Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சில தகவல்கள்

Featured Replies

புதிதாக கனடிய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சில தகவல்கள்!!

தற்போது கனடாவில் உயர்தரப் பாடசாலையில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் சம்பந்தமான எவ்வித அறிவோ எதைப் படிப்பது? தாங்கள் என்ன பாடத்தை அல்லது தங்களுக்கு பொருத்தமான துறையை எவ்வாறு தெரிவு செய்வது? என்ற குழப்பத்தால் பல புத்திசாலி மாணவர்களது வாழ்வு சின்னா பின்னமாகி விடுகிறது. என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவர்களது பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க எனது அனுபவத்தின் துணையுடனும் மற்றும் நான் பல்கலைக்கழகம் போக முதல் தமிழ் மாணவர்களால் நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கிடைத்த தகவல்களின் சாராம்சத்துடனும் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்..

புதிதாக பல்கலைக்கழகம் செல்ல எத்தனிக்கும் மாணவர்கள் முதலில் உங்கள் உயர்தரப் பாடசாலையைச் சிறப்பாக முடித்து இருக்க வேண்டும். ஆகவே நீங்கள் பல்கலைக்கழகம் செல்ல முந்திய உங்கள் உயர்தரப் படசாலையில் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது

1. நீங்கள் எவ்வாறு உங்கள் மேல்நிலைக் கல்வி கற்க வேண்டும்,

2. மேல்நிலைப்பள்ளியில் என்னென்ன பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதில் ஒரு தெளிவு முதலில் உங்களுக்கு வேண்டும்.

3. உங்களது சிறுவயது ஆசைகள், விருப்புவெறுப்புக்கள் இலட்சியங்கள் போன்றன கவனித்துச் செயற்படுதல் சிறுப்பைத் தரும்.

இல்லாவிடில் உங்களது வாழ்வு துடுப்பில்லாத படகு போல் திக்குத் திசை தெரியாமல் போய்விடும். அத்துடன் பெற்றோரும் தமது பிள்ளைக்கு எதில் ஆர்வமும் அறிவும் திறமையும் இருக்கிறது என அறிந்து கொண்டு வழிகாட்ட வேண்டும். சராசரிப் பெற்றோர்கள் போல எமது பிள்ளை ஒரு வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ வர வேண்டும் என எண்ணாமல் அவர்களது ஆர்வம், திறமைக்கு ஏற்றபடி துறைகளைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும்.

மற்றும் உங்களுக்குத் தேவையான அறிவுரைகள் பல்வேறு விதமான உதவிகளை உள்ளடக்கிய வலையமைப்பின் மூலம் பற்பல பல்கலைக்கழகங்களின் பிரசுரங்கள் வெளிவருகின்றன. அவற்றில் உங்களது கேள்விக்கான விடைகள் நிச்சயம் கிடைக்கும். ஆகவே அவர்களைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். மற்றும் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில் எந்த மாதிரியான கல்வி சிறந்தது என அறிந்து கொள்ளல் வேண்டும். கல்வித்திட்டத்தில் நீங்கள் கட்டாயமாக என்ன பாடம் எடுக்க வேண்டுமோ அவற்றை மட்டும் தெரிவு செய்வதன் மூலம் நேரம் விரயாமவதைத் தடுத்தல் போன்றன முன்னேற்றப் பாதையின் ஒவ்வொரு படிக்கற்களாக அமையும்.

அத்துடன் விளையாட்டு, கலைத்திட்டப் புறச்செயற்பாடுகளில் (Exttra curricular activities) பங்குபற்றி வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளல் போன்றன உங்கள் பல்கலைக்கழக அனுமதியை இலகுவாக்கின்றன. உதாரணமாக என் நண்பியொருவருக்கு அவருடைய ஓவியத்திறமைக்காக கலைப்பிரிவுக்கான சிறப்பு அனுமதி யோர்க் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல உங்கள் தெரிவுகளில் ஒரு தெளிவு வேண்டும். சிலர் ஒரு துறையை தெரிவு செய்துவிட்டு தொடர்ந்து படிக்க முடியாமல் இடையில் அதை மாற்ற முயல்வர் இது எந்த நேரமும் சாத்தியமல்ல. இப்படி இடையில் தங்கள் துறையை மாற்ற முயல்பவர்களில் சிலருக்கு மட்டுமே அந்த மாற்றம் முன்னேற்றததை நோக்கிய படிக்கல்லாக அமைகிறது ஆனால் பலருக்கு பணவிரயமும் ஓரிரு செமஸ்டர்கள் பின்தங்க வேண்டிய நிலையேற்பட்டு குறித்த நேரத்தில் பட்டம் பெற முடியாமற்போகிறது. எனவே ஆரம்பத்திலேயே உங்களுக்கான துறையைத் தேர்ந்தெடுத்தல் சாலச்சிறந்தது.

