Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய மாவீரர் நாள் 2013 நிகழ்வுகளின் தொகுப்பு

Featured Replies

செய்திகளையும் படங்களையும் இணைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  • Replies 54
  • Views 6.6k
  • Created
  • Last Reply

நேற்று ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு சென்றிருந்தேன். இரண்டாயிரத்திற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டார்கள்.

பிரான்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் என்று கேள்விப்பட்டேன்.

டோட்முண்டில் நிகழ்வு நடந்த அரங்கில் ஒரு புறம் இருந்த ஆயிரம் பேர் அமரக் கூடிய இருக்கைகளில் 400 பேர் வரையிலும், மறு புறம் இருந்த இருக்கைகளிலும் அதே போன்று 400 பேர் வரையிலும் அமர்ந்திருந்தார்கள். ஆக மொத்தம் 800.

இரு புறத்திலும் இருக்கைகளுக்கு பின்னால் அந்தப் பக்கம் 200, இந்தப் பக்கம் 200 என்று மொத்தமாக 400 பேர் வரையில் நின்றிருந்தார்கள்.

மாவீரர் குடும்பத்திற்கான இருக்கைகள், விளக்கு கொளுத்தும் பகுதி என்று ஒரு 300 பேர் வரையில் நின்றிருந்தார்கள்.

வெளியில் இருந்த கொத்துரொட்டிக்கான கூடாரத்தில் 200 பேர் வரையில் காணப்பட்டார்கள்.

இவைகள் ஆகக் கூடிய எண்ணிக்கைகளே! ஆக மொத்தம் 1700 பேர் வருகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் என்று விடுபட்டவர்களை சேர்த்து ஒரு 2000 என்று கணக்குப் போடலாம்.

நிகழ்ச்சி முடியும் வரை இந்த எண்ணிக்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் பதிவு போன்ற இணையத்தின் செய்தியாளர்கள் எப்போதும் 'தண்ணியிலேயே' நிற்பதால், இம் முறையும் அவர்களுக்கு எல்லாமே இரண்டு இரண்டாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புண்டு.

அதை விடுத்து, நிதானத்தில் நிற்கக்கூடிய செயற்பாட்டாளர்கள் ஜேர்மனியில் எங்கே தவறு நடந்தது என்று ஆராய்வது நல்லது!

Edited by சபேசன்

சபேசன் அண்ணா,

 

பிரான்சில் பலர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு உடனேயே போய் விட்டார்கள். இன்னும் சிலர் சில நிகழ்வுகளை பார்த்து விட்டு சென்றார்கள். மக்கள் செல்ல செல்ல வேறு மக்கள் வந்தவண்ணமும் இருந்தார்கள். பலர் அங்கு தொடர்ச்சியாக அமர்ந்திருந்தார்கள். எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கு நின்றவர்கள் எண்ணிக்கையை மட்டும் கணக்கு பார்ப்பது தவறு.

 

மற்றபடி ஜெர்மனில் எவ்வளவு பேர் வந்தார்கள் என்பது குறித்து எனக்கு தெரியாது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இருந்த கொத்துரொட்டிக்கான கூடாரத்தில் 200 பேர் வரையில் காணப்பட்டார்கள்.

இவைகள் ஆகக் கூடிய எண்ணிக்கைகளே! ஆக மொத்தம் 1700 பேர் வருகிறார்கள். அங்கொன்றும், இங்கொன்றும் என்று விடுபட்டவர்களை சேர்த்து ஒரு 2000 என்று கணக்குப் போடலாம்.

 

 

 

யேர்மனி  போன்ற  நாட்டில்

(பல நகரங்களில் மக்கள் வாழ்வதால்)

வேலை

மற்றும் பாடசாலை நாளாகிய  நேற்று

2 ஆயிரம் மக்கள் என்பது பெரிய தொகை தானே.........

 

என்னடா

கொத்து  ரொட்டிக்கதை கவிதைகளை  இந்தமுறை  காணவில்லை என்று பார்த்தேன்

சபேசன் ஆரம்பித்து வைத்துள்ளார்

அவருக்கு சொறியாமல் இருக்கமுடியாது என்பது யாழறிந்தது.....

கிழமை நாட்களில் நடந்தும், பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்களை கண்ட மாவீரர் நிகழ்வுகள் இங்கே நடந்திருக்கின்றன. இந்த முறை எட்டாயிரம் பேர் வரையில் எதிர்பார்க்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால் வந்தவர்கள் மிகக் குறைவு.

ஆட்கள் பெரியளவில் வந்து போய்க் கொண்டிருந்தது போன்று தெரியவில்லை. பேருந்தில் அழைத்து வரப்பட்டவர்கள், அதிகம் என்பதால், நினைத்துவுடன் போய் விட முடியாது.

கொத்துரொட்டிக் கதையை நான் தவறான பார்வையில் எழுதவில்லை.

லண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் பற்றி மேலும் சில படங்கள்.

 

1471362_691027830916637_1208009025_n.jpg

 

1467272_691028894249864_818424737_n.jpg

 

1476136_691028864249867_1909107563_n.jpg

 

1451964_691028407583246_1812980561_n.jpg

 

1460301_691027930916627_1981392100_n.jpg

 

603919_691028337583253_1783730624_n.jpg

 

1483205_691028447583242_600192336_n.jpg

 

1469958_691028840916536_134558605_n.jpg

 

1461115_691028580916562_518902881_n.jpg

 

996958_691028084249945_213095186_n.jpg

 

1452420_691028674249886_75309017_n.jpg

 

374531_691028767583210_755218113_n.jpg

 

1463592_691028220916598_1709720584_n.jpg

 

564091_691028607583226_525225102_n.jpg

 

1469767_691028794249874_1511597073_n.jpg

 

1467202_691028647583222_1935793920_n.jpg

 

1454904_691028310916589_1929470007_n.jpg

 

1474466_691028167583270_536311364_n.jpg

 

 

1471161_691028120916608_1563576130_n.jpg

 

1471812_691028517583235_1005525000_n.jpg

 

tyo

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு மிகவும் நன்றி. படங்கள் மிகவும் தரமாக உள்ளது.

பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நாள் பற்றிய மேலும் பல படங்கள்.

