Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்

Featured Replies

இது தேவையா நெதர்லாந்து: 39 ரன்னில் தகர்ந்தது: இலங்கை அபார வெற்றி
 

 

சிட்டகாங்: கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் கொடி கட்டிப் பறக்கும் நெதர்லாந்து, 'டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட்டில் வீணாக களமிறங்கி மாட்டிக் கொண்டது. நேற்றைய லீக் போட்டியில் இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 'பிரிவு 1' லீக் போட்டியில் இலங்கை அணி, தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய 'கத்துக்குட்டி' நெதர்லாந்தை சந்தித்தது.'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
நெதர்லாந்து அணி ரன்கள் எடுப்பதற்குப் பதில், விக்கெட்டுகளை இழக்கத் துவங்கியது. மைபர்க் முதலில் 'டக்' அவுட்டானார். ஸ்வார்ட் (0), பரேசியை (1) மாத்யூஸ் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கினார். தனது 'ஹாட்ரிக்' வாய்ப்பை வீணடித்த போரெனை (0), சில நிமிடத்தில் வெளியேற்றினார் மாத்யூஸ். பென் கூப்பர் (8) ரன் அவுட்டானார். வான் பீக் (1), புகாரியை (4) மலிங்கா திருப்பி அனுப்பினார். மெண்டிஸ் தன்பங்கிற்கு சீலார் (3), ஜமிலை (0) வெளியேற்றினார். டாம் கூப்பர் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (16) எடுக்க, நெதர்லாந்து அணி 10.3 ஓவரில் 39 ரன்னுக்கு சுருண்டது. இலங்கை சார்பில் மாத்யூஸ், மெண்டிஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
போகிற போக்கில் எட்டும் இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு, குசல் பெரேரா (14) ஏமாற்றினார். பின் தில்ஷன் (12*), ஜெயவர்தனா (11*) இணைந்து அணியை உறுதி செய்தனர். இலங்கை அணி 5 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறைந்த ஸ்கோர்
சர்வதேச 'டுவென்டி-20' குறைந்த ஸ்கோருக்கு சுருண்டு பெரும் அவமானத்தை சந்தித்தது நெதர்லாந்து. இதற்கு முன் 2013ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, கென்ய அணி 56 ரன்னுக்கு சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.
இவ்வரிசையில் 'டாப்-5' விவரம்:
அணி ஸ்கோர் எதிரணி இடம்
நெதர்லாந்து 39 இலங்கை சிட்டகாங், 2014
கென்யா 56 ஆப்கன் சார்ஜா, 2013
கென்யா 67 அயர்லாந்து, 2008
அயர்லாந்து 68 வெ.இண்டீஸ் புரோவிடன்ஸ், 2010
ஹாங்காங் 69 நேபாளம் சிட்டகாங், 2014
'63' பந்துகள்
நெதர்லாந்து அணி 63 பந்துகள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 'டுவென்டி-20' வரலாற்றில் இவ்வளவு குறைந்த பந்துகளில் (63 பந்து), ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிந்தது இதுவே முதன் முறை. இதற்கு முன் தென் ஆப்ரிக்க அணி, பாகிஸ்தானுக்கு எதிரான செஞ்சுரியன் போட்டியில் (2013), 74 பந்துகளில் 100 ரன்னுக்கு சுருண்டது.
பெரிய வெற்றி
நேற்று 40 ரன்கள் என்ற இலக்கை, 30 பந்துகளில் எடுத்து, 90 பந்துகள் மீதம் உள்ள நிலையில் வெற்றி வென்றது இலங்கை அணி. இதன் மூலம் 'டுவென்டி-20' அரங்கில் அதிக பந்துகள் மீதமிருக்கையில், வெற்றி பெற்ற அணி என்ற வரலாறு படைத்தது. இரண்டாவது இடத்தில் அயர்லாந்து அணி (76 பந்துகள், எதிர்-கென்யா) உள்ளது.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=940375

  • Replies 212
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போன விளையாட்டில் கொலந் வீரர்கள் அடிச்ச அடியை பார்த்து இண்டைக்கு நல்ல ரன் எடுப்பாங்கள் என்று விளையாட்டை பார்க்க அவங்கள் வந்ததும் போரதுமாய் போச்சு :D

போன விளையாட்டில் கொலந் வீரர்கள் அடிச்ச அடியை பார்த்து இண்டைக்கு நல்ல ரன் எடுப்பாங்கள் என்று விளையாட்டை பார்க்க அவங்கள் வந்ததும் போரதுமாய் போச்சு :D

 

நானும் எதிர்பார்த்தேன் ஓரளவு நல்லாக விளையாடுவர்கள் என்று :) 

வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
மார்ச் 24, 2014.

 

 

மிர்புர்: வங்கதேச அணிக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில், 5வது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் 'குரூப்-2' லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியுடன் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்புிகுர் ரகிம் பவுலிங் தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித், கெய்ல் ஜோடி துவக்கம் தந்தது. காஜி வீசிய 10வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசிய ஸ்மித் அரை சதம் கடந்தார். இவர் 72 ரன்களில் அவுட்டானார். அடுத்த வந்த சிம்மன்ஸ் டக்-அவுட் ஆனார். கெய்ல் அரை (48) சத வாய்ப்பை இழந்தார். சாமுவேல்ஸ் (18) நீடிக்கவில்லை. அல் அமின் வேகத்தில் ரசல், பிராவோ, ராம்தின் டக்-அவுட் ஆகினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. சமி (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

வங்கதேச அணிக்கு தமிம் (5), அனாமுல் (10), மோமினுல் (16) ஏமாற்றினர். பத்ரீ சுழலில் முஷ்பிகுர் (22), சபிர் (1), முகமதுல்லா (1) அடுத்தடுத்து சிக்கினர். மற்ற வீரர்களும் சொதப்ப, வங்கதேச அணி 19.1 ஓவரில், 98  ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி,73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பத்ரீ 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395674438/WestIndiesBangladeshT20WorldcupCricket.html

Edited by நவீனன்

இன்று போட்டிகள் இல்லை.

 

நாளை  நெதர்லாந்து எதிர் தென் ஆப்ரிக்கா

 

              ஸ்ரீலங்கா எதிர் இங்கிலாந்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் 20 ஓவர் விளையாட்டு நடக்குது..அந்த விளையாட்டு பெரிசா கிக் இல்லை....... :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் 20 ஓவர் விளையாட்டு நடக்குது..அந்த விளையாட்டு பெரிசா கிக் இல்லை....... :D

 

கால்பந்து விளையாட்டில்தான் கிக் இருக்கும், கிறிக்கட்டில் மட்டையடிதான் பையன்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

Neth might win SA OMG!

South Africa won by 6 runs


நெதர்லாந்து அணி அவசரபடாமல் கொஞ்சம் விவேகமாக விளையாடி இருந்தால் மிக இலகுவாக இந்த போட்டியை வென்று இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந் அணியை பாராட்டியே ஆக்கனும்.... நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அந்த அணிக்கு.....

நெதர்லாந் அணியை பாராட்டியே ஆக்கனும்.... நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு அந்த அணிக்கு.....

 

நிச்சயமாக அவர்கள் எதிர்காலத்தில் நல்ல ஒரு அணியாக வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

We might see 200+ I guess..

  • கருத்துக்கள உறவுகள்

Ooops not century for Mahiya tonight. ..

  • கருத்துக்கள உறவுகள்

Well 10 runs short...

இங்கிலாந்து  0/2

தென் ஆப்ரிக்கா அணி வெற்றி
மார்ச் 26, 2014.சிட்டகாங்: நெதர்லாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 6 ரன்கள வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

வங்கதேசத்தில், 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. சிட்டகாங்கில் இன்று நடக்கும் 'குரூப்-1' லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் பீட்டர் பவுலிங் தேர்வு செய்தார்.

 

தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆம்லா சிறப்பான துவக்கம் தந்தார். குயின்டன் டக்-அவுட் ஆனார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த ஆம்லா 43 ரன்கள் எடுத்தார். டு பிளசி (24), டிவிலியர்ஸ் (21) ஓரளவு கைகொடுத்தனர். பின் வந்த டுமினி (12), மில்லர் (17) நிலைகக்வில்லை. தென் ஆப்ரிக்கா  அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்தின் மாலிக் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

நெதர்லாந்து அணிக்கு மைபர்க் அதிரடி துவக்கம் தந்தார். சுவார்ட் (8), பரேசி (14) ஏமாற்றினர். மைபர்க் அரை சதம் (51) கடந்து அவுட்டானார். தாகிர் சுழலில் பீட்டர் (13), கூப்பர் (16) சிக்கினர். பின் வந்தவர்கள் விரைவில் வெளியேற, நெதர்லாந்து அணி 18.4 ஓவரில், 139 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக தாகிர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
 

http://sports.dinamalar.com/2014/03/1395854094/StuartBroadengland.html

 

England won by 6 wickets (with 4 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்

Well done England. Only if Mendis didn't give 25 runs.....

Well done England. Only if Mendis didn't give 25 runs.....

உண்மைதான் தும்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமின்ட ஓவர் ஓடை வெற்றி இங்கிலாந்து பக்கம் போய் விட்டது....

Edited by பையன்26

ஹேல்ஸ் அதிரடி சதம்: இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் அசத்தல் வெற்றி

 

இலங்கைக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
பங்களாதேஷில் இருபது-20 உலக கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது. சிட்டகொங்கில் இன்று நடைபெற்ற 'குழு-1' லீக் போட்டியில், இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் பிராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு குசேல் பெரேரா (3) அதிர்ச்சி தந்தார். ஜயவர்தன, டில்ஷான் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜோர்டான் வேகத்தில் ஜயவர்தன (89) ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு அரை சதம் அடித்த டில்ஷான் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குமார் சங்கக்கார எவ்வித ஓட்டமும் பெறாது வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார். இலங்கை அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை எடுத்தது. திசர பெரேரா (23), மெத்யூஸ் (11) ஓட்டங்களுடன ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணிக்கு லம்ப், மொயீன் எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின் இணைந்த ஹேல்ஸ், மோர்கன் ஜோடி சிறப்பாக விளையாடியது. மோர்கன் 57 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஹேல்ஸ் சதம் கடந்தார். பட்லர் (2) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 19.2 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேல்ஸ் (116), போபரா (11) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

http://www.virakesari.lk/?q=node/362484

 

  • கருத்துக்கள உறவுகள்

நிசமாவெ நான் நினைத்தேன் இங்கிலாந்து தோல்வி என்று.  மஜிக் கடசியில்  சனல் அடி. ..! சுப்பர்ப்...!!

 

 

ஆரம்பத்தில் ஏதோ உருளுற பந்தைத்தான் பிடிப்பம் , மேலால வாற பந்தை பிடிக்கவே மாட்டம் என்று சபதம் எடுத்த மாதிரி ஆடினாங்கள். மேலால் வந்த பந்தைப் பிடித்தவர் கீப்பர் மட்டும்தான்.(பட்டில் படாமல்). வர்த்தனா வரவுஇல்லாமல் செல்ல வேண்டியவர். இவங்கட சொதப்பலால 89 வரை பரிசளித்தனர்.

 

பந்து போடுபவரின் நிலைமை பரிதாபம், நேராவே விக்கட்டை வீழ்த்தினார்கள். ரனவுட்டுக்கு ஸ்டம்ப் பண்ணுரவனும் விக்கட்டுக்கு விசுறுறான்களே ஒழிய தொடுறாங்கள் இல்லை.

 

 

இங்கிலாந்துக்கு முன்னுக்கு வந்த இருவர் நாவூறு, கண்ணூறு கழித்துச் சென்றனர்.  பிறகு ஹேல்ஸ் வந்து  ஹோல்ஸ்சேலா விளாசி வாணவேடிக்கை செய்து வெற்றிக்கனியை பறித்தார்...! :)

 

 

 

ஆட்டம் தொடங்கும் போதே சொதப்பிவிட்டது .குசல பெரேரா அவுட் இல்லை மேகலா முதல் பந்திலேயே அவுட் .இரண்டும் நடுவர்கள் தீர்ப்பு பிழையாகிவிட்டது.

பின்னர் நல்ல மாட்ச்சாக மாறி கடைசிவரை யார் வெல்லுவார் என்று ஆட்டம் இருந்தது .

இரு பக்க பில்டிங்கும் சொதப்பல் . :o

ஆட்டம் தொடங்கும் போதே சொதப்பிவிட்டது .குசல பெரேரா அவுட் இல்லை மேகலா முதல் பந்திலேயே அவுட் .இரண்டும் நடுவர்கள் தீர்ப்பு பிழையாகிவிட்டது.

பின்னர் நல்ல மாட்ச்சாக மாறி கடைசிவரை யார் வெல்லுவார் என்று ஆட்டம் இருந்தது .

இரு பக்க பில்டிங்கும் சொதப்பல் . :o

 

உண்மைதான்,குசல பெரேரா அவுட் இல்லை. மஹேல அவுட் ஆனால் மூன்றாவது நடுவர்  அவுட் இல்லை என்று தீர்ப்பு கொடுத்தார். இங்கிலாந்து வீர்களின் பீல்டிங் சொல்ல தேவை இல்லை. இலங்கைக்கு நல்ல ரன் ரேட் இருக்கு. பார்ப்போம்  என்ன செய்கிறர்கள் அடுத்த போட்டியில் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.