Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மகா பிரபாகரனை விடுவிக்க..

Featured Replies

அவசர வேண்டுகோள் ::

நாளை காலையில் தோழர். தமிழ் மகா பிரபாகரன் கைது தொடர்பாகவும், அவரது பாதுகாப்பு, விடுதலை , தாயகம் அழைத்தல் தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளரை சந்தித்து பேச அனைத்து இயக்க-கட்சி தோழர்களையும், பத்திரிக்கையாளர் , வழக்கறிஞர் நண்பர்களையும் அழைக்கிறோம்.

இரவு நெடுநேரம் ஆகிய காரணத்தினால் பலரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை… தலைவர்களையும், இதர தோழர்களையும் காலையில் தான் தொடர்பு கொள்ளமுடியும் என நினைக்கிறோம்..இத்தகவல் தெரிந்த தோழர்கள் தங்களது சக அமைப்புகளுடனோ, தலைவர்களுடனோ பேசி ஒரு குழுவாக சென்று சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் இதே முயற்சியை மேற்கொள்ள முயலுகிறோம்.

நாம் அனைவரும் இணைந்து இயக்க-கட்சி வேறுபாடு மறந்து ஒன்றாக தோழர். தமிழ் மகா பிரபாகரனை மீட்க முயற்சி எடுப்போம். வாய்ப்புள்ள தோழர்கள் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு இம்முயற்சியை முன்னெடுக்க வேண்டுகிறோம். தலைநகரில் இருக்கும் மூத்த தலைவர்கள் யாரேனும் நாளை வரும் பட்சத்தில், அவரது தலைமையில் சென்று தலைமைச் செயலாளரை அலுவலகத்தில் சந்தித்து பேச முயற்சிக்கலாம்.

காலத்தின் அருமை கருதி தோழர்கள் இம்முயற்சியையோ அல்லது இதைவிட சிறப்பான முயற்சி ஒன்றினையோ நாளை நடத்த முன்வரும்பட்சத்தில் மிக பயனுள்ளதாக அமையும்.
இன்று இரவு சிங்கள ராணுவத்தின் பிடியில் இருக்கும் நம் தோழனுக்காக குரல் கொடுப்போம் தோழர்களே.

நாளை காலை 10:30- 11:00 மணியளவில் பத்திரிக்கையாளர் சங்கத்தில் (அதன் அருகே) சந்தித்து பேசி முடிவெடுத்து செல்லலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
பத்திரிக்கையாளர் தோழர்கள் இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்கு துணை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்.

 

Thirumurugan Gandhi
(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

தமிழ் மகா பிரபாகரன் இலங்கையில் கைது தொடர்பான செய்தி இந்த இணைப்பில் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=133838&hl

யாரு இவர் உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா துளசி ..வெட்டி பயல் எல்லாம் ஹீரோ ஆகிட்டு இவங்களுக்கு காசு பார்க்க எங்களை விட்டா வேறை ஆக்கள் இல்லை புலித்தடம் தேடி போவார் அப்புறம் கதை எழுதி புத்தகம் விற்ப்பார் இப்ப மறுபடி புத்தகம் எழுத போனவர் போல .

 

ஏன் இவங்கள் எல்லாம் காஷ்மீர் போறது இல்லை குளிர் தடம் தேடி .அல்லது ஆப்கனிஸ்தான் போறது தலிபான் தடம் தேடி ...பிழைப்புக்கு ஈழத்தமிழன் விட்டா வேற இளிச்ச வாயால் இல்லை தானே .

 

உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரை விகடன் மாதிரி பத்திரிகை வாழும் . :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்

யாரு இவர் உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா துளசி ..வெட்டி பயல் எல்லாம் ஹீரோ ஆகிட்டு இவங்களுக்கு காசு பார்க்க எங்களை விட்டா வேறை ஆக்கள் இல்லை புலித்தடம் தேடி போவார் அப்புறம் கதை எழுதி புத்தகம் விற்ப்பார் இப்ப மறுபடி புத்தகம் எழுத போனவர் போல .

 

ஏன் இவங்கள் எல்லாம் காஷ்மீர் போறது இல்லை குளிர் தடம் தேடி .அல்லது ஆப்கனிஸ்தான் போறது தலிபான் தடம் தேடி ...பிழைப்புக்கு ஈழத்தமிழன் விட்டா வேற இளிச்ச வாயால் இல்லை தானே .

