Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7700.gif
-சுமித்தி தங்கராசா

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். 

குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

ci4.jpg
நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் ரஜீவ் தற்கொலை செய்து
தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் இன்று மாலை புங்குடுதீவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது இவரது சடலம் புங்குடுதீவு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது .
 
2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நெடுந்தீவு பிரதேசசபைக்கு ஈ.பி.டி. பி கட்சி சார்பில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவிசாளராக செயற்பட்டு வந்தவர் .
 
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவருமான தானியல் றெக்சியன் ( தோழர் ரஜீவ் ) நெருக்கடி மிகுந்த காலப்பகுதியில் தீவகத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தீவக மக்களின் நல்வாழ்வுக்காகவும் கட்சியின் அரசியல் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
 
யாழ் நிருபர் .
 

ஏன்?   :huh:

 

சாந்தியடையவும் பிராத்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை; தலையிலிருந்து சன்னம் மீட்பு

 

 

k2749.jpg
நெடுந்தீவு பிரதேச சபை தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல்
றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது .
 
இவரின் சடலத்தை பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது .
 
இந்த கொலைக்கு ஒன்பது மில்லி மீற்றர் ரக கைத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் சன்னம் அவரின் மூளையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது .
 
47 வயதான நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது .
 
எனினும் இவர் கழுத்து பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசேதனையின் மூலம் தெரியவந்துள்ளது . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
 
யாழ் நிருபர் .
 
  • கருத்துக்கள உறவுகள்

இவரது கொலையின் பின்னாலிருந்திருப்பது ஆக்கிரமிப்பு கடற்படையே என்று அவ்வூர்வாசிகள் கூறியிருக்கின்றனர். இவரும், ஊர் மக்களும் சேர்ந்து 1985 இல் குமுதினிப் படகுப் படுகொலையின் நினைவாக ஒரு தூபியைக் கட்ட எத்தனித்திருக்கிறார்கள். இதற்கு ஆரம்பத்திலிருந்தே கடற்படை எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. தூபி கட்டப்பட வேண்டிய இடத்தில் கடற்படை ஒரு உல்லாச விடுதியை நிறுவ முயன்றதில் இவருக்கும் கடற்படைக்கும் தகராறு முற்றவே இவரைப் போட்டுத்தள்ளியிருக்கிறது. ஈ.பீ.டீ.பீ யின் உள்வீட்டு சதிகளும், கடற்படையின் பின்புலமும் சேர்ந்தே இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

 

செய்தி மூலம் தமிழ்நெட்.

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியருக்கு இது ஒன்றும் புதுசில்லையே. அற்புதன் போன்றவர்களின் கதை தான் இதுவும். இதில வெள்ளை வேட்டி.. சனநாயகம்.. உச்சரிப்பு வேற.

 

அதுசரி.. ஆயுதக்குழுக்களிடம் ஆயுதங்களைக் களைஞ்சாச்சு என்றாரே கோத்தா. இது எங்கிட்டிருந்து வந்த ஆயுதமா இருக்கும்..????! கடலில மிதந்து வந்திருக்குமோ..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு முன்பு நடந்திருந்தால் சிங்கள அரசு புலிகள் தான் இவரைக் கொன்றார்கள் என்று உள்னாட்டுக்கும் வெளினாட்டுக்கும் சொல்லியிருக்கும்.

இசை பிரியாவின் மரணத்தை மட்டும் விசாரிக்கவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் றெக்சியனை சுட்டுக்கொன்றது யார்? – ஒரு கொலை எழுப்பும் பல கேள்விகள்

 

 

rexian.jpg

நெடுந்தீவுப் பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியன் தலையில் பின்புறமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் எவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார், யார் அவரைச் சுட்டுக் கொன்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

புங்குடுதீவில் உள்ள தனது வீட்டில், றெக்சியன் நேற்றுமுன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

முன்னதாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே கூறப்பட்ட போதிலும், யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவரது கொலைக்கு 9 மி.மீ கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மூளையில் இருந்து 9.மி.மீ ரவை மீட்கப்பட்டுள்ளதாக, சட்டமருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார். 

இவர் தற்கொலை செய்து கொண்டதாக ஈபிடிபி வட்டாரங்கள் கூறியுள்ள போதிலும், இவருக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

சடலம் கிடந்த இடத்தில், கைத்துப்பாக்கி எதுவும் மீட்கப்படவில்லை. 

அத்துடன், ஒருவர் தலையின் பின்புறமாக சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர். 

ஈபிடிபியினர் கூறுவது போல, இது தற்கொலையே என்று வைத்துக் கொண்டாலும் கூட, தம்மிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று ஈபிடிபி கூறிவரும் நிலையில், றெக்சியனிடம் தற்கொலை செய்வதற்கான துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஈபிடிபியின் வெற்றிக்காக றெக்சியன் கடுமையாக உழைத்திருந்தார். 

ஆயினும், ஈபிடிபியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த ஊர்காவற்றுறைத் தொகுதியிலும் அந்தக் கட்சி படுதோல்வி கண்டிருந்தது. 

இதன் பின்னர், நெடுந்தீவு பிரதேசசபைக் கூட்டங்களில் றெக்சியன் கடந்த இரண்டு மாதங்களாக சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களை மூடி மறைக்க அரசதரப்பு முனைவதாகவும், தெரியவந்துள்ளது. 

நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிடிபி தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட றெக்சியனின் உடல் நேற்றுமாலை புங்குடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இன்று மாலை இறுதி நிகழ்வுகள் நடைபெறவுள்ளது குறிப்படத்தக்கது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131128109526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.