Jump to content

திடீர் கோதுமை மா வடை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

uzhunnu.jpg

தேவையான பொருட்கள் :

கோதுமை மா  - 500 g 
வெங்காயம்   -  2
பச்சைமிளகாய்  - 4
உப்பு   -  அளவானது
தண்ணீர் - அளவானது
எண்ணெய்  - அளவானது

செய்முறை :

வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சிறிதாக அரிந்து மாவுடன் உப்பும் சேர்த்து கையால் பிசைந்து பின் சிறிது சிறிதாக நீர் விட்டு ரொட்டி சுடும் பதத்திற்கு குழைத்துக்கொள்ள வேண்டும். தாச்சிச் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன், மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சாடையாகத் தட்டி நடுவே துளை போட்டு, அடுப்பை அளவாக எரியவிட்டு வடையைப் போட்டு சிறிது நேரத்தில் அகப்பையால் பிரட்டி வேகவிட்டு பொன்னிறம் வந்ததும் எடுக்கவேண்டும். பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைக்கலாம்.

சுடச் சுட உண்ணவும் ஆறியஉண்ணவும் மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்துக்கு விருந்தினர் வரும்போது, அவர்களுக்குக் கொடுக்க ஒன்றுமில்லாதபோது, இந்த வடை வருபவர்களுக்கு வித்தியாசமான சிற்றுண்டியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோதரி....!

செய்து பார்த்திருக்கின்றீர்களா...! :D

Link to comment
Share on other sites

"சுடச் சுட உண்ணவும்"  "ஆறியஉண்ணவும் மிகவும் சுவையாக இருக்கும்" :rolleyes: :rolleyes:  

விளங்கவில்லை

Link to comment
Share on other sites

கோதுமை மா வடையா? பெயரைக் கேக்கவே ரேஸ்ட்டாய் இல்லையே!

ஏதோ புதுக்கண்டுபிடிப்பு எண்டபடியால் பச்சை குத்திக்கிடக்கு!

:D  :D

Link to comment
Share on other sites

கொக்கும் நரியும் பாயாச பாட்டி நடத்தினம் போலகிடக்கு. நான் உப்பிடி அவவை set up பண்ணி விடுறேலை. :lol:ஆர் சுமே அக்காவுக்கு முதலிலை பாயாசம் வைச்சதோ தெரியேலை. திருப்பி கொடுக்க என்று ஒன்று கண்டு ​ பிடித்து.  சட்டியும் அகப்பையுமாய் நிற்கிறா :lol:

CAM00737.jpg

Medu-Wada.jpg

ஒரு பக்கெட்டை குளிர்ச்சாதன பெட்டில் வைத்திருங்கள். Deep Fryer சூடாகவிட்டு 3 நிமிடம் போட்டு எடுத்த்தால் அந்த மாதிரி இருக்கும்.

தேனீருடன் நீங்களும் விரும்பும் போதுதெல்லாம் உண்ணலாம். 

கோதுமைமா றொட்டியை வடை எண்டு மாத்தி சொல்லுறியள் போலை கிடக்கு...... :D
அதுவும் பச்சை மாவிலை வடை எண்டுறியள்?????  :rolleyes:
கட்டுப்பல்லுக்காரருக்கு சரிவருமோ??? :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. எல்லாரும் என்னை மன்னிக்க வேணும் இந்தத் திரியை நான் மறந்தே போனன்.

இணைப்புக்கு நன்றி சகோதரி....!

செய்து பார்த்திருக்கின்றீர்களா...! :D

அண்ணா இது நான் மாதம் இருமுறை செய்வதுதான். அவ்வளவு விருப்பம் இதில். :D

"சுடச் சுட உண்ணவும்"  "ஆறியஉண்ணவும் மிகவும் சுவையாக இருக்கும்" :rolleyes: :rolleyes:  

விளங்கவில்லை

சூடாக இருக்கும்போது சில உணவு நன்றாக இருக்கும். ஆறினால் உன்ன முடியாது. ஆனால் இது ஆரியபின்னும் நன்றாக இருக்கும் எனக்கு :D
 
கோதுமை மா வடையா? பெயரைக் கேக்கவே ரேஸ்ட்டாய் இல்லையே!

ஏதோ புதுக்கண்டுபிடிப்பு எண்டபடியால் பச்சை குத்திக்கிடக்கு!

:D  :D

சாப்பிட்டுப் பாக்க முதல் ஒன்டைபற்றி விமர்சிக்கக்குடாது.
 
