Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொத்துக்குண்டு மற்றும் இராசாயன ஆயதங்கள் மூலமும் படுகொலை! மன்னார் ஆயர் வாக்குமூலம்!!

Featured Replies

சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த சூட்டுத்தவிர்ப்பு வலயங்களில் வாழ்ந்த மக்கள் மீது படை யினர் தாக்குதல் நடத்தியதும், கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் போரில் பயன்படுத் தியமையும் உன்மையே. புலிகளை காரணம் காட்டிக் கொண்டு நடத்தப்பட்ட இவ்வாறான தாக்கு தல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கண கறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட மக்கள் தொகைக்கும் போரின் இறுதியில் படையினரின் கட்டுப்பா ட்டிற்குள் வந்த மக்கள் தொகை;கும் வித்தியாசம் உள்ளது. இதன்படி 1லட்சத்து 46ஆயிரத்து 67 9 பொதுமக்களுக்கு என்ன நடந்து என்பதே தெரியாது. இன்றைய தினம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான ப ணியகத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்ரீபன் ரெப்; யாழ்ப்பாணம் மற்றும் மன் னார் ஆயர்களை யாழ்.ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடியிருந்தார். இச்சந்திப்பின்போதே ம ன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், போரின் இறுதிக் கட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் சுதந்திரபுரம், புதுமாத்தளன் உள்ளிட்ட சில இடங்களில் சூட்டுத் தவிர்ப்பு வலயங்களை அறிவித் திருந்தது. இவற்றில் பெருமளவான மக்கள் மிக நம்பிக்கையுடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனா ல் படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்காக அவர்கள் கூறும் காரணம் புலிகள் அந்தப் பகுதியில் நின்றார்கள் என்பதே. அத்தகைய காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கமே சூட்டுத்தவிர்ப்பு வலயங்களை அறிவித்திருந் தது. எனவே மக்கள் அதற்குள் தஞ்சமடைகையில் புலிகள் அதற்குள் இருந்தார்கள் என்பதற்கா க ஒரு சில புலிகளைக் கொல்வதற்காக பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல முடியாது. உன்மையில் சுதந்திரபுரம் பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 1வது சூ ட்டுத்தவிர்ப்பு வலயத்திற்குள் புலிகள் வரவில்லை. அவர்கள் அதனைத் தவிர்த்தே இருந்தார்கள். இவற்றை விடவும் பாடசாலைகள், ஆலயங்கள், வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்த ப்பட்டன. கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மாத்தளன் உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நட த்தப்பட்டது. இதனால் இந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த பல ஆயிரக்கணக்கா ன மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆலயங்கள் மீது இறுதி யுத்தத்தின்போது மட்டுமல்லாமல் முன் னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதற்கு நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் சிறந்த உதாரணம். இதேபோன்று சர்வதேச அளவில் போர்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருக்கும் கொத்துக் குண்டுகளையும், இரசாயன ஆயுத ங்களையும், காற்றில் வெடிக்கும் குண்டுகளையும் படையினர் போரில் பயன்படுத்தினார்கள். முதல hவது இரசாயன ஆயுத தாக்குதல் அக்கராயன் பிரதேசத்தில் இடம்பெற்றது. மேலும் உணவு மற்றும் மருந்து போன்றவற்றை போருக்கான ஆயுதங்களாக சிறீலங்கா அரசாங்க ம் பயன்படுத்தியிருக்கின்றது. போரின் நிறைவில் சில வைத்தியர்கள் அவ்வாறு இல்லை எனக் கூ றினாலும் நடந்த உன்மை இதுவேயாகும். இவற்றோடு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்கள். தற்போதும் அவர்கள் இங்கே வருவதற்கான தடை தொடர்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்க ள் உதவிகளைப் பெறுவதற்கு பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றார்கள். மேலும் போரின் பின்னர் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்கள் அ தற்குச் சாட்சியாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒவ்வொ ரு நபருக்கும் தனித்தனியான விசாரணையினை நாம் கேட்டு நிற்கின்றோம். அது மிக கடினமாக இருந்தாலும் அவ்வாறான விசாரணைகள் தேவை. செம்மணி தொடக்கம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர் களுடைய எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையிi ன நாங்கள் கோருகின்றோம். அவர்கள் எதற்காக எந்தக்காலத்தில் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பிலான விசாரணையும் நடத்தப்படவேண்டும். எனவே இறுதிப்போரில் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களினால் 2008ம் ஆண்டு ஜப்பசி மா தத்திற்கும் 2009ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட 8மாதங்களில் 1லட்சத்து 46ஆயிரத்து 679 தமிழ் மக்கள் எங்கே என்றே தெரியவில்லை. இதற்கு இலங்கை அரசாங்கமும் பதில் தரவி ல்லை. மாறாக இதனைப் பேசியதற்காக 4மணிநேரம் புலனாய்வாளர்கள் என்னை விசாரித்தார்கள். எனவே இதுவே உன்மையான நிலை. இது போதாதென்று போரின் பின்னர் நாங்கள் இயல்பு வாழ்வை அ னுபவிக்கலாம் என நினைத்திருக்கையில், திட்டமிட்டு எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. எங் கள் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் விகாரைகள் கட்டப்படுகின்றன. எனவே இன அழிப்பை அர சாங்கம் இன்னமும் நிறுத்தவில்லை. இந்த நாட்டில் இரு இனங்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற் கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. போர் காலத்தைப் போன்று பெருமளவு படையினர் எங்களை அச்சுறுத்தும் வகையில் இங்கே இருக்கின்றார்கள். இறந்துபோன எங்கள் உறவுகளை நினைப்பதற்கும் அவர்களை நினைவுகூரவும் எமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.எனவே இந்நிலையில் உன்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான என்ற தென்னாபிரிக்காவின் முறைமையினை இங்கே நடைமுறைப்படுத்த நினைக்கின்றார்கள். அந்த முற மை பொருத்தமற்றது. எனக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடம்பெற்றிருந்தது. சந்திப்பில் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகமும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என பதிவு இணையத்தின் யாழ் செய்தியாளர் மேலும் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/28971/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் என்ன சாப்பிடுறார் என கேட்டு சொல்லுங்கப்பு அதே சாப்பாடு tna மூன்டு தலை மாடுகளுக்கு போடவேனும்  :icon_idea:

