Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளில் ஷெல் மற்றும் விமானத்தாக்குதல் நடத்திப் பழகின சிங்களம் சும்மா இருக்குமா.?! இப்போ கல்வீச்சு தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் எதிரொலி: வீடுகள் உடைப்பு, உருவப்படம் எரிப்பு

 

திரு நெல்வேலியில் அமைந்துள்ள பொ. ஐங்கர நேசன் அவர்களின் வீட்டில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். இதில் வீட்டு யன்னல் கண்ணாடிகள் சில சேதமடைந்தன. மாவீரர் நாளை முன்னிட்டு நேற்று மர நடுகை நிகழ்வை மேற்கொண்டதன் பின்னணியில் தான் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கலாம். 

 

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் இது ஒரு சகிக்க முடியாத காட்டுமிராண்டி தனமான நாகரிகமற்ற செயல் எனவும் இது தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். கல் வீச்சு தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

 

கரவெட்டியிலும் சம்பவம்

 

மேலும் கரவெட்டி பிரதேச தவிசாளர் வீடு, வல்வெட்டித்துறை உபதவிசாளர் வீடு, வலி.மேற்கு தவிசாளர் வீடு, மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீடு என கடந்த இரு தினங்களில் யாழில் மக்கள் பிரதிநிதிகள் பலரின் வீடுகளின் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதே வேளை இன்று அதிகாலை மாகாண சபை உறுப்பினர் ஆனோல்டின் குருநகரில் அமைந்துள்ள வீட்டின் மீதும் கல் வீச்சு தேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

 

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உருவப்படம் கிழிப்பு

 

வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிவகுருநாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது.   

 

அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

 

இதேவேளை, நேற்றைய தினம் உதயன் பணிமனையில் மரம் நாட்டு வைபவம், இரத்ததானம் என்பன இடம்பெற்றதுடன் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மரமும் நாட்டியிருந்தார். 

 

இந்தநிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.eelanatham.net/articles/2013/11/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

1240469_632816433448999_1513086358_n.jpg

 

1475928_632816456782330_1171203682_n.jpg

 

1471120_632817113448931_652813374_n.jpg#

 

vikneswaran.jpg?itok=5znR5WB8

 

நன்றி: முகநூல் மற்றும் ஈழநாதம்

தமிழர் இருந்தால், நின்றால் அதுவெல்லாமே சட்டப்படி குற்றம் என்பது அரசின் நிலைப்பாடு. அதன் பின்னர் சர்வதேசத்துக்கு கொடுக்கும் விளக்கம், ஜனநாயக நாடு தனக்கு வேண்டிய சட்டங்களை தான் ஆக்கிகொள்ள முடியும் என்பதே. இந்த சட்டங்களை எல்லாம் கூட்டமைப்பு எதிர்த்து போராட அதனால் கெட்டு நொந்து போய் இருக்கும் மக்களை தயார் செய்ய முடியாது. 1960ல் ராஜவரோதயம், ஏகாம்பரம், வன்னிய சிங்கம், நாகநாதன் போன்றோர் பட்ட இன்னல்களுக்கு, சத்திங்க்கிரகம் சிறிமாவின் அரசுக்கூடாக எதையும் செய்ய முடியவில்லை. 

 

இதனால்த்தான் கூட்டமைப்பு தான் சிங்கள அரசுக்கெதிராக போராடாமல் அரசை ஓடி ஓடு தமிழ் பொதுமக்களுக்கு போராட வைக்கிறது. அரசு இப்படி தமிழ் மக்களுக்கெதிரான வன்முறை போராட்டங்களை நடத்தும் போது அது வெளிநாட்டவர்களால் இலகுவில் விளங்கிக்கொள்ளப்படத்தக்கது. இதுதான் கூட்டமைப்பின் புதிய இராஜதந்திரம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
கல்லெறியும் கூட்டத்தை ராணுவத்தில் சேர்த்தால் அவர்கள் கல்லை எறியத்தான் செய்வார்கள்.சிங்களம் தமிழர்களை கொல்ல பல வழிகளிலும் முயல்கிறது.
 
ஒவ்வொரு மக்களும் தமது வீட்டில் மாவீரர் தினத்தை கொண்டாடினால் சிங்களத்தால் என்ன செய்ய முடியும்??

தலையங்க செய்திகள் ,ஐங்கரநேசன்  ஜெயபாலன் சரியான போட்டி? .

  • கருத்துக்கள உறவுகள்

 

கல்லெறியும் கூட்டத்தை ராணுவத்தில் சேர்த்தால் அவர்கள் கல்லை எறியத்தான் செய்வார்கள்.சிங்களம் தமிழர்களை கொல்ல பல வழிகளிலும் முயல்கிறது.
 
ஒவ்வொரு மக்களும் தமது வீட்டில் மாவீரர் தினத்தை கொண்டாடினால் சிங்களத்தால் என்ன செய்ய முடியும்??

 

 

ஒரு ஐம்பது வீட்டை காலி  செய்து விடுவது.
மற்றவர்கள் மாவீரர் பற்றிய சிந்தனையையே தானாக விட்டு விடுவார்கள்.
 
இது இஸ்ரேல் சிங்கள்த்திட்கு வழங்கிய முக்கிய அறிவுரை.

தலையங்க செய்திகள் ,ஐங்கரநேசன்  ஜெயபாலன் சரியான போட்டி? .

அவரும் கல்லெடுத்து கொடுப்பவரா?  அதை எனக்கு நம்ப முடியாது.

 

ஐங்கரநேசன் கொக்கா கோலா குடிக்காதவர் என்றாலும் அரசமரம் நட விக்கிவரைக்கும் சேர்ந்துதான் போனார்கள். இதில் ஒன்றும், ஜே லெனோ, லெற்றர்மான்  தனி நபர் சோ இல்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.