Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி. விக்னேஸ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்க் கைதிகளை சந்தித்தார் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்:

wicki_CI.jpg

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் தனது பொங்கள் வாழ்த்துக்களையும் கைதிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வட மாகாண சபை குரல் கொடுக்கும் என்பதுவும் ஒன்றாகும்.

ஆந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கைதிகளை சந்தித்த முதல் நிகழ்வாக மகசீன் சிறைச்சாலைச் சந்திப்பு அமைகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101613/language/ta-IN/article.aspx

மகசீன்சிறையில் சந்தித்தது தமிழ்அரசியல் கைதிகளை அல்ல– குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவாரா முதலமைச்சர் ?

லட்டு வடை சாரத்தை திருப்பி அனுப்பினர் அரசியல் கைதிகள்

 முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும், வடக்கின் முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் இன்று மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அல்ல சமூக விரோத கிரிமினல் குற்றச்சாட்டுக்களில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டு உள்ள கைதிகளையே பார்வையிட்டுள்ளதாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறைக் கைதிகளுடனான இன்றைய சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் மற்றும் முதலமைச்சரின் விசேட பிரத்தியேக செயலாளர் மன்மதராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தைப்பொங்கலை அடுத்து தமிழ் சிறைக்கைதிகளை பார்வையிடப் போவதாக சிறைச்சாலை நிர்வாகத்திடம் முதலமைச்சரின் அலுவலகம் அனுமதி கோரி இருக்கிறது. அந்த அனுமதிக் கோரிக்கை கடிதத்தில் இந்துக் கைதிகளை பார்வையிடப் போவதாக முதலமைச்சரின் அலுவலக சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அனுமதி என கோரியிருக்கின்றனர். அந்த கோரிக்கைக்கு அமைவாக ஒவ்வாரு சிறைக் கூடத்தில் இருந்தும் இருவர் வீதம் தெரிவுசெய்யப்பட்ட கைதிகளை பார்வையிட சிறைச்சாலை அனுமதித்து இருக்கிறது. ஆதில் தமிழ் அரசியல் கைதிகள் தவிர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சிலரிடம்; முதலமைச்சர் கேட்டாராம் 'நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் என ஒருவர் சொன்னாராம் கஞ்சா கடத்தியதாக மற்றவர் சொன்னாராம் தூள் கடத்தியதாக, இன்னும் ஒருவர் பாலியல் பலாத்காரம் கொலை போன்ற குற்றச்சாட்டுக்களை சொனாராம்..

தாம் கொண்டு போன 40 பொதிகளில் தம்மை சந்தித்த இந்த கைதிகளுக்கு கொடுத்தது போக மிகுதியை அரசியல் கைதிகளிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு முதலமைச்சர் குழு திரும்பியிருக்கிறது. அவற்றை அரசியல் கைதிகளிடம் கொண்டுபோய் சேர்த்த சிறை அதிகாரிகளிடமே அவற்றை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் தமிழ் அரசியல் கைதிகள். கொடுத்த பொதிக்குள் ஒரு லட்டு, ஒரு வடை, ஒரு சராம் என்பன இருந்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் தம்மோடு தொடர்பு கொண்ட முதலமைச்சர் அலுவலகத்திற்கு தம்மை சந்திப்பது குறித்தும், அதற்கு எவ்வாறு அனுமதி கோர வேண்டும் என்பது குறித்தும், தெளிவாக விளங்கப்படுத்தி இருந்ததாகவும், அவற்றிற்கு எல்லாம் தலையாட்டிய முதலமைச்சர் அலுவலகளம் கடைசியில் தம்மைச் சந்திப்பதை கோட்டை விட்டு, சமூக விரோத குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 40 கைதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிலரை சந்தித்து தமக்கு லட்டும் வடையும் சாரமும் அனுப்பி விட்டு முதலமைச்சர் குழு திரும்பி விட்டதாக மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 125 தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டு உள்ளனர். 

Global Tamil News
 
Edited by Athavan CH

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகசீன்சிறையில் சந்தித்தது தமிழ்அரசியல் கைதிகளை அல்ல– குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவாரா முதலமைச்சர் ?