 

உங்களை மாதிரி ஆக்கள் இருக்கும் வரை விகடன் மாதிரி பத்திரிகை வாழும் . :icon_mrgreen: :icon_mrgreen:

 

அவர் ஒரு தமிழர் என்ற ரீதியில் தமிழக உறவுகள் அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சியை நான் தமிழக செய்திகள் பகுதியில் பதிந்துள்ளேன். அதனால் உங்களுக்கு எந்த நட்டமும் இருப்பதாக தெரியவில்லை. :)

 

அவர் காஷ்மீர் பிரச்சினை பற்றியும் எழுதியுள்ளார்.

 

- தவறான கருத்து ஒன்றை நீக்கியுள்ளேன் -

Edited by துளசி

ம்ம் விகடன் குழுமம் புலிகள் விபச்சாரம் செய்வதா எழுதிய ஆக்கள் தான் இவங்கள் இவரும் அப்ப முடிட்டு ஆமா போட்ட ஆள் வரலாறு முக்கியம் .

சிங்கப்பூர் தமிழனுக்கு அழுங்கோ பிரபலங்களுக்கு அழுது பெயர் தேடாமல் .

 

  • தொடங்கியவர்

ம்ம் விகடன் குழுமம் புலிகள் விபச்சாரம் செய்வதா எழுதிய ஆக்கள் தான் இவங்கள் இவரும் அப்ப முடிட்டு ஆமா போட்ட ஆள் வரலாறு முக்கியம் .

சிங்கப்பூர் தமிழனுக்கு அழுங்கோ பிரபலங்களுக்கு அழுது பெயர் தேடாமல் .

 

விகடன் எப்படிப்பட்டது என்பதை விட இந்நபர் எப்படி எழுதினார் என்பதே முக்கியம்.

 

ஒரு தமிழர் என்ற ரீதியில் அவருக்காக குரல்கொடுக்க தமிழக மக்களுக்கு உரிமை உள்ளது. அதை இங்கு இணைக்க எனக்கு உரிமை உள்ளது.

இதில் யாரும் பெயர் தேட முடியாது. பெயர் தேட நினைக்கவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  உலகமடா?

 

ஒரு  தமிழன்  எமது ஊருக்கு போகின்றார்

தகவல்களை  திரட்டுகின்றான்

வெளியிடுகின்றான்

அதை வியாபாரத்துக்கு செய்தானா?

விடுப்பில் சென்று செய்தானா என்பதா முக்கியம்?

எமது தகவல்கள் எத்தனை  வெளியில் வந்தது என்பது  தானே  முக்கியம்

பெயரே பிரபாகரன்

அதை  வைத்துக்கொண்டு

எந்த மனிதனாவது சிங்களவனிடம் போவானா?

அவனை  வியாபாரி  என்கின்றோம்

 

தமிழனாக  வேண்டாம்

ஒரு மனிதனை  சிங்கள  அரக்கர் பிடித்து வைத்துள்ளனர்

அவரை விடுவிக்க

மனிதாபிமானத்தில் திருமுருகன் அறிக்கை  விடுகின்றார்

அதை இங்கு பிரசுரித்த ஆதரவு கேட்பதும் வியாபாரமா????

 

என்ன  உலகமடா? :(  :(  :(

 
  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு வைகோ கடிதம் 

 

Vaiko-news-150-indian-seithy.jpg

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர். பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 அன்று பகல் 1.30 மணி அளவில், இலங்கை ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

  

மூவரையும் கைது செய்த ராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும், பசுபதி பிள்ளையையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகரனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர். செய்தியாளர்கள், உலகம் முழுவதும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்துரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால்,இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை;

உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும். சண்டே டைம்ஸ் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.

தாங்கள் உடனடியாக நமது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100044&category=IndianNews&language=tamil

  • தொடங்கியவர்

தமிழக பத்திரிக்கையாளர் மகா பிரபாகரனை இலங்கை அரசு விடுவித்து அவர் தற்போது 'குடியேறல்' அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் ...

 

(facebook)


சில தமிழக அமைப்புக்களின் சில ஊடகவியலாளர்களின் அழுத்தங்களினால் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மகா. தமிழ் பிரபாகரன் குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார். இனி பெரிதாக ஆபத்து இல்லை. இருந்தபோதிலும் அவர் தமிழ்நாடு திரும்பும்வரை அழுத்தம் கொடுக்கப்படவேண்டியது மிக முக்கியம். துரிதமாக செயற்பட்ட அனைவருக்கும் நன்றி..

