Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ஆசிய கோப்பை போட்டிக்கான செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் பல திறமையான வீரர்களை உருவாக்கி கொடுப்பது வட மேற்கு பாகிஸ்தான் பகுதியான பெஷாவார் போன்ற ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள நகரங்கள் ஆகும். இதிலும் குறிப்பாக கான் குழுமம் கூட இடம் பிடிப்பார்கள். இம்ரான் கான், ஆப்ரிடி, ஜுனைத் கான் இப்படியே பட்டியல் நீளும். இந்த பகுதியில் உள்ள திறமையான பல வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கா விட்டால் ஆப்கானிஸ்தான் அணிக்கு விளையாடுவார்களாம். குழு நிலை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் u19 ஆஸ்திரேலியா u19 ஐ வென்றது. இப்போது பங்களாவை வீழ்த்தியது. இன்னும் சிறிது காலத்தில் உலக தர வரிசையில் முன்னிலையில் இருக்கும்.

இது எனது பாகிஸ்தானிய நண்பன் தந்த தகவல்.

எதுவானாலும் கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

1966740_203301036547128_557544615_n.jpg

  • Replies 57
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் பல திறமையான வீரர்களை உருவாக்கி கொடுப்பது வட மேற்கு பாகிஸ்தான் பகுதியான பெஷாவார் போன்ற ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள நகரங்கள் ஆகும். இதிலும் குறிப்பாக கான் குழுமம் கூட இடம் பிடிப்பார்கள். இம்ரான் கான், ஆப்ரிடி, ஜுனைத் கான் இப்படியே பட்டியல் நீளும். இந்த பகுதியில் உள்ள திறமையான பல வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்கா விட்டால் ஆப்கானிஸ்தான் அணிக்கு விளையாடுவார்களாம். குழு நிலை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் u19 ஆஸ்திரேலியா u19 ஐ வென்றது. இப்போது பங்களாவை வீழ்த்தியது. இன்னும் சிறிது காலத்தில் உலக தர வரிசையில் முன்னிலையில் இருக்கும்.

இது எனது பாகிஸ்தானிய நண்பன் தந்த தகவல்.

எதுவானாலும் கிரிகெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

1966740_203301036547128_557544615_n.jpg

 

உங்கள் நண்பர் சொல்வதில் உண்மை இருக்கலாம்......அவங்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்ச கொஞ்ச காலத்திலையே பெரிய அணிகலுக்கு நிகராய் விளையாடும் போதே பார்க்க தெரியுது....எனக்கும் நிறைய அப்கானிஸ்தான் நண்பர்கள் இருக்கிறாங்கள்.....அதில் ஒரு நண்பன் சொன்னது இது தான்....இப்ப விளையாடும் அப்பாகிஸ்தான் வீரர்கள் சின்ன வயதிலையே பாக்கிஸ்தான் போய் அங்கை விளையாட்டை பழகி விட்டாங்கள் என்று...ஆனால் அப்பாகிஸ்தான் வீரர்களின் வளத்தியும் உடம்பையும் வைத்து பார்க்கப் போனால் அவர்களின் வயதை குறைத்து குடுத்த போல தோனுது....அந்த அணிக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு......

  • தொடங்கியவர்

இந்திய அணி 245 ரன்கள்

 

மார்ச் 01, 2014

 

.பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் ரோகித், ராயுடு, ஜடேஜா அரை சதம் கடக்க இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது.

வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மிர்புரில் உள்ள ‘ஷேர்–இ–பங்களா’ மைதானத்தில் இன்று நடக்கும் தொடரின் 6வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பீல்டிங் ’தேர்வு செய்தார். இ்நதிய அணியில் ஸ்டூவர்ட் பி்ன்னிக்குப்பதில் அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அன்வர் அலி நீக்கப்பட்டு, முகமது தல்ஹா வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணிக்கு தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. குல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான், ஹபீஸ் பந்தில் 10 ரன்களுக்கு சிக்கினார். மந்தமாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜுனைடு கான் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி விளாசிய ரோகித் ஒரு நாள் அரங்கில் 22வது அரை சதம் கடந்தார். இவர் 56 ரன்களில் அவுட்டானார். ரகானேவும் 23 ரன்களில் கிளம்பினார். தினேஷ் கார்த்திக் 23 ரன்கள் எடுத்த திருப்தியில் திரும்பினார். ராயுடு அரை சதம் (58) கடந்து நம்பிக்தை தந்தார். பின் வந்த அஷ்வின் (9), ஷமி (0) விரைவில் வெளியேறினர். அதிரடி காட்டிய ஜடேஜா 9வது அரை சதத்தை எட்டினார்.

இந்திய அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 245  ரன்கள் எடுத்தது. ஜடேஜா (52), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393695945/kohliindiacricket.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் மண்டியிட்டது

  • தொடங்கியவர்

அப்ரிடி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி


இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டால் த்ரில் வெற்றி பெற்றது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், , பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12அவது ஆசிய கிண்ண கிரிக்கெட் திருவிழா பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.

இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய முன்னணி அணிகளை தோற்கடித்துள்ள இலங்கையின் இறுதிவாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகி விட்டது. மற்றொரு இடத்திற்கு எஞ்சிய 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த தொடரில், ஆவலை ஏற்படுத்தியுள்ள முக்கிய இரு அணிகளான இந்தியா–பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் மிர்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களை எடுத்து பாகிஸ்தான் அணிக்கு 246 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்திய அணியில் ஜடேஜா 52 ஓட்டங்களுடனும், மிஷ்ரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல்  களத்தில் நின்றனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 56 ஓட்டங்களும், ராயுடு 58 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 246 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியது. ஷர்ஜீல் 25, அஹ்மத் சேஹ்ஷாத் 42, முகமட் ஹபீஸ் 75 ஓட்டங்களை பெற்று வலுவான அடித்தளம் அமைத்தனர்.

நடுவரிசையில் சற்றே தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அப்ரிடி சிறப்பாக ஆடி, 34 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றி பெறச் செய்தார். இறுதிக் கட்டத்தில் பரபரப்பான ஓவரில் சிக்ஸர் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார் அப்ரிடி.

இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்தத் தோல்வியின் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக முஹமட் ஹபீஸ் தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/?q=node/361832

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானும் இலங்கையும் பினேலில்......

  • தொடங்கியவர்

இந்தியாவை விரட்டினார் அப்ரிதி : கடைசி ஓவர் வரை டென்ஷன் : பாகிஸ்தானுக்கு திரில் வெற்றி

 

மார்ச் 02, 2014.மிர்புர்:

 

  ஆசிய கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி, வெற்றி இலக்கை விரட்ட கைகொடுத்தார். தவிர, இந்தியாவின் பைனல் கனவுக்கும் வேட்டு வைத்தார்.

வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில், ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார்.

தவான் ஏமாற்றம்:

இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. முகமது ஹபீஸ் பந்தில் ஷிகர் தவான் (10) வீழ்ந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு ‘அடி’ விழுந்தது. இம்முறை கேப்டன் விராத் கோஹ்லி (5), குல் ‘வேகத்தில் அவுட்டானார்.

பின் ரோகித் சர்மா, ரகானே சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஜூனைடு கான், குல் பந்துவீச்சில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ரோகித் (56) ஒருநாள் அரங்கில் தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார்.

தல்ஹா அசத்தல்:

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரகானே சேர்ந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் வேகம் அப்படியே குறைந்தது. அறிமுக பவுலர் தல்ஹா வேகத்தில் ரகானே 23 ரன்களுக்கு(50 பந்துகள்) அவுட்டானார். சிறிது நேரத்தில் கார்த்திக்கும் (23) நடையை கட்டினார்.

கடைசி கட்டத்தில் அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா ஜோடி விரைவாக ரன் சேர்த்தது. அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராயுடு (58), அரைசதம் கடந்து வெளியேறினார்.

உமர் குல் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அஷ்வின் 2 பவுண்டரி, ஜடேஜா ஒரு சிக்சர் அடித்தனர். சயீத் அஜ்மல் ‘சுழலில்’ அஷ்வின் (9), ஷமி (0) அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்த ஜடேஜா (52), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு அஜ்மல் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் (25), ஷேசாத் (42) ஜோடி நல்ல அடித்தளம் கொடுத்தது. மிஸ்பா (1) ரன் அவுட்டானார். பின் வந்த உமர் அக்மலை (4) மிஸ்ரா ‘பெவிலியனுக்கு’ அனுப்ப, பாகிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

பின் வந்த சோயப் மக்சூத் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி சீராக முன்னேறியது. அஷ்வின் பந்தில் ஹபீஸ்(75) அவுட்டானார். சோயப்(38) ரன் அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த அப்ரிதி, இந்திய அணிக்கு ‘செக்’ வைத்தார்.

அப்ரிதி அதிரடி:

கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் பந்துவீசினார். முதல் பந்தில் சயீத் அஜ்மல்(0) போல்டானார். இரண்டாவது பந்தில் ஜூனைத் கான் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு இமாலய சிக்சர் அடித்து, இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். 4வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய இவர், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனலுக்கு அனேகமாக முன்னேறியது. அப்ரிதி(18 பந்தில் 34 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ஹபீஸ் தட்டிச்சென்றார்.

–––

‘வில்லன்’ கார்த்திக்:

நேற்று பாகிஸ்தான் வீரர் மக்சூத் 21 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் பந்தில் கிடைத்த சுலப ‘ஸ்டம்பிங்’ வாய்ப்பை விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் வீணடித்தார்.

‘பீல்டிங்’ சொதப்பல்

இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மட்டுமல்ல பீல்டிங்கும் நேற்று எடுபடவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்பை, ரோகித் சர்மா, அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் தவறவிட்டனர்.

––––

தொடரும் ஆதிக்கம்

நேற்று இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி தொடர்ந்து சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 190 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் அணி 85 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 62 போட்டிகளில் வென்றது. 38 போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. 4 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. 1 போட்டி‘டை’ ஆனது.

––––

வாய்ப்பு எப்படி

ஆசிய கோப்பை பைனலில் இம்முறை இலங்கை–பாகிஸ்தான் மோதுவது உறுதி. இலங்கை, பாகிஸ்தானிடம் வரிசையாக தோற்ற இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு முடிந்து விட்டது. இருப்பினும், தனது கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தனை போனஸ் புள்ளியுடன் வென்றால் 9 புள்ளிகள் பெறலாம். அதே நேரம் இலங்கை அணி தனது அடுத்த இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திடம் தோல்வி அடைய வேண்டும். தவிர, பாகிஸ்தானும் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து, ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால், பைனல் வாய்ப்பு கிடைக்கலாம்.

––––

ஜடேஜா ‘100’

நேற்று ரவிந்திர ஜடேஜா தனது 100வது ஒரு நாள் போட்டியில் களம் கண்டார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 32வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

–––

தல்ஹா அறிமுகம்

பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது தல்ஹா அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். போட்டி துவங்கும் முன், இவரை சக வீரர்கள் உற்சாகப்படுத்தினர். கேப்டன் மிஸ்பா, அணியின் தொப்பி வழங்கி வாழ்த்தினார்.

–––

மைதானம் ‘வெறிச்’

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே, எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், நேற்றைய போட்டியில் குறைந்த அளவிலான ரசிகர்களே இருந்தனர். காலியான இருக்கைகள் அதிகமாக காணப்பட்டன. இருப்பினும், நிர்வாகமோ மொத்தமுள்ள 25 ஆயிரத்து 200 சீட்களும் தீர்ந்துவிட்டதாக கூறியது. தவிர, மைதானத்திற்கு வெளியே, பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் இருந்தனர். இவர்களால் போக்குவரத்து நெரிசலும் உண்டானது.

இது குறித்து சச்சின் ரசிகர் சுதிர் கவுதம் கூறுகையில்,‘‘ இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் எப்போதும் நிலவும் உற்சாகத்தை காண முடியவில்லை,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393783341/indiapakistanasiacup.html

 

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்கு 254 ரன்கள்

  • தொடங்கியவர்

124 ஓட்டங்களுக்குள் சுருண்டது ஆப்கானிஸ்தான்: 129 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை இறுதி சுற்றுக்கு தகுதி

 

 

 

 

Sri-Lanka-v-Afghanistan-win_zps3355c882.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்காகிஸ்தான் ஆகிய 5 அணிகள் இடையிலான 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் மிர்பூரில் இடம்பெறும் இன்றைய 7வது லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திரிமான 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க குசேல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