லட்டு வடை சாரத்தை திருப்பி அனுப்பினர் அரசியல் கைதிகள்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 2ஆம் இணைப்பு -

wicki_CI.jpg

முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும், வடக்கின் முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் இன்று மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அல்ல சமூக விரோத கிரிமினல் குற்றச்சாட்டுக்களில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டு உள்ள கைதிகளையே பார்வையிட்டுள்ளதாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறைக் கைதிகளுடனான இன்றைய சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் மற்றும் முதலமைச்சரின் விசேட பிரத்தியேக செயலாளர் மன்மதராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தைப்பொங்கலை அடுத்து தமிழ் சிறைக்கைதிகளை பார்வையிடப் போவதாக சிறைச்சாலை நிர்வாகத்திடம் முதலமைச்சரின் அலுவலகம் அனுமதி கோரி இருக்கிறது. அந்த அனுமதிக் கோரிக்கை கடிதத்தில் இந்துக் கைதிகளை பார்வையிடப் போவதாக முதலமைச்சரின் அலுவலக சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அனுமதி  கோரியிருக்கின்றனர். அந்த கோரிக்கைக்கு அமைவாக ஒவ்வாரு சிறைக் கூடத்தில் இருந்தும் இருவர் வீதம் தெரிவுசெய்யப்பட்ட கைதிகளை பார்வையிட சிறைச்சாலை அனுமதித்து இருக்கிறது. அதில் தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்டு நிர்வாகத்தால் தவிர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சிலரிடம் முதலமைச்சர் கேட்டாராம் 'நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் என ஒருவர் சொன்னாராம் கஞ்சா கடத்தியதாக மற்றவர் சொன்னாராம் தூள் கடத்தியதாக, இன்னும் ஒருவர் பாலியல் பலாத்காரம் கொலை போன்ற குற்றச்சாட்டுக்களை சொனாராம்..

தாம் கொண்டு போன 40 பொதிகளில் தம்மை சந்தித்த இந்த கைதிகளுக்கு கொடுத்தது போக மிகுதியை அரசியல் கைதிகளிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு முதலமைச்சர் குழு திரும்பியிருக்கிறது. அவற்றை அரசியல் கைதிகளிடம் கொண்டுபோய் சேர்த்த சிறை அதிகாரிகளிடமே அவற்றை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் தமிழ் அரசியல் கைதிகள். கொடுத்த பொதிக்குள் ஒரு லட்டு, ஒரு வடை, ஒரு சராம் என்பன இருந்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் தம்மோடு தொடர்பு கொண்ட முதலமைச்சர் அலுவலகத்திற்கு தம்மை சந்திப்பது குறித்தும், அதற்கு எவ்வாறு அனுமதி கோர வேண்டும் என்பது குறித்தும், தெளிவாக விளங்கப்படுத்தி இருந்ததாகவும், அவற்றிற்கு எல்லாம் தலையாட்டிய முதலமைச்சர் அலுவலகளம் கடைசியில் தம்மைச் சந்திப்பதை கோட்டை விட்டு, சமூக விரோத குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 40 கைதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிலரை சந்தித்து தமக்கு லட்டும் வடையும் சாரமும் அனுப்பி விட்டு முதலமைச்சர் குழு திரும்பி விட்டதாக மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 125 தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டு உள்ளனர். 

இந்தச் செய்தி குறித்து முதலமைச்சர் அலுவலகம் தமது பக்க கருத்தை எமக்கு அனுப்பி வைப்பின் அதனை முழுமையாக வெளியிடுவோம். (radiokuru@yahoo.com)
 
சி.வி. விக்னேஸ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்க் கைதிகளை சந்தித்தார் - அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை:-

06:02am

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் தனது பொங்கள் வாழ்த்துக்களையும் கைதிகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

வட மாகாண சபைத் தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும்  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வட மாகாண சபை குரல் கொடுக்கும் என்பதுவும் ஒன்றாகும்.