 

1461129_348980288580084_2093748585_n.jpg

 

1466127_348980145246765_1980885707_n.jpg

 

1465179_348981208579992_1014150003_n.jpg

 

1426724_348979758580137_1312069175_n.jpg

 

1476199_348979795246800_2009034024_n.jpg

 

1471859_348980755246704_1286574806_n.jpg

 

1441587_348980765246703_723333684_n.jpg

 

999804_348979635246816_1776591111_n.jpg

 

1454548_348982008579912_881002026_n.jpg

 

1466308_348981931913253_1742662742_n.jpg

 

994984_348982208579892_2035870278_n.jpg

 

1459144_348982398579873_515596519_n.jpg

 

1470227_348980185246761_1602633698_n.jpg

 

1374772_348980311913415_1533702963_n.jpg

 

1450946_348980378580075_450787047_n.jpg

 

1476042_348982561913190_1514724506_n.jpg

 

1458614_348982435246536_293448040_n.jpg

 

1453323_348982605246519_2058545016_n.jpg

 

tcc

(facebook)

Edited by துளசி

பிரான்சில் தேசியமாவீரர்நாள் 2013

நவ 28, 2013

தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு பிரான்சு வாழ் மக்களால் நவம்பர் 27ம் நாள் லெப். கேணல் நாதன். கப்டன். கஐன், கேணல் பரிதி அவர்கள் துயில்கின்ற கல்லறையில் சரியாக நண்பகல் : 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதே சமநேரத்தில் லூ புசே என்னும் இடத்தில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர். திரு. யோசேப் அவர்கள் ஏற்றி 12.40 தேசியக்கொடியேற்றல் இடம் பெற்றது தேசியக்கொடியினை பிரான்சின: கிளைப்பொறுப்பாளர் திரு. சி. பார்த்திபன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை வாசிக்கப்பட்டது.

சரியாக 13.35 மணிக்கு மணியோசை ஒலிக்க மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம் பெற்றன. அதனைத்தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது. ஈகைச்சுடரின் முதற்சுடரினை மாவீரர் அன்பு அவர்களின் சகோதர் ஏற்றிவைக்க சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவுகள் ,ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம் பெற்றது தாயகவிடுதலைப்போரில் முதற்களப்பலியான மாவீரர் சங்கர் அவர்களின் கல்லறைக்கு பிரிகேடியர். சு.ப. தமிழ்ச் செல்வனின் சிறிய தாயாரும் மாவீரின் தாயார் மலர்மாலை அணிவித்தார். மாவீரர் பெற்றோர், சகோதரர்களுக்கு என விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமரவைக்கப்பட்டனர்.

மாவீரர் வணக்க நடனம் அதனைத்தொடர்ந்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கலைத்திறன் போட்டிகளில் ஒன்றான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவர் உரைகளும், எழுச்சிநடனமும் நடைபெற்றன. தொடர்ந்து பிரான்சில் மக்களின் குறைநிறைகளை ஆளும் அரசுவரை கொண்டு செல்லும் அதிகாரமிக்க மாநகரசபையின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழர்களின் முன்னெடுப்பில் முக்கியமான செவரோன் மாநகர முதல்வர், லாக்கூர்னோவ் முதல்வர் மற்றும் கிளிச்சி முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் கொம்னியுஸ் கட்சி தலைவியுமாகிய தமிழருக்காக தொடர்ந்து உறுதியாக குரல் கொடுத்து வருபவர்களின் முக்கியமாக இருக்கும் திருமதி. மரியா Nஐhர்ஐ; புஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றியிருந்தார். அனைவருடைய உரையும் தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்ச்சி மேலிட்டவகையில் தெரிவித்திருந்தனர்.

மண்டபம் மக்களால் நிறைந்தும் மாவீரர்களின் கல்லறைகளும், காட்சிகளும் நிகழ்வுகளும் எல்லா மக்களின் மனங்களும் தாயகத்து மாவீரர்களின் நினைவுக்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது ஓர் உணர்ச்சிமயமான சூழலையும் நிலையையுமே ஏற்படுத்தியிருந்தது. தமிழீழ மக்கள் மட்டுமல்ல பிரென்;;சு மக்களும், குர்திஸ் போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கூட கண்கள் குழமாகி பேச்சற்ற நிலையில் இருந்ததை காணக்கூடி யாதாக இருந்தது. ஆண்டு தோறும் எமது குழந்தைகளின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழர் கலைபண்பாட்டுகழகத்தினால் பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, சித்திரம், தனிநடிப்பு, போன்ற போட்டிகளிலில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மாவீரர் பெற்றோர், சகோதரர்கள் முதலாவதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கத்திலான புலிச்சின்னம் வழங்கப்பட்டு வருகின்றது. அதனை மாவீரர் குடும்பத்தினரே வழங்கி மதிப்பளிக்கின்றனர். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினதும், தொடர்ந்து விடுதலையின் வலிமைக்கு நடனரீதியாக வலுச்சேர்த்து வரும் நடனமாணவிகளதும், ஆசிரியர்களினது வரலாறு என்கின்ற நாடகமும், நடனமும் இடம் பெற்றது. வெண்திரையில் காட்சிகளும் மேடையில் நடனமுமாக நடைபெற்றது. மூத்த பெரியவர் தனது பேத்திக்கு தமிழரின் வரலாற்றை கூறிவருதாகவே இது அமைக்கப்பட்டது.

ஆரம்பமாக தமிழரின் புலிக்கொடிக்கு உரித்தான சோழமகராசனின் காலம் அதற்கு பிற்பாடு அந்நியர் ஆட்சியில் அடிமைப்பட்டுக்கிடந்த தமிழினம், சிங்களத்தின் கபடத்தனமான ஆட்சி அதிகாரம் தமிழர்களின் சாத்வீகப்போராட்டம், அதன் பிற்பாடு தமிழினத்தின் வரலாறு 1000 வருடங்களுக்கு பின்னர் தந்த தன்மானத்த தமிழன், சூரியத்தேவன் தமிழீழ தேசியத் தலைவரின் பிறப்பு ஆழக்கடலில் சோழமகராசன் பாடல் நடனமாக வழங்க தொடர்ச்சியாக அரவணைக்க வேண்டிய இந்திய தேசம் அமைதிபடையாக வந்து அது சிங்களத்தின் சூழ்ச்சியால் ஆக்கிரமிப்புப் படையாக மாறியதும் மாறாத வடுக்களும் இந்திய இராணுவ புண்ணியவான்களால் பாடல் நடனமூலமும், தூங்கிக்கிடந்து துவண்டது போதும் தமிழா, சிறீலங்கா அதிபர் மகிந்தா நடைபெற்று முடிந்த காமன்வெல்த் மாநாட்டில் தமிழர்கள் பிரச்சனை முடிந்து சந்தோசமாக வாழ்வதாகவும் இங்கு பிரச்சனையில்லை வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தான் பிரச்சனை என்று கூறியதை நடிப்பாலும் புலம் பெயர்ந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இளைஞர் யுவதிகளும் சொல்ல எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்ற பாடலுக்கும் மாணவிகள் எழுச்சி நடனம் வழங்கினர். முப்பரிமாணமாக நடைபெற்ற இந்தக் கோர்வையில் நமது நாளைய சந்தி வரலாற்றை சரியாக ஆதாரத்துடன் கண்களாலும், காதாலும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் இம்முயற்ச்சியும், மாணவர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பும் ஒரு நம்பிக்கையும், பதிவு செய்திருந்ததை நிகழ்வு முடிவுற்றதும் மக்களின் கருத்தாக அமைந்திருந்தது.

