Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிய நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம்! – வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறுகிறார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிய நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம்! – வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறுகிறார். 

[Friday, 2014-02-14 07:46:09]
c.v.wickneswaran-140214-150.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்பட்டால், பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். “அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தேசிய கொள்கையின் படியே எமக்கு தற்போது செயற்பட வேண்டியுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரல் வடமாகாண மக்களின் எவ்வித பங்கேற்பும் இன்றியே தயாரிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான தேவைகள் குறித்து அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை.

இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ள பின்புலத்தில், கீழ் மட்டம் தொடர்பில் ஆராயவில்லை. எனவே, இதன் மூலம் யுத்தத்தின் பின்னர் எவ்வாறு அபிவிருத்தியை அடைவது? அபிவிருத்தியை அடைந்துகொள்ள முடியாத நிலையில், துரித அபிவிருத்தியை நோக்கி எவ்வாறு பயணிப்பது? அத்துடன், இந்த வருடம் ஜனவரி மாதம் 2ம் திகதி நான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போது, நான் இந்தப் பிரச்சினையை எழுப்பினேன். ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதனால் நீங்களும் அதற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி என்னிடம் கூறினார். வேறு விதமாக கூறுவதென்றால் பங்கேற்பு மற்றும் ஆலோசனை என்பவற்றைப் பெற்றுக்கொள்ள இந்த அரசாங்கம் விரும்பவில்லை.

யுத்தத்தின் பின்னரான தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். மத்திய அரசாங்கம் தொடர்ந்து நோக்கும் பயங்கரவாத எண்ணத்தை மாற்றும் தேவை எமக்குள்ளது. யுத்தத்தின் பின்னர் அரச பாதுகாப்புத்துறை மனித உரிமை பாதுகாப்பு தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டும். இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும். அதன்படி வட பகுதியில் உள்ள இராணுவம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ஆர். சம்பந்தன் எந்த நிலைப்பாட்டில் உள்ளார் என்பது தொடர்பில் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது. என்னிடம் அது குறித்து வினவினால் எம்மால் அதில் கலந்துகொள்ள முடியும் என்றே கூறுவேன். எனினும், எமக்கு செயற்திறன் மிகு உரிய நிகழ்ச்சித் திட்டம் அவசியமாகும். கடந்த 15 அல்லது 20 வருடங்களாக நாம் இதற்கு தீர்வைத் தேடினோம். எமது புத்திஜீவிகள் அது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103594&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் குழப்பமான கருத்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் வல்லவராகத் தெரிகின்றார், விக்கி! :D

ஒரு பக்கம், ஜெனிவா சம்பந்தமான கருத்தில், தான் வட மாகாணத்தை மட்டும் கவனிக்கவே, தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்துள்ளார்கள் என்கிறார்! மற்ற விசயங்களைக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் கவனிக்கும் என்கிறார்!

இந்தத் திரியில், தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்துக் கூட்டமைப்புக்காகப் 'பேச வல்லவராகத்' தன்னை இனம் காட்டுகின்றார்!

தமிழ் மக்களை ஒரு குழப்பநிலையில் வைத்திருக்க வேண்டுமென்பதே, பல அரசியல் வாதிகளின் நோக்கமாக உள்ளது!

ஆசாடபூதிகளை என்றுமே நான் நம்பியது கிடையாது! 

அந்தக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவே இவரது கருத்து அமைகின்றது! :o

நிச்சயமாக புங்கையூரான் திரு.விக்கினேஸ்வரனின் மேற்படி கருத்து குழப்பகரமானது என்பதே எனது கருத்தும். சிறிய கால இடைவெளியில் இவ்வாறான இரு மாறுபட்ட கருத்தை ஏன் தெரிவித்தார் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. எமக்கு புரியாதை ராஜதந்திரம் என்று கூறுவதுதானே வழமை. அப்படியே நாமும் நினைப்போம்.

உங்களுக்கு தெரியாத அரசியல் என்று ஒன்று இருக்கு .

இது ஆயுத போரட்ட காலத்திலும் இருந்தது .

தெரிவுகுளுவுக்கு ஒரு நிகழ்சி நிரல் ஒன்று இருந்தால் தானே இதை பற்றி அதிகம் அலட்ட.

எந்த நிகழ்சி நிரலின் அடிப்படையி உந்த தெரிவுகுளு அமைக்கப்பட்டது என்று தெரியாத தமிழர்கள் அதிகம் இல்லை.

இவர் குளப்புவது சிங்களத்தைத்தான்

ஒரு கெளரவமான சிறந்த நீதியாளர் என்ற வகையில் ஶ்ரீலங்கா அரசை குழப்பும நோக்கிலும் அவரது இந்த கருத்து அமைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடக்கேக்க.. புலிகளை அழிச்சதும் தீர்வு தாறம் என்று சொல்லவும் கூட்டமைப்பு தலையாட்டிச்சுது. போர் நடந்து முடிந்த பின்னும்.. இந்தா தாறம்.. அந்தா தாறம்.. 13+ வரை உச்ச சாயல் பாடிச்சுது.

