Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார்

23 பெப்ரவரி 2014

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ் தீவகம்-

நெடுந்தீவுபகுதியில் நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டலொன்றினை அமைக்க மஹிந்தவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தயாராகியுள்ளார். இதற்கென சுமார் 450 மில்லியனை அவர் ஒதுக்கியிருப்பதாகவும் நீச்சல் தடாகம் மற்றும் திருமண்டபமென அனைத்து வசதிகளுடன் குறித்த ஹோட்டல் கட்டப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன் கடல்வழி தொடர்பு மட்டுமே கொண்ட நெடுந்தீவிற்கு சுற்றுலாப்பயணிகள் வந்து சேரக்கூடியதாக சிறிய அளவிலான ஓடுபாதையுடன் விமான நிலையமொன்றும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே குறித்த ஹோட்டipனை சூழ நூறு வீடுகள் நிர்மாணிக்கப்படவுமுள்ளது. எனினும் அவை உள்ளுர் மக்களிற்குடையதாக இருக்கமாட்டதெனவும் மேலும் தெரியவருகின்றது.

இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் பிரபல ஒப்பந்த நிறுவனமான மகா நிறுவனமே இக்கட்டுமானப்பணிகளை முன்னெடுக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அப்பணிகளிற்கான தி;ட்டமிடல்களை முன்னெடுக்க இலங்கையின் முன்னணி கட்டடக்கலைஞர்கள் குழுவொன்று இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தியில் சென்று தீவினை சுற்றிப்பார்வையிட்டுள்ளனர். அத்துடன் கடற்படை அதிவேகப்படகுகளும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீவகப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வீக குடிகள் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில் சுவீகரிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103428/language/ta-IN/article.aspx

வடக்கில் வசந்தம் ஆரம்பம் .

கந்தக மணம் போனதே பெரிய விடயம் .

உங்களின் நுனி முக்கு நெடுந்தீவில் வீச இருக்கும் சுகந்ததிற்கு தவம் இருக்கிறது. ஆனல் உங்களால் கமல் மாதிரி உப்பும் சோறும் ஒரு சேஞ்சுக்கு சாப்பிடமுடியாது என்பதால் அளவு கடக்க சுக(ந்)த்தை தேடாதீர்கள். இப்போதைக்கு பாபுகடை காணும்.

 

போராளிகளுக்குத்தான் கந்த மணம் பிடிக்கும். பொழுது போக்கு விளையாட போனவர்கள் நரி போல "அன்று விட்டேன் கொண்டலடி" என்றுதான் கூறுவார்கள். 

 

வடக்கில் ஆமி கந்த மணம் இல்லாத துவக்களுடன் நடமாடபோவதும் இல்லை. வடகில் இனி வசந்த எழுச்சி ஒன்று வரப் போவதுமில்லை. மேலும் நீங்களே தானே வடக்கில் சமாதன் வந்துவிட்டது என்கிறீர்கள்.

 

மேலும் இன்று தெற்கில் அரசியல் திரும்பும் நிலையைப் பார்த்தால் அங்கு உலக நாடுகளில் வந்த வசந்தம் வருவதை தடுக்க முடியாது. JVP இரண்டு வசந்தகளை கொண்டு வந்தது. உக்கிரேயினின் நடு மாரியில் தோன்றியது வசந்தம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வசந்தம் ஆரம்பம் .

கந்தக மணம் போனதே பெரிய விடயம் .

 

 

இதை நீங்கள் நன்றாக விளங்கிக்கொண்டுதான் எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. கந்தகமணம் நிரந்தரமாக இல்லாமல்ப் போகவேண்டும் என்பதே எங்கள் அனைவரினதும் அவா. 

 

ஆனால் எமது தாயகம் சிறிதுசிறிதாக சிங்களவனால் நிரந்தரமாகவே ஆக்கிரமிக்கப்படுவதை உங்களால் வடக்கின் வசந்தம் என்றுதான் நோக்க முடிகிறதென்றால் நீங்கள் தனியே புலியெதிர்ப்பு வாதி மட்டும்தான் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கிழக்கைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பாசிக்குடா, கல்க்குடா பகுதிகளில் நாமல் ராஜபக்‌ஷ தமிழர்களிடமிருந்து பெருமளவு கடற்கரையோரக் காணிகளை வாங்கிவருவதாக கூறினார். அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சுமார் 3 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு பாரியளவு நிலத்தை அண்மையில் நாமலுக்கு விற்றிருக்கிறார். இவரைப் போன்றே, அந்த கடற்கரையெங்கும் உள்ள காணிகளை உரிமையாளர்கள் பாரிய தொகைக்கு விற்று வருகிறார்களாம். அமைச்சர் ஹிஸ்பொல்லா மற்றும் கிழக்கின் தானைத் தளபததி கருணா அம்மான் இடைத்தரகர்களாக செயற்பட ஜனாதிபதியின் மகன் கிழக்கை சிறுகச் சிறுக ஆக்கிரமித்துக்கொண்டு வருகிறார். காசுக்காக எமது சனமும் காணிகளைத் தாரைவார்த்துக்கொண்டு வருகிறது. 

