Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவே கலையாதே ..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ODILON.jpg

 

 

ஆளையே அடையாளம் காணமுடியாதளவுக்கு பயங்கர இருட்டு, கையில் அரிக்கன் லாம்புடன் அருகில் இருக்கும் வைரவர் கோயிலுக்கு தனிய நான் போய்க்கொண்டிருக்கிறேன்.  பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல்

அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். சற்று அகன்ற ஒற்றையடிப் பாதையும், சுற்றி வர பனங்கூடலும்,சிறுபற்றைக்காடுகளும் ஆங்காங்கே தெரியும் சிறு வீடுகளும் பகலில் கூட அமானுஸ்யத்தை உணர்த்தும்.

 

அரிக்கன் லாம்பை வைத்து விட்டு வைரவருக்கு விளக்கை ஏற்றிவிட்டு காளிக்கும் கற்பூரம் ஏற்றி விட்டு வருகிறேன். என்றைக்குமில்லாதவாறு அன்று அந்த இரவு ஓரிரு சைக்கிள்கள் டைனமோ வெளிச்சத்தில்

ஒளியைப் பாய்ச்சியவறே சென்றன. என்ன ஏதோ என்று எனக்குள் யோசித்துக் கொண்டு தெருவுக்கு வரும் போது வேகமாய் வந்த கார் ஒன்று என்முன் குத்தி பிரேக் அடித்து நின்றது. ஓடுவம் என்று சுதாகரிப்பதற்குள் "டேய் மச்சான் இந்த நேரம் இதுக்குள்ளை என்னடா செய்யுறாய்" என்றது.

கேட்ட குரலா இருகே ஒரு வேளை காளியாய் இருக்கொமோ ! இல்லை, மனப்பிராந்தியாகக் கூட இருக்கலாம்.  "ஏற்கனவே சின்னனிலை இப்படி வேறை எனக்கு நடந்திருக்கு அண்ணா எனக்கு அடிக்க வர மாமி வீட்டை பொயிலைக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த அப்பாவிடம் ஓடிப்போகும் போது வேலியோர வேப்பமரத்துக்கீழை பனையோலை வெட்டி அடுக்கி பாட்டம் போட்டது போலக் கிடக்க அதை தடவிப் பார்க்க ஒன்றுமே இல்லை, பேந்து விடியக் காலமை கையைப் பார்க்கத்தான் அதில் நெருப்புச்சுட்ட கொப்பளங்கள் இருந்தது, அம்மாவிடம் சொல்ல ஊத்தைக் காளி தான் சுட்டிட்டா என்று சொல்லி அம்மன் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் அய்யரைக் கொண்டு திருநீறு போட்டு நூல் கட்டிவிடத்தான் சரியாச்சு", இதுவும் அப்படித்தான் இருக்குமோ??? இந்த நேரம் விளக்குக் கொழுத்த வந்தாய் தானே உனக்கு தேவை டா என்று உள்மனசு கிண்டலடித்தாலும், பயத்தில் உச்சா போகாதது ஒன்று தான் குறையாக இருந்தது.

 

காரில் இருந்து கதவு திறக்கும் சத்தம் கேட்கவே அரிக்கன் லாம்பின் திரியைக் கொஞ்சம் அதிகம் திருகிவிட்டு, முகத்தின் முன் பிடிக்க "கரன்" . "டேய் இப்ப எங்கையடா போட்டு வாறாய்?" அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காருக்குள் எட்டிப்பார்க்க அவனது புது மனைவியும், குடும்பத்தாரும் இருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் அவனைக்கண்டாலும் தாமதிக்க வைக்காமல் சரி நீ போடா மச்சான் நாங்கள் பிறகு பேசுவம். முதலிரவை என்ஞோய் பண்ணடா மச்சி என்று விட்டு வர. நாளைக்கு கோல் பண்ணடா என்று சொல்லி விட்டே விடை பெற்றான் கரன். இல்லை டா மச்சி என்னட்டை சிம் காட்டில்லை நாம் கொமினிக்கேசனுக்கு வந்து பண்ணுறேன் டா.  ஒரு நிமிசம் நில் ! இந்தா சிம் காட் என்று தந்து விட்டு போனவன் சிறிது தூரம் சென்ற பின் ரிவேர்ஷில் கார் திரும்ப வந்தது.

