்கதில்  பிறந்ததது நாம் செய்த பாவம்.(எமது தமிழ் நாட்டு உறவுகளை நான் குறிப்பிடவில்லை)

 

மேற்குலகில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இவர்களுக்கு ஏதாகினும் உதவி செய்ய முடியுமா என்று சி்ந்திப்பது நல்லது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர் உட்பட படித்த இலங்கையர்கள், தமக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி, தம்மை வெளிப்படுத்தி, புலம் பெயர் தமிழர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டால், படிப்புக்கு ஏற்ப வேலை பெற, வியாபாரம் செய்ய முடியும்.

 

கனடாவின் Magic Kitchin, லண்டனின், LYCA, LEBARA மற்றும், lankasri.com போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தமிழ் நாட்டில் பல அலுவலகங்களை வைத்து, பலரை வேலைக்கு வைத்து உள்ளன. 

 

அவர்களால் இவர்களுக்கு வேலை கொடுக்க முடியுமே!

 

மேலும், புலம் பெயர் தமிழர் நிறுவனங்கள் தமது வியாபாரத் தொடர்புகள் மூலமும், அங்குள்ள நிறுவன நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, இவர்களுக்கு வேலை கொடுக்க கோரலாம்.

 

உதாரணமாக, எனது நண்பர் ஒரு பெரிய (British) நிறுவனம் ஒன்றின் சார்பில் தமிழகத்துக்கு கொள்முதல் பேச்சுவார்த்தைக்கு செல்வார். அவர் போகும் போது தங்கி இருக்கும் ஹோட்டல் receptionist ஆக வேலை செய்த மிகவும் படித்த, ஆனால் பொருத்தம் இல்லா வேலை பார்த்த இளைஞரின் CV வாங்கி அங்கே தன்னை சந்திக்க வந்த நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்து வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.

 

மேலும், இங்குள்ள ஊடகங்களைத் தொடர்புகொண்டு, தமது திட்டங்களை சொல்லி, 'Dragon Den' ஸ்டைல் மூலம், தமது வியாபாரத் திட்டங்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் நிதியுதவியினைப் பெறமுடியும். (யாரும் பணத்தினை அள்ளிக் கொடுக்கப் போவதில்லை. வியாபார போக்கு, வளர்ச்சி, பார்த்து தான் கொடுப்பார்கள்).

 

முயன்றால் முடியாதது இல்லை.

 

என்னதான் சொன்னாலும், பெரும் சனத் தொகை கொண்ட இந்தியாவில், வேலை வாய்ப்புக்கு பெரும் போட்டி. ஆகவே அவர்களை குறை சொல்ல முடியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடொன்றில் தமிழர்களின் தொழில் திறனையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்த ஒரு முதலாளி, அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்திற்கும் மேலாகவே சலுகைகளும் கொடுத்துப் பாராட்டி வந்தவர், ஒரு சமயம் நீங்களெல்லாம் நாய்கள் என்று கூறினார். அதனால் எம்மவர்கள் திகைப்படைந்தாலும், நாய்கள் நன்றியுள்ளவை என்று கூறிச் சமாளித்தார்கள். அதற்கு முதலாளி அப்படியல்ல, நாய் தன் எசமானன் எத்துணை கயவனாக இருந்தாலும் காலை நக்கி வாலையாட்டும். ஆனால் தன் இனத்தைக் கண்டால் உறுமிக் கலைத்து கடிக்கப் பாயும் என்றார். தமிழ்நாட்டுத் தமிழனும் ஈழநாட்டுத் தமிழனும் ஒரே இனம். அதுவும் தொப்புள்கொடி உறவு. :D  :lol: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.