 

Parani Krishnarajani

(fcebook)

வெற்றி வெற்றி தடை உடைத்து மீள்கிறான் தளபதி :lol: :lol:

  • தொடங்கியவர்

அஞ்சரன் அண்ணா கொஞ்ச காலமாகவே தமிழக உறவுகளை மட்டம் தட்டி தனது அரசியலை முன்னெடுக்கிறார். :lol:

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

about an hour ago

 

தோழர் மகாதமிழ்ப் பிரபாகரன் தொடர்பாக பலரும் அரசிற்கு நெருக்கடி அளித்திருக்கிறார்கள். அவரை இலங்கை அரசு விரைவில் விடுவிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.. விடுதலை நிகழாத பட்சத்தில் தோழர்கள் போராட்டக்களத்திற்கு வர தயாராகவேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்..

 

Thirumurugan Gandhi

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

இவ்வாறு ஒரு செய்தியையும் முகநூலில் கண்டேன். :rolleyes:

தோழர்களே ராணுவ பேச்சாளர் ஒருவரின் செய்தியை கொண்டே அவர் விடுதலை செய்யபட்டார் என்ற செய்தி வருகிறது ஆனால் அவர் விடுவிக்கபட்டார் என்பதற்கான எந்த அதிகாரமான அறிவிப்பும் கொழும்பு ஊடக வட்டாரங்களில் கிடைக்க பெற வில்லை தோழர்களே தோழர் பிரபாகரன் இன்னும் ராணுவ தடுப்பில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் ஊரில் இருக்கிற மக்களுக்காக போராடுறதை விட்டுட்டு ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போய் இப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டுப்பட்டவருக்காக போராடுவோம்

  • தொடங்கியவர்

இனி மேல் ஊரில் இருக்கிற மக்களுக்காக போராடுறதை விட்டுட்டு ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போய் இப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டுப்பட்டவருக்காக போராடுவோம்

 

இலங்கை நிலை தெரிந்தும் இவர்கள் செல்வதை நானும் விரும்பவில்லை.

ஆனால் சிறிதரன் அவர்கள் தான் இவர் தனது நண்பர் என்ற வகையில் இவரை அழைத்து இவர் அங்கு சுற்றுலா விசாவில் சென்றார் என செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் தனக்கு இவர் ஊடகவியலாளர் என தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியானவர்களுக்காக போராட்டம் செய்வதற்காக ஏனையவற்றை யாரும் கைவிடவில்லை.

 

சிறீதரனுக்கு தனது இந்திய நண்பர்களை இலங்கைக்கு அழைக்க உரிமை இருக்கு என்பதை தமிழ் நாட்டு உறவுகள் மன்மோகன் சிங்கை உணரவைக்க வேண்டும். சிறீதரன் அழைக்கும் யாரையும் பாஸ் போட்டில்ல் இருக்கும் தொழிலை பார்த்து இலங்கை நாடுகடத்த முடியாது என்றதை மன்மோகன் சிங் இலங்கைக்கு எடுத்து சொல்ல வேண்டும்.  

  • தொடங்கியவர்

Please Send e-mails to the fallowing Id's..

eam@mea.gov.in,
dirfs@mea.gov.in,
psfs@mea.gov.in,

To:
Hon`ble,
Salman Khurshid,
External Affairs Minister,
Govt.of India, New Delhi

Sir,

We urge you to intervene and insist Govt of Sri lanka to release the Journalist from Indian Media, Mr. Maka. Tamiz Pirabakaran, who has been detained at Lanka by military forces. Further his safety should be assured.
Regards,

இந்த முகவரிக்கு நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களை மனு அனுப்பச் சொல்லுங்கள்

REPOTERS WITHOUT BORDERS

 

France :

International Secretariat

Reporters sans frontières

47 rue vivienne

75002 Paris - France
Phone. +33 1 44 83 84 84

Asia Desk : asia@rsf.org

Europe Desk : europe@rsf.org

Press Freedom Index : index@rsf.org

Administration : administration@rsf.org

Email:

sct@amnesty.org.uk

 

Phone:

General enquiries 020 7033 1500

Supporter queries 020 7033 1777

Post:

Amnesty International UK

Human Rights Action Centre

17-25 New Inn Yard

London

EC2A 3EA

 

(facebook)

Edited by துளசி

ஒருநாளைக்கு முன்று மரணம் நிகழுது யாழ்ப்பணத்தில் ..வறுமை ...பசி ..பட்டினி என்று இதை எவரும் காண்பதா இல்லை இங்கின போட்டு ஒப்பாரி வைப்பதும் இல்லை எமக்கு தேவை எல்லாம் எம்மை நாட்டு பற்றாளர் ..தேசியவாதி என்கிற முகம் மட்டுமே .