 

"பிடியடா அவனை" என்று கத்திக் கொண்டே என்னை அனைவரும் துரத்த விளைக்கையும் போட்டு விட்டு பனங்காணியுக்குள்ளாலை விழுந்து ஓட பொலிஸ் என்னைச் சுற்றி வளைத்து விட்டது.

எதுக்குத் துரத்துகிறார்கள்?, ஏன் பொலிஸ் சுற்றிவளைத்திருக்கிற்து??, நான் ஏன் ஓடுகிறேன்??? இப்படி எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. பற்றைகளுக்குள்ளாலேயே தவண்டுகொண்டு பொலிஸையும் உச்சிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். காலில் குத்தியிருந்த முள்ளை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்க பொலிஸுடன்,ஆமியும் சேர்ந்து வீடு வீடாக வரத்தொடங்கிவிட்டார்கள். இனியும் ஓட முடியாது பிடித்தால் பிடிக்கட்டும் என்று விட்டு இருந்து விடுகிறேன்.

எனது அடையாள அட்டை எல்லாம் பார்த்த பின்பும் என்னைக் கைது செய்யவில்லை. கூடவே கரனும் இருந்தான் அவனும் எதுவுமே பேசவில்லை. "என்ன  கொடுமை டா இது?, இங்கு என்ன நடக்குது?? எல்லாரும் என்னைப் பைத்தியம் ஆக்கிறாங்களோ ப**** "வாயுக்குள்ளையே வந்த கெட்ட வார்த்தைகளை அமுக்கிக் கொண்டேன்.

 

"கரன்"  நல்ல செல்வாக்கான குடும்பம். அவர்கள் சொல்லி சந்தேகத்தின் பேரில் பலரைக் கைது செய்து சீ.ஐ.டி சித்திரவதை செய்கிறது  யாராலும் யாரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில் வைத்தியர் கரனுக்கு வாயிலையே நுழையாத பெயரில் ஒரு ஞாபகமறதி நோய் இருக்கு என்கிறார். அதனால் தான் அவன் இப்படி நடந்துகொள்கிறான் என்று சொன்னதும். எனக்குள் இனம்புரியாத கவலை ரேகைகள் சூழ்கின்றன.

என்னைத் தான் துரத்தினார்கள் என்று அவனிடம் எப்படிச் சொல்ல? என்னால் சித்திரவதையானவர்களுக்கு என்ன பதில் சொல்ல? இவ்வளவுக்கும் பிறகு எப்படி இதைக் கரனிடம் சொல்ல? சொல்லாமல் விட்டாலும் அவனுடைய நிலைக்கு நானும் தானே காரணம்??

எண்ணிலடங்காக் கேள்விக் கணைகள் மனதை அரிக்க, எப்படியும் அவனிடம் இதைச் சொல்லத்தான் வேணும். என் நண்பேன்டா அவன் என்று நினைத்துக் கொள்ளவே "அலாரம் ஆறு மணிக்கு அலறுகிறது".

 

 

ஜீவா

07.12.2013  12.42

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஆரம்பத்தில் நன்றாக ஆரிம்பித்துப் பின் குழப்பமாக  இருக்கு. அல்லது எனக்குத்தான் விளங்கவில்லையோ தெரியவில்லை.

உண்மையாய் கண்ட கனவைத்தான் எழுதின்னீங்களா.. 2 தரம் வாசித்தேன்.. சரியாக இதைத்தான் இந்தக் கதை கூறுகிறது எனத் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது.. அதற்கு எனது அறியாமையும் காரணமாக இருக்கலாம்.