தொடர்ந்து வாசிக்க .

http://www.thayakaparavaikal.com/August-event.html

தாயகப்பறவைகளில இருக்கிற எல்லாத்தையும் இங்க கொண்டு வாறதென்றால்..பிறகேன் அதை நடத்திறியள்..! நீங்களே இதைச் செய்யேக்க மற்றாக்கள்..என்ன செய்வினம்..! :roll: :idea:

  • தொடங்கியவர்

தாயகப்பறவைகளில இருக்கிற எல்லாத்தையும் இங்க கொண்டு வாறதென்றால்..பிறகேன் அதை நடத்திறியள்..! நீங்களே இதைச் செய்யேக்க மற்றாக்கள்..என்ன செய்வினம்..! :roll: :idea:

அங்க இருக்கிற ஆக்கம் எல்லாம் இங்க கொண்டு வாறது எண்ட நோக்கம் நமக்கு இல்லை குருவிகள். கனடாவில 7 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் தொடங்கின்றன தாயகப்பறவைகள் பற்றி எல்லோருக்கும் தெரியாது அதுதான் இங்க போட்டன் போற ஆக்களுக்கு உதவியாக இருக்கும் எண்டு. :roll:

ஒன்று செய்திருக்கலாம்..பகுதியாப் போட்டிட்டு..மிகுதிக்கு இணைப்பைக் காட்டி விட்டிருக்கலாம். அவை அங்க போய் பார்த்துக் கொள்ளுவினம். இப்படிச் செய்யுறது புதிதாய் பறக்கும்..தாயகப்பறவைகளுக்கே உரித்தான தனித்துவத்தையும் அறிமுகத்தையும் குறைக்கும் அல்லவா..! அதுதான் குறிப்பிட்டோம்..அப்புறம் உங்கள் இஸ்டம்..! :wink: :idea:

  • தொடங்கியவர்

நீங்கள் சொன்ன மாதிரித்தான் போடுறன் என்று நினைத்துக் கொண்டு மாறி முழுவதையும் போட்டு விட்டேன். இப்போ எடுத்துட்டன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. :wink:

ரசிகை எழுதியது:

"அது மட்டுமல்லாது அரசாங்கம் உங்களுக்கு கடன் உதவியும் (OSAP) என்ற முறையால் தரும் ஆனால் நீங்கள் கட்டாயம் இப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.. உங்களுக்கு வேறு வழியில் பணம் கிடைக்குமானல் இம் முறை அவசியமில்லை. OSAP எடுக்கும் பட்சத்தில் எவ்வளவு அதிகமாக எடுக்க முடியுமோ அவ்வளவு எடுக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அவர்களின் முழுத் தொகையும் எடுத்தால் அத் தொகையில் 30% நீங்கள் திருப்பிக் கட்டத் தேவையில்லை. அதனால் தான் சில மாணவர்கள் உயர்தரப்பாடசாலை முடிந்தவுடன் ஒரு வருட ஓய்வெடுத்து வேலை செய்து காசு சேமித்தாலும் OSAP எடுப்பதையே விரும்புகிறார்கள்".

30வீதம் கட்டத் தேவையில்லையென சொல்கிறீர்கள். அது உண்மையா?? அல்லது உங்கள் உத்தேசமா??

:roll:

  • கருத்துக்கள உறவுகள்

இல் 30% கட்டத் தேவையில்லையென்பது தவறென நினைக்கிறேன். சரியாக ஆராயவும். முந்தி forgiveness எண்டு ஒரு கழிவு தருவார்கள். இப்ப அப்பிடி இல்லை, grand எண்டு வருடம் வருடம் ஒரு % கழிவு தருவார்கள் என நினைக்கிறேன். :roll: :?:

மற்றது உங்கள் ஆக்கத்தில் இருந்து நீங்கள் என்னும் OSAP திரும்பக் கட்டத் தொடங்கவில்லைப் போலுள்ளது. காரணம், எவ்வளவு அதிகமாக எடுக்கேலுமோ அவ்வளவு எடுக்க முயற்ச்சிக்க வேண்டும் எண்டு எழுதி இருக்கின்றீர்கள். அதை நான் recommend பண்ண மாட்டேன். வீண் வட்டி அதுகும் prime rate ஜ் விட 2.5%கூட கட்ட வேணும். நீங்கள் படித்து முடித்து திருமணம் பண்ணி அவரும் OSAP கடன் வைத்திருந்தால் அதன் வலி தெரியும். :oops: என்ன எல்லாம் அனுபவம்தான். எங்கள் இருவரின் மாத OSAP கட்டுத்தொகை வீட்டு mortgage மாதக் கட்டுத் தொகையை விட கூட எண்டால் பாருங்களேன்.

