Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வின் விளிம்பு நிலையில் பூம்பூம் மாட்டுக்காரர்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்வின் விளிம்பு நிலையில் பூம்பூம் மாட்டுக்காரர்கள்..
 

Untitled-1-1copy1.jpg...1.jpg

அழிந்து வருகிறது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் நம்பிக்கை இன்மை என்பது தற்போதைய வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. அத நேரத்தில் யாராவது நம்பிக்கை வார்த்தை சொல்லமாட்டார்களா? என்ற தவிப்பும் ஏக்கமும் இதயத்தின் ஓரத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் ஏங்கும் நம்பிக்கை வார்த்தையை மனிதனோ மாடோ சொன்னால் கூட திருப்தியடையும் மனநிலையில் தான் முந்தைய காலங்கள் இருந்தன. மனைவியோ அல்லது தான் சார்ந்த கட்சியின் தலைவர் / தலைவியோ எதைச் சொன்னாலும் மறுதலிக்காமல் தலையினை ஆட்டுபவர்களை பூம் பூம் மாடு எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு.

கிண்டலாகச் சொல்லப்பட்டாலும் பூம்பூம் மாடு என்பது தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார அடையாளம் என்பதை மறுக்கமுடியாது.அந்தக் காலத்தில் கிராமத்துத் தெருக்களில் பூம்பூம் மாடு நுழைந்து விட்டாலே குழந்தைகளுக்கு குஷி தான். திடகாத்திரமான அந்த மாட்டின் முதுகில் வண்ணவண்ண துணிகள். சீவியகொம்புகள், கழுத்து, நெற்றி. . என எங்கும் அலங்காரம். கம்பீரமான தோற்றத்தில் வரும் அந்த மாட்டினைப் பிடித்திருப்பவரும் கண்ணைக் கவரும் நிறத்திலான வேட்டியிலும், சட்டையிலும் இருப்பார். வெற்றிலையைக் குதப்பிய வாயோடு தனது தோளில் தொங்கவிட்டிருக்கும் உறுமி மேளத்தை கையில் வைத்திருக்கும் குச்சியால் தேய்த்து “உர்ருங்.. உர்ருங்..” என ஒலியெழுப்புவார்.அவர் கையில் பிடித்து வரும் அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாடு தலையைச் சிலுப்பும். இந்த மாட்டின்பின்னால் கிராமத்துக் குழந்தைகள் திரண்டு செல்வார்கள்.

ஒரு வீட்டின் முன்பாக பூம்பூம் மாட்டைநிறுத்தி அதைப் பிடித்து வருபவர், “இந்த வீட்டு மகராசி நமக்கு அரிசி போடுவாங்களா” எனமாட்டிடம் கேட்பார். அந்த மாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டும். “இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப்போகுதா” என்ற கேள்விக்கும் மாடு தலையை அசைக்கும். அரிசியை வாங்கியவுடன் மாட்டுக்காரர், “அம்மாவும் குடும்பமும் நல்லா இருக்காணும் வணக்கம் சொல்லு’ என்றவுடன், மாடு முன்னங்காலை மடித்து, தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்வது அருமையான காட்சியாக இருக்கும். அந்த வீட்டிலுள்ளவர்கள் மாட்டின் வழியே இறைவனே வந்து நமக்கு நல்ல வழி காட்டுவதாக எண்ணி மகிழ்வார்கள். இப்படி ஒரு காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பவனி வந்த பூம்பூம் மாடுகளும்,

அதன் எஜமானர்களும் இன்றைக்கு அருகிப் போய் விட்டார்கள். இன்றைய குழந்தைகளுக்கு பூம்பூம் மாடு பற்றி அறியும் வாய்ப்பு குறைந்துவிட்டது. தமிழ்ச் சமூக மரபில், அதன் பண்பாட்டு அசைவில் அங்கம் வகித்திருந்த இக் குறிசொல்லி மாடுகள் இன்றைக்கு எங்கே இருக்கின்றன என்று தேடிப்பார்க்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாடுகள் மட்டுமின்றி, அவற்றைப் பழக்கப்படுத்தி, மக்களை மகிழ்ச்சிப்படுத்திய பூம்பூம் மாட்டுக்ல்காரக் குடும்பங்களும் வாழ்நிலையில் மிகத் தாழ்ந்தே இன்னமும் உழல்கின்றன என்பதை நாம் நேரில் கண்டபோது வேதனைதான் மிஞ்சியது..

மதுரையிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தொலைவில் மதுரை – சிவகங்கை முதன்மைச் சாலையிலிருந்து விலகி உள்ளது சக்கிமங்கலம். இரு மருங்கும் கருவேலங்காடுகள். ஆங்காங்கே தெரியும் ஓட்டு வீடுகள். நம் பயண வழியில் பறக்கிறது செவக்காட்டுப் புழுதி. சிறிது சிறிதாய் பாறைக்குன்றுகள் தென்படுகின்றன. அவற்றுள் சில கல்குவாரிகளுக்காக ஆழமாய் வெட்டப்பட்டு, அவ்விடங்களில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது. மறுபடியும் விலகிச் செல்லும் ஒரு செம்மண் பாதையில் பயணம் செய் து , அங்கிருந்து குறுக்காகச் செல்லும் பாதையினூடாகச்

சென்றால் எல்.கே.பி.நகர் நம்மை வரவேற்கிறது. அங்குதான் “ஆதியன் பூம்பூம் மாட்டுக்கார இனமும், சாட்டையடித்துக் கழைக் கூத்தாடுவோர் இனமும் இணைந்து வாழ்கின்றன. தொண்ணூறு குடும்பங்கள் உள்ள இந்த ஊரில் இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே கொள்வினை, கொடுப்பினை (அதாங்க மணஉறவு) இல்லை. ஆனாலும் வேறு எந்தவிதமான பிணக்குகளும் இல்லை.

ஒற்றுமையாக வாழ்கிறார்கள். தற்போது இவர்கள் வாழும் ஊரில் தொண்ணூறு குடும்பங்கள் இருந்தாலும் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கிற வீடுகளின் எண்ணிக்கை வெறும் முப்பதுதான். மற்ற குடும்பங்கள் எல்லாம் எவ்வாறு வாழ்கின்றன என்ற கேள்விக்கு, “ஒரு வீட்டுக்குள்ள ரெண்டுக்கு மேற்பட்ட குடும்பங்க இருக்குறோமுங்க. சில குடும்பங்க மரத்தடியிலயும் , இன்னும் சில தெருவுல கூடாரம் அமைச்சும் தங்கியிருக்குதுக. என்னங்க பண்றது இந்த அதிகாரிங்ககிட்ட எத்தன தடவ தான் நாங்க கோரிக்கை வெக்கிறது? ஒருத்தரும் எங்க கொறய காது குடுத்துக் கேட்க மாட்டேங்கிறாங்க. மதுரை மாவட்டத்துக்கு கலெக்டரா இருந்த சகாயத்துல இருந்து எல்லாரும் வந்து பாத்துட்டுப் போனாங்க. ஆனா ஒன்னும் நடக்கல”என்கிறார் பூம்பூம் மாட்டுக்கார இனத்தின் தலைவர் காளியப்பன்.

அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்க, மிகச் சிறு வயதுத் தாளிணிமார்களையும் பார்க்க முடிந்தது. 14 அல்லது 16 வயதையொத்த அச்சிறுமிகள் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்குத் தாளிணிமார்களாக இருப்பதைக் கண்டபோது கல்வியறிவின் வாசம் இன்னமும் இ ங்கே எட்டவில்லையென்பது புரிந்தது . “ எங்களுக்குள்ளேயே மண உறவு செஞ்சுக்கிறதுனால, பொண்ணு வயசுக்கு வந்ததும்

எங்க இனத்துப் பசங்களுக்கு உடனே பேசி முடிச்சுடுவோம். அதில்லாம, பொண்ணக் கட்டிக்க வர்ற பையன் வீட்டார்தான் பெண்ணுக்கு நகை நட்டு போட்டுக் கட்டிட்டுப் போகணும். சீர், செனத்தி, வரதட்சணை இதுக்கெல்லாம் இங்க இடமில்ல.’ தங்கள் சாதி நடைமுறை குறித்துப் பெருமை பொங்கப் பேசுகிறார் காளியப்பன். பேசிக்கொண்டிருக்கும்போதே அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாடுகள் சில கொண்டுவரப்பட்டன. பெரிய திமிலோடு, மிகக் கம்பீரமான தோற்றத்துடன் அம்மாடுகள்வந்த அழகே தனி.