 

இதுதான் நாம் சொல்லும் கிழக்கின் விடியலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

முன்னால் புலிப் போராளி ஒருவர் வேலையில்லாமல் கஷ்ட்டப்பட்டுக்கொண்டி இருந்திருக்கிறார். கருணா அம்மானிடம் கேட்டால் கட்டாயம் உதவி செய்வார் என்று யாரோ சொல்ல அந்தப் போராளியும் கருணாவிடம் உதவிகேட்டுச் சென்றிருக்கிறார். வேலையோ மட்டுப் பெரியாஸ்ப்பத்திரியில் கிளீனர் வேலை. கருணாவிடம் இவர் அந்த வேலையைத் தனக்கு வாங்கித்தரும்படி கேட்க, அவரோ "அந்த வேலை வேணுமெண்டால் இவ்வளவு பணம் தா" என்றறு பேரம் பேசியிருக்கிறார்.ஏழையான அந்தப் போராளியோ, "அண்ணை, நான் இத்தினை வருஷம் இயக்கத்தில இருந்து சனத்துக்காகக்ப் போராடின்னான்..." என்று கூறவும், கருணாவோ, "உன்னைப்போலத்தான் நானும் இயக்கத்தில வருஷக்கணக்காக இருந்தனான். அதெல்லாம் முடிந்தகாலம், முடியுமெண்டால் பணத்தோட வா" என்று அந்தப் போராளியை அனுப்பி விட்டாராம்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கில் வசந்தம் ஆரம்பம் .

கந்தக மணம் போனதே பெரிய விடயம் .

 

புலம்பெயர்ந்த பன்னாடைகள்....நாட்டையும் காட்டிக்கொடுப்பார்கள். தாயையும்........

தாயக ஆக்கிரமிப்பு சிங்களவனால் இன்றல்ல சுதந்திரம் கிடைக்க முதலே தொடங்கிவிட்ட ஒரு விடயம் ,தமிழர்களின் மிக பெரிய போராட்டமே அதை எதிர்த்துதான் ,

நாமல் இன்று வந்து நெடுந்தீவில் விடுதி காட்டுகின்றான் என்றால் அதற்கு பாதை போட்டுவிட்டது புலிகளின் அரசியல் தான் . இப்படி ஒரு நிலைக்கு எமது இனதிற்கு வந்து விட போகின்றது என்றுதான் எழுதியும் சொல்லியும் வந்தோம் .எதுவுமே எவர் காதிலும் ஏறவில்லை .வெள்ளம் தலைக்கு மேல் போனபின் வந்து இணையத்தில் குய்யோ முறையோ என்று கத்த நான் தயாரில்லை .

இங்கு அதிகமாக மற்றவனை திட்டுபவர்களை பார்த்தீர்கள் என்றால் நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடிவந்தவர்களாகத்தான் இருப்பார்கள் .

ராஜபக்சா ,கருணாநிதி ,சோனியா ,கருணா ,டக்கிலசை வாய் கூசாமல் திட்டுவதுதான்  அவர்களுக்கு தெரிந்த  போராட்டம் .அதனால் தான் அவர்கள் போராட போகாமல் ஓடிவந்தார்கள் .

எமக்கான அரசியலை  ஒழுங்காக செய்பவர்களை இன்றும் குறை கூறிக்கொண்டு ஒரு கொடியை பிடித்துவிட்டு தமிழ் ஈழம் பிடிப்பம் என்று யாழில் எழுதுபவர்களுகான பதில்தான் அது .

புலம்பெயர்ந்த பன்னாடைகள்....நாட்டையும் காட்டிக்கொடுப்பார்கள். தாயையும்........

தற்பெருமை கூடாது அண்ணை :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

தாயக ஆக்கிரமிப்பு சிங்களவனால் இன்றல்ல சுதந்திரம் கிடைக்க முதலே தொடங்கிவிட்ட ஒரு விடயம் ,தமிழர்களின் மிக பெரிய போராட்டமே அதை எதிர்த்துதான் ,

நாமல் இன்று வந்து நெடுந்தீவில் விடுதி காட்டுகின்றான் என்றால் அதற்கு பாதை போட்டுவிட்டது புலிகளின் அரசியல் தான் . இப்படி ஒரு நிலைக்கு எமது இனதிற்கு வந்து விட போகின்றது என்றுதான் எழுதியும் சொல்லியும் வந்தோம் .எதுவுமே எவர் காதிலும் ஏறவில்லை .வெள்ளம் தலைக்கு மேல் போனபின் வந்து இணையத்தில் குய்யோ முறையோ என்று கத்த நான் தயாரில்லை .

இங்கு அதிகமாக மற்றவனை திட்டுபவர்களை பார்த்தீர்கள் என்றால் நாட்டில் பிரச்சனை என்றவுடன் ஓடிவந்தவர்களாகத்தான் இருப்பார்கள் .

ராஜபக்சா ,கருணாநிதி ,சோனியா ,கருணா ,டக்கிலசை வாய் கூசாமல் திட்டுவதுதான்  அவர்களுக்கு தெரிந்த  போராட்டம் .அதனால் தான் அவர்கள் போராட போகாமல் ஓடிவந்தார்கள் .

எமக்கான அரசியலை  ஒழுங்காக செய்பவர்களை இன்றும் குறை கூறிக்கொண்டு ஒரு கொடியை பிடித்துவிட்டு தமிழ் ஈழம் பிடிப்பம் என்று யாழில் எழுதுபவர்களுகான பதில்தான் அது .

 

தாயக ஆக்கிரமிப்பென்பது சுதந்திரத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தமிழரின் பெரிய போராட்டமே அதை எதிர்த்துத்தான் என்று கூறிவிட்டு, இறுதியில் புலிகள்தான் பாதை போட்டு விட்டனர் என்று வேறு சொல்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. அம்பாறை, மணலாறு, கொக்கிளாய், நாயாறு, பதவியா, கிண்ணியா, புல்மோட்டை, கல்லோயா  என்று புலிகள் வளருமுன்னரே ஆக்கிரமிப்புத் தொடங்கிவிட்டதே?? மகாவலியாறு அபிவிருத்தித்திட்டம் என்பதே தமிழர் நிலங்களை அபிவிருத்தி என்கிற பெயரில் ஆக்கிரமிக்கும் திட்டம்தானே?? அப்படியாயின் இவையெல்லாம் புலிகள் போட்ட பாதையில் வந்தவைதான் என்கிறீர்களா??

 

உண்மையில் புலிகளிருந்த காலத்தில்த்தான் சிங்களக் குடியேற்றங்கள் மந்தகதியில் நடந்தன. இதற்கு அவ்வப்போது குடியேற்றக் கிராமங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களே காரணம். அவர்களுக்கும் முன்னரும் சரி, அவர்களுக்குப் பின்னரும் சரி குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை. 

 

தாயக ஆக்கிரமிப்பென்பது புலிகளுக்கு முன்பேயிருந்து நடந்துவருகிறதென்றால், யாருக்கு சொல்லியும் எழுதியும் வந்தீர்கள் ? கூட்டணிக்கா?? 

 

நீங்கள் பேசுவது நெடுந்தீவு என்கிற இடத்தில் நடக்கும் நில அபகரிப்பைப் பற்றி மட்டும்தான் என்றால்க் கூட, புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில்கூட நெடுந்தீவு சிங்கள ஆக்கிரமிப்பில்த்தானே இருந்தது? ஆனால் என்ன, அங்கே உல்லாசப் பயணம் போவதற்கு சிங்களவர்கள் விரும்பவில்லை. ஆனால் புலிகளுக்கு முன்னரும் கூட பல சிங்களவர்கள் இங்கே உல்லாசப் பயணம் வந்துதான் போனார்கள். 

 

குடியேற்றத்தை தடுத்ததோ அல்லது முடக்கியதோ புலிகளின் போராட்டம்தான். அவர்களின் போரட்டம் முடிந்தவுடன் குடியேற்றம் பழையபடி தொடங்கிவிட்டது. 

 

நீங்கள் எந்தக் கருத்தையுமே புலியெதிர்ப்பின்பால் எழுதுவதால் உங்களுக்கு சுதந்திரத்துக்கு முன்னரே(உங்கள் கருத்துப்படி) தொடங்கப்பட்ட தாயக அக்கிரமிப்பென்பது புலிகள் போட்ட பாதையில் வந்ததைபோலத் தெரிகிறது ஒன்றும் அச்சரியமல்ல. 

புலிகள் போனால் எதோ பான் கி மூனுக்கு போன் போட்டு பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பது போல் கருத்து விட்டார்கள்.

புலிகள் மறைந்தவுடன் அதிர்ந்துவிட்டார்கள். அதன் பின் புலி இல்லாவிட்டால் சுபீட்சம் கிடைத்திருக்கும் கதையை மாற்றி ஐந்து வருசமா அறுவை.

ரெக்சியனின் தலையில் வெடி வைத்த கந்தகம் மணக்காது ஏனென்றால் அந்த திரியில் வாயே திறக்கமாட்டார்கள்.

கத்திகுத்தால், பிளேட்டால், தூக்கு கையிற்றால், வாகன மோதலால் கொல்லலாம்.

சிறி லங்கா ஊடக கொலைகளால் 165வது இடத்தில் என்றாலும் அப்பாடி கடைசி இடம் இல்லை இன்னும் சுதந்திரம் இருக்கு என்று எதிரிக்கு ஆமணக்கு எண்ணெய் தடுவி விடுவினம்.

இவையளுக்கு ஒரு இழவும் தெரியாது.

செயல் என்றால் மற்றவர்களின் செயலில் குறை கண்டுபிடிப்பது தான்.

அல்லது நாலாம் உலகம் கட்டுகிறோம் என்று எதோ பெட்டி பட்டம் கட்டுவது போல் படம் காட்டுவார்கள். துருவி கேட்டால் எஸ்ஸ்ஸ்.

கிரிகெட்,சொக்கர்,சினிமா பாத்து அரசியல் படம் காட்டுவார்கள் சிறி லங்கன் கைப்புள்ளகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.