Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப

Featured Replies

2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப்பு...

இரணுவத்தால் வலிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து விடுதலைப்

புலிகளால் இதுவரை ஆறு டோறாக்கள் முற்றக அழிக்கப் பட்டுள்ளன..

மூதுரில் தொடங்கிய தாக்குதலில் இருந்து .இதுவரை காலத்தில்

ஆறு டோறாக்கள் வெற்றிகரமாக மூழ்கடிக்கப் பட்டுள்ளன.

இதே வேளை எட்டு டோறாக்கள் கடும் சேதமாக்கப் பட்டுள்ளன.

இரண்டு உலங்கு வானுர்திகள் சேதமாக்கப் பட்டுள்ளன

பாதினாறுக்கு மேற்ப்பட்ட கனரக ஆட்லெறிகள் முற்றாக அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன.

இது விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மிக உச்சகரமான

காலப் பகுதியாகும். சிறிலங்கா இரணுவத்தால் மிக மூர்கத்தனமாக மேற்க் கொள்ளப்பட்ட

வலிந்து தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளின் படையனிகளும் தமது தாக்குதலை முன்னெடுத்தனர்.

தீவிரமாக புலிகளால் முன்னெடுத்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலால்

சிங்கள படைகளை விரட் அடித்தனர். பலாலி இரராணுவத்தளத்தில் ஊடறுத்து புகுந்த

புலிகளின் அணிகள் படையினரின் ஆயுதகிடங்குகள் ஆட்லெறி தளங்கள முற்றாகஅழித்து நாசமாக்கினார்.

அதே வேளை மண்டைதீவுக்குள்ளும் ஊடறுத்து புகுந்த ஈருடக படையனிகளும் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி

அங்;கிருந்த ஆட்லெறி பல்குழல் தளங்களை அழித்து நீர் மூலம் செய்தன்ர்.

குறிப்பாக இதில் ஆட்லெறி மற்றும் பல் குழில் எறிகளை சேலுத்திகளாக மொத்தம்

பாதினாறுக்கு மேற்ப்பட்டன அழிக்கபட்ன என்றும் இவை கனரகத்தை

சேந்தவை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது..

இதே வேளை ஆறு கனரக கவச டாங்கிகளும் அழிக்கப் பட்டுள்ளன .

இது குறித் இரண்டு மாதத்துக்குள் மகிந்த ஆட்சி ஏறிய பின்னர் மகிந்தாவுக்க விழுந்த முதல் அடியாகும்..

1750 படையினர் காயமடைய...550க்கு மேற்ப்பட்ட படையினர் இதுவரை

களமுனையை விட்டு அகற்ப் பட்டுள்ளனர்.

முன்னனி படையனிகள் பல சிதைக்கப் பட்டுள்ளன

இத்துடன் இந்த தாக்குதல் முடியவில்வை என படையினர் தெரிவிக்கும் பட்சத்தில்

தாமும் மக்களை காக்க இந்த தாக்குதலை தற்காப்புக்காக தொடருவோம் என

விடுதலைப் புலிகள் அறிவத்துள்ளனர்..

விடுதலை; புலிகள் மீது வலிந்து தாக்குதலை தொடுத்துள்ள படைகள் மீது

பாரிய பாய்ச்ல் ஒன்றை நடத்த புலிகளின் சேனைகள் தயராகி வருகின்றன.

அடுத்து வரும் கல நில வரங்கள் இதை நியப் படுத்தும் என நம்பலாம்....!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை நல்ல சுவாரசியமாக இருக்கிறது. பல உண்மைகளுள் சில 'கதை'களும் இணைக்கப்பட்டுள்ளன.

வெள்ளி இரவு நடந்த கடற்சண்டையிற்கூட எந்த டோறாவும் மூழ்கடிக்கப்பட்டதாக புலிகள் சொல்லவில்லை. ஒரு டோறாவும் ஏனைய இரு படகுகளும் சேதமாக்கப்பட்டதாகவே சொல்லியுள்ளார்கள்.

தமிழ்நெற்றும் தமிழ் ஊடக 'ஜோதி'யில் கலந்து விட்டதோ என்னவோ?

மண்டைதீவில் எங்கே ஆட்லறி அழிக்கப்பட்டது? உண்மையில் மண்டைதீவில் ஆட்லறி இருந்ததா? இது யாருடைய தகவல்? எனக்குத் தெரிந்து மண்டைதீவு முழுவதையும் புலிகள் தாக்கவேயில்லை. அங்குள்ள மக்களும் கடற்படையும் பத்திரமாகவே இன்றுவரை இருக்கிறார்கள். மண்டைதீவின் அல்லைப்பிட்டிப் பக்கமான கடற்கரையிலிருந்த மினிமுகாம்தான் தாக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டது. அல்லைப்பிட்டி முழுமையாக புலிகளால் கைப்பற்றப்பட்டது. அங்கே ஆட்லறிகளோ டாங்கிகளோ தம்மால் அழிக்கப்பட்டதாக புலிகள் இன்றுவரை சொல்லவேயில்லை. புலிகள் பல விசயங்களைச் சொல்லவில்லை என்பதையும் ஏற்றுக்கொளகிறேன். (முக்கியமாக பலாலிக்குள் நடந்த தாக்குதல்) ஆனால் சம்பந்தப்பட்ட இடங்களில் (ம.தீவு, அல்லைப்பிட்டி) ஆட்லறிகள் இருந்ததாக எந்தக் கதையுமில்லை. போரியல் ரீதியில் அப்பகுதியில் ஆட்லறிகள் இருக்க சாத்தியம் குறைவே. இன்னும் சொல்லப்போனால் தேவையே இல்லாத ஒன்று. டாங்கிகளுக்கு எள்ளளவும் சாத்தியமில்லை.

தமிழ் ஊடகங்கள் அதிகமாகக் கதைக்கத் தொடங்கியபின் இப்படியான நிறையக் கதைகளைக் கேட்டு உச்சுக் கொட்டிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

  • தொடங்கியவர்

வணக்கம்....

என்னால்

மேற் குறிப்பிடப்பட்ட கட்டுரையில்

புளுகு செய்திகள் எதுவும்இணைக்கபடவில்லை.

அதில் குறிப்பாக மூதூரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில்

இருந்து என்றே வரையறை செய்யப் பட்டது

இதை தாங்கள் கவனத்தில் கொள்ளவும்.

புலிகளின் இராணுவ பேச்சாளர் பல விடயங்களை

உறுதி செய்துள்ளளர்.

பல விடயங்களை இவை இன்னும் வெளிப் படையாக சொல்லிவல்லை

எல்லாம. ஒரு தந்திரமாக வைத்து காய் நகர்த்துகின்றனர்.

இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

நன்றி

- வன்னி மைந்தன்-

வன்னி மைந்தன், அது உங்கள் சொந்த கட்டுரையா? சரி அவற்றில் வெளியிடப்பட்டிருக்கும் விபரங்களிற்கு ஆதாரம் என்ன?

புலிகளின் இராணுவப் பேச்சாளர் பல விடையங்களை உறுதி செய்துள்ளார் என்ற வியாக்கியானம் எங்களுக்கு தேவையில்லை. அவரினால் உறுதிப்படுத்தப்படாத மிச்ச விபரங்கள் பற்றித்தான் இங்கு கேள்விகள்.

மற்ற ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் உங்களிடம் எப்படி வந்தது? உங்களின் பின்னணி என்ன?

இந்த தகவல்களை யாரை நோக்கி என்ன எண்ணத்தோடு இங்கு தருகிறீர்கள்?

  • தொடங்கியவர்

வணக்கம்.

விடுதலைப் புலிகளால் கடந்த காலங்களில் நடத்தப் பட்ட

பல வெற்றிகரமான தாக்குதலின்கோதும் கைப்பற்றப்பட் ஆயுத விபரங்களை

முற்று முழுதாக வெளியி டுது இல்லை.

சிங்கள இராணுவத்துக்கு தெரியும் புலிகளிடம் என்ன போயின

என்பதும் அவையும் தாமும் மௌனம் காத்தனர்.

இதில் சொல்லப்பட்ட பல தகவல்கள் அங்கிருந்து

வந்த தகவல்கள். சில காரணங்களுக்காக தழிழீழ விடுதலை புலிகளும்

தனிக்கை செய்தே வெளியிடுவது தற்ப்போது தெரிகிறது..

நீங்கள் கொஞ்சும் விடுதலைப் போராட்டத்தின்

சமர்களை கொஞ்சம் தட்டிப் பாhத்தால்

அவை புலனாகும். இது தான் எனது

இறுதி பதில் வேறு என்னால் கூற முடியாது.

யாரும் இன்னொருவர் கட்டுரையை திருடி போடுவார்களா...??

1197ம் ஆண்டு தாண்டிக்கள படை முகாம்

ஊடறுத்த தாக்யியபோது செய் அல்லது செத்து மடி நடவடிக்கையின் போதும்

அங்கிருந்து 120 மிலிலி மீற்றர் ஆட்லெறியை

புலிகள் கைப்பற்றியதாக பின்னர் ஊடகங்கள் வெளியிட்டது..

வேங்கை படையும் அதற்க்கு முறப்பறிக்கை விட

மௌனம் காத்தது இவை கடந்த கால

நிகழ்வு இது ஒரு படை நகர்வின் போது தமது படைகளிற்க்கோ

அல்லது அது சார்ந்த அமைப்புக்கோ பங்கம் வாரமால்

பார்த்து கொள்வது அவர்களின் நிலை.

பொறுத்திருந்து பார்க்கலாம்

எது உண்மை பொய்யென...

ஏன் நமக்குள் வீன் வாதம்...

நன்றி..

சரி விடுதலைப்புலிகள் வெளியிடுவது இல்லை என்று நீர் சொல்லி தான் இங்கு ஒருவருக்கு தெரியும் என்ற நிலையில் இல்லை. இதைப்பற்றி கடந்த காலத்தை பிரட்டிப்பாக்கச் சொல்லி அறிவுரை கூறுற பம்மாத்தை நிப்பாட்டும்.

கேட்ட கேள்விகளிற்கு பதில் சொல்லும்.

விடுதலைப்புலிகள் அறிவிக்கா ஏனைய ஊடகங்கள் வெளியிடதா விபரங்களை "அங்கிருந்து வந்த தகவல்கள்" என்று இங்கு விளாசுவதன் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்....

என்னால்

மேற் குறிப்பிடப்பட்ட கட்டுரையில்

புளுகு செய்திகள் எதுவும்இணைக்கபடவில்லை.

அதில் குறிப்பாக மூதூரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில்

இருந்து என்றே வரையறை செய்யப் பட்டது

இதை தாங்கள் கவனத்தில் கொள்ளவும்.

புலிகளின் இராணுவ பேச்சாளர் பல விடயங்களை

உறுதி செய்துள்ளளர்.

பல விடயங்களை இவை இன்னும் வெளிப் படையாக சொல்லிவல்லை

எல்லாம. ஒரு தந்திரமாக வைத்து காய் நகர்த்துகின்றனர்.

இதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்...நன்றி

- வன்னி மைந்தன்-

அப்படி என்றால் அந்தத் தந்திரத்தை நீர் ஏன் புரிந்து கொள்ளவில்லை. போராட்டத்தில், நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நேரத்தில் இம் மாதிரியான கிளுகிளுப்புக்கதைகள் தேவையா?

உம் மீது கோபத்தில் சொல்லவில்லை. ஆனால் நிறையத் தடைகள் இருக்கும் நேரத்தில் வெற்றிக் களிப்பில் எம் மக்களை மூழ்கடிக்காதீர்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா வன்னி மைந்தன்,

கடந்த காலத்தில் கைப்பற்றப்பட்டு புலிகள் வெளிப்படுத்தாத சந்தர்ப்பங்கள், ஆயுதங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?

120 மி.மீற்றர் பீரங்கியை புலிகள் ஆட்லறி என்று சொல்வதில்லை. அதை மோட்டார் வகைக்குள்தான் சேர்க்கிறார்கள். (அஞ்சு இஞ்சி என்ற செல்லப் பெயருமுண்டு) தாண்டிக்குளச் சமருக்கு அடுத்ததாக நடந்த பெரிய மடுச்சமரில் (யூலை இறுதி 1997. லெப்கேணல் தனம் வீரச்சாவு) 120 மி.மீற்றர் பீரங்கியொன்றைக் கைப்பற்றினார்கள். அப்போது அதை ஆட்லறி என்று அறிவித்துவிட்டு பின் மோட்டார் என்று திருத்தி விவரம் வெளியிட்டார்கள்.

நான் இங்குப் பார்த்த அளவில் புலிகளிடமிருக்கும் டாங்கி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றுகூட சிலர் கதைவிட்டுக் கொண்டார்கள்.

மண்டைதீவில் ஆட்லறிகள் அழிக்கப்பட்டன என்ற கதையை வன்மையாக மறுத்திருந்தேன். உமது பதிலென்ன?

இதே கதையைச் சொல்லி தமிழ்நாதத்தில் கட்டுரை எழுதப்பட்டபோது தகவலைத் தெளிவாக்கும்படி கேட்டபோது தமிழ்நெட் செய்தியைத் தந்தார்கள். அந்தவகையில் கட்டுரையாளரில் தவறில்லை.

நீங்களும் அந்தக் கதைக்கு தமிழ்நெட்டை ஆதாரப்படுத்தியிருந்தால் பிரச்சினையில்லை.

அல்லது பெயர்குறிப்பிட விரும்பாத புலிப்பிரமுகர் என்று யாராவது சொன்னார்களா?

மற்றவர்கள் கேட்ட கேள்வியே எனதும்.

புலிகள் மறைக்கிறார்கள் என்று நீர் சொல்வதை உண்மையென்று கொண்டால், புலிகள் மறைப்பதை நீர் வெளிப்படுத்தும் வேலையைச் செய்கிறீரா? அதாவது புலிகளுக்கு எதிராகச் செயற்படுகிறீரா? அதுவும் யாழ் களத்தில வந்து நிண்டுகொண்டு.