அந்த வகையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் கைதிகளை சந்தித்த முதல் நிகழ்வாக மகசீன் சிறைச்சாலைச் சந்திப்பு அமைகிறது.
 
தண்டணைக் காலத்திற்கு அதிகமாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 

இன்று (12) காலை மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சும் போதே அவர் இந்த நம்பிக்கையை வழங்கியுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் இணைப்புச் செயலாளர் அத தெரணவுக்கு தெரிவித்தார். 

18, 20 வருடங்கள் என நீண்ட நாட்களாக தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளையும் வட மாகாண முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சீ.வி.விக்னேஷ்வரன் இதன்போது தெரிவித்துள்ளார். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101613/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த தெய்வத்தையா காலை மதியம் இரவு என திட்டிக்கொண்டிந்தேன் என்ற குற்ற உணர்வுடன் ஓடோடி வந்து திரியை பார்த்தால் Global Tamil Newsகாரன் நஞ்ஞை மேலும் விதைச்சிட்டான்யா எங்ஙை போய் முட்டுறது :D

Global Tamil Newsகாரன் நஞ்ஞை மேலும் விதைச்சிட்டான்யா எங்ஙை போய் முட்டுறது :D

Global Tamil News ஐப் பற்றி மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அரசியல் செய்யவும்

பத்திரிகை  விற்கவும்

இந்த அவலமான  கைதிகளா  கிடைத்தார்கள்...............??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
இங்கு எனது கருத்தை யாரும் தவறாக விளங்கவோ கோவிக்கவோ வேண்டாம் என்பதனை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
 
மகசீன்சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளிடையேயும் குழுவாதம் இருக்கிறது. அத்தோடு அரச ஆதரவாக மாறியவர்கள் சிலரும் இருக்கிறார்கள். இந்த ஆதரவானவர்கள் 3மொழிகளிலும் தேர்ச்சியுடையவர்கள். மொழித்தேர்ச்சியடையவர்கள் தங்களது தேவைகள் வசதிகளுக்காக வளைந்து நெளிந்து விட்டுக்குடுத்து இதர கைதிகள் மீது ஆதிக்கம் செய்யும் நிலமை கடந்த காலங்களில் நடந்து வருகிறது. சிறைக்காவலர்கள் அரசதரப்பிற்கு ஆதரவானவர்களே வெளி ஊடகங்களுடனும் தொடர்பைப் பேணுகிறார்கள். இதையும் சொன்னவர்கள் இதே சிறையிலும் இன்னும் வேறு சிறைகளிலும் உள்ள கைதிகள்தான்:
 
போராட்டத்தில் பங்கேற்ற ஆதரவளித்த பலரும் இங்கு இருக்கிறார்கள். மொழியாற்றல் உள்ள மற்றும் வெளி ஊடகங்களுடன் தொலைபேசி தொடர்பை வைத்திருக்கும் நபர்கள் சிலர் சிலரது வழக்குகளில் கூட சிக்கல்களை தோற்றுவித்துள்ளார்கள். வெளிநாடுகளில் உள்ள ஊடகங்கள் சரி உள்நாட்டு ஊடகங்களும் தங்கள் விடுதலைக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல கைதிகள் தங்கள் வழக்குகள் பற்றியும் வாக்குமூலம் கொடுத்தும் எழுத்துமூலமான அறிவிப்புகளைக் கொடுத்தும் உள்ளார்கள். நல்லது நடக்குமென்று நம்பியவர்கள் பலர் இந்த வீரதீர சாகசக்கார ஊடகங்களால் நட்டாற்றில் விடப்பட்ட நிலமையும் இருக்கிறது.
 