தமிழீழ தேசியக்கொடியிறக்கலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தாரக மந்திரத்துடன் மாவீரர் நாள் நிகழ்வு சரியாக 7.50 மணிக்கு நிறைவுகண்டது. கடுமையான குளிருக்கு மத்தியிலும் மண்டபத்திற்கு வெளியிலும், உள்ளேயும் மக்கள் மாவீரர் திருவுருவப்படத்திற்கு தமது வீரவணக்கத்தைச் செலுத்துவதற்கு பிற்பகல் 6.00 மணிவரை நின்றிருந்தனர். பாரிசின் முக்கிய புகையிரத நிலையம் நண்பகல் 1.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தமிழ் மக்களாலேயே நிரம்பி வழிந்ததாக செய்திகள் கிடைத்தன. பிரான்சின் காவல் துறை மிகுந்த பாதுகாப்பை பல வழிகளில் உதவிகளை வழங்கியிருந்தனர். அவர்களின் கணிப்பின் பிரகாரம் 20.000 ( இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டதாக கூறியிருந்தனர். ) ஏறக்குறைய 22.000 ( இருபத்தி இரண்டாயிரம் மக்கள் கலந்து கொண்டனர் ).

 

tcc

(facebook)

மாவீரர் நாள் அறிக்கை 2013 -தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழீழம்.

27.11.2013

மாவீரர் நாள் அறிக்கை 2013

அன்பான தமிழீழ மக்களே !

இன்று மாவீரர் நாள்.

வாழையடி வாழையாக எமது முன்னோர்கள் வாழ்ந்து வந்த எமது தாயகமண்ணைக்காத்திடவும் எமது எதிர்காலச் சந்ததியினர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈகம் செய்த புனிதர்களை வணங்கும் நாள்.

பிறப்பு ஒன்று இருக்குமானால் இறப்பு என்பது நிச்சயமானது. இது இயற்கையின் நியதி. ஆனால் எமது மாவீரர்களின் மரணம் இயற்கையின்பாற் பட்டதல்ல. இது ஒரு இலட்சியத்திற்கானது. அர்த்தமுள்ளது. போற்றுதற்குரியது.

எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்கள். உலகின் எப்பாகத்திலும் நிகழ்ந்திராத ஆச்சரியப்படத்தக்க வீரம்செறிந்த செயற்பாடுகளை அவர்கள் புரிந்தார்கள். இருப்பினும் அவர்கள் தமக்கென எதையும் வேண்டி நிற்கவில்லை. ஏன்? தமக்கென ஒரு புதைகுழியைக் கூடத்தேடாதவர்களும்இ தம்முகம் காட்டாது மறைந்து போனவர்களும் உண்டு.

இம்மாவீரர்களோடு விடுதலைப்போரில் ஒன்றாகப்பயணித்து பெரும் இன்னல்களைச்சுமந்து வாழ்ந்து மடிந்துபோன பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் உண்டு. இவர்கள் விடுதலைப் போருக்குப் பக்கபலமாகத் தோளோடுதோள் நின்று உதவியவர்கள். விடுதலை விருட்சத்திற்கு தம் செங்குருதியை நீராக வார்த்தவர்கள். மாவீரர்களோடு இவர்களும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர்கß இத்தகையோரைப் ©சிக்கும் இந்நாளைத் தனியாக ஒரு வணக்கத்திற்குரிய நாளாக மட்டும் வரையறை செய்து கொள்வது தவறானதாகும். மாறாக இம்மாவீரர்களின் கொள்கைகளைப்போற்றவும் பின்பற்றவும் உறுதியெடுத்துக் கொள்ளும் நாளாகவும் கொள்ளுதல் வேண்டும். இதுவே இம்மாவீரர்களுக்கும் மடிந்து போன மக்களுக்கும் நாம் செய்யும் கடமையாக இருக்க முடியும்.

2009 மேயில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் இராணுவ ரீதியான பின்னடைவைச்சந்தித்ததைத் தொடர்ந்து தமிழ்மக்களின் தேசிய வாழ்வை அழித்துவிடுதல், தமிழர் தாயகத்தைச் சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டு வருதல்இ என்பன சிங்கள தேசத்தால் முனைப்புப்படுத்தப்பட்டது. இதில் தமிழரின் தேசிய வாழ்வை அழித்தல் என்பது ஒருங்கிணைந்துள்ள தமிழர் தாயகத்தைச்சிதைத்தல்இ தமிழர் தாயத்தில் தமிழரைச் சிறுபான்மையினராக்குதல்இ தரையிலும் கடலிலும் தமிழர் பொருளாதார வாழ்வாதாரத்தை சுரண்டுதல்இ மற்றும் இல்லாது ஒழித்தல் ஆகிய பல்வேறு வழிகளில் நிகழ்ந்து வருகின்றது.

சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் கொண்டுவருதல் என்பது பெருமளவு ஆயுதப்படையினரை நிலைகொள்ள வைத்தல், புதிய இராணுவக் கடற்படைமுகாம்களை நிறுவுதல் விரிவாக்குதல். ஆயுதப்படையினருக்கான குடியிருப்புக்களை நிறுவுதல் என்பனவற்றோடு பொருளாதார அபிவிருத்தி என்ற ரீதியில் உருவாக்கப்படும் பெரும்தெருக்கள் வீதிகள் என்பனவற்றின் மூலம் ஆயுதப்படையினருக்கான விநியோகங்களையும் தொடர்புகளையும் சீர்படுத்துதல் என்பன மூலம் திடப்படுத்தப்பட்டுவருகின்றது.

அடுத்து புதிய பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலமும் தமிழர் தாயகத்தில்

புனிதப்பிரதேசங்கள் என்ற ரீதியில் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் மூலம் தமிழ் மக்களின் சமய பண்பாட்டு பாரம்பரியங்களை சிதைவுறச் செய்யவும் மழுங்கடிக்கச் செய்யவும் இதில் அரசியல்வாதிகள் இராணுவ தரப்பினர் என்பதற்கு அப்பால் பௌத்த பிக்குகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவற்றோடு தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை சிதைக்கும் வகையில் சமூகச்சீர்கேடுகளை உண்டாக்கத்தக்க வழிவகைகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டப்படுகின்றது. குறிப்பாக தமிழ் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பாவனைகளைத்தூண்டுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தல் பாலியல் ரீதியான ஒழுக்கக்கேடுகளை தமிழ்ச்சமூகத்தை அதன் கலாச்சார விழுமியங்களில் இருந்து பிறழச்செய்;தல் ஆகிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் ஒரு நெருக்கடியானதும் பாதுகாப்பற்றதுமான சூழ்நிலையை எமது மக்களும் தேசமும் எதிர்கொண்டு நிற்ப்பதைப்பார்கின்றோம். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது-இனிச்செய்வதற்கு எதுவுமில்லை என்பதுதான் இல்லை. ஏனெனில் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் ஏற்கனவே பல ஏற்ற இறக்கங்களையும் துன்ப துயரங்களையும் சந்தித்தவர்கள்.இருப்பினும் அவர்கள் என்றுமே தமது சுதந்திரவாழ்விற்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதில்லை. தமிழ் மக்களின் சாத்வீகப்போராட்டகாலத்திலும் சரி அதன் பின்னரான ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி தற்போதைய அரசியல் சூழ்;நிலையிலும் சரி தமது உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்து வந்துள்ளனர். இதனை இக்காலப்பகுதிகளில் இடம்பெற்ற அனைத்துத்தேர்தல்களிலும் நிருபணம் செய்துள்ளனர். பெரும் மோசடிகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றையும் மீறியே அதனைச் செய்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இறுதியாக நடந்த வட மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்துள்ள தீர்ப்பானது கொலைகளைக்கண்டோ அச்சுறுத்தல்களைக் கண்டோ தாம் அஞ்சப்போவதில்லை என்பதை மட்டுமல்ல தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்குப் பிரதியீடாக எவையும் இல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்மக்கள் சலுகைக்காக என்றும் வாக்களித்தவர்கள் அல்ல அத்தகையதொரு வரலாறு என்றும் இல்லை. அவர்கள் எப்பொழுதும் கொள்கைக்காகவும், இலட்சியத்துக்காகவுமே வாக்களித்துள்ளனர். இதனை ஒடுக்குமுறையாளர்கள் மட்டுமல்ல-வாக்குறுதிகளை வழங்கித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.

வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்பார்ப்பையும் மீறியதாக மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இதனைக் கூட்டமைப்பினரே வெளிப்படுத்தியும் இருந்தனர். இதற்குக்காரணம் இவர்கள் பிரகடனம் செய்த கொள்கைகளில் கொண்டுள்ள பற்றுறுதி என்பதை விட மக்கள் தெளிவும் உறுதியும் கொண்டுள்ளமையாகும்;. ஆகையினால் தேர்தலின் முடிவைக் கொண்டாவது தமிழ்மக்களின் உணர்வைப்புரிந்து அதற்கேற்ப செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

தமிழ் மக்களுக்குச் சிங்கள ஆட்சியாளர்களுடன், நீண்டதொரு அனுபவம் உண்டு. இதனை அரசியற் தலைவர்கள் சிலவேளை மறந்து போய்விடினும் மக்கள் மறந்து விடுவதில்லை. இதன் காரணமாகவே அபிவிருத்தி பற்றியும் சலுகைகள் பற்றியும் சிங்கள ஆட்சியாளர்களும் சரி ஒட்டுக்குழுக்களும் சரி பேசும்போதும் மக்கள் கேட்பதில்லை. கடந்த காலத்தில் சிங்கள அரசுடன் இணக்க அரசியல் கடைப்பிடிக்க முயன்று பலமுறை ஏமாற்றப்பட்டமையும் மறந்து போய்விடவில்லை. இதனால் தான் விடுதலைப்போரில் பெரும் இழப்பு ஏற்பட்டபோதும் விடுதலைப்போராட்டம் எந்த இலட்சியத்திற்காக நடத்தப்பட்டதோ அதே இலட்சியத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் சிறிலங்கா ஆட்சியாளர்களும் சரி தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றவர்களும் சரி தமிழ் மக்களின் உணர்வுகளை மீண்டும் ஒரு தடவை பரிசோதித்துப்பார்க்க முற்படக்கூடாது. அத்தகையதொரு பரிசோதனையானது கடந்த காலத்தில் சாத்வீகப்போராட்டத்தில் இருந்து எவ்வாறு மக்களை ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளியதோ அதே போல் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்குச் இட்டுச்செல்லும் என எண்ணுவது தவறாகாது.

ஆனால், சிங்கள தேசமோ அன்று போல இன்றும் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிப்பதாக இல்லை. தமிழ் மக்களை இரண்டாம் தரப்பினராகவே அது நடத்துகின்றது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர்கள் சிங்களவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாகவுள்ளது. பெரும்பான்மை இனத்தினராலோ அன்றி சிறிலங்கா ஆயுதப்படையினராலோ தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் படுகொலைகள் பாலியல்;வன்கொடுமைகள் எதற்கும் பதில் அளிக்க வேண்டியதான அவசியம் தமக்கில்லை என்ற நிலைப்பாட்டையே அது கொண்டுள்ளது. சிங்கள தேசத்தின் இத்தகைய நிலைப்பாட்டினால் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எத்தகைய வன்முறைக்கும் இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை. விசாரணைக்கென உருவாக்கப்பட்ட குழுக்களும் ஆணையாளர் குழுக்களும் கண்துடைப்பிற்கானவையாகவே இருந்தன. சர்வதேச நாடுகளும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்குக்காரணம் இலங்கைத்தீவின் கேந்திரமுக்கியத்துவமே ஆகும்.

இத்தீவின் அமைவிடமானது இந்து சமுத்திரப்பிராந்திய புவிசார் அரசியலில் முக்கிய பங்காற்றத்தக்கதாகும். இத்தகைய தீவின் ஆட்சி அதிகாரமானது சிங்களவர்கள் கைகளில் இருந்ததினால் சிங்கள ஆட்சியாளர்களுடன் சர்வதேச நாடுகள் குறிப்பாக ஆதிக்க அபிலாசை கொண்ட நாடுகள் அனுசரித்த போக்கையே கடைப்பிடிக்க விரும்பின. இதன் காரணமாகவே சிங்கள ஆட்சியாளரின் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை அவை கண்டு கொள்ளவில்லை. மாறாகச் சிறிலங்காவின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவந்தன.

ஆயினும், இறுதியாக நடந்த யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் சிறிலங்கா ஆயுதப்படையினர் புரிந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரானவையென சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன இக்கொடுரச் செயல்கள் குறித்து உறுதியான ஆவணங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன இது குறித்து தவிர்க்க முடியாது பேச வேண்டிய நிலை உருவாகியது. மேலும் யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை தனது கடமையில் இருந்து தாம் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளமையும் ஐ.நா.மனித உரிமைகள் மாநாடுகளில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்களும் சிங்கள தேசத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிப்பனவாக மாறியுள்ளன. இதனை இலங்கையில் அண்மையில் நடந்த இருவேறு நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருந்தன. முதலாவதாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அவர்கள் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதோடு அவ்வாறு நடத்தப்படாது விட்டால் சர்வதேச விசாரணை கோரப்படும் என அறிவுறுத்தி;யமையாகும். இதற்குச் சிங்கள தேசம் பெரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியதே தவிர செவிமடுத்ததாக இல்லை.

அடுத்ததாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அரசாங்கம் பெரும் பிரயத்தனத்தின் மூலம் நடத்திய பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு மனித உரிமை மீறல்களைக்காரணம் காட்டி கனடாப்பிரதமர், மொறிசியஸ் பிரதமர் ஆகியோர் பொதுநலவாய உச்சி மாநாட்டைப் புறக்கணித்தனர். அதேவேளை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பைத் தொடர்ந்து இந்தியப் பிரதமரும் மாகாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மாநாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா அரசின் உபசரிப்புக்களைப் புறக்கணித்ததோடு யுத்த மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணை நடாத்தப்படாது விட்டால் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளருடன் இணைந்து சர்வதேச விசாரணை ஒன்றை பிரித்தானியா கோரும் என உறுதிபடத் தெரிவித்துச் சென்றார்.

சிறிலங்கா மீதான மேற்குலகின் அதிருப்திக்குக் காரணம் தனியாக மனித உரிமை மீறல்கள், ஊடகச் சுதந்திரமின்மை, நீதித்துறையில் அரசாங்கத்தின் தலையீடு போன்றவை மட்டும் தான் எனக்கொள்வதற்கில்லை. போரின்போது சிறிலங்காவிற்கு மேற்குலகம் வழங்கிய பூரண ஆதரவே அது பாரிய மனிதவுரிமை மீறல்களை மேற்கொள்ளும் துணிவைக்கொடுத்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆகையினால் தற்போதைய இந்நிலைப்பாட்டு மாற்றத்திற்கு மேற்கூறிய காரணிகளோடு சிறிலங்கா அரசு சீனாவுடனும் மேற்குலகிற்கு எதிரான நாடுகளுடனும் கொண்டுள்ள நெருக்கமும் காரணமாக இருத்தல் வேண்டும். சுருக்கமாகக் கூறுவதானால் அத்திலாந்திக்கில் கிÂபா போன்று இந்து சமுத்திரத்தில் சிறிலங்கா ஆகிவிடலாம் என்ற அச்சம் காரணமாகலாம். இதன் காரணமாக மேற்கு நாடுகள் சிறிலங்கா தொடர்பான தமது நிலைப்பாட்டில் சில மாறுதல்களைச் செய்வதற்கு முற்பட்டிருத்தல் வேண்டும்.

ஆனால் இது ஒரு ஆரம்பநிலை மட்டுமே. உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திற்கும் தமது நலன் என்பதற்குப் பின்னரே மற்றவை எல்லாம். இதனால் சிங்கள ஆட்சியாளர்களின் அடுத்த கட்ட நகர்வுகளைப் பொறுத்தே தற்பொழுது சுயாதீன விசாரணை கோரும் நாடுகளின் நிலைப்பாடு இருக்கலாம்.

சுயாதீன விசாரணை குறித்த சிறிலங்கா அரசின் நிலைப்பாடானது இதுவரையில் மாற்றம் கண்டதாக இல்லை. சுயாதினமான குழுக்களைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுக்களை தாம் நியமித்ததாகச் சாதிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு அப்பால் செல்லத் தயாராக இல்லை. இத்தகையதொரு நிலையில் உலகில் மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தமிழ்மக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். மாறி வரும் சர்வதேசச் சூழல் எமக்கு தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடும் என்பதல்ல. இச்சூழலைப் பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் முயற்சித்தல் அவசியம்.

இன்று தமிழ் மக்களின் போராட்டமானது இரு வேறு தளங்களில் நடைபெறுகின்றது. இதில் ஒன்று தாயகத்திலும்; மற்றொன்று தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுமாகவுள்ளது. எமது போராட்டம் முன்னோக்கி நகர தாயகத்திலுள்ளளோரும் புலம்பெயர்ந்தோரும் ஒன்றுபட்டு பணியாற்றுதல் அவசியமானதாகும். ஆனால் இதில் ஒன்றை மட்டும் கூறிவிட முடியும் தாயகத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி மக்கள் ஒரே இலட்சியத்துடனும் குறிக்கோளுடனுமேயுள்ளனர. வழிநடத்த முற்படுபவர்களே வேறுபட்ட சிந்தனையுடனும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கத் தவறுபவர்களாகவும் மாறிவிடுகின்றனர். மேற்குறிப்பிட்ட ஈழத்தமிழ் மக்களின் இரு வேறுபட்ட போராட்டத் தளங்களுக்கு அப்பால் மூன்றாவது தளமாகத் தமிழகமும் உண்டு. இன்று தமிழகத்திலுள்ள பிரதான சக்திகள் யாவும் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சுயாதீனமான விசாரணை கோரிநிற்பதோடு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என வலியுறுத்தியும் வருகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தில் பலம்பொருந்திய இந்தியாவின் அரசியலில் இம் மூன்றாவது தளமானது தாக்கம் செலுத்தக்கூடியதாகையால் இத்தளமும் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாகயாகவுள்ளது. இந்த வகையில் இன்று தமிழர் தாயகச்சிதைப்பைச் சிங்கள இராணுவ மேலாதிக்கம் தமிழர்கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிப்பு என்பன ஒருபுறமும் தமிழ் மக்களின் உறுதியான இலட்சியப்பற்று சர்வதேச சூழலில் மின்மினிகள் போல் தெரியும் சில நற்சமிக்கைகள் இன்னொரு புறமுமாய் தமிழர் வாழ்வு தொடர்கின்றது.

விடுதலைப்பாதையில் துரோகிகளையும் குழப்பவாதிகளையும் தடுமாறுவோரையும் சந்திக்கவேண்டிவருவது இயல்பானதே. இவை விடுதலைப் போராட்டவரலாற்றுக்குப் புதியதொன்றல்ல. ஆனால்; தமிழர் தாயகத்திற்காகவும் சுதந்திர வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவில் நிறுத்தி தாயக மண்ணிலும் புலம்பெயர்நாடுகளிலும் உள்ள தமிழீழ மக்களாகிய நாம் ஓரணியில் நின்று மாவீரர் இலட்சியம் ஈடேற உழைப்போம் என உறுதி எடுத்து கொள்வோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

------

அதை விடுத்து, நிதானத்தில் நிற்கக்கூடிய செயற்பாட்டாளர்கள் ஜேர்மனியில் எங்கே தவறு நடந்தது என்று ஆராய்வது நல்லது!

 

சபேசனின்... கருத்து சரியானதே.

எனது நகரத்தில் உள்ள செயல்பாட்டாளர்கள், 2009´ற்கு முன்பு மாவீரர் நாள் என்றால்...  ஒரு மாதத்திற்கு முன்பே, வீட்டு தபால் பெட்டியில் மாவீரர் நிகழ்ச்சி நிரல் சம்பந்தமான துண்டுப் பிரசுரமும், தொலைபேசியிலும் அழைத்து... ஒவ்வொருவரின் வருகையை உறுதி செய்து கொள்வார்கள். எல்லோரும் இணையத்தை பார்த்து... நிகழ்ச்சிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

45,000 தமிழர்களுக்கு மேல் வசிக்கும் நாட்டில்... இவர்கள் உறங்கல் நிலையிருப்பது நல்லதல்ல. சபேசன் குறிப்பிட்டது போல்... தவறு எங்கே நடந்தது என்று... அவர்கள் அதை களைய முற்பட வேண்டும்.

 

பிற்குறிப்பு: சபேசன் ஒரு கொத்து ரொட்டி என்ன விலை போகுது....

(தவறான நோக்கத்தில் கேட்கவில்லை) :D

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை லண்டன் எக்ஸ்செல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக மாவீரர் நாள் நினைவுகள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மக்களின் எண்ணிக்கை கடந்த வருடம் போன்றே இருந்தது. நிகழ்வுகள் சில சிறப்பாக இருந்தாலும் சில தோய்ந்துபோனதுபோல் தோற்றமளித்தது. எல்லோரும் அங்கும் இங்கும் திரிந்தனர்தான் எனினும் முன்பிருக்கும் ஒரு உணர்வு இல்லாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. கொடி ஏற்றும் நிகழ்வில் முன்பு  மாவீரர் குடும்பத்திலிருந்து ஒருவர் ஏற்றுவது நடைமுறையில் இருந்தது. கடந்த வருடத்திலிருந்து அதில் மாற்றம். இம்முறை திரு ராஜமனோகரன் அவர்கள் கொடியேற்றினார். வழமைபோல் காந்தனும் ரூபி குமாருமே நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினர். எத்தனையோ திறமையானவர்கள் இருக்க மீண்டும் மீண்டும் ஒருவர் நிகழ்வுகளைச் செய்வது முறையானதல்ல எனப் பலர் முனுமுனுத்ததைக் கேட்கக் கூடியதாக இருந்தது. நான் நிகழ்வு தொடங்க முதலே யாழின் ஒலிவட்டு வந்திருக்கிறதா என்றுதான் தேடினேன். அப்படி ஒன்று வரவில்லை என்றனர்.

உணவகம் ஒரு குறிப்பிட்ட நேரம் நெரிசலாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டைவிட விற்பனை குறைவாகவே இருந்தது. ஆனாலும் விழா மண்டபத்தின் செலவுகளை ஈடுகட்டும் அளவு வருமானம் இருந்ததுதான்.

பிரான்சில் இடம்பெற்ற மாவீரர் நாள் பற்றிய மேலும் சில படங்கள்.

 

1441300_165786993632565_1315029699_n.jpg

 

1382230_165792280298703_576243820_n.jpg

 

996059_165792363632028_806382323_n.jpg

 

1452491_165792873631977_908815608_n.jpg

 

1468715_165793033631961_763428226_n.jpg

 

(facebook)


நான் நிகழ்வு தொடங்க முதலே யாழின் ஒலிவட்டு வந்திருக்கிறதா என்றுதான் தேடினேன். அப்படி ஒன்று வரவில்லை என்றனர்.

 

பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தாமதமாக விநியோகிக்கப்படும் என தமிழ்சூரியன் அண்ணா ஏற்கனவே கூறியிருந்தார். அவர் திரியை தொடர்ச்சியாக கவனித்து வந்திருந்தால் இது தெரிந்திருக்கும்.
 

ஜெர்மனில் இடம்பெற்ற மாவீரர் நாள்.

 

இலட்சிய வேட்கைக்காய் உறுதியுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழத்தின் தேசிய வீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் டோர்ட்முன்ட் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்துடனும் உணர்வு பூர்வமாக உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மண்டபத்தின் ஒருபுறத்தில் மாவீரர் களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டனர். தமிழீழ மக்களை செயற்பாட்டாளர்கள் வரவேற்றபடி இருக்க சரியாக 12:49 மணிக்கு பங்குத்தந்தை அருட்திரு albert koeln அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து கொடிப்பாடல் ஒலித்து ஓய்ந்தது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாயக நேரத்திற்கு ஒத்த ஐரோப்பிய நேரமான 13.37 இற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரை நாட்டுப்பற்றாளர் ஒருவரின் மகளும் இரு மாவீரர்களின் சகோதரியுமான திருமதி குமுதா அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதன்பின்னதாக காலத்திற்குப் பொருத்தமானதாக அமைந்த ஏற்கனவே வெளியிடப்பட்ட தேசியத்தலைவரின் உரையிலிருந்து ஒரு பகுதி ஒலித்தது. அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார பூர்வ மாவீரர் நாள் அறிக்கை யேர்மனிய மொழியிலும் தமிழ் மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரர் நினைவுகள் சுமந்தபடி கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இசைவணக்கம். கவிவணக்கம், உரை, நாடகம், நாட்டிய நாடகம் ஆகியன நடைபெற்றன. மாவீரர் ஈகம் சுமந்தபடி எமது போராட்டச் செயற்பாடுகள் அமையவேண்டும் என தனது சிறப்புரையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த திரு. சத்தியதாசன் அவர்கள் தனது சிறப்புரையில் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் விடுதலைக்காக ஆற்ற வேண்டிய பணியினையும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இறுவட்டு வெளியீடு இடம்பெற்றது. திரு சத்தியதாசன் அவர்கள் இறுவட்டினை வெளியிட்‌டு வைக்க யேர்மனிவாழ் உறவுகள் இருவர் பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்பதாக யேர்மனியில் தமிழாலயங்களுக்குள்ளே இடம்பெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளுக்கான மதிப்பளிப்புகள் இடம்பெற்றன. சரியாக 17:30 மணியளவில் மாவீரர் நினைவு சுமந்த நெருப்புச்சுழி என்ற நாட்டிய நாடகம் யேர்மனிவாழ் நடன ஆசிரியர்களின் தொகுப்பில் அரங்கேற்றப்பட்டது. நவரசங்களையும் வெளிப்படுத்தி நூற்றுக்கு மேற்பட்ட இளையோர்கள் சிறப்பாக நடனம் புரிந்தனர்.