_________________________________

புலி வருது புலி வருது எண்டு சொல்லிச்சொல்லி உங்களுக்கும் சலிச்சுப் போகேல.

கடசியா புலிவரேக்க ஒரு சுவாரசியமும் இல்லாமல் போகப்போகுது எண்ட கவலையும் கிடக்கு.

வன்னி மைந்தன் இதுவரை 550இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளது போன்று எழுதியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் கணக்குப்படி இது மேலும் அதிகம்.

மூதூரில் 150இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், முகமாலை, மண்டைதீவு சண்டையில் 485 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். மூதூர் நடவடிக்கையின் பின்பு மாவிலாறைக் கைப்பற்ற நடந்த சண்டையிலும் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தற்பொழுது சாம்பூரில் நடக்கும் சண்டையிலும் விடுதலைப்புலிகளின் கணக்குப்படி 100இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகவே விடுதலைப்புலிகளின் கணக்கின்படி 750இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆகவே வன்னி மைந்தன் பார்த்த கணக்கிலோ அல்லது "அங்கு" இருப்பவர்கள் கொடுத்த கணக்கிலோ தவறு உள்ளது.

இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.

நாட்டில் இருந்து கூட குறிப்பிட்ட பொறுப்பாளர்களிடம் இருந்து பெறுகின்ற செய்திகளே உத்தியோகபூர்வமானவையாக இருக்கின்றன. அலுவலகங்களில் நிற்கின்ற மற்றையவர்கள் சில வேளைகளில் மிகைப் படுத்தியும் கூறி விடுகிறார்கள். எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

அதே வேளை வன்னிமைந்தன் இங்கே இது போன்ற செய்திகள் தருவதற்கு எவ்வித உள்நோக்கத்தையும் கற்பிக்க நான் விரும்பவில்லை. உண்மையில் நாட்டில் இருந்து வருகின்ற பெரும்பாலான செய்திகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு குழப்பத்தை கொடுப்பதாகவே உள்ளன. அந்த மக்களின் சோர்வினை போக்கும் பொருட்டு வன்னிமைந்தன் இங்கே இவைகளை எழுதியிருக்கலாம் என்றே நம்புகிறேன்.

புலம்பெயர்ந்த மக்களிற்கு தவறான் எதிர்பார்ப்புகளை சிறுபிள்ளைத்தனமாக பொறுப்பற்ற முறையில் ஏற்படுத்தியது புலம்பெயர்ந்த ஊடகங்கள். அந்த எதிர்பார்ப்பை தக்கவைக்க புலம்பெயர்ந்த மக்கள் சோர்வடையாமல் இருக்க பெய்களை புனைக்கதைகளை உத்தியோகபூர்வற்ற செய்திகளை வெளியிடுவதை நியாயப்படுத்த முடியாது.

இது ஊடகங்களுக்கும் சரி யாழ் போன்ற கருத்துக்களங்களிற்கும் சரி.

நியாயப்படுத்துவது எனது நோக்கம் இல்லை. ஆனால் இங்கே எடுத்ததெற்கெல்லாம் உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. அதைத்தான் வேண்டாம் என்கிறேன்.

மேற்கோள்:

1197ம் ஆண்டு தாண்டிக்கள படை முகாம்

ஊடறுத்த தாக்யியபோது செய் அல்லது செத்து மடி நடவடிக்கையின் போதும்

அங்கிருந்து 120 மிலிலி மீற்றர் ஆட்லெறியை

புலிகள் கைப்பற்றியதாக பின்னர் ஊடகங்கள் வெளியிட்டது..

பாவம் இவர் வந்ததிலிருந்தே ஒவ்வொரு பக்கமாக ஏதாவது புலம்பிக் கொண்டேதானிருக்கின்றார். விட்டுவிடுங்கள் நன்றாக புலம்பித் தீர்க்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிதான விடயங்களை இங்கே வெளியிடுவதே மேல்.

வன்னி மைந்தன் யார் நீங்க?

நீங்க தருவது ஆய்வா?

அப்பிடினா.............

செய்தி பகுதியில் ஏன்?

ஏதேனும் அங்கிகரிகபட்ட ................

மீடியாவில் இருக்கிங்களா?

இது எல்லாம் பிழை அண்ணோய் .............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிதான விடயங்களை இங்கே வெளியிடுவதே மேல்.

அப்ப இதெல்லாம் பழைய விசயங்களோ?

முநதியும் ஆராவது உப்பிடி எழுதித்திரிஞ்சவையோ?

View previous topic :: View next topic

ஆக்கியவர் Message

vanni mainthan

வெல்கொம் குனாலன் எப்படி சுகமா? வினித் வந்துட்டான் பதில் சரியாக கிடைக்கும் ஆனாலும் 1 கிழமை நல்லா தான் ஆட்டி போட்டிரி இதன் விளைவு வெகு விரவில் :?: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.