அடுத்து வந்த சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாட ஏனைய வீரர்களான மஹேல ஜயவர்தன 14, சந்திமால் 26, சத்துருங்க டி சில்வா 17 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

குமார் சங்கக்கார 76 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துச் சென்றார். மெத்தியூஸ் 45, பெரேரா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் முஹமட் நபி உட்பட 8 பந்து வீச்சாளர்கள் இன்று பந்து வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் மிர்வாயிஸ் அஸ்ரப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து 254 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

அவ்வணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹமட் ஷாஜத் 7, நூர் அலி 21, அஸ்கர் 27, நவுருஸ் 4 சமியுல்ஹா 6, முஹமட் நபி 37 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்மிழந்து ஏமாற்றமளித்தனர்.
 
இலங்கை அணியின் பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/?q=node/361870

 

  • தொடங்கியவர்

இலக்கு இல்லாத இந்தியா * கவாஸ்கர் புகார்
மார்ச் 03, 2014.

 

 

புதுடில்லி: ‘இந்திய அணி வீரர்கள் எவ்வித இலக்கும் இல்லாமல் செயல்படுகின்றனர். இதனால் தான் மோசமான தோல்விகள் கிடைக்கின்றன,’’ என, கவாஸ்கர் குற்றம்சாட்டினார்.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் கடைசி நேரத்தில் வீழ்ந்தது. இதனால், இந்த தொடரிலும் இந்திய அணியின் பைனல் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியது:

இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வித இலக்கும் இல்லாமல் உள்ளது. இதனால் அடுத்தடுத்து படுமோசமான தோல்விகள் கிடைக்கின்றன. இவர்களின் பயிற்சி முறைகள் ஒன்றுமே சரியில்லை.

விருப்பம் போல பயிற்சி செய்கின்றனர். விராத் கோஹ்லி, ஷிகர் தவான் தவிர, மற்றவர்கள் பயிற்சியை புறக்கணித்ததை மன்னிக்கவே முடியாது.

சமீபகாலமாக பாகிஸ்தான் அணி 250 ரன்களுக்கும் மேலான இலக்கை ‘சேஸ்’ செய்ய முடியாமல் தோற்கிறது. இதற்கு ஏற்றார் போல இந்திய வீரர்கள் ரன்குவிப்பை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், மிதமிஞ்சிய நம்பிக்கையில் தேவையில்லாத ‘ஷாட்களை’ அடித்து, விக்கெட்டுகளை பறிகொடுத்து திரும்பினர். ஷேர்– இ– பங்களா மைதானத்தின் பவுண்டரி அளவு குறைவாக இருந்ததால், சிக்சர்கள் மிக எளிதாக அடிக்கப்பட்டன.

ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில், முதன் முறையாக கேப்டனாக களமிறங்கிய கோஹ்லி, சிறப்பான முறையில் தான் செயல்பட்டார். ஏனெனில், இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில், கடைசி ஓவரில் தான் தோல்வி கிடைத்தது.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 

‘அப்ரிதியை திட்டாதீர்’

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ‘ஜாம்பவான்’ அப்துல் காதிர் கூறுகையில்,‘‘ அப்ரிதி எப்போதுமே பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் அசத்தும் ‘த்ரீ இன் ஒன்’ வீரர். இவர் தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித்தந்ததால், இனிமேல் இவரை திட்டக்கூடாது. 2015 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு அப்ரிதி கேப்டனாக இருக்க வேண்டும்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393866543/IndianteamworkethicprettyabysmalGavaskar.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்கானிஸ்தான் படு தோல்வி.....

Edited by பையன்26

  • தொடங்கியவர்

அப்ரிடி அதிரடி: பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்றில்..!

 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அதிரடியுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
பங்களாதேஷில் 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை  எதிர்கொண்டது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அனாமுல் ஹக் மற்றும் இம்ருல் கயிஸ் ஆகியோர் சிறப்பாக துடுப்பபெடுத்தாடி நல்லதொரு ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.

இருவரும் இணைப்பாட்டமாக 150 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இம்ருல் கயிஸ் 59 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

பின்னர் களத்தில் இருந்த அனாமுல் ஹக்குடன், மொமினுள் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போது அனாமுல் ஹக் சர்வதேச  ஒரு நாள் அரங்கில் தனது 2 ஆவது சதத்தை கடந்து 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்தில் இருந்த மொமினுள் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முஸ்பிகுர் ரஹீம் மற்றும் சகிப் ஹல் அசான் களத்திற்கு வந்தனர்.

சகிப் அதிரடியை தொடர முஸ்பிகுர் அரைச்தத்தை கடந்தார். முஸ்பிகுர் 51 ஓட்டங்களையும் சகில் அல் ஹசான் 16 பந்துகளில் அதிரடியாக 6 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது. மிஸ்பா உல் ஹக் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய போது பங்களாதேஷ் அணியின் ஓட்ட வீதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சயிட் அஸ்மால் மாத்திரம் இரு விக்கெட்டுகளை கைப்பற்ற முஹமட் தலாஹா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 327 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அகமட் சயிட் மற்றும் முகமட் ஹாபிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.

இருவரும் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச்சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக்கொண்ருந்த ஹாபிஸ் 52 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் 4, மாசூட் 2, அபதூர் ரஹ்மான் 8 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி பங்களாதேஷ் பக்கம் திரும்பியது.

இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அகமட் செயிட் 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களத்தில் இருந்த பவ்சாட் அலாமுடன் அப்ரிடி இணைச் சேர்ந்தார். அப்பரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெறும் 25 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க வெற்றி பாகிஸ்தான் அணி பக்கம் திரும்பியது.

இதனையடுத்து பவ்சாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் உமர் ஹக்மால் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களை பெற்றார்.

பங்களாதேஷ் அணியின் பந்து ஆரம்பத்தில் சிறப்பாக காணப்பட்ட போதும் இறுதி நேரத்தில் அவர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது.

இறுதி பந்து வரை மிக பரபரப்பாக காணப்பட்ட இப்போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தொடரே போராட்டமாக இருந்த பங்களாதேஷ் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார்.

 

 

http://www.virakesari.lk/?q=node/361897

  • கருத்துக்கள உறவுகள்

49வது ஒவரில் பறந்த இரண்டு சிக்ஸ் ஓட்டங்கள் பங்களாதேசின் தோல்விக்கு காரணமாயிட்டுது...! நன்றி நவீனன் ..!! :)

  • தொடங்கியவர்

அந்த 2 சிக்ஸர் 47.2, 47.4 ஓவரில் Fawad Alam ல் அடிக்க பட்டது சுவி அண்ணா, எது எப்படியோ பங்களாதேஷ் அணி கடைசி ஓவர்களில் திறமையாக பந்துவீச தவறி விட்டார்கள்.

 

நன்றி அண்ணா :)

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓவ்வொரு அணிக்கும் இன்னும் தலா 2 போட்டிகள் இருக்கின்றன. பலம்வாய்ந்த அணிகளான பாக் மற்றும் இந்திய அணிகளை வீழ்த்தியதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டியில் நுழைந்து விட்டது என்று சொல்லலாம். ஏனெனில் இலங்கை அணி இனி எதிர்கொள்ளப்போவது பலங்குன்றிய வங்கதேச மற்றும் ஆப்கான் அணிகளை மட்டுமே. இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட உறுதியாகிவிடும். இந்திய மற்றும் பாக் அணிகளுகிடையில் நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டிக்கான மற்றையை அணியாக இருக்கும்.

 

இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாக் அணிகள் மோதும் என எதிர்பார்க்கின்றேன்.

 

நான் எதிர்பார்த்தபடி இலங்கை மற்றும் பாக் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இலங்கை அணி முதலில் மட்டை செய்து, 250 - 260 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால் பாக் அணி வெற்றிபெற வாய்ப்பு உண்டு. இலங்கை அணி இரண்டாவதாக மட்டை செய்யுமாயின் எந்த ஒரு கடின இலக்கையும் அடைந்துவிடும் என நினைக்கின்றேன். 310 - 320 ஓட்டங்கள் நல்ல இலக்காகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் அப்துர் ரஹ்மான் ஒரு முறையான பந்தும் வீசாமல் 0-8 (0 பந்து வீச்சில் 8 ஓட்டங்கள்) என்ற நிலையில் தொடர்ந்து பந்து வீசுவது நடுவரால் நிறுத்தி வைக்கபட்டது. மூன்று பந்துகள் தொடர்ந்து துடுப்பாட்ட வீரரின் இடுப்புக்கு மேலே வீசினார் என்று குற்றம் சாட்டபட்டது.

