Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைத்தாயின் குழந்தை ஸ்ரீதர் பிச்சையப்பா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கலைத்தாயின் குழந்தையை இவ்வுலகம் இழந்து இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. .
 
ஆம்! கவிஞனாக,பாடகனாக,எழுத்தாளனாக, ஓவியனாக, நாடகக் கலைஞனாக, பின்னணிக் குரல் கலைஞனாக என கலையின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் சுமந்து வாழ்ந்த ஸ்ரீதர் என்ற சகாப்தம் என்றுமே எம் மனதை விட்டு நீங்கப்போவதில்லை.
24466_319832403590_657908590_3510211_597
நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் ஸ்ரீதர் பிச்சையப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை எழுதிக் கண்ணீர் வடித்ததை இன்றும் மறக்க முடியாது.
 
யாராலும் எதைக்கொண்டும் எப்போதும் ஈடு செய்ய முடியாத இழப்பு அது.
பல்துறைக் கலைத்துவம் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிடுவதில்லை. அது ஒரு வரம். அந்த வரத்துக்குச் சொந்தக்காரராக உலகம் முழுவதும் வலம் வந்த ஸ்ரீதர் பிச்சையப்பாவை கலையுலகம் இன்றும் போற்றுகிறது.
24466_319832418590_657908590_3510213_506
ஸ்ரீ அண்ணா என்று அன்போடு அழைத்துப் பழகும் அனைத்து இளையோரையும் அரவணைத்தவர் அவர்.
 
ஸ்ரீதர் உயிர் துறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இரவு உணவுக்காக விடுதியொன்றுக்கு சென்றிருந்தோம். பௌர்ணமி தினம் என்பதால் நிலவைப் பார்த்த அவர் "டேய்... எனக்கு நிலாவே வா பாட்டுப் பாட வேணும் போலிருக்கு" என்றார்.
 
அதன்பின்னர் தானாகவே அந்தப் பாடலை பாடத் தொடங்கினார். விடுதியில் இருந்த அனைவருமே அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டு நீங்கள் ஸ்ரீதர் பிச்சையப்பா தானே? என்று கேட்டனர்.
 
அதனையும் பொருட்படுத்தாது அவர் பாடி முடிக்கும்போது கண்ணீர் வழிந்தோடியது.
"என் வாழ்க்கைக்கும் இந்தப் பாடலுக்கும் கண்ணீருக்கும் நிறையவே தொடர்பிருக்கிறது" என அமைதியாகச் சொன்னார்.
24466_319832433590_657908590_3510214_316
அவர் வரையும் கோட்டுச் சித்திரங்களுக்கு தனித்துவம் உண்டு. பல நேரங்களில் அவை எதைச் சொல்கின்றன என்பதை விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனாலும் அவை பற்றி விவாதிக்கின்றபோது ஸ்ரீதர் தரும் விளக்கங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு நேர்த்தியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசும் திறனை அவர் கொண்டிருந்தார்.
 
உண்மையில் ஸ்ரீதர் என்ற பன்முகக் கலைஞரைப் பற்றிப் பேசுவதற்குப் பல விடயங்கள் இருக்கின்றன. 24466_319832443590_657908590_3510215_443
 
ஸ்ரீதர் எங்களோடு இல்லை என்பதை இப்போதும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறது மனம்.
அவர் மரணமடைந்தபோது அதிகமான நேரத்தை அவருடைய பூதவுடலுடனேயே கழித்தேன், அவருடைய நினைவுகளைச் சுமந்தபடியே.
 
அச்சலி உரைகள்
 
அவருடைய பூதவுடல் கலாபவனத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது பலரும் உரை நிகழ்த்தினர். அவற்றில் சிலருடைய உரைகளை செய்திக்காக திரட்டியிருந்தேன். 
அவற்றையும் புகைப்படங்களையும் இங்கே தருகிறேன்.
 
பீ.எச்.அப்துல் ஹமீட்:
ஸ்ரீதர் பிச்சையப்பா, பன்முகத் திறமைகள் வாய்ந்த கலைஞன், தந்தைக்கு தப்பாமல் 32165468.JPGபிறந்த தனயன். முதல் தலைமுறையை விட அடுத்துவரும் தலைமுறை அதைவிட சாதிக்கும் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதற்கொரு நல்ல உதாரணம் தான் ஸ்ரீதர். தந்தை நடிப்புக் கலையில் தன்னை வளர்த்துக்கொண்டார். ஸ்ரீதர் நடிப்புக் கலை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் மிளிர்ந்தார்.
பல்துறை அறிவையும் திரட்டி சிறந்த கட்டுரைகளாக எழுதக்கூடிய திறமை வாய்ந்தவர்.
 
பொதுவாக இதுபோன்ற புகழ்சார்ந்த துறைகளில் திடீரென்று அவர்கள் நம்மைவிட்டுப் பிரியும் போது பேரிழப்பு என்கிறோம். சிலர் சம்பிரதாயமாக அதைச் சொல்வார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் உண்மையில் இது பேரிழப்பு தான்.
 
மேமன் கவி:
நண்பன் ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் கடந்த 30 வருட காலமாக நேசமிருந்தது. நான் நினைக்கிறேன். ஒரு கலைஞனின் பன்முக ஆற்றல் என்பதற்கு அப்பால் எல்லா 5648797.JPGகலைஞர்களுக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் தன்னை ஆழமாக வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் எல்லா துறைகளிலும் தனது தனித்துவத்தைப் பேணி, பதித்து வந்தவன்.
 
அவனுடைய பாடல்,நாடகம் இவ்வாறு பலதுறைகளைப் பற்றியும் பேசும் போது நான் முக்கியமாக ஓவியத்தை கவனம் செலுத்தியிருக்கிறேன். ஏனென்றால் அவனுடைய கோட்டோவியங்கள் மிக முக்கியமானவை.
 
சந்தனராஜ், வீரசந்தானம்,ஆதிமூலம் இப்படி பலருடைய ஓவியங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த கோட்டோவியங்களினூடாக இவை ஸ்ரீதருடைய ஓவியங்கள் தான் என தனித்துவமாக சொல்லக்கூடியவை. 
 
இப்படியான கலைஞர்கள் ஒரு கால இடைவெளிக்குள்ளே தான் தோன்றுவார்கள். பன்முக ஆற்றல் எனும்போது இயந்திரத் தனமாக இல்லாமல் ஆத்மார்த்தமாக தூய்மையாக அதனை ஸ்ரீதர் செய்துவந்தார்.
 
ஸ்ரீதருடைய எல்லா பார்வையிலும் படைப்பிலும் ஒரு நவீனத்துவம், ஒரு புதுமை, மக்களைக் கவர்கின்ற வெளிப்பாட்டுத் தன்மை இருந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் ஸ்ரீதரின் இழப்பினை நாம் அதிகமாக உணர்வோம் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய ஆத்மா சாந்தியடைவதாக.
 
சீத்தாராமன்:
இலங்கைக் கலையுலகம் சகலகலா வல்லவனை இழந்திருக்கிறது.அவரும் நானும் ஒரே54654781.JPGநிகழ்ச்சியில் 1979ஆம் ஆண்டு அறிமுகமானோம். இருவரும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் பங்குபற்றினோம்.
 
ஸ்ரீதருக்கு அப்போது சிறந்த பாடும் திறமை இருந்தது. அப்போதிலிருந்து ஓர் இசைக்குழுவை ஆரம்பிக்க வேண்டும் என அவரும் நானும் முழுமூச்சாக செயற்பட்டு வந்தோம்.
 
1980ஆம் ஆண்டில் எமது இசைக்குழுவினூடாக அவர் பாடிய முதல் பாடல் வாழ்வே மாயம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வந்தனம் வந்தனம்’ என்ற பாடல் தான். உலகுக்கே வந்தனம் சொல்லி கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போது ஸ்ரீதர் மிகச்சிறந்த அளவில் பேசப்பட்டார். உலகம் முழுதும் அவர் சென்றார்.
 
அதேபோல கடைசி இசை நிகழ்ச்சியும் என்னோடு தான் செய்தார். கடைசியாக தென்பாண்டிச் சீமையிலே என்ற துக்ககரமான பாடலைப் பாடினார். அது அவரது வாழ்வின் இறுதிக்காலத்தைச் சொல்லும் என நான் நினைக்கவில்லை.
 
மோகன்ராஜ்:
என்னுடைய ஆத்ம நண்பனும் இலங்கையின் புகழ்பெற்ற கலைஞனுமான ஸ்ரீதர் பிச்சையப்பா ஒரு பல்துறைக் கலைஞன். கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஒரே தெருவில் ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள்.
அவனிடமிருந்த மனிதப் பண்பானது ஏனைய கலைஞர்களுக்கு படிப்பினையாகும். ஆழந்த கவலையுடன் இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். 
 
இராஜேஸ்வரி சண்முகம்:
என் மகன் ஸ்ரீதரின் அந்திமக்கிரியைகளில் கலந்துகொண்டிருக்கிறோம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் உலகுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என வாழ்ந்தவர் ஸ்ரீதர். அவர் என்னோடு பல்வேறு நாடகங்களில் நடித்திருக்கிறார்.
 
கவிதைகளில் கருவாகி நின்றவனே
கலைகளில் உருவாகி நின்றவனே
நாடகங்களில் பாத்திரமாகி நின்றவனே
 
நான் உனக்கு கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்குகிறேன் ஐயா.
விடைபெறுகிறேன் ஐயா.
 
நீ போகும் இடத்திலாவது இறைவன் உனக்கு நிம்மதியைத் தரட்டும்.
 
கமலினி செல்வராஜன்:
நான் அதிகமான சந்தர்ப்பங்களில் ஸ்ரீதரை என் வீட்டுக்கு அழைத்து 21351654.JPGகதைத்துக்கொண்டிருப்பேன். பல விடயங்கள் கதைப்போம். எல்லாவற்றையும் பேசி முடித்த பிறகு கலைகளைப் பற்றித் தான் அதிகம் சொல்லிக்கொண்டிருப்பார்.
 
கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கண்ணை இழந்த போதிலும் அந்த சோகத்தை மறைப்பதற்காக கலைகளோடு வாழ்ந்து வந்தார். கலையோடு மிக்க ஆர்வம் இருந்தது.
 
ஆனால் குடும்பம் சரியாக இருக்கவில்லை என்பதனால் தன்னை மறந்து வாழக்கூடிய ஒருவனாக இருந்தார். என்னதான் இருந்தாலும் ஆற்றுப்படுத்தல்போல அன்பாக கதைப்பார்.
 
மல்லிகை ஜீவா
மிகச்சிறந்த ஓவியன், மிகச்சிறந்த நடிகன்,அற்புதமான நடிகன். இவை 
48498451.JPG
எல்லாவற்றையும் விட எல்லாரையும் நேசிக்கும் அன்பான நண்பன். இந்த அற்புதமான கலைஞனை கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிவேன். யாழ். கலைஞர்கள், எழுத்தாளர்கள் சார்பில் ஆழ்ந்த துக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எத்தனையோ கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் இன்று கூடியிருக்கிறார்கள். ஸ்ரீதர் மற்றவர்கள் மீதிருந்த பாசம் இப்போது விளங்குகிறது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனயோ மக்களை சிரிக்க வைத்த  கலை ஞனின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என அறியும்போது .. வருத்தமாய் இருக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் . பகிர்வுக்கு நன்றி . யாழ் கள நிலாமதி  

 

( அவரது துணைவி பெயர் நிலாமதி என பிற்காலத்தில்  அறிந்தேன் ) :D

எல்லாத் தருணங்களிலும் இயல்பாக இருத்தல் என்பது எல்லாராலும் முடிவதில்லை. ஆனால் ஶ்ரீதரால் முடிந்தது. பாசாங்கற்ற மிகவும் இயல்பான கலைஞன். 

 

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கதைக்கத் தொடங்கி சில நிமிடங்களிலேயே தோளை அரவணைத்துக் கொண்டு மிகவும் நட்புடன் பழகத் தொடங்கினார். எல்லாருடனும் இப்படித்தான் இலகுவாக நட்புறும் மனிதன் அவர் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.

 

தமிழகத்தில் பிறந்திருந்தாலோ அல்லது எம் மண்ணில் போரற்ற ஒற்றுமைச் சூழல் இருந்திருந்தாலோ சிகரங்களைத் தொட்டு மிளிர்ந்து இருக்க வேண்டிய கலைஞன். காரைதீவில் கலை நிகழ்ச்சியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்த பின்னரும் அவர் சோர்ந்து போயிருக்கவில்லை.

 

எங்கள் மனங்களில் என்றென்றும் வாழ்வாய் தோழா.

 

நினைவஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.