Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா மீது இனப்படுகொலை குற்றம் சுமத்தி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (PPT) தீர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bremen_10_12_2013_01.jpg

 

சிறீலங்கா அரசு அமெரிக்கா.. பிரிட்டன் ஆகியவற்றின் பங்களிப்போடு "ஈழத்தமிழர்கள்" மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நிர்வகித்த வடக்குக் கிழக்கு அடங்கிய தமிழீழ தேசத்தில்.. இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஜேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்த இனப்படுகொலை போரின் பின்னும் தொடர்வதாக அவர்கள் கண்டறித்துள்ளனர். இந்த இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பாக.. தீர்ப்பளிக்க நீதிபதிகள் மேலும் ஆதாரங்கள் தேவை என்றும் கண்டறிந்துள்ளனர்.

 

1395163_696960760323344_1839985491_n.jpg

 

மேலும்.. மண்டேலாவின் (தென்) ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது வெறுமனவே ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்புப் பட்டம் சுமத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

 

கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும்.. இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

நீதிபதிகள் எல்லோரும் நிறைந்த அனுபவமும் சிறந்த கல்வித் தகமை கொண்டவர்களாகவும் சர்வதேசத்தை பிரதிநிதிப்படுத்துபவர்களாகவும்.. காணப்பட்டுள்ளனர்.

 

Sri Lanka guilty of genocide: PPT verdict

 

[TamilNet, Tuesday, 10 December 2013, 11:08 GMT]

 

After an assessment of evidences presented by eyewitnesses and experts, judges of the Permanent People’s Tribunal reached unanimous consensus that the Sri Lankan state was guilty of crimes of genocide against the Eezham Tamils and that the genocide is continuing even after the end of the military operations against the LTTE. Concluding the four day session with a press conference at Bremen on Tuesday, the judges also noted that the Sri Lankan military did not have capacity to commit genocide on its own and that it was supported by the UK-USA-India axis. While the judges held the USA and the UK to be complicit in the genocidal process, they were of the opinion that more evidence was needed as regards India’s role.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36878

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
PPT-seithy-150.jpg

ஜெர்மனியின் பேர்மினில் கடந்த சில தினங்களாக இலங்கைக்கு எதிரான வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இலங்கை அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்து பேரவை ஆகியன இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கு தொடர்பான முதலாம் கட்ட விசாரணை 2010ம் ஆண்டில் டப்ளினில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முதல் தடவையாக நீதிமன்றமொன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே மற்றும் புலம்பெயர் தமிழர்களும் இந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நிரந்தர மக்கள் நீதிமன்றின் இந்தத் தீர்ப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98778&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி


தர்மம் ஒரு நாள் வெல்லும்

எம் தலைவனின் பார்வை  ஒரு   போதும் பிழைத்ததில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட வலு இல்லாவிட்டாலும், கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுக்க ஏதுவாகும்.

நல்ல தீர்ப்பு இன்னும் நீதி சாகவில்லை.
இந்த தீர்ப்பு உலக நாடுகளுக்கு எல்லாம் தெரியப்படுத்த வேண்டும்..இதன் விபரம்
எல்லோரும் அறிய கிடைத்தால்.. இலங்கையின்
 தமிழர்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்
வெளியுலகத்திடம் நிரூபிக்கும் ஆதாரமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆண்டு முடிவில் நல்லதொரு செய்தி!.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு அடங்கிய தமிழீழ தேசத்தில்.. இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஜேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்த இனப்படுகொலை போரின் பின்னும் தொடர்வதாக அவர்கள் கண்டறித்துள்ளனர். இந்த இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பாக.. தீர்ப்பளிக்க நீதிபதிகள் மேலும் ஆதாரங்கள் தேவை என்றும் கண்டறிந்துள்ளனர்.

 

 விடுதலைப்புலிகள் அமைப்பு மீது வெறுமனவே ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்புப் பட்டம் சுமத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.

இந்தப் பரிந்துரை உலகத்தின் புரிந்துணர்வாக மாறட்டும். புத்தாண்டில் தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்.

 

தர்மத்தைச் சூது கௌவ்வும். தர்மம் மறுபடி அதனை வெல்லும்.

 

உண்மையயைத் ஆழத் தோண்டிப் புதைத்தாலும்

அது ஒருநாள் தலை நீட்டி நிமிரும்;.

1462882_10151848307358354_774487524_n.jp

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.