 

பாராட்டுகள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சுமோ அக்கா, சோழியன் அண்ணா. :)

 

இது நேற்றுக் கண்ட கனவு மட்டுமே, சுவாரசியமாக இருந்ததால் பதிந்துகொண்டேன். கனவில் நான் லொஜிக் பிழைகளைத் தேட முற்படவில்லை. ஆனால் நான் எழுத நினைத்தது இதைத்தான். இரவு நேரம் ஒரு கோவிலுக்கு போட்டு வரும் போது நண்பனை சந்திக்கிறேன். அவனை தொடர்பு கொள்வதற்காக சிம் காட் தருகிறான். ஆனால் அதை அவன் மறந்து விட்டு தனது சிம் காட் களவு போய்விட்டதாக கருதி துரத்துகிறான். பொலிஸ்,ஆமியெல்லாம் இதில் உதவிக்கு வருகிறார்கள். உண்மையில் அவன் எனக்கு தான் தந்தான் என்பதையே மறந்து விட்டான். நானும் சொல்ல முடியாத சூழல். தன்னுடைய பேர்சனல் நம்பர் என்பவை அதில் இருந்தமையால் அவன் துயருறுகிறான். ஆனால் இது தான் காரணமா என்று எனக்கும் தெரியாது, அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவனை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல அவர் அவனுக்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது என்கிறார், இப்படியான சந்தர்ப்பத்தில் நான் உண்மையச் சொல்லப் போகும் போது கனவு கலைகிறது.

 

இது தான் நடந்த சம்பவம். ஆனால் குழப்பத்திற்கு என் எழுத்து  முதிர்ச்சியின்மையே காரணம்,  இன்னொரு சந்தர்ப்பத்தில் தவறுகள் ஏற்படாதவாறு முயற்சி செய்கிறேன். :rolleyes::lol::icon_idea:

குறை நினைக்கவில்லை என்றால் ஒன்று கூறலாம்.. ஈழத்து சிறுகதைகளை தேடி வாசியுங்கள்.. யதார்த்தமான எழுத்து கை வரும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான 'ஞாபக மறதி' வருத்தமொண்டு உண்மையிலேயே இருக்குது, ஜீவா!

 

ஒரு ஆணுக்குப் பிறகு, கனக்கப் பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்த, அம்மா மாருக்கும் இந்த வருத்தம் இருக்கெண்டு நினைக்கிறன்! :D

பென்னாம் பெரிய புளியமரம் அது கீழே ஒரே ஒரு சூலம் அதற்கு நாற்புறமும் சூழ சீமெந்தால் சுற்றிக்கட்டிய அரைச் சுவர். பனங்குற்றியாலான தூண், ஓட்டுக்கூரை நேர் எதிரே ஒற்றைப்பனை மரம் ஒன்று. கீழே ஒரு நடுகல்
அது காளியின் சிலை. இது தான் அந்தக் கோயிலுக்குரிய அடையாளம். ///

 

இது காவல் தெய்வங்களின் அன்றைய நிலை . ஆனால் இன்றோ வெளிநாட்டுக்  காசாலும் , பண்ணையார் தனத்தாலும் இந்தக் காவல் தெய்வங்கள் கும்பாபிசேகம் செய்து பணக்காரத் தெய்வங்கள் ஆகி விட்டன . இதில் உக்கிர மூர்த்திகளும்  அடக்கம் . கதை கனவுக் கதை என்றபடியால் ஜீவா விமர்சனத்தில் இருந்து தப்பி விட்டார் . பாராட்டுக்கள் ஜீவா :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறை நினைக்கவில்லை என்றால் ஒன்று கூறலாம்.. ஈழத்து சிறுகதைகளை தேடி வாசியுங்கள்.. யதார்த்தமான எழுத்து கை வரும்.  :D

 

குறை நினைக்க ஏதும் இல்லை சோழியன் அண்ணா. வாசிக்க நேரமும்,பொறுமையும் இல்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கிறேன். :)

 

நன்றி சோழியன் அண்ணா கருத்துப்பகிர்விற்கு :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.