Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!
 
March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
 
இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மலேசிய அரசும், சர்வதேச விமான ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 

227 பயணிகளும் உயிரிழந்துவிட்டனர்: வியட்னாம்

 

malaysian_flight_005.jpg227 பேருடன் காணாமல் போன மலேசிய விமானம், வியட்னாமின் தோ சு தீவுகளில் இருந்து 153 மைல் தொலைவில் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணித்த சகல பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், வியட்னாம் கடற்படை கப்பல்கள் அப்பகுதியில் இல்லாததால், அருகில் உள்ள தீவுகளில் இருந்து மீட்பு பணிகளுக்காக படகுகளை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 777- 200 ரகத்தைச் சேர்ந்த எம்.எச்.370 விமானம் இன்று காலை காணாமல் போனது. விமானத்தில் 12 சிப்பந்திகள், 2 குழந்தைகள் உள்பட 239 பேர் இருந்தனர்.

விமானம் காணாமல் போனது குறித்து மலேசிய ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,'எம்.எச்.370 விமானம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.41 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதே நாளில் காலை 6.30 மணிக்கு பீஜிங் விமான நிலையத்திற்கு விமானம் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அதிகாலை 2.40 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

150 பேர் சீனர்கள்

விமானத்தில் இருந்த பயணிகளில் 150 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என அந்நாடு அறிவித்துள்ளது.

மேலும், காணாமல் போன விமானம் சீன வான்வழி போக்குவரத்து மேலாண்மை துறையுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என சீனாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

வெளியுறவு அமைச்சர் வருத்தம்

முன்னதாக விமானம் காணவில்லை என்ற செய்தி வெளியானதும், அச்செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆன் தெரிவித்தார். மேலும் வெளியுறவு அமைச்சகமும், விமான போக்குவரத்து துறையும் அவசர கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும், விமானம் குறித்த தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார். தென் சீன கடல் பகுதியிலும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

வியட்நாமில் விபத்து

இதற்கிடையில், காணாமல் போனதாக கூறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச்.370 விமானத்தில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டதாக வியட்நாம் ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை சீன ஊடகங்களும் உறுதிப் படுத்தின. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் விமானம் வியட்நாமின் தோ சு தீவுகள் அருகே விபத்துக்குள்ளானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

f1_net.jpg

fli_net.jpg

flight_net.jpg

,jpj.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுடன் பயணிகள் விமானம், நடுக்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாவது என்பது வேதனையான செய்தி.
இறந்தவர்களில்... பெரும்பாலானோர் சீனர்கள் என்றாலும், அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் ஒரு சோகமான செய்தி. விமான நிலையத்தில் ஏங்கும் உறவுகளை பார்க்கையில் மனம் வலிக்கிறது.

சோகமான செய்தி :(

  • கருத்துக்கள உறவுகள்
காலையில் சோகமான செய்தி 
 
உறவுகளை இழந்து தவிப்போரை பார்க்கின்ற போது மிகவும் கஸ்ரமாக உள்ளது 
  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி

விமானம் MH370

பயணிகள்

ஒரு குழந்தை உட்பட 153 சீன மக்கள்

38 மலேசியர்கள்

12 இந்தோனேசியர்கள்

6 ஆஸ்திரேலியர்கள்

ஒரு குழந்தை உட்பட நான்கு அமெரிக்கர்கள்

மூன்று பிரஞ்சு

இரண்டு நியூசிலாந்து, உக்ரைன் மற்றும் கனடாவில் இருந்து ஒவ்வொரு

ஒரு ரஷ்யா, இத்தாலி, தைவான், நெதர்லாந்து, ஆஸ்திரியா இருந்து ஒவ்வொரு

  • கருத்துக்கள உறவுகள்

வியாட்நாமின் கடலில் விழுந்த மலேசிய விமானம்- மீட்பு பணியில் 75 ஹெலிகாப்டர்கள்
 

 

கோலாலம்பூர்:

 

விபத்துக்குள்ளான மலேசிய விமான மீட்புப் பணியில் 75 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் இன்று வியட்நாமின் தோ சு கடற் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு, விமானத்தில் பயணம் செய்தவர்களை மீட்பதற்காக 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 5 இந்தியர்களும் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more at: http://tamil.oneindia.in/news/international/75-helicopters-involved-malaysian-flight-rescue-operation-195145.html

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா விமான விபத்து: சென்னை பெண் பலி?

கோலாலம்பூர்:

 

வியட்நாம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகாசர்மா என்பவரும் ஒருவர். எனவே அவர் இந்த விபத்தில் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.

 

 

காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர். கடலில் விழுந்த விமானம் இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

இதனால், விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆயிற்று? என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. 5 இந்தியர்களின் கதி? இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் பயணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் பெயர்கள் சேத்னா கொலேகர், சுவனந்த் கொலேகர், சுரேஷ் கொலேகர், பிரகலாத் ஷிர்சதா, சந்திரிகா ஷர்மா என தெரிய வந்துள்ளது. கனடாவில் வாழும் இந்திய வம்சாவழியினரான குக்தேஷ் முகர்ஜியும் இந்த விமானத்தில் சென்றுள்ளார். சென்னைப் பெண் விபத்துக்குள்ளான விமானத்தில் சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் சந்திரிகா சர்மா (51) பயணித்தது தெரியவந்துள்ளது.

 

 

 

இதனால் வேளச்சேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விமான விபத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளனர். சந்திரிகா சர்மா ஹரியானாவைச் சேர்ந்தவர். சென்னையில் வேளச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.

 

 

அவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த 239 பேரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

 

 

 

Herdman said it was shocking that a jet with such sophisticated communications could simply vanish without some sort of signal.

"It's extremely unusual, indeed," he said — especially given the 777-200's "extraordinary safety record."

 

 

The airline identified the pilot as Zaharie Ahmad Shah, 53, a 32-year veteran of the airline with 18,365 hours of flight experience. The first officer, Fariq Hamid, 27, joined the airlines in 2007 and had 2,763 hours of flight time.

 

http://t.dell13.us.msn.com/?pc=MDDCJS&ocid=DELLDHP

ein-flugzeug-der-malaysian-airlines-ist-

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோகமான செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான செய்தி.

Asked earlier whether terrorism was suspected in the disappearance of the jet, Malaysian Prime Minister Najib Razak said authorities were “looking at all possibilities,” The Associated Press reported.

Earlier in the day, U.S. officials told NBC News that “all we know is something quick and catastrophic” happened to the plane.

 

http://www.nbcnews.com/storyline/missing-jet/stolen-passports-prompt-terror-concerns-missing-jet-officials-say-n47861

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் 'திருப்பபட்டதா'?

ராடார் சமிக்ஞைகளை ஆதாரம் காட்டி 24 மணி நேரத்திற்கு மேல் காணாமல் போயுள்ள மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் திரும்பி இருக்கலாம் என , மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

http://www.bbc.co.uk/news/world-asia-26502843

இந்த செய்தி உண்மையானால் இந்த 227 உயிரும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிம்மதி. எத்தனையோ கமராக்கள் பூமியை அவதானிக்க, இன்னும் இதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், இந்த தொழில் நுட்பங்கள் இருந்தும் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

இவ் விமானத்தில்... போலி அடையாள அட்டையுடன் நான்கு பேர் பயணித்ததாகவும், அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும்... சில இணையத்தள செய்திகளில் காணக் கூடியதாக உள்ளது.
 

கடலில் விழுந்திருந்தால்...சில பொருட்களாவது மேலே மிதந்திருக்கும்.
சில வேளை... விமானம் கடத்தப் பட்டிருக்கவும், சாத்தியக் கூறுகள் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.