ஆயர் என்ன சாப்பிடுறார் என கேட்டு சொல்லுங்கப்பு அதே சாப்பாடு tna மூன்டு தலை மாடுகளுக்கு போடவேனும்  :icon_idea:

இது விமர்சனமா ?அல்லது வசை பாடலா ?அல்லது உங்கள் பார்வையில் இதுதான் விமர்சனம் என்றால் உருப்பட்டமாதிரித்தான் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது விமர்சனமா ?அல்லது வசை பாடலா ?அல்லது உங்கள் பார்வையில் இதுதான் விமர்சனம் என்றால் உருப்பட்டமாதிரித்தான் :icon_idea:

தொப்பி எப்படியும் போடலாம் tna மூன்று பேரை பற்றி எழுதினாலே நிர்வாகத்தை இழுத்து வந்து அற்ப்ப காரனங்களை சொல்லி தூக்குவீர்கள் இப்ப வெட்ட சொல்ல வேண்டியதுதானே...............

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் என்ன சாப்பிடுறார் என கேட்டு சொல்லுங்கப்பு அதே சாப்பாடு tna மூன்டு தலை மாடுகளுக்கு போடவேனும்  :icon_idea:

 

காலையில் பெரிதாக சிரிக்க வைத்துவிட்டீர்கள்...... :D

ஆனால் அரசியல் தலைவர்களை  இவ்வாறு விமர்சிப்பதை ஏற்கவில்லை :(

 

அவர்களின் இன்றைய  இந்த நிலமைக்கு ஒவ்வொரு தமிழனும் காரணம்

50 வீதத்தமிழன் ஒத்துழைத்திருந்தால்....................??? :(

Tna காரர் சொல்வதை விட ஆயர் சொல்வது நம்பகத் தன்மை அதிகம். ஆகவே ஆயரின் வாக்குமூலமே பெறுமதியானது. நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

Tna காரர் சொல்வதை விட ஆயர் சொல்வது நம்பகத் தன்மை அதிகம். ஆகவே ஆயரின் வாக்குமூலமே பெறுமதியானது. நல்ல விடயம்.

 

உண்மை

அவர்களது வழிகளில்

எவரவர் அவற்றை  செய்யட்டும்

 

அந்தவகையில் பேராயர்களின் இந்தமுயற்சி  பாராட்டத்தக்கது

ஆனால் நமது இந்துமத ஐயாமார்............??? :(  :(  :(

நான் அடிக்கடி நினைப்பதுண்டு

தமிழர்களின் சுயநலமும்

பாராமுகமும்

ஒதுங்குதலும்

இவர்களிடமிருந்தே எமக்கு வந்திருக்கவேண்டும்.............? :(  :(  :(

Edited by விசுகு

உண்மை

அவர்களது வழிகளில்

எவரவர் அவற்றை  செய்யட்டும்

 

அந்தவகையில் பேராயர்களின் இந்தமுயற்சி  பாராட்டத்தக்கது

ஆனால் நமது இந்துமத ஐயாமார்............??? :(  :(  :(

நான் அடிக்கடி நினைப்பதுண்டு

தமிழர்களின் சுயநலமும்

பாராமுகமும்

ஒதுங்குதலும்

இவர்களிடமிருந்தே எமக்கு வந்திருக்கவேண்டும்.............? :(  :(  :(

 

அவர்களே கள்ளத்தோணியில் வந்தவர்கள்தானே இருக்காதா பின்னே? 

உண்மை

அவர்களது வழிகளில்

எவரவர் அவற்றை செய்யட்டும்

அந்தவகையில் பேராயர்களின் இந்தமுயற்சி பாராட்டத்தக்கது

ஆனால் நமது இந்துமத ஐயாமார்............??? :(:(:(

நான் அடிக்கடி நினைப்பதுண்டு

தமிழர்களின் சுயநலமும்

பாராமுகமும்

ஒதுங்குதலும்

இவர்களிடமிருந்தே எமக்கு வந்திருக்கவேண்டும்.............? :(:(:(

ஊர் இந்துமத ஐயர்மார் சிறி லங்கா இராணுவத்துடன் முறுகமுடியாது.