அப்புறம்.. வேற வழியில்லாமல்.. புலம்பெயர் மக்களின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை வழிக்கு வந்திச்சு. மகிந்த அதுக்கும் அசையிறதா தெரியல்ல.

மாகாண சபையை வைச்சு மக்களுக்கு பூச்சாண்டி காட்டலாம்.. மகிந்தவுக்கு முடியாது தானே.

கூட்டமைப்பின்.. இந்திய நம்பிக்கையும்.. காங்கிரஸின் கருணாநிதியின் சுயநல அரசியலுக்கு முன்னால் தோற்றுப் போய்ட்டுது.

இப்ப.. புலம்பெயர் தமிழ் மக்களின் பின்னால தான் ஓடியாகனும்.

புலிகள் இருக்கேக்க கிடைக்காதது எதுவும் சிறீலங்காச் சிங்களத்திடம் இருந்து.. எனி கிடைக்கப் போறதில்லை. இது கூட்டமைப்புக்கும் தெரியும்.

இப்ப சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு.. அதுதான் அமெரிக்காவின் ஆசைக்கு.. அடிபணிந்து போய் எதையாவது.. பெறுவம் என்று போய்க்கிட்டு இருக்குது கூட்டமைப்பின் இராஜதந்திரம்.

ஒருவேளை அதுவும் வேர்கவுட் ஆகல்லைன்னா.. கூட்டமைப்பு நடுத்தெருவுக்கு வந்திடும். அப்புறம்.. தெரிவுக்குழுவில் தொத்திறது தான் மகிந்தவுக்கு முதுகு சொறிய வசதி..!!!

அடிப்படையில்.. கூட்டமைப்பு மட்டுமல்ல.. புலிகள் அற்ற அரசியல் தளம் என்பது தமிழர்களைப் பொறுத்த வரை ஒரு மண்ணாங்கட்டியையும் சிங்களவனிடம் இருந்து பெற்றுத் தராது.

போர் முடிஞ்சு 5 வருடம் ஆகுது. அதாவது ஒரு முழுமையான ஆட்சிக்காலம் கடக்கப் போகுது. அரை தசாப்தம் முடியப் போகுது. இதில கூட்டமைப்பு.. அரசியல் ரீதியில் தமிழ் மக்களை அழைத்துச் சென்றிருக்கும் பாதையை ஒருக்கால் திரும்பிப் பார்த்தால்.. தமிழ் மக்கள் எதனை எல்லாம் வேண்டாம் என்று கடந்த காலங்களில் நிராகரித்தார்களோ.. அதை எல்லாம் வலிந்து ஏற்க வேண்டிய கட்டாயத்துக்குள் கொண்டு சென்றதை விட... தமிழ் மக்களின் வலிக்கோ.. உரிமைக்கோ.. தீர்வு கிடைக்கிற மாதிரி ஒரு அறிகுறியும் இல்லை..!

கூட்டமைப்பு.. நிறைய சிந்திக்கவும்.. மாற்றங்களை தேடவும் வேண்டி இருக்கும். சர்வதேச நிகழ்ச்சி நிரல்.. இந்திய நிகழ்ச்சி நிரல்.. மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள் ஓட நினைக்காமல்.. தமக்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கக் கூடிய பலம் தமிழ் மக்களிடம் இருந்தும்.. கூட்டமைப்பின் உதாசீனமான விவேகமற்ற போக்கால்... சில விடயங்கள் கால நீட்சி அடைகின்றன. இது தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. :icon_idea:

100% உணமைதான் நெடுக்கர், தமிழ் ஈழம் தாறம் வாங்கோ என்ரளைத்தால் கூட்டமைப்பும் மாட்டோம் என்றா சொல்லும்?

மகிந்தவிடம் இருந்து மட்டுமல்ல எந்தவொரு சிங்கள அரசிடமிருந்தும் ஏதாவது ஒரு மயிரை எண்டாலும் யாராவது புடுங்கி காட்டட்டும் பார்ப்போம்.

நாம்பன் மாட்டில பால் கறந்தாலும் கறக்கலாம் உவங்களிட்ட இருந்து ஒரு தீர்வும் எடுக்கமுடியாது. பிரதேச சபைகூட விரைவில் சிங்களமயமானாலும் ஆச்சரியப்பட முடியாது.

புலிகளும் முயற்சித்துபார்த்து முடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.

சிங்களத்தோடு மோத ஒருவழியல்ல பல வழிகளில் முயற்சிக்கவேண்டும். அதுதான் இப்போது நடக்குது.

நிலத்தில் ஒரு நிலையான அரசியல் தளம் இல்லாமல் புலத்தில் இருந்தோ புலத்தின் முயற்சிகள் இல்லாமல் நிலத்தில் இருந்தோ தனியாக செய்துமுடிப்பது கடினம்.

பச்சையாய் சொன்னால் மாறி மாறி சாணியடிக்காமல் இருந்தாலே போதும் எமக்குள் இருக்கும் புரிந்துணர்வு தானாக வெளிப்படும்.

வளைக்கமுடியாதது என்று எதுவும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.