 

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் பாடப்பட மக்களும் எழுந்து கரவொலி எழுப்பினர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கொட்டொலியோடு 18:45 மணியளவில் தேசியக்கொடி இறக்கி வைக்கப் பட்டு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

 

1466233_549915778418144_458592631_n.jpg

 

1458471_549915741751481_2104202418_n.jpg

 

999784_549915915084797_2053184220_n.jpg

 

1441490_549917345084654_186046072_n.jpg

 

1450686_549917355084653_1799677637_n.jpg

 

1480782_549918998417822_1839510914_n.jpg

 

1459909_549918941751161_435070297_n.jpg

 

1459332_549918955084493_1937065992_n.jpg

 

1452495_549920578417664_1004719807_n.jpg

 

1467452_555078244570278_98769815_n.jpg

 

1468521_555078117903624_2017167951_n.jpg

 

1441387_555078277903608_1364157945_n.jpg

 

1456756_555078317903604_1856385508_n.jpg

 

1450231_549922481750807_1159879751_n.jpg

 

1454650_549922475084141_1921141002_n.jpg

 

1453561_549922505084138_1623965253_n.jpg

 

1475775_549920551751000_430119428_n.jpg

 

1452098_549922981750757_1629939563_n.jpg

 

(facebook)

Edited by துளசி

தமிழீழ தேசிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு பிரான்சு வாழ் மக்களால் நவம்பர் 27ம் நாள் லெப். கேணல் நாதன். கப்டன். கஐன், கேணல் பரிதி அவர்கள் துயில்கின்ற கல்லறையில் சரியாக நண்பகல் : 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதே சமநேரத்தில் லூ புசே என்னும் இடத்தில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர். திரு. யோசேப் அவர்கள் ஏற்றி 12.40 தேசியக்கொடியேற்றல் இடம் பெற்றது தேசியக்கொடியினை பிரான்சின: கிளைப்பொறுப்பாளர் திரு. சி. பார்த்திபன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரையும், தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை வாசிக்கப்பட்டது.

 

கப்டன் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி போன்றோருக்கு வீர வணக்க நிகழ்வு.

 

1441529_360028474134221_1242023987_n.jpg

 

1459867_360026320801103_1184794932_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனில் இடம்பெற்ற மாவீரர் நாள்.

 

1459909_549918941751161_435070297_n.jpg

 

 

இணைப்பிற்கு... நன்றி துளசி.

இப்படியான... அன்பான, அழைப்பிதழ்கள்...

முன்பு நமது ஊரில், இருந்தது.

இப்போ... அழைப்பிதழ் தந்த... ஆட்களையே... கண்டு பிடிக்க  முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய செய்தி

 

 

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக

நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 - 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளருமான  திரு சபேசன் சண்முகம் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி Margaret Tonkin அவர்கள் ஏற்றி வைத்தார். இவர், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பேரில் காலவரையறையற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தொடர்பில் கரிசனையுடன் பணியாற்றி வருபவர். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த திரு. கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றிவைக்க, அடுத்து ஈகச்சுடரேற்றல்கள் இடம்பெற்றன.

தொடர்ந்து என்பது மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக ஓரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
Maaveerar%20Naal%202013%20Melb%2001.jpg
மலர்வணக்க நிகழ்வின்போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உறுதியுரையும், மாவீரர் நினைவுரையும் இடம்பெற்றன. மாவீரர் நினைவுரையை திரு. கொற்றவன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச்சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய கொற்றவன், போராட்ட வடிவங்கள் மாறினாலும்  ஒன்றுபட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.

அதனை அடுத்து, நடனாலாயப்பள்ளி நடனப்பள்ளி மாணவர்களின் நடனம் இடம்பெற்றது. நடனத்தைத் தொடர்ந்து ‘கார்த்திகை 27’ என்ற குறுநாடகம் இடம்பெற்றது. “மாவீரர்கள் இன்னும் விழித்தபடியேதான் இருக்கிறார்கள், தமது கனவை தமிழ்மக்கள் என்றோ ஒருநாள் நனவாக்குவாக்குவார்கள், அதுவரை எமது மக்கள் ஓயமாட்டார்களென்ற நம்பிக்கையோடு மாவீரர்கள் இன்னும் விழித்தபடியேதான் இருக்கிறார்கள்” என்ற தொனிப்பொருளில் அமைந்திருந்த இந்நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது.

இறுதி நிகழ்வாக பரதசுடாமணி நடனப்பள்ளி மாணவிகளின் மாவீரர் நடனம் இடம்பெற்றது.

மாலை 8.20 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர் நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.

நன்றி.

Maaveerar%20Naal%202013%20Melb%2011.jpg

Maaveerar%20Naal%202013%20Melb%2002.jpgMaaveerar%20Naal%202013%20Melb%2003.jpgMaaveerar%20Naal%202013%20Melb%2004.jpg

Maaveerar%20Naal%202013%20Melb%2005.jpgMaaveerar%20Naal%202013%20Melb%2006.jpgMaaveerar%20Naal%202013%20Melb%2008.jpg

Maaveerar%20Naal%202013%20Melb%2012.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2013.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2014.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2015.jpg

 

 

Maaveerar%20Naal%202013%20Melb%2017.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2018.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2019.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2020.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2021.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2022.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2023.jpg

 

Maaveerar%20Naal%202013%20Melb%2024.jpg

 

 

 

 

 

இணைப்பிற்கு... நன்றி துளசி.

இப்படியான... அன்பான, அழைப்பிதழ்கள்...

முன்பு நமது ஊரில், இருந்தது.

இப்போ... அழைப்பிதழ் தந்த... ஆட்களையே... கண்டு பிடிக்க  முடியவில்லை.

 

இது பற்றி உங்கள் நாட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருக்கு சுட்டிக்காட்டுங்கள். அடுத்தமுறை அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்கும் ஒழுங்கை செய்ய முடியுமா என கேளுங்கள்.

 

அனைவரும் இணையதளம் பார்ப்பார்கள் என்றில்லை என்பதால் தொலைபேசி அல்லது தபால் மூலமும் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கும் படி கேட்டு பாருங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி பலெர்மோவில் தமிழீழத் தேசியமாவீரர் நாள் 2013!

 

 

 

 

 இத்தாலி பலெர்மோ மானகரில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது

பொதுச்சுடர் ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் தேசியக் கொடி ஏற்றல் மலர்வணக்கம் எழுச்சி கானங்கள் விடுதலை 
நடனங்கள் கவிதைள் பேச்சுக்கள் நாடகம் மற்றும் சிறப்புரைகள் இத்தாலி பாராளமன்ற உறுப்பினர்களும் பலெர்மோ மானகரசபை உறுப்பினர்களும் உரை நிகழ்த்தினார்கள் இன்னும் பல எழுச்சி நிகழ்வுகளும் இடம் 
பெற்றது .

இவ் நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடியினை பிரித்தானியாவில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற் பாட்டாளரும் அறப் போராளியுமான சிவந்தன் கோபி அவர்கள் ஏற்றிவத்தார் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு தங்கள் உணர்வு பூர்வமான அஞ்சலியை
செலுத்தினர் இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுநம்புங்கள் திமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு உறுதி எடுத்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.

maverar%20it%20400%20260.jpg

maverar%20it01.jpg

maverar%20it02.jpg

maverar%20it03.jpg

மியன்மாரிலும் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது!

 

வீரமறவர்களை உலகெங்குமுள்ள தமிழர்கள் எழுச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிலையில், மியன்மார் தலைநகர் யாங்கூனிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழரின் உரிமைப் போராட்டத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களை மியன்மாரிலுள்ள தமிழர்களும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து, தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.Myanmarr_01.jpgMyanmarr_02.jpgMyanmarr_03.jpg

சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு 2013 [காணொளி]

 

தாயக விடுதலைக்காய் உயிர்நீத்தவர்களின்; நினைவுகள் தாங்கிய, இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தலுடன் நிறைவுபெற.தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின்குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய உணர்வுடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது.

சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் 27.11.2013 பிற்பகல் 13:00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைத் தொகுப்பு காண்பிக்கப்பட்டதுடன்;, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அறிக்கையும் வாசிக்கப்பட்டது. தாயக நேரம் 18:05 (13.35) மணியளவில் மணியோசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச்சுடரேற்றப்பட துயிலுமில்லப் பாடலுடன் மாவீரர் வணக்க பாடல்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் உணர்வுடன் வழங்க சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் வருகை தந்த மக்கள் சுடர், மலர் வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகளுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும் அனுராதபுரம் வான்தளம் மீதான கரும்புலிகளின் தாக்குதலை மையமாகக் கொண்ட எல்லாளன் திரைப்படத்தில் தமிழரின் வீரத்தினை பறைசாற்றும் முக்கிய பகுதிகள் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
தாய்த் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளர் ஓவியர் திரு.வீரசந்தானம் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து சமகால நிகழ்வுகளை கருப்பொருளாகக் கொண்ட தீயினில் எரிந்தவர்கள் நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், எமுச்சியாகவும் இருந்தது. சுவிஸ் வாழ் கலைஞர்களின் கவிதை, வீணா கானமும், நடனங்களும் உணர்வு மிக்க மாவீரர் காணிக்கை நிகழ்வுகளாக அமைந்தன, தேசியக்கொடி இறக்கலுடன் நிகழ்வு மாவீரர் நினைவுடன் நிறைவு பெற்றன.

சுவிஸ் கிளை.

 

 

unnamed-1.jpg

unnamed.jpg

unnamed-2.jpg

unnamed-3.jpg

 

 

 

unnamed-7.jpg

 

unnamed-21.jpg

 

unnamed-8.jpg

unnamed-101.jpg

unnamed-22.jpg

unnamed-9.jpg

unnamed-11.jpg

unnamed-24.jpg

unnamed-13.jpg

\unnamed-12.jpg

unnamed-14.jpg

 

unnamed-161.jpg

unnamed-25.jpg

unnamed-19.jpg

unnamed-20.jpg

unnamed-17.jpg

 


1461189_451143571658417_457481024_n.jpg

மாவீரர் நாள் (கனடா) - Toronto

 

1461823_172571572941136_2094651035_n.jpg

 

1453530_10152765913805752_496602396_n.jp

 

1451442_172571806274446_773459799_n.jpg

 

944740_10152765912335752_1968585062_n.jp

 

1476511_172572346274392_276950793_n.jpg

 

1424547_172571689607791_1409719788_n.jpg

 

1450876_10152767068610752_603429380_n.jp

 

1459749_10152767071550752_875574699_n.jp

 

62484_545369395551929_422204975_n.jpg

 

1459131_545369422218593_1342647491_n.jpg

 

581561_10152767069740752_561985262_n.jpg

 

62348_10152767070865752_166971268_n.jpg

 

1469964_545369885551880_203802607_n.jpg

 

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லான்டில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள்!

 

 

 

 

ஸ்காட்லான்டில் Woodside Hall மண்டபத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெற்றுள்ளது .

நேற்று (30-11-13) மாலை 6 மணியளவில் தேசியக் கொடியேற்றலுடன் தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள்
ஆரம்பமானது. ஈகைச்சுடரினை வைத்தியர் அல்பிரேட் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மண்டபத்தில் உள்ள மக்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக கைகளில் சுட்டிகள் ஏந்திய வண்ணம் புனிதர்களின் பாடல் இசைக்க மண்ணின் மைந்தர்களை நினைவு கூர்ந்து உணர்ச்சிப்பிழம்பாக மக்கள் மண்டபம் நிறைந்து காணப்படடனர்.பாடல் நிறைவு பெற மக்கள் நிரை நிரையாக சென்று புனிதர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமானது சிறுவர்கள் தொடக்கும் பெரியவர்களுமாய் வணக்க நிகழ்வில் கலந்து கொண்டனர். இறுதியாக கொடியிறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவ பெற்றது.

skoddland%20400%20260.jpg

skoddland%201.jpg

skoddland%202.jpg

தமிழ்நாட்டுச் சிறையிலும் மாவீரர்நாள்!?

உலகத்தமிழர்களால் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும் மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும், அதே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆபிரிக்க நாட்டவர்களும் நிகழ்வில் பங்குகொண்டிருந்த காட்சிகளையும் காணலாம்.1421.jpg tamilnaadumaavee900.jpg

தமிழ்நாட்டுச் சிறையிலும் மாவீரர்நாள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.