ஒரு கைதி. அவருக்கு பெற்றோரும் இல்லை உறவுகளும் யாரும் உதவ இல்லை. வழக்கை தொடர்வதற்கான அடிப்படை மனிதவுரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தோம். அந்தக் கைதிக்கு உயர்நீதி மன்றம் வந்த வழக்கை தொடர்ந்து நடாத்தவும் உதவியும் வழக்கறிஞரும் ஒழுங்கு செய்யப்பட்டே முதல் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த இடைவெளியில் குறித்த கைதியை பொறுமையோடு இருக்கும் படி வேண்டப்பட்டார். ஆனால் குறித்த சிறையில் உள்ள ஒரு போதகர் ஒருவர் தலையிட்டு வேறொரு மாற்றத்தை செய்ய வெளிக்கிட்டார். அந்தக் கைதி எழுதும் ஆற்றல் இல்லாதவர். குறித்த போதகர் தானே கடிதம் ஒன்றை கைதி சார்பாக எழுதி ஊடகங்களுக்கு அனுப்பிவிட்டு உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க ஆதரவு தெரிவித்தார். குறித்த இளைஞனும் உண்ணாவிரதம் தொடங்கி அதுவும் முறிந்து போனது.
 
செய்தியை வெளியிட்டு அந்த இளைஞனின் கடிதம் என சொல்லப்பட்டு வெளியிடப்பட்ட கடிதத்தை எழுதியவரும் பிரசுரித்த ஊடகமும் தங்கள் ஊடகப்பணியில் வேலைகனக்க பணியில் மூழ்கினர்.  குறித்த கைதியின் நிலமையோ பரிதாபம். 
 
மனிதவுரிமை வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் தனது வழக்கில் வாதாட வரக்கூடாதென்று உத்தரவை விதித்தார் கைதி. காரணம் இலவசமாக வழக்கை நடாத்த வந்தபடியால் அவரால் சரியாக வாதாட முடியாதென்ற குற்றச்சாட்டை உள்ளிருந்த மெத்தப்படித்தவர்கள் கூறியிருந்ததாக குறித்த கைதியும் சொல்லிவிட்டார்.

உயர்நீதிமன்றத்திற்கு வழக்கும் வந்து 7மாதங்களுக்கு மேலாகிறது. ஊடகத்தில் செய்தி பிரசுரித்த ஊடகமும் உள்ளே இந்த ஊடகங்களுக்கு செய்தி வழங்கும் சுயநலம் பிடித்த பிசாசினாலும் கைவிடப்பட்ட கைதி தனது வழக்கிற்கான உதவியை தேடிக்கொண்டிருக்கிறான். ஆனால் யாரும் உதவாத நிலமை. 

முற்றுமுழுதும் பாதிப்புக்கு உள்ளானது ???? 
 
மொத்தம் 125கைதிகளும் கவலை வெளியிட்டுள்ளதாக தனது செய்தியை இந்தச் செய்தியிணையம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தக் கைதிகளின் விடுதலைக்கு  இவர்களால் செய்யக்கூடியது ??? உதவாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருத்தல் நன்று. ஆனால் தங்கள் ஊடக வியாபாரம் சரியாக நடந்தால் சரியென்பதில் அக்கறை கொண்ட இவர்களால் பாதிக்கப்படுவது கைதிகளே. 
 
இந்தச் செய்தியை மகசீன் சிறையிலிருந்து கொடுத்த போதகரை விட உண்மையைச் சொல்லக்கூடிய கைதிகளுக்கு இந்த ஊடகங்களில் தொலைபேசி வாசமே இல்லை. 
 
இந்தச் செய்தியை மகசீன் சிறையிலிருந்து கொடுத்த போதகரை விட உண்மையைச் சொல்லக்கூடிய கைதிகளுக்கு இந்த ஊடகங்களில் தொலைபேசி வாசமே இல்லை. உண்மையைச் சொல்ல மகசீன் சிறையிலும் மட்டுமல்ல எங்கும் பணபலமும் முகமன்களுமே பிரதான பங்காகிறது.
 
ஊடகங்களில் தங்கள் ஊடக வியாபாரத்தில் அக்கறையுள்ள குளோபல் தமிழ் போன்ற ஊடகங்கள் வாழ்க்கையையே சிறையில் தொலைத்துவிட்டு வெளியில் வரத்துடிக்கும் கைதிகளுக்கும் வெளியில் வந்த பின்னராவது வாழலாம் என நம்பி ஊர் போகிற முன்னாள் போராளிகளை கோத்தா தலைமையில் புதிதாக புலிகளை உருவாக்கும் புதிய ஒட்டுக்குழு என்று பொய்யாக எழுதி எஞ்சிய வாழ்வையும் அழிக்காமல் விட்டாலே உங்கள் ஊடகதர்மம் மேலோங்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

Global Tamil News ஐப் பற்றி மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.