இருப்பதிலேயே மிக அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளித்தான் ‘அழகர்’ (ஒரு பூம்பூம் மாட்டோட பெயர்தான்) . ‘இதுக்கு வயசு பதினாறுங்க. அழகர் கோவில்லருந்து கொண்டு வந்தோம். முன்பெல்லாம் அழகர் கோவிலுக்கு நேர்ந்து விடுகிற மாடுகள எங்களுக்குத்தான் இனாமா கொடுப்பாங்க. அத வாங்கிட்டு வந்து, நாங்க வித்தை காட்டிப் பொழச்சோம், ஆனா இன்னைக்கி அதுங்கள அடிமாடா கேரளாவுக்கு அனுப்ப காண்ட்ராக்ட்காரங்களுக்கு ஒப்பந்தம் போட்ருக்காங்க. அதனால, நேர்ந்து விடுகிற பக்தர்கள்கிட்ட நேரடியா பேசி மாடுகள வாங்கிட்டு வாறோமுங்க’ என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் மாரியப்பன்.

“சாமி, ஒங்க பார்வைக்கு அலங்காரமா தெரியுற எங்க மாடுகள பழக்கி, குறி சொல்ற அளவுக்கு தயார்ப்படுத்தற வேலையிருக்கே, அது பெரிய வித்தைங்க. இந்த ஊர்ல மட்டும் முப்பது மாடுக இருக்கு. இத ஊர் ஊரா அழைச்சுட்டுப் போயி, ஜனங்க கிட்ட காசு பாக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும் . இருபது வருசத்துக்கு முன்னால நாங்க தெருவுல வந்துட்டாலே,

“ஏலேளிணிதாதன் வந்துட்டான்டான்”னு சொல்லி மக்கள் அவங்களால முடிஞ்ச அளவு ஒரு ரூபாயோ, ரெண்டு ரூபாயோ, அரிசியோ, பருப்போ கொடுப்பாங்க. இப்ப அப்படில்லாம் இல்ல சாமி. ஒரு நாளைக்கு ஐம்பது ரூபா சம்பாரிக்கிறதுக்குள்ள உசிரு போளிணி உசிரு வந்துரும். எங்க வயித்துப்பாட்டோட, எங்கள நம்பி இருக்கிற இந்த வாயில்லா ஜீவனோட வயித்துப்பாட்டயும் நாங்க பாத்தாகணும்ல சாமி. கிட்டதட்ட வீடு ஆறு மாசம், காடு ஆறு மாசம் என்ற நிலை தான் எங்களின் வாழ்க்கை. முன்பெல்லாம் எட்டு மாதங்கள் முக்கிய ஊர்களில் நடக்கும் விழாக்களுக்குச் சென்று அங்கு வித்தை காட்டி வருவோம். இப்ப நகரத்து மக்கள் எங்களை மதிக்கிறதில்ல. முன்பெல்லாம் எல்லா கோவில் விழாக்களிலும் பூம் பூம் மாடு பிடித்திருந்த முக்கிய இடத்தை இப்ப ராட்டினம், சினிமாக்கள் பிடிச்சிடுச்சு.” என்று இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார் மாரியப்பன்.

