Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கை பயிர்ச் செய்கையாளர் சங்கங்கள் மதிப்பீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கை பயிர்ச் செய்கையாளர் சங்கங்கள் மதிப்பீடு .

 குடாநாட்டில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். இந்த வருடம் 75 ஹக்ரெயர் நிலப்பரப்பளவில் செய்கை மேற்கொள்ளப்படலாம் என்று உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையாளர் சங்கங்களின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பயிர்ச் செய்கை அளவு மற்றும் விவரங்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சங்கங்களின் சமாசத்தில் செயலாளர் ஜெ. என்.ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
இந்த வருடம் நூறு ஹக்ரெயர் நிலப்பரப்பில் குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்வதற்கு உத்தேச மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதற்கு வசதியாக 50 வீத மானிய விலையில் 200 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்கு வழங்குவதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 132 மெற்றிக்தொன் விதை உருளைக் கிழங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் நவம்பர் முற்பகுதியில் வழங்கப்பட்டிருந்தது.
 
விதை உருளைக்கிழங்கு உரிய காலப் பகுதியில் கிடைக்கப்பெற்றமையால் நவம்பர் நடுப் பகுதியில் இருந்து நடுகை ஆரம்பமாகியது. அண்மையில் தொடர்மழை பெய்த மையினால் தடைப்பட்ட போதிலும் மீண்டும் நடுகைப் பணிகள் இடம்பெறுகின்றன.
நடுகை செய்யப்பட்ட விதை ஆரோக்கியமான நிலையில் முளைத்து பயிர் வளர்ச்சிய டைந்து வருவதாகவும் 70 வீதத்துக்கு மேல் நடுகை செய்யப்பட்டுள்ளதாகவும் மிகுதியும் இந்த வாரம் நடுகை செய்து முடிக்கப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
 
யாழ்.மாவட்டத்தில் கோப்பாய், தெல்லிப்பழை, உடுவில் பிரிவுகளில் உருளைக்கிழங்கு செய்கையாளர் சங்கங்கள் செயற்படுவதோடு மாவட்ட ரீதியில் சமாசமும் செயற்படுகின்றது.
 
யாழ். மாவட்ட உருளைக் கிழங்கு அறுவடை செய்யப்படும் காலப்பகுதியில் வெளி நாட்டு கிழங்கு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கும் இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளூர் கிழங்கை அதிகரித்த விலையில் விற்பனை செய்வதற்கும் ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன. அதற்கு வசதியாக பயிர் செய்யப்பட்ட பரப்பளவு, நடுகை செய்யப் பட்ட காலம், உத்தேச அறு வடைகாலம் உள்ளிட்ட விவரங்களை சமாசம் திரட்டி வருவதாக செயலாளர் தெரிவித்தார். 
 
நன்றி - உதயனிணையம்

கனடாவில் "சிறிய" உருளை கிழங்கு விவசாயி 3000 ஏக்கர் விவசாயம் செய்தால் தான் இலாபம் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உருளைக்கிழங்கில் உள்ள சுவை... இங்கிருப்பதில்லை.
உருளைக்கிழங்கு  பிரட்டல் கறியுடன், இடியப்பதை குழைத்து அடிக்க.. சொர்க்கம் தெரியும்.

இலங்கை உருளைக்கிழங்கில் உள்ள சுவை... இங்கிருப்பதில்லை.

உருளைக்கிழங்கு பிரட்டல் கறியுடன், இடியப்பதை குழைத்து அடிக்க.. சொர்க்கம் தெரியும்.

அண்ணா,

அந்த சுவை எமது இயற்கை உருளை கிழங்கில் உள்ளது. எல்லாம் சந்தையில் விற்று தீர்ந்துவிட்டது.

குழந்தைகளுக்கு மட்டும் நில குளிர் அறையில் பதுக்கி வைத்திருக்கிறேன்.

இங்கு ஐந்து கிலோ பை $3 விற்பதன் பின்னணி பெரிய நிறுவனங்கள், மற்றும் வளர்ப்பு முறை.