176107.2.jpg

Abdur Rehman (right) had bizarre bowling figures of 0-0-8-0

http://www.espncricinfo.com/asia-cup-2014/content/story/725179.html

  • தொடங்கியவர்

தவான், ரகானே அரை சதம்: இந்திய அணி வெற்றி
மார்ச் 04, 2014.

 

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் தவான், ரகானே அரை சதம் கடக்க, இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 9வது லீக் போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. இத்தொடரின் பைனலுக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே முன்னேறிவிட்டதால் முக்கியதுவம் இல்லாத இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் அணிக்கு நுார் அலி (31), நவ்ராஜ் (5) ஜோடி சொதப்பல் துவக்கம்  அளித்தது. தொடர்ந்து வந்த ரக்மத் ஷா (9), அஸ்கர் (5), நஜீபுல்லா ஜாத்ரன் (5) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். பின் வந்த கேப்டன் முகமது நபி (6) ஏமாற்றினார். முகமது ஷாசெத் (22) ஆறுதல் அளித்தார். ஷென்வாரி அரை சதம் (50) கடந்து அவுட்டானார். அஸ்ரப் (9), ஜாத்ரன் (1) விரைவில் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில், 159 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.

எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தவான், ரகானே சிறப்பான துவக்கம் தந்தனர். ஜாத்ரன் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். ரஹ்மத் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசிய தவான் ஒரு நாள் அரங்கில் 7வது அரை சதம் கடந்தார். தன்பங்கிற்கு ஷென்வாரி பந்துவீச்சி்ல இரண்டு பவுண்டரி அடித்த ரகானே ஒரு நாள் அரங்கில் 5வது அரை சதத்தை எட்டினார். இவர் 56 ரன்களில் அவுட்டானார். நபி பந்தில் தவான் (60) ஆட்டமிழந்தார். இந்திய அணி 32.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ரோகித் (18), தினேஷ் கார்த்திக் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1393955007/kohliindiacricket.html

  • தொடங்கியவர்

இலங்கை அணி ‘திரில்’ வெற்றி
மார்ச் 05, 2014.

 

மிர்புர்:  வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் கேப்டன் மாத்யூஸ் அரை சதம் கடந்து கைகொடுக்க, இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் 10வது, கடைசி லீக் போட்டியில், வங்கதேசம், இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹீம், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில், ரூபல் ஹொசைன், அராபத் ஆகியோர்  அணியில் சேர்க்கப்பட்டனர். காயம் காரணமாக காயிஸ் நீக்கப்பட்டு, ஷாம்சுர் ரஹ்மான் அணியில் இடம் பிடித்தார்.

வங்கதேச அணிக்கு ஷாம்சுர் (39)  சுமாரான துவக்கம் அளித்தார்.பின் வந்த மோமினுல் (1), கேப்டன் முஷ்பிகுர் ரஹீம் (4) ஏமாற்றினர். ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் சீரான இடைவேளையில் அனாமுல் பவுண்டரிகள் அடித்தார். இவர் (49) அரை சத வாய்ப்பை இழந்தார். சாகிப் (20) நிலைக்கவில்லை. மற்றவர்கள் சொதப்ப, வங்கதேச அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.

மாத்யூஸ் போராட்டம்:

இலங்கை அணிக்கு குசால் பெரேரா டக்–அவுட் ஆனார். சஙககரா (2), ஜெயவர்தனா (0) சொதப்பினர். பிரியான்ஜின் 24 ரன்களில் கிளம்பினார். திரிமன்னே (33) ஓரளவு ரன் சேர்த்தார். சதுரங்கா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மாத்யூஸ் அரை சதம் கடந்தார். இவரின் போராட்டத்திற்கு பலன் கிடைத்தது. இலங்கை அணி 49 ஓவரில்7 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாத்யூஸ் (74), சேனநாயகே (4)அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/03/1394040516/Sangakkarasrilanka.html

 

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேச அணியும் பின்னடியில் நன்றாக விளையாடியது. இரண்டுபேர் அதிக ஓட்டம் கொடுக்காமல் நல்லாய் பந்து வீசினார்கள். அருமையான ஒரு கட்ச்சையும், ஒரு ரன் அவுட்டையும் தவற விட்டிட்டினம். ஆயினும் இலங்கை நிதானமாக விளையாடினது, அதனால் தப்பியது.

1794747_372763929533109_1299362370_n.jpg

  • தொடங்கியவர்

ஆசிய கிண்ணத்தை வெல்வது யார்: இலங்கை-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 

 

sri-lanka-vs-pakistan_zps2c774b23.jpg

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பங்களாதேஷில் இடம்பெற்ற 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா (2 வெற்றி, 2 தோல்வி), பங்களாதேஷ் (4 தோல்வி), ஆப்கானிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இலங்கையும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இறுதி ஆட்டம்  மிர்பூரில் இன்று சனிக்கிழமை அரங்கேறுகிறது.

தோல்வி பக்கமே சாயாத இலங்கை அணி லீக் சுற்றில் பாகிஸ்தானை 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடையச் செய்தது.

இலங்கையுடன் மாத்திரம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், பங்களாதேஷ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

இலங்கை

வலிமையில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது இலங்கையின் கை தான் சற்று ஓங்கியுள்ளது. 1986, 1997, 2004, 2008அம் ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை அணி 5அவது முறையாக மகுடம் சூடி இந்தியாவின் சாதனையை (5 முறை சாம்பியன்) சமன் செய்யும் உத்வேகத்தில் உள்ளது.

மாலிங்க மற்றும் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் விளாசியுள்ள குமார் சங்கக்கார, சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ், மெத்யூஸ் ஆகியோர் சூப்பரான போர்மில் உள்ளனர்.

மூத்த வீரர் மஹேல ஜயவர்த்தனவின் துடுப்பாட்டமே அணிக்கு கவலையளிக்கிறது. இதுவரை 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ள அவரும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டால், இலங்கை அணி மேலும் வலுபெறும்.

இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் கூறுகையில், ‘ஜயவர்தன உலகத் தரம் வாய்ந்த வீரர். தனி வீரராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமை படைத்தவர். நிச்சயம் பாகிஸ்தானுக்கு இறுதி ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.


பாகிஸ்தான்

2000, 2012ஆம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு அணி வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரும் சிக்கலான நிலையை  ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் சிக்சர் மழை பொழிந்து இறுதி நேரத்தில் வெற்றியை கொண்டு வந்த சகலத்துறை வீரர் அப்ரிடி இடுப்பு பகுதியில் தசைப்பிடிப்பால் அவதிப்படுகிறார். இதே போல் அகமது ஷேசாத், ஷர்ஜீல் கான், உமர்குல் ஆகியோரும் சிறுசிறு காயங்களில் சிக்கியுள்ளனர். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் அது பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்கிறார், பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல்–ஹக்.

அப்ரிடி சந்தேகம்

'இப்போது, அப்ரிடி உண்மையிலேயே அபாரமாக விளையாடி வருகிறார். அவரது அதிரடி, எதிரணிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். அணிக்கு பலத்தை கொடுக்கும். இன்றைய ஆட்டத்தில் எங்களுக்காக அவர் விளையாட வேண்டும். இது போன்ற காயங்கள் விளையாட்டில் சகஜம். எல்லாம் நல்லபடியாக அமையும் என்ற நேர்மறையான எண்ணத்தில் உள்ளோம். நாளை (அதாவது இன்று) அவர் எப்படி உணருகிறார் என்பதை பார்க்கலாம். அதன் பிறகு அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது முடிவு செய்யப்படும். போர்மில் உள்ள துடுப்பாட்ட வீரர் எப்போதும் அணிக்கு முக்கியமானவராக இருப்பார். யாராவது உடல் தகுதி பெறாவிட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படுவார். மொத்தத்தில் எந்த விதமான சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். இறுதிப்போட்டிக்கான வியூகங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. கடைசி இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் எங்களது மனோதிடம் அதிகமாகியுள்ளது. அணியும் முழு நம்பிக்கையுடன் உள்ளது. சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்.’ என்றார்.

மாலிங்கா, சங்கக்கார ஆகியோரை சமாளிப்பதை பொறுத்தே பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடக்க லீக்கில் இலங்கை அணி பாகிஸ்தானை தோற்கடித்து இருந்த போது அதில் மாலிங்க 5 விக்கெட்டுகளை அள்ளியது நினைவு கூரத்தக்கது. இதற்கு பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் களம் இறங்கும்.

இதுவரை
இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 138 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 80இல் பாகிஸ்தானும், 53இல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமநிலையானது. 4 ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை.

அதே சமயம் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டால் இலங்கையின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. 30 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் 13 முறை சந்தித்து இருக்கின்றன. அதில் 9இல் இலங்கையும், 4இல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

மொத்தத்தில் எளிதில் கணிக்க முடியாத ஒரு அணியாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும், தோல்வியே தழுவாத இலங்கையும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

பரிசு
ஆசிய கிண்ணத்தை சொந்தமாக்கும் அணிக்கு ரூ.36 இலட்சம் பரிசுத்தொகையும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.18 இலட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். ஆட்டநாயகனுக்கு ரூ.4 இலட்சமும், தொடர் நாயகனுக்கு ரூ.7 இலட்சமும் கிடைக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்

இலங்கை: திரிமான, குசேல் ஜனித் பெரேரா, சங்கக்கார, ஜயவர்தன, சந்திமால், மெத்யூஸ் (அணித் தலைவர்), திசர பெரேரா, சத்துருங்க டி சில்வா, அஜந்த மெண்டிஸ், மாலிங்க, சச்சித்திர சேனாநாயக அல்லது பிரியஞ்சன் அல்லது லக்மால்.

பாகிஸ்தான்: அகமது ஷேசாத், முகமது ஹபீஸ், மிஸ்பா உல்–ஹக் (அணித் தலைவர்), சோகயப் மக்சூத், பவாத் ஆலம், அப்ரிடி, உமர் அக்மல், உமர் குல் அல்லது பிலாவல் பாத்தி, முகமது தல்ஹா, சயீத் அஜ்மல், அப்துர் ரகுமான் அல்லது அன்வர் அலி.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை எமது இணைத்தளத்தில் காணலாம்.

 

http://www.virakesari.lk/?q=node/361982

  • தொடங்கியவர்

பவாட் ஆலம் சதம், மாலிங்க 5 விக்கெட்டுக்கள்: இலங்கை அணிக்கு 261 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

ஆசிய கிண்ணத் தொடரில் இன்றும் இடம்பெறும் இறுதி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 261 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்ற 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா (2 வெற்றி, 2 தோல்வி), பங்காளதேஷ் (4 தோல்வி), ஆப்கானிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இலங்கையும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இறுதி ஆட்டம்  மிர்பூரில் இன்று சனிக்கிழமை அரங்கேறுகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அந்தவகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சார்ஜில் கான் 8, அகமட் செய்சாட் 5 என சொற்ப ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழக்க அடுத்த களமிறங்கிய ஹாபிசும் 3 ஓட்டங்களுடன் மாலிங்க பந்து வீச்சில் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார்.

18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் ஆரம்பமே தடுமாறிய போது மிஸ்பா உல் ஹக்குடன் பவாட் ஆலம் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுப்பெற செய்தனர்.

இருவரும் இணைப்பாட்டமாக 122 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களத்தில் இருந்த பவாட் ஆலத்துடன் உமர் அக்மால் இணைந்தார். உமர் அக்மால் அதிரடியாக துடுப்பெடுத்தாட பவாட் ஆலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்களை கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்தார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உமர் அக்மால் பவாட் ஆலத்துடன் இணைப்பாட்டமாக 115 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

 

http://www.virakesari.lk/?q=node/361992

  • தொடங்கியவர்

103-2 // 19.1ஓவரில்

  • தொடங்கியவர்

Screenshot38_zps328fdf6a.png

  • தொடங்கியவர்

. இலங்கை அணி இரண்டாவதாக மட்டை செய்யுமாயின் எந்த ஒரு கடின இலக்கையும் அடைந்துவிடும் என நினைக்கின்றேன். 310 - 320 ஓட்டங்கள் நல்ல இலக்காகும்.

 

 

நன்றி வாலி, உங்கள் வாய்க்கு கை நிறைய அள்ளி கற்கண்டு போடவேணும் :o:D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.