Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் புதுடெல்லிப் பயணம் எப்போது? – இந்திய வெளிவகார அமைச்சு பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CVV1.jpg

வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் புதுடெல்லி பயணம் எப்போது என்ற கேள்விக்கான பதிலை முன்கூட்டியே எதிர்பார்க்கக் கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. 

புதுடெல்லியில் நேற்று வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீனிடம், மாலைதீவு அதிபர் மற்றும் விக்னேஸ்வரனின் இந்தியப் பயணம் குறித்து இன்னமும் முடிவு செய்யப்படவில்லையா  என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், சையட் அக்பருதீன்,

“சரியான நாள்கள் தொடர்பாக, மாலைதீவு அரசுடன் கலந்துரையாடி வருகிறோம். 

பயண நாள் தொடர்பாக குறுகியகாலம் முன்னதாகவே நாம் அறிவிப்பது வழக்கம். 

இதற்கு முன்னரும் அவ்வாறு தான் செய்திருக்கிறோம். 

எனவே இந்தக் கேள்விக்கு முன்கூட்டியே பதில் எதிர்பார்க்கக் கூடாது. 

எனினும் அடுத்தவாரத்தில் இவர்களின் பயணத்துக்கு வாய்ப்பில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131207109581

  • கருத்துக்கள உறவுகள்

என்ன 'அணு ஆயுத இரகசிய உடன்படிக்கை' பற்றியா பேசப்போகின்றார்கள்?

 

விக்கினேஸ்வரன் சொல்லப்போறதை, மகிந்தவிட்டைப் போய்ச் சத்தி எடுத்திட்டு வாறதுக்கே, இவ்வளவு பெரிய பில்டப் போடுவான்? :o  

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் நாங்கள் குறுகியகாலத்திற்குள் குறுகிய நோக்குடன்தான் செய்துமுடிப்பது வழக்கம். கருணாநிதியின் உண்ணாவிரதமூலம் இதனை நாங்கள் உலகத்திற்கே உணர்த்தியுள்ளோமே.... :D  :lol:  :lol:  

விகினேஸ்வரேன் இந்திய தேர்தல் முடியும் வரையும் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இல்லை இவர் அங்கு போய் அவர்களின் தமிழ்நாடில் இடிந்து விழுந்துள்ள வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற அவர்களில் வலையில் விழுந்தால் விளைவுக்கு அவரே பொறுப்பு. இப்ப எங்களுக்கு முக்கியம் ஜெனீவா முனெப்புகளை தடுக்கும் எந்த சதியிலும் விழாமல் இருப்பதே. நாங்களும் அகாஶி கள்ளன் மாதிரி இலங்கையின் கோவணத்தை காப்பாற்ற வேணும் எண்டு நினைத்தால் அதை விட பெரிய அநியாயம் ஒன்றுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எவனும் எந்த பூ... ஆட்ட போறது கிடையாது.. சொந்தமாக சிந்திங்கப்பா... சும்மா உக்கார்ந்து அறிக்கை விட்டா..  அந்த அறிக்கை ஒயின்சாப்பு சுண்டலுக்கு..

கூட்டமைப்பு அங்கத்தவர்களிற்கு இந்திய கார்கள்!

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அங்கத்தவர்களிற்கு மக்கள் சேவையினை திறம்பட ஆற்ற ஏதுவாக இந்திய அரசு குளிரூட்டி வசதிகளை கொண்ட கார்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இது தொடர்பினில் வடமாகாணசபையின் முதலமைச்சருடன் இலங்கைக்கான இந்திய தூதுவராலய அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.அதன் பிரகாரமே கூட்டமைப்பு சார்பு 30 மாகாணசபை அங்கத்தவர்களிற்கும் இந்திய அரசினது கார்கள் அன்பளிப்பாக வந்து சேரவுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.