Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு படையின் அராஜகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் வலிவடக்கு மீள் குடியேற்றக்குழுவால் நடத்தப்பட்ட அமைதி வழி உண்ணாவிரதப் போராட்டத்தினை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைத் தடுப்பதற்காக அரசபடைகள் மேற்கொண்ட அனர்த்தங்ளை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அவற்றில் வெளியே வராத பல சேதிகள் இருக்கின்றன. அமைதி வழிப்போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டன . அவற்றினை ஓட்டிச் சென்ற சாரதிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். இதுதொடர்பாக முக்கியமாக மூவர் அரசினால் குறி வைக்கப்பட்டுக் கொலை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. பேரூந்துகளை ஒழுங்கு செய்தவருடைய வீட்டிற்கு சாதாரண உடை அணிந்த சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவினர் தேடிச் சென்றுள்ளார்கள். இவர்களது வருகை எந்நேரமும் நிகழலாமென்று அவர் வீட்டில் தங்காததால் தப்பிக் கொண்டுள்ளார். அமைதிவழிப் போராட்டத்தினை ஏற்பாடு செய்வதில் முன்னின்று உழைத்தவர்களான மயிலிட்டியைச் சேர்ந்த இருவரது வீட்டிற்குச் சென்ற அரசபடையினர் ஒருவரது வீட்டில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டுள்ளார்கள். அவரது வீடு கடையோடு சேர்ந்த வீடு. எனவே அவரும் , அவரது மனையியும் இரவில் கடையில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் முன் கதவுகள் உடைக்கப்பட்ட போது இருவரும் பின் கதவு வழியாகத் தப்பிச் சென்றுள்ளார்கள். கத்திகள், பொல்லுகள், வாள்கள் சகிதம் வந்த அரசபடையினர் கடையை அடித்து நொறுக்கிக் கொள்ளையடித்துள்ளார்கள். இறுதியாக இரு மலர் வளையங்களை வைத்துச் சென்றுள்ளார்கள். புனர்வாழ்வு, நல்லுறவு, ஒரு நாடு , வளம் படைத்த வாழ்வு இவையெல்லாம் உருவாகுமென்று கனவு காணுவோம்!

Fb

சுண்டல் நீங்கள் இங்கு லங்கா அரச படையினரின் அராஜகங்களை வெளிக் கொண்டு வருவது நம் தமிழ் உறவுகளில். சிலருக்கே பிடிக்காது. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. காலாகாலமான இந்த அராஜகங்கள் தமிழருக்கு பழகிக்போன ஒன்று. பழகிப்போன சாதாரண விடயத்தை நீங்கள் பெரிதுபடுத்துவதாக, தமது எஜமானை அவமானப்படுத்துவதாக சில தமிழ் உறவுகள் உங்கள் மீது குற்றம் சாட்டப்போகிறார்கள்.

பேசாமல் வெளியிலை போய் பாண் வாங்கி உயிரோடை திரும்பி வந்து சந்தோசமாக  சாப்பிட்டு போறதுக்கு எதுக்காக போராட்டம் எல்லாம்...?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புனர்வாழ்வு, நல்லுறவு, ஒரு நாடு , வளம் படைத்த வாழ்வு இவையெல்லாம் உருவாகுமென்று கனவு காணுவோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக தமிழர்களின் போராட்டத்திற்கு அழைத்து சென்ற வாகன சாரதிகள் கூட மிரட்டபடுகின்ற அளவுக்கு ஒரு கேவலமான நாடு.....இனி எந்த வாகன சாரதிகள் முன்வருவார்கள் தமிழ் மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்ல? இதற்காக எல்லாம் சம்மந்தன் போன்ற தமிழர் தரப்பின் தலைவர்கள் என்று சொல்லி கொள்ளுபவர்கள் குரல் கொடுத்ததுண்டா? ச்சி கறுமம் பிடிச்ச தமிழர் தலைமைகள் ஜனநாயாக விழுமியமே என்ன என்று தெரியாத ஒரு நாடு கடந்த வருடம் மட்டும் 500 கொலைகலாம் வர வர ஆபிரிக்கா நாடுகளை விட உலகத்தில் மோசமான கேவலமான ஒரு நாடாக உருவாக்கி வருகின்றது இலங்கை

தம்பி சுண்டல்...    விடுதலை புலிகளை அழித்த பிறகு  இலங்கையில் தமிழர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும்  உயிரோரை  பாண் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள் எண்டு  நாங்கள் நிம்மதியாக எங்கட வேலைப்பார்த்தால் நீங்கள் இல்லை எண்டு அடம்பிடிக்கிறீர்களே.. இது நியாயமோ...??

1958 இலேயே சோதிடன் சொன்னான் ஈழத் தமிழருக்கு 50 வருடத்திற்கு தான் இந்த கஷ்டம் எல்லாம். நாயாய் அடிமையாய் அலைவான். அதற்கு பிறகு பார் என்றான். அதற்கு பிறகு ஈழத்தமிழர் எப்படி இருப்பார்கள் என்று ஆர்வமாய் கேட்டவருக்கு சோதிடன் சொன்னான் " பிறகு அதுவே அவனுக்கு பழகிப் போய்விடும் கஷ்டம் தெரியாது" என்று.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

1958 இலேயே சோதிடன் சொன்னான் ஈழத் தமிழருக்கு 50 வருடத்திற்கு தான் இந்த கஷ்டம் எல்லாம். நாயாய் அடிமையாய் அலைவான். அதற்கு பிறகு பார் என்றான். அதற்கு பிறகு ஈழத்தமிழர் எப்படி இருப்பார்கள் என்று ஆர்வமாய் கேட்டவருக்கு சோதிடன் சொன்னான் " பிறகு அதுவே அவனுக்கு பழகிப் போய்விடும் கஷ்டம் தெரியாது" என்று.

 

 

புலத்தில்  புண்ணாக்காகவும்

தாயகத்தில் பாண் வாங்கும் உரிமை  படைத்தவனாகவும் இருப்பதே சாத்திரி  சொன்னது

அது நல்லபடியாகவே நடக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் பாண் வாங்கும் உரிமை  படைத்தவனாகவும் இருப்பதே சாத்திரி  சொன்னது.

அது நல்லபடியாகவே நடக்கிறது

 

உங்கள் ஊரில் ஒரு பன்னின்(பாண்) விலை இரண்டு லட்சம் உயிர்களா? :o :o :o :o

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.