கொக்கும் நரியும் பாயாச பாட்டி நடத்தினம் போலகிடக்கு. நான் உப்பிடி அவவை set up பண்ணி விடுறேலை. :lol:ஆர் சுமே அக்காவுக்கு முதலிலை பாயாசம் வைச்சதோ தெரியேலை. திருப்பி கொடுக்க என்று ஒன்று கண்டு ​ பிடித்து.  சட்டியும் அகப்பையுமாய் நிற்கிறா :lol:

CAM00737.jpg

Medu-Wada.jpg

ஒரு பக்கெட்டை குளிர்ச்சாதன பெட்டில் வைத்திருங்கள். Deep Fryer சூடாகவிட்டு 3 நிமிடம் போட்டு எடுத்த்தால் அந்த மாதிரி இருக்கும்.

தேனீருடன் நீங்களும் விரும்பும் போதுதெல்லாம் உண்ணலாம். 

இதைப் பார்த்தால் சுட்ட வடை போல் இல்லையே. செய்த வடை போல் அல்லோ இருக்கு மல்லை.
 
Link to comment
Share on other sites

இதைப் பார்த்தால் சுட்ட வடை போல் இல்லையே. செய்த வடை போல் அல்லோ இருக்கு மல்லை.

நீங்க உடுப்பி கடையிலை சாப்பிடவில்லை. :D

("செய்த வடை". :icon_idea: அது சரியான அனுமானம். அவர்கள் கையால் தப்பி எண்ணையில் போட்டு எடுப்பத்தில்லை. சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் கொதி எண்ணையில் அச்சுகள் மூலம் ஒரு கரையில் வடையை வார்த்துவிட்டு ஓடி வரும் எண்ணையின் மறு கரையில் வடையை எடுப்பார்கள். எங்கள் வீட்டில் இவற்றை சாப்பிட கொடுத்த நணபர்கள் எல்லோரும் எப்படி இவையை ஒரே மாதிரி போட்டு எடுக்கிறா என்று கேட்டார்கள். அதனால் அவ உள்ளதை சொல்ல வேண்டியதாயிற்று.  சாப்பிட்டு முடிய அவ்வளவும்தான் வாங்கினோமா என்று கேட்டார்கள். இல்லை மிச்சம் அடுத்த பயணத்துக்கும் பொரிக்க கொஞ்சம் வைக்கத்தானே வேண்டும்; அதனால் அவை டீப்பிறிசரில் கவனமாக வைத்திருக்கிறொம் என்று சொன்னோம். :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமைமா றொட்டியை வடை எண்டு மாத்தி சொல்லுறியள் போலை கிடக்கு...... :D
அதுவும் பச்சை மாவிலை வடை எண்டுறியள்?????  :rolleyes:
கட்டுப்பல்லுக்காரருக்கு சரிவருமோ??? :icon_mrgreen:

உங்கட வீட்டில இரண்டுக்கும் ஒரு பேரோ சொல்லுறவை ????

சுடுறவை சுட்டால் பல்லு இல்லாத ஆக்களும் இதைச் சாப்பிடலாம். :D

வர்ர கோவத்துக்கு... msn-emoticon-096.gif

:D

என்ன தம்பி சாப்பிட யார் செய்து தாறது எண்டு கோவமோ ???? :lol: :lol:

நீங்க உடுப்பி கடையிலை சாப்பிடவில்லை. :D

("செய்த வடை".அது சரியான அனுமானம். அவர்கள் கையால் தப்பி எண்ணையில் போட்டு எடுப்பத்தில்லை. சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் கொதி எண்ணையில் அச்சுகள் மூலம் ஒரு கரையில் வடையை வார்த்துவிட்டு ஓடி வரும் எண்ணையின் மறு கரையில் வடையை எடுப்பார்கள். )

ஏன் உடுப்பி கொட்டலில உங்களுக்கு முன்னாலையோ வடை சுட்டுத் தாறவை. :D 

Link to comment
Share on other sites

வடையை பார்க்க ஆசையாத்தான் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட வீட்டில இரண்டுக்கும் ஒரு பேரோ சொல்லுறவை ????

சுடுறவை சுட்டால் பல்லு இல்லாத ஆக்களும் இதைச் சாப்பிடலாம். :D

பச்சைமாவுக்கு அப்பச்சோடா போட்டால் வடையில்லை....இடியப்பமும் புழியலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைமாவுக்கு அப்பச்சோடா போட்டால் வடையில்லை....இடியப்பமும் புழியலாம்.. :D

இடியப்பம் கடைசிவரை பிழியவே ஏலாது :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.