வட அமெரிக்காவில் மனித உரம், மனித கழிவு தண்ணி, மற்றும் இராசயன உரங்களை கொட்டி வளர்ப்பதால் தான் ருசியும் நோய்களும் பிடிக்கிறது.

இங்கு 10 கிலோ சில வேளைகளில் 2 ஈரோ 90க்கு வாங்கக்கூடியதாக  இருக்கும்

இந்த  விலைஉடைத்தலை  செய்தவர்கள் எம்மவர்கள்  தான் லா  சப்பலில்...... :(

குடாநாட்டுச்செய்தி  சந்தோசம் தருகிறது

நல்ல  செய்தி

மக்கள் சொந்தக்காலில் நிற்கணும்

விவசாயம் உயரணும்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

அந்த சுவை எமது இயற்கை உருளை கிழங்கில் உள்ளது. எல்லாம் சந்தையில் விற்று தீர்ந்துவிட்டது.

குழந்தைகளுக்கு மட்டும் நில குளிர் அறையில் பதுக்கி வைத்திருக்கிறேன்.

இங்கு ஐந்து கிலோ பை $3 விற்பதன் பின்னணி பெரிய நிறுவனங்கள், மற்றும் வளர்ப்பு முறை.

வட அமெரிக்காவில் மனித உரம், மனித கழிவு தண்ணி, மற்றும் இராசயன உரங்களை கொட்டி வளர்ப்பதால் தான் ருசியும் நோய்களும் பிடிக்கிறது.

விவசாயி விக், இயற்கைப் பசளையுடன் வளர்த்த, Bio‌ உருளைக்கிழங்கில்... எமது தாயக சுவை கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் "சிறிய" உருளை கிழங்கு விவசாயி 3000 ஏக்கர் விவசாயம் செய்தால் தான் இலாபம் பார்க்கலாம்.

ஏன் அப்படி கொஞ்சம் விளக்கம் தாருங்கள் விவசாயி.

விவசாயி விக், இயற்கைப் பசளையுடன் வளர்த்த, Bio‌ உருளைக்கிழங்கில்... எமது தாயக சுவை கிடைக்குமா?

கட்டாயம் கிடைக்கும் அண்ணா.

அவிச்சு,பிரட்டி, பொரிச்சு ஆராய்ச்சி பண்ணிவிட்டோம்.

எமது கிழங்கு துண்டுகள் கரையாது, கடித்தால் வாய்க்குள் கரையும்.

நாங்கள் இயற்கை உருளை விதை கிழங்குகளை மட்டும் பாவிப்போம்.

ஏன் அப்படி கொஞ்சம் விளக்கம் தாருங்கள் விவசாயி.

அக்கா,

1950 இல் இங்கு எல்லோரும் 5 ஏக்கர் விவசாயிகள் தான். பின் உழவு இயந்திரம் வந்தபின் 25 ஏக்கராக மாறியது.

பின் உழவு இயந்திர, எரிபொருள், கிருமி நாசினி, உர செலவை கட்டுபடுத்த 100 ஏக்கரில் விவசாயம் செய்தார்கள்.

1980 இன் பின் பெரிய உழவு,அறுவடை இயந்திரங்கள் வந்து இளைய தலை முறை நகருக்குள் வர, மிச்சமிருந்த விவசாயிகள் அவர்களது பங்கை எடுத்தார்கள்.

இப்போது இந்த 3000 ஏக்கர் விவசாயிகள் மறைந்து 30,000 ஏக்கர் விவசாயிகள்(!?) வளருகிறார்கள்.

இதில் பகடி என்னவென்றால் இயற்கை விவசாயி ஏக்கருக்கு $7000 இலாபம் பார்க்கிறான் ஆனால் பெரிய விவசாயிகள் ஏக்கருக்கு $300 தான் இலாபம் பார்க்கிறார்கள்.

இதனால் தான் நான் பில் கேட்சின் ஆபிரிக்க தொழிலை எதிர்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.