அன்னை உங்கள் விளக்கம் சூப்பர் ஒரு உதாரணம் சண்டை கடுமையா நடக்கும் போது யாழில் பெயர் ஞாபகமில்லை குளஉடைப்பின் போது 5000 ஆமி அந்த இடத்திலையே முடிஞ்சிட்டுனம் என வம்புக்கு எதிர் கருத்து வைச்சிட்டு போயிட்டுது   இரண்டாம் நாள் அச்செய்தி உறுதிபட்டுள்ளது பேப்பரில் வந்துள்ளது என சனம் கதைக்குது என்னடா இது என்று பார்த்தால் யாழில் அந்த கள வம்பு எழுதினதை பிரிண்ட் பன்னி £1.00 படி வெம்பிளி கடைக்காரர் யாபாரம் பன்றார் இப்படித்தான் நம்ம ஆட்களின் உங்களின் விளக்கம். :icon_mrgreen:  :icon_mrgreen:

அட... இந்தக் கூத்தும், நட‌ந்திருக்கா :D  :lol:

தமிழ் கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம்: சி.வி

CV%20%283%29.jpg
'கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று (12) நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட நால்வரடங்கிய குழு, கைதிகளுக்கான பொங்கல் பரிசுகளையும் கையளித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டது.

அதன் பின்னர் அச்சந்திப்பு தொடர்பில் சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட சி.வி, 'மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேரை மாத்திரமே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. சகலரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. ஏழு அல்லது எட்டுபேர் அடங்கிய குழுக்களாகவே இவர்களை நாம் சந்தித்தோம்' என்றார்.

'பெண் அரசியல் கைதிகள் நால்வரை சந்தித்தோம். அவர்களுக்கான வசதிகள் சிறைச்சாலைக்குள் செய்துகொடுக்கப்படுவதில்லை என்று எம்மிடம் முறையிட்டனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. அவர்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர், விளக்கமறியல் கைதிகள், வழக்கு தொடரப்பட்டோர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டோர் என்று பல வகையான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்.

அரசியல் கைதிகள் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஜனாதிபதியை கடந்த 2ஆம் திகதி நான் சந்தித்தபோது இந்த கைதிகளின் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன். அவர், அரசியல் கைதிகளின் முழு விபரங்களையும் என்னிடம் கேட்டார். முழு விபரங்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவை சந்திக்குமாறும் ஜனாதிபதி அன்று தெரிவித்தார்.

வழக்குகளுக்கு முகங்கொடுத்திருக்கின்ற அரசியல் கைதிகள் தங்களுக்கு சட்டத்தரணிகளின் ஆதரவு போதுமானதாக இல்லையென்றும் சட்டத்தரணிகளின் அனுசரணையை பெற்றுத்தருமாறும் கேட்டுக்கொண்டனர்' என்றார்.

அத்துடன், 'பெண் அரசியல் கைதிகளில் நால்வரை மட்டுமே சந்திக்கக் கிடைத்தது. அதிலொரு பெண் கைதியின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமையினால் சவர்காரம் கூட வாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை சுதந்திரமாகவே நாம் சந்தித்தோம். எந்தவிதமான இடையூறுகளும் இல்லை. அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டுமாயின் அமைச்சரின் அனுமதி தேவை. அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை' என்று சி.வி கூறினார்.

'அரசியல் கைதிகளின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிவாரணம் பெற்றுகொடுக்க முயற்சிப்போம். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் சந்தித்து விபரங்களை கொடுப்போம்' என்று வட மாகாண முதலமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, காலியிலுள்ள பூஸா சிறைச்சாலைக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CV%20%282%29%281%29.jpg
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.