‘காட்டு நாயக்கர் சாதியிலுள்ள உட்பிரிவுகளைச் சேர்ந்தோரில் ஒரு சில குழுக்களைத் தவிர்த்து, பிற அனைத்துக் குழுக்களும் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியுள்ளன. அப்படி ஒரு சிலர் பள்ளிக் கல்வியைத் தாண்டினாலும், சில குழுக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் அக்குழுக்களைச் சார்ந்த மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் மீண்டும் குலத் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

“அது மட்டுமில்ல சாமி. பொழப்புக்காக அசலூருக்குப் போகும்போது, ஏதாவது திருட்டுச் சம்பவம் அங்க நடந்தா அதுக்குக் காரணம் நாங்கதான்னு போலீசு எங்களப் பிடிச்சுட்டுப்போயி உள்ள வச்சுரும். அதுக்குப் பெறகு கையில கால்ல விழுந்து, காசு பணம் குடுத்துட்டு நாங்க வெளிய வரணும்.எங்களுக்குள்ள ஏதாவது தப்பு செஞ்சாக்கூட எங்க பஞ்சாயத்துல அபராதம் கட்டி, தண்டனை தந்துக்கிற நாங்களா, மத்த ஊர்கள்ல போயி தப்பு பண்ணிடப்போறோம்” என்று தர்க்க ரீதியாகப் பேசி இடித்துரைத்தார் பூம்பூம் மாட்டுக்கார இனத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவர். இவர்களைப் போன்ற நாடோடிக் குழுக்கள் பெரும்பாலும் காட்டு நாயக்கர் என்ற சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் முப்பது வகையான உட்குழுக்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் பரவலாக வாழும் இவ்வினக் குடும்பங்களின் எண்ணிக்கை எட்டு இலட்சமாம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக காடுகள்,மலைகளில் வாழ்ந்த இவர்களெல்லாம் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அங்கிருந்து விரட்டப்பட்டவர்கள் என்றும், பிறகு வாழவழியற்று திரிந்தபோது, தனித்தனிக்குழுக்களாய்ப் பிரிந்து ஏதேனும் தொழில் செய்து வாழ்வோம் என்று உறுதியெடுத்து ஒவ்வொரு குழுவும் தமிழகம் முழுவதும் பரவலாய்ப் பிரிந்து சென்றனர் என்றும் சொல்கிறார் தமிழ்நாடு நாடோடிகள் இன கூட்டமைப்பின் நிறுவனர் மகேஸ்வரி.

“காட்டு நாயக்கர் சாதியிலுள்ள உட்பிரிவுகளைச் சேர்ந்தோரில் ஒரு சில குழுக்களைத் தவிர்த்து, பிற அனைத்துக் குழுக் களும் கல்வியறிவில் மிகவும் பின்தங்கியுள்ளன. அப்படி ஒரு சிலர் பள்ளிக் கல்வியைத் தாண்டினாலும், சில குழுக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் அக்குழுக்களைச் சார்ந்த மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர முடியாமல் மீண்டும் குலத் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களின் வாயிலாக எங்களது கோரிக்கைகளை பலமுறை எடுத்துச் சென்றும் நமது அரசு அதிகாரிகள் கேளாச் செவியுடையோர்களாகத் தான் இருக்கிறார்கள்” என்று அழாத குறையாக நம்மிடம் தெரிவித்தார் மகேஸ்வரி.

“சார், இன்னிக்கி டில்லியில ஒரு பொண்ண கற்பழிச்சிட்டாங்கன்னு சொன்னதும் இந்தியாவே கொந்தளிச்சுப் போச்சு . நமக்கும் வருத்தம்தான். ஆனா, ஒரு மாசத்துக்கு முன்னால, எங்க சாதியில வேசங்கட்டுற இனத்தைச் சேர்ந்த பதினாறு வயசுப் பையன பக்கத்து ஊரு இளவட்டப் பசங்க சேந்து ஓரின வன்புணர்ச்சி செஞ்சு கொன்னே போட்டுட்டாங்க.

இந்தக் கொடுமைய கண்டுக்க எந்த மனித உரிமை அமைப்பும் வரலை. நாங்களாத்தான் போராடிக்கிட்டு இருக்கோம். எங்களுக்குன்னு ஒரு சமூக மரியாதை கொடைக்கணும்னா , அது அரசாங்கத்தோட கையிலதான் இருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னால கூட தமிழக முதல்வரைச் சந்திச்சு எங்க கோரிக்கைகளச் சொன்னோம். அவங்களும் ரொம்ப பரிவோட கேட்டுக்கிட்டாங்க. கூடிய சீக்கிரமே நல்ல முடிவு கெடைக்கும்னு நம்புறோம்” என்று மிக நம்பிக்கையோடு நம்மிடம் பேசினார் ராஜாங்கம். இவர் மகேஸ்வரியின் கணவர். காட்டு நாயக்கர் சாதியில் பிறந்து, வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்று இன்று தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி செய்து வருகிறார்.

“ஏதாவது திருட்டுச் சம்பவம் அங்க நடந்தாஅதுக்குக் காரணம் நாங்கதான்னு போலீசு எங்களப் பிடிச்சுட்டுப்போயி உள்ள வச்சுரும். அதுக்குப் பெறகு கையில கால்ல விழுந்து, காசு பணம் குடுத்துட்டு நாங்க வெளிய வரணும். எங்களுக்குள்ள ஏதாவது தப்பு செஞ்சாக்கூட எங்க பஞ்சாயத்துல அபராதம் கட்டி, தண்டனை தந்துக்கிற நாங்களா, மத்த ஊர்கள்ல போயி தப்பு பண்ணிடப்போறோம்-?”

போராடிப் போராடி களைத்தவர்களாக விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறார்கள் பூம்பூம் மாட்டுக்கார இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு வீட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அநாகரிக வாழ்வியல் சூழல் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. சாதிச் சான்றிதழ் வழங்காததன் மூலம் தொடர் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு அவ்வினக் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ‘அவர்களுக்கான உரிமைகளை மறுத்து வருகிறோம்..’ என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மட்டுமே பூம் பூம் மாட்டுக்கார இனத்தினர் வாழ்விலும் மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும்.

http://puthiyadarisanam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-3/

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=as-YSjG4exU

 

பாவங்கள்... யாரும் கவனிப்பதாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பூம் பூம் மாடு எண்டா தலைய ஆட்டணும்னே...அதான் யாரும் கவனிக்கல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூம் பூம் மாடு ஊரில நான் கண்டதே இல்லை. ஒருவேளை இது தமிழக வழக்கமாக இருந்திருக்கலாம். இருந்தாலும்.. மாட்டை வைச்சு பிழைக்கிறது தப்பு. அது பாவம்.  :)  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூம் பூம் மாடு ஊரில நான் கண்டதே இல்லை. ஒருவேளை இது தமிழக வழக்கமாக இருந்திருக்கலாம். இருந்தாலும்.. மாட்டை வைச்சு பிழைக்கிறது தப்பு. அது பாவம்.  :)  :lol:

 

மாட்டை வைச்சு பிழைக்கிறது பாவம் என்றால்.... மாட்டை வைத்து வண்டில் இழுப்பது, மாட்டை வைத்து உழுவது, மாட்டில் பால் கறப்பது, பால் குடிப்பது, பட்டர் சாப்பிடுவது.... எல்லாம் பாவம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உயிரினத்தின் மீதும் பெளதீகரீதியாக.. உளவியல் ரீதியாக.. இரசாயன ரீதியாக.. உயிரியல் ரீதியாக.. பாதிப்பு வரும் வகையில் மனிதன் நடந்து கொண்டால்.. அது பாவமே.  :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஆணும் பொண்ணும் ஒன்டர கலந்துக்கிறதும் பாவமாண்ணே?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் மீது இன்னொரு மனிதன் அவனது விருப்புக்கு மாறாக.. அவனை பெளதீக.. உயிரியல்.. உளவியல்.. இரசாயனவியல் பாதிப்புக்கு உள்ளாக.. எது செய்தாலும் அது பாவம் மட்டுமல்ல.. குற்றமும் ஆகும்.  :)


அப்படி இல்லாவிட்டால் rape எல்லாம் குற்றமற்றதாகவிடும்.  :)

நான் இலங்கையில் (யாழ்மாவட்டத்தில்) வசிக்கும் போது 1979க்கு முன் ஒரு தரம் ஒரு தைப்பொங்கல் நாளில் இவர்கள் வீடு வீடாக சென்று பணம் கேட்டார்கள்...அந்த ஒரு தடவைதான் இவர்களை கண்டேன்.. இவர்கள் இந்தியாவிலிருந்தே வந்திருந்தார்கள்...அதே மாதிரி குறவர்களும் 2-3 தரம் வந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கண்டிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.