  • தொடங்கியவர்

ஒருநாளைக்கு முன்று மரணம் நிகழுது யாழ்ப்பணத்தில் ..வறுமை ...பசி ..பட்டினி என்று இதை எவரும் காண்பதா இல்லை இங்கின போட்டு ஒப்பாரி வைப்பதும் இல்லை எமக்கு தேவை எல்லாம் எம்மை நாட்டு பற்றாளர் ..தேசியவாதி என்கிற முகம் மட்டுமே .

 

முகநூலில் இந்த கருத்துக்களை பகிர்ந்தவர்கள் எவரும் தம்மை நாட்டுப்பற்றாளர் தேசியவாதி என கூறவில்லை. அதை இங்கு share பண்ணிய நானும் அவ்வாறு கூறவில்லை. நினைக்கவுமில்லை.

 

தமிழக உறவுகள் தமிழக இளைஞனுக்காக குரல் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

 

குற்றம் சாட்டுவதில் முன்னுக்கு நிற்கும் உங்களை போன்றோர் எம்மக்களின் பிரச்சினை பற்றி யாழில் இணையுங்கள். அவர்களுக்கு என்ன செய்யலாம் என நடவடிக்கைகளை முன்னெடுங்கள். இச்செய்திகளை இணைக்கும் நான் தான் உங்களுக்கு பிரச்சினை என்றால் ஏனைய கள உறவுகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.

இல்லாமல் ஒப்பாரி வைப்பது மட்டும் தான் நோக்கம் என்றால் ஒப்பாரி வைக்க கள உறவுகளை அழையுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல் காலத்திலை எங்கடை பிரச்சனையை நாங்களே தீர்க்கிற வழியை பாக்கிறதுதான் நல்லது போலை கிடக்கு!!!!! இந்திய அரசியல்??????? அதிலையும் தமிழ்நாட்டு அரசியலை நம்பிவனுக்கு நடுச்சந்திதான்....இது என்ரை சொந்த அனுபவம் மட்டுமே.

  • தொடங்கியவர்

இனிமேல் காலத்திலை எங்கடை பிரச்சனையை நாங்களே தீர்க்கிற வழியை பாக்கிறதுதான் நல்லது போலை கிடக்கு!!!!! இந்திய அரசியல்??????? அதிலையும் தமிழ்நாட்டு அரசியலை நம்பிவனுக்கு நடுச்சந்திதான்....இது என்ரை சொந்த அனுபவம் மட்டுமே.

 

கவிஞர் ஜெயபாலன் ஐயா கைது என்றதும் தமிழக மக்கள் குரல்கொடுக்க அமைதியாக இருப்பீர்கள். ஆனால் ஒரு தமிழக உறவுக்காக அவர்கள் குரல்கொடுத்தால் உடனே எமது நாடு, எமது பிரச்சினை, அது இது என்று கதைக்க வெளிக்கிட்டிடுவீர்கள்.

அப்படியானால் தமிழக மக்கள் வந்து தமிழீழம் பிடித்து தரவேணும் என்றா இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டிருந்தீர்கள்? நான் அவ்வாறு நினைத்ததில்லை. எமக்கு அவர்கள் ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேவைப்படும் நேரங்களில் இந்தியாவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

 

எமக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அப்படியிருந்தும் இப்பொழுது பலர் எமக்காக எவ்வளவோ குரல்கொடுக்கிறார்கள். ஜெர்மன் தீர்ப்பாயத்தில் கூட திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது. பிழை பிடிக்க மட்டும் முன்னுக்கு வந்து விடுவீர்கள். <_<

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கான இலங்கை தூதரக மின்னஞ்சல் முகவரி:
lankacomnd@mea.gov.lk, lankacomnd@gmail.

தொலை நகல் அனுப்ப வாய்ப்புள்ளவர்கள் 011 23793604 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

தொலைபேசியில் இலங்கைத் தூரதரத்துடன் பேச விரும்புவபவர்கள்: 011 23010201, 23010202, 23010203 23017498 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

உறவுகளே உங்கள் வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் உடன் பதிவு செய்யுங்கள்.

தூதரக முகவரி:

High Commission of Sri Lanka
No : 27, Kautilya Marg,
Chanakyapuri, New Delhi 110021

 

(facebook)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞர் ஜெயபாலன் ஐயா கைது என்றதும் தமிழக மக்கள் குரல்கொடுக்க அமைதியாக இருப்பீர்கள். ஆனால் ஒரு தமிழக உறவுக்காக அவர்கள் குரல்கொடுத்தால் உடனே எமது நாடு, எமது பிரச்சினை, அது இது என்று கதைக்க வெளிக்கிட்டிடுவீர்கள்.

அப்படியானால் தமிழக மக்கள் வந்து தமிழீழம் பிடித்து தரவேணும் என்றா இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டிருந்தீர்கள்? நான் அவ்வாறு நினைத்ததில்லை. எமக்கு அவர்கள் ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேவைப்படும் நேரங்களில் இந்தியாவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

 

எமக்காக குரல்கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அப்படியிருந்தும் இப்பொழுது பலர் எமக்காக எவ்வளவோ குரல்கொடுக்கிறார்கள். ஜெர்மன் தீர்ப்பாயத்தில் கூட திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாது. பிழை பிடிக்க மட்டும் முன்னுக்கு வந்து விடுவீர்கள். <_<

 

இங்கே கூறப்பட்டது என்,எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. எல்லா இடத்திலும் கருத்து சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்கு எது அவசியம் சரி எனப்படுகின்றதோ அதை நான் செய்வேன் இது தான் என் நிலைப்பாடு.
 
இனிவரும் காலங்களில் உங்களுக்கு விருப்பமானால் இந்தத்திரியில் இன்னார் மட்டுமே கருத்திட முடியும் என குறிப்பிடுங்கள்....உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை குறைக்க உதவியாக இருக்கும். :icon_idea:

பத்திரிகை சுதந்திரத்தை அடக்குகிறது இலங்கை: கருணாநிதி

 

கேள்வி :- இலங்கையில் தமிழ் பிரபாகரன் என்ற பத்திரிகையாளரை அந்த நாட்டு அரசு கைது செய்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தை அந்த நாடு தன் கைக்குள் வைத்துக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

பதில் :- இலங்கை அரசின் அத்துமீறல்களுக்கு - பத்திரிகை சுதந்திரம் உட்பட எல்லா சுதந்திரங்களையும் அடக்குவதற்கு இது ஓர் உதாரணம்.

 

 

http://www.maalaimalar.com/2013/12/27221011/press-freedom-Crackdown-Sri-La.html

 

 

  • தொடங்கியவர்

தமிழ் பிரபாகரனை உடனடியாக விடுதலை செய்!
-பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்
==========================================

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக செய்தியாளரை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

"இலங்கை ராணுவத்தால் கிளிநொச்சி, வேரவில் பகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த தமிழ் பிரபாகரன் என்ற இளம் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் தமிழ் பிரபாகரன் வடக்கு மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை படம் பிடித்ததாகவும், அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு கூறியிருக்கிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன் வடக்கு மாகாண பகுதியில் உள்ள பொதுமக்களை சந்திக்க சென்ற செய்தியாளரை இலங்கை ராணுவம் கைது செய்து கிளிநொச்சி ஜெயபுரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்காக தற்போது கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்குள்ள தமிழர்கள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் இலங்கை அரசு தொடர் மனிதஉரிமை மீறும் செயல்களை செய்துவருகிறது என்பதற்கு இது உதாரணமாக உள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துத்தரப்பட்டுள்ளது உலக நாடுகளிலிருந்து யார் வேண்டுமானாலும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சென்று இதனை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே தற்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் இலங்கையில் தமிழர்கள் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை, ராணுவத்தின் அத்துமீறல்களையும், வெளி உலகிற்கு கொண்டுவரும் பத்திரிக்கையாளர்களின் மீது தாக்குதல் நடத்துவதும், கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் இலங்கை அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

ஐநா விதிகளின் படி இவை அனைத்தும் கடுமையான மனிதஉரிமை மீறலாகும்.

தகுந்த காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பிரபாகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

(facebook)

 

பி.கு: செய்தி சேகரிக்க சென்றார் என்று எழுதியுள்ளார்கள். ஆனால் ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் செல்லவில்லை. சிறிதரன் அவர்களின் நண்பர் என்ற ரீதியில் சென்றார் என்பதே சரியானது.

  • தொடங்கியவர்

ஞாநி சங்கரன்:

தமிழக பத்திரிகையாளர் மகா. பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்திருப்பதைக் கண்டிக்கிறேன். அனைவரும் கண்டிக்கவேண்டும். அவரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு, இந்திய அரசு அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

 

(facebook)

 

பி.கு: பல தமிழின விரோத கருத்துக்கள் வைக்கும் இவரும் குரல்கொடுத்திருக்கிறார். மின்னஞ்சல் அனுப்பியதாகவும் குறிப்பிட்டு மற்றவர்களையும் அனுப்பும்படி கேட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.