முறுக்கினால் எப்படி எமது மீது சுடும், குண்டு வீசும் ஹெலிகொப்டரில் இருந்து எப்படி முருகனுக்கு பூ சொரிய முடியும்.

மற்றும் ராஜபக்சே, பொன்சேகா வந்தால் அருச்சனை செய்துவிட்டு, சனாத்பதிக்கே நாமம் போட்டுவிட்டோம் என்று பெருமை பட முடியாது.

திருவை அழித்து சிறியை புகுத்துவதே திட்டம். தமிழ் கடவுலுக்கு அழிந்த இரானிய சமகிருததில் பாடும்போதே தெரியவேண்டும். முட்டாள் தமிழர் தட்டில் துட்டு போட்டு தலையில் குட்டுபோட தான் லாயக்கு.

ஆயர்மார் எம்மக்களுடன் செத்தார்கள். நல்லூர் ஆதீனம் போரின் பின் இராணுவத்துடன் வந்து நீர்த்த மக்களுக்கு நீறு கொடுத்து சென்றார்.

எங்களுக்கு வெள்ளைக்காரன் வேதக்காரன் (ஆயர்கள் ) என்றால் ஒரு தனி மரியாதை .

எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்ததே அவர்கள்தான் .

எங்களுக்கு வெள்ளைக்காரன் வேதக்காரன் (ஆயர்கள் ) என்றால் ஒரு தனி மரியாதை .

எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்ததே அவர்கள்தான் .

ஶ்ரீலங்கா அரசின் பயங்கரவாத்தை தமிழின அழிப்பை எடுத்து கூறியதால் வணக்கதுக்குரிய ஆயரையும் திட்ட ஆரம்பித்து விட்டார்கள் அர்ஜூன். உங்கள் நோய் குணமாக புலியை மட்டும் வாய்க்கு வந்தபடி திட்டுங்கள். மற்றவர்களை அல்ல. ஓவர்டோஸ் மருந்து உடலுக்கு ஆரோக்கியமானதல்ல.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு வெள்ளைக்காரன் வேதக்காரன் (ஆயர்கள் ) என்றால் ஒரு தனி மரியாதை .

எங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்ததே அவர்கள்தான் .

 

 

உங்களுக்கு புலிகள் மீது தான் வெறுப்பு என்றிருந்தேன்

தற்பொழுது  தான் தெரிகிறது

ஒட்டு மொத்த தமிழர் மீது உங்களுக்கு வெறுப்பென்று.

புலிகள் மீதான  உங்கள் வெறுப்பு 

தமிழர் எல்லோரும் புலிகள் என்றவகையில்

புரிந்து கொள்ளக்கூடியதே......... :(

பலருக்கு விளங்காத பக்கம் ஒன்று அரசியலில் இருக்கு அது வரை குப்பை கொட்ட வேண்டியதுதான் .

ஸ்ரிபன் ரேப் வந்து போர்குற்றம் பற்றி கதைக்கின்றார் ,

ஈழதமிழர் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு எப்படி என்று பாசன அபயவர்தனா சொல்லுகின்றார் .

இரண்டிற்கும் பச்சை குத்திக்கொண்டே இருங்கள் பொழுது போகும் .


எமக்கு தீர்வு தேட முதல் இவையெல்லாம் விளங்காத கூட்டம் அரசியல் செய்வதை முதல் தடை செய்யவேண்டும் ,

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு விளங்காத பக்கம் ஒன்று அரசியலில் இருக்கு அது வரை குப்பை கொட்ட வேண்டியதுதான் .

ஸ்ரிபன் ரேப் வந்து போர்குற்றம் பற்றி கதைக்கின்றார் ,

ஈழதமிழர் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு எப்படி என்று பாசன அபயவர்தனா சொல்லுகின்றார் .

இரண்டிற்கும் பச்சை குத்திக்கொண்டே இருங்கள் பொழுது போகும் .

எமக்கு தீர்வு தேட முதல் இவையெல்லாம் விளங்காத கூட்டம் அரசியல் செய்வதை முதல் தடை செய்யவேண்டும் ,

 

போர்க்குற்றம் பற்றி  கதைத்தால்

சிங்களவன் என்ன  சொல்வான் என்று சிறு குழந்தைக்கும் தெரியும்

இங்கு அது பற்றி  எவரும் பேசவில்லை

நாம் எமக்காக பேசிய பேராயர்களுக்கு நன்றி  சொல்கின்றோம்

வரலாற்றில் தொடர்ந்து

சிங்கராசர் உட்பட எமக்காக குரல் கொடுத்த இவர்களை  நினைவு கூருகின்றோம்

எமக்காக பேசாது  இருக்கும் எமது மதத்தவர்களை  கூப்பிடுகின்றோம்

 

இதில் கோட் சூட்  ராசாவுக்கு என்ன கலக்கம்......? :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.