இது பணத்தைக் கையாளும் முறையில் (money management) தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு இலாபம் தரலாம் மற்றபடி சொந்தப்ணத்தில் படிக்க முடிந்தால் அதுவே சிறந்தது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் கடன் திரும்பக்கட்டுவது Canada Revenue Agency's இன் collection department க்கு கீள் வந்து விட்டது. திரும்ப கட்டாமல் விட்டால் அம்போ தான். உங்கள் refund ஜ எடுப்பார்கள் அல்லது உங்கள் வேலையில் இருந்து garnishment முறையில் எடுப்பார்கள் அல்லது உங்களுக்கு சொத்துக்கள் (வீடு, கார்) இருக்கும் பட்சத்தில் அந்த property க்கு lien போடுவார்கள். OSAP கடனுக்கு வங்கு றோத்து (bank druptcy) அடிக்கேலாது. :(

நன்றி சபேஸ் அண்ணா தங்கள் தகவலிற்கு..

ஆமாம் 30% தவறான தகவல் என்று தான் நானும் நினைக்கிறேன். நான் முதல் இரு வருடங்களும் OSAP எடுக்கவில்லை. மூன்றாம் வருடம் OSAP எடுக்கவோ எடுக்காமல் விடவோ என இரு நிலையில் உள்ளேன். என்றாலும் 60வீதப் பணம் கட்டிவிட்டேன் (late payment தவிப்பதற்கு)

யாராவது இதைப்பற்றி அனுபவம் உள்ளவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் எம்மைப் போலவுள்ள மாணவர்களுக்கு உதவும். :!: Please don't give us inaccurate information about OSAP. :wink:

  • தொடங்கியவர்

நான் இன்னும் ஓசாப் கட்டத் தொடங்கவில்லை. இப்பவும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறன். முடிந்தளவு முழுத் தொகையும் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்பது அங்கு நடந்த கருத்தரங்கில் கூறினார்கள். நான் நினைக்கிறேன் அவர்கள் மிலேனியம் பேசறியை கருத்தில் கொண்டு சொல்லி இருப்பார்கள் என. ஏனெனில் முழுத்தொகையும் லோன் எடுத்தால் தான் மிலேனியம் பேசறி என்று 3000$ தருவார்கள். அது திருப்பக் கட்டத் தேவையில்லை. அதைத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் போல் உள்ளது. அது கிட்டத்தட்ட நீங்கள் எடுக்கும் லோனில் 30%. நான் அக் கட்டுரையில் கிட்ட்டத்தட்ட 30% எண்டு குறிப்பிடாது விட்டு விட்டேன். மன்னிக்கவும்.

கனடாவில் உள்ள யோர்க் மற்றும் மக்மாஸ்ரருக்கு..அப்பிளிகேசன் புரஸஸ் பண்ணவும் பீஸ் எடுக்கினமே..அது உள்நாட்டு மாணவர்களுக்கும் இருக்கா..அல்லது வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் தானா..??! :?:

எனக்கு தெரிந்தவரையில் எல்லோருக்கும் பணம் அறவிடுகின்றார்கள். ஆனால் வெளிநாட்டு மாணவர்களுக்கு உள்நாட்டுமாணவர்களைவிட அதிகம். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னும் ஓசாப் கட்டத் தொடங்கவில்லை. இப்பவும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறன். முடிந்தளவு முழுத் தொகையும் எடுக்க முயற்சிக்க  வேண்டும் என்பது அங்கு நடந்த கருத்தரங்கில் கூறினார்கள். நான் நினைக்கிறேன் அவர்கள் மிலேனியம் பேசறியை கருத்தில் கொண்டு சொல்லி இருப்பார்கள் என. ஏனெனில் முழுத்தொகையும் லோன் எடுத்தால் தான் மிலேனியம் பேசறி என்று 3000$ தருவார்கள். அது திருப்பக் கட்டத் தேவையில்லை. அதைத்தான் அவர்கள் கருதி இருக்கிறார்கள் போல் உள்ளது. அது கிட்டத்தட்ட நீங்கள் எடுக்கும் லோனில் 30%. நான் அக் கட்டுரையில் கிட்ட்டத்தட்ட 30% எண்டு குறிப்பிடாது விட்டு விட்டேன். மன்னிக்கவும்.

இருக்கலாம். மிலேனியம் பேர்சரியாக (millenium scholarship) 3000$ (நீங்கள் சொன்ன மாதிரி 30% வரும்) கொடுப்பார்கள் அதை நீங்கள் திரும்ப கