Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை தெரியாமல் பேசுகிறார் டேவிட் கெமரூன்! - சனல் 4க்கு முத்தையா முரளிதரன் பேட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
murali-191113-150.jpg

இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முத்தையா முரளிதரன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவில்லை. அதுமட்டுமல்ல இலங்கைக்கு கூட இதற்கு முன்னர் வரவில்லை. யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதமரியிடம் அழுது புலம்பியதால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

பிரிட்டிஷ் பிரதமர் தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம்.கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் தவறான விசாரணைகளை நடத்தி இல்லாத குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு எத்தனிக்கிறார். நான் அப்படியான கொள்கைகளை என்றுமே கடைப்பிடிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியானால் நீங்கள் உங்கள் கடந்த காலத்தை மறந்துவிட்டீர்களா என்று சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த அவர், எனக்கும் என்னுடைய கடந்த காலம் ஞாபகம் இருக்கிறது. நானும் ஒரு தமிழன். 1977ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது எனது குடும்பமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எங்களிடம் இருந்த அனைத்துமே அழிந்து போயின. அப்படியான துன்பங்களை அனுபவித்தாலும் நான் எனது கடந்த காலத்தை பற்றி நினைத்து துன்பப்படுவதே இல்லை.

கடந்தகாலத்தைப் பற்றி மறந்து கடந்தகால துன்பங்களை இழைத்தவர்களுக்கு மன்னிப்பளித்து நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதே எனது நோக்கமாகும். இது பற்றி இயேசுநாதரும் ஒரு தடவை கூறியிருக்கிறார் என்று குறிப்பிட்டார் முத்தையா முரளிதரன்.

http://www.seithy.com/breifNews.php?newsID=97153&category=TamilNews&language=tamil

இலங்கை அரசு ஒரு குற்றமும் செய்யவில்லை என்கிறார்...........
 
தனது வீட்டை எரித்தார்கள் என்கிறார்........
 
துன்பம் செய்தவர்களை மறக்க வேண்டும் என்கிறார்..............
 
இவர் என்ன சொல்கிறார் என்பது  யாருக்காவது புரிகிறதா?? 

சூதாட்ட கிரிகெட் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று கூறுவோருக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.

சொந்த இனத்தின் காலை வாருகிறார்.

5000 ஏக்கரில சிக்கிட்டா வோட வாழை போட இருந்த வியாபாரத்தையும் தட்டி பறித்தது ராஜபக்சே குடும்பம்.

ஆனால் சளைக்காமல் தன் இனத்தின் முதுகில் குத்துகிறார்.

தமிழகத்தில் ஒரு சின்ன போராட்டம் செய்தால் பொத்திவிடுவார்.

நீங்கள் ஏன் அண்ணா  விளையாட்டையும் அரசியலையும் ஒன்றாக பார்கிறீர்கள்?

இறந்து போனதும் ,காணாமல் போனதும் முரளிதரனின் பிள்ளைகளோ/சகோதரர்களோ இல்லை.ஆகவே அரசியல் லாபம் தேடி முரளி கதைக்கிறார்.முரளியில் இருந்த மதிப்பு சுக்கு நூறாய் போகிறது.ஒரு
விபச்சாரிக்கு சமமாகிறார் முரளி.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி சிறீலங்கா சிங்கள அணிக்காக.. கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது கூட.. அவர் மீது எப்போதுமே மதிப்பும் மரியாதையும் வந்ததில்லை. அவர் சிறீலங்கா அரசிற்கு வக்காளத்து வாங்குவது இது முதற்தடவையும் அல்ல..! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டைப்பந்துடன் தங்களை மட்டுப்படுத்தியிருக்கவேண்டும், அதை விட்டுவிட்டு அரசியலுக்குள் குதித்தால் எல்லா அசிங்கங்களையும் ஏற்ருக்கொள்ளவேண்டிவரும். மிஸ்ரர் முரளி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

David_Cameron_seithy-150.jpg

கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்துக்களில் பிழையில்லை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சிறந்த ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்துவது அவரது கடமையாகும். இலங்கையர் என்ற ரீதியில் அவரது கருத்துக்களில் பிழையில்லை. நாடு தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முரளிதரன் கருத்து வெளியிட்டார். முரளியின் சுழற்பந்தை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக பந்துகளை மட்டையால் அடிக்கக் கிட்டியது என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=97184&category=TamilNews&language=tamil

சூதாட்ட கிரிகெட் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று கூறுவோருக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.

சொந்த இனத்தின் காலை வாருகிறார்.

5000 ஏக்கரில சிக்கிட்டா வோட வாழை போட இருந்த வியாபாரத்தையும் தட்டி பறித்தது ராஜபக்சே குடும்பம்.

ஆனால் சளைக்காமல் தன் இனத்தின் முதுகில் குத்துகிறார்.

தமிழகத்தில் ஒரு சின்ன போராட்டம் செய்தால் பொத்திவிடுவார்.

நீங்கள் டோலுக்கு பழத்தோட்டம் ஆரம்பிக்க முத்தையா முரளிதரன் காட்டு நிலம் விற்ற கதையை சொல்கிறீகளாயின் அது வெறும். நாடகம்.

doleplantation.big.jpg

இந்த காணியை வாங்கி வித்தவர்தான் பிரளிதரனும் ஜயசூரியாவும்(அவ்ர் தான் என்று நினைக்கிறேன்). காணி வன விலங்கு பாது காப்பு எல்லைக்குள் வந்ததாக மட்டும்தான் தொண்டு நிறுவனங்கள் சத்தம் போட்டன. ஆனால் காட்டுக்காணி எந்த வைகையில் முரளிதரன் & கம்பனியின் கையில் வந்தது என்ற கேள்வியை பற்றி அவர்கள் ஆராயவில்லை.  இந்த கிறிகட் காரர் கம்பனி இன்னும் எந்தனை காட்டுக்காணிகளுக்கு சொந்தம் கொண்டாடினார்கள் என்றும் ஆராரயவில்லை. 

அது முழுவதும் கோத்தா டோலை மொட்டையாக்கிய நாடகம். அதற்கு இந்த முட்டாளின் பெயர் பாவிக்கப்பட்டது என்றுதான் நினைக்கிறேன். கோத்த மட்டும் தெரிந்தெடுத்த தொண்டுநிறுவனங்கள் தலையிட்டத்தால் ஆமி காட்டை அழித்தது வெளியே தெரியவரவில்லை.

நடந்தது என்ன என்றால் போர் முடிய அமெரிக்க கமபனிகளுக்கு முதலிட இலங்கை சந்தர்ப்பம் கொடுப்பதாக கூறி டோலை அங்கே இழுத்துச் சென்று பொருத்தியது. இதற்கு பாவிகப்பட்டவர்தான் பிரளிதரன். தூங்க போட்ட பிள்ளையை அரசாங்கமே தொண்டு நிறுவங்களுக்கு தகவல் கொடுத்து கிள்ளியும் விட்டது. முரளிதரன் & கம்பனி யாரிடம் வனவிலங்கு பாதுகாப்பு பிரதேச காணியை வாங்கியிருந்தாலும் அது அரசிடமிருந்தே உரிமை வர முடியும். 

சோமாவதி வனவில்ங்குக்கு பாதுகாப்பு பிரதேசத்திற்கு ஒரு அதிகார சபை இருக்கா? இருந்தால் அது ஏன் இந்த நாடகம் தொடங்கி நடந்து முடியும் வரை தன்னை அடையாளம் காட்டவில்லை என்பது புரியவில்லை. 

Access to the land has been also prohibited to Officials of any government institution, any other stakeholder or intermediary by the Army violating the Fundamental Human Rights and obstructing enforcement of the Civil Law of the country.

http://www.parlsrilanka.org/issues/agriculture/item/160-kandakaduwa-banana-plantation-project

இதில் ஆள்கூருகளை மட்டும் வைத்து , கூகுள் மூலம், அந்தக் காணி சோமாவதி வனவிலங்கு சரணாலயத்தின் கீழ் வருவதை நிரூபித்தது ஒரு .கொம் தனியார் கம்பனி. இதற்கு ஆமி யாரையும் போக விடாரத பிரதேசத்திற்குள் இருந்த ஆள்கூற்றை யார் கொடுத்தார்கள் என்பதும் தெரியாது.  அந்த காட்டில் ஆள் கூறை ஆமி மட்டும்தான் பாவிப்பத்தாக இருக்க முடியும்.  தொண்டு நிறுவனத்தார்கள் சட்டப்படி ஒழித்து விளையாடக்கூடாது. இங்கே அதுவும் நடந்தது.

But a conservationist working in Sri Lanka, who also wished to remain anonymous, recently told mongabay.com: "In the short term, as banana cultivation is underway and elephants are still in the area, elephants will likely visit the plantations in search of food and risk being killed. If they are eventually excluded from the area, they will be driven to areas that are already inhabited by people. This will result in increased human-elephant conflict and will be detrimental to both human and elephant populations. Ultimately, the number of elephants left will depend on the amount of forest left. If there is no forest left, there will be no elephants."

Read more at http://news.mongabay.com/2011/1004-hance_dole_satellite.html#1R9GkZehiWUMoO90.99

இவரைப்பற்றி அதிகம் பேசி இவரை மையப் பொருளாக்க வேண்டாம்.

ஒரு இனத்து மக்களின் அரசியலை ஒரு கடந்தகால் கிரிக்கட் ஆடுநர் கையாள்வது பொருத்தமாகாது.

இவர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினது ஏதோ இந்திய கிரிக்கட்டை அலற்க்கவல்ல 

தனது வங்கி கணக்கை நிரப்பவே. 

இலங்கையின் இனப்பிரச்சனை பற்றி இவருக்கு இருக்கும் அறிவுதான் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை முரளீதரனுக்கு உண்டு – டேவிட் கமரூன்

நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்கும் உரிமை நட்சத்திர கிரிக்கட் வீரர் முத்தையா முரளீதரனுக்கு உண்டு என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் முரளீதரன் அவ்வாறு நாட்டின் நன்மதிப்பை பாதுகாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை தொடர்பில் நடைபெற்ற விவாத்தின் போது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது பிரதமர் கமரூன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்ன் பொருளாதாரம், சமாதானம் போன்றவற்றில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முரளீதரன் தெரிவித்திருந்தார்.

முரளீதரனின் அறக்கட்டளை முக்கியமான தொண்டாற்றி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கை அமர்வுகளில் பங்கேற்று கேள்வி எழுப்பியது சரியானது என்றே முரளீதரன் கருதினார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர் என்ற ரீதியில் நாட்டின் நன்மதிப்பை பாதுகாத்துக் கொள்ள முரளீதரன் முயற்சித்தார் எனவும், அது அவரது உரிமை எனவும் பிரதமர் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முத்தையா முரளிதரனுக்கு அர்ஜுணா ரணதுங்கவுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ........ தமிழ் சிங்களம் என்பதினைத்தவிர .... 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முத்தையா முரளிதரனுக்கு அர்ஜுணா ரணதுங்கவுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ........ தமிழ் சிங்களம் என்பதினைத்தவிர .... 

இருக்கே..........

அவர் தன் இனத்தைக்காப்பாற்ற  எதுவும் செய்யத்தயாராக  இருக்கிறார்.

இவர்

தன்னைக்காப்பாற்ற

தன் இனத்தையே விக்கிறார்.  கேவலப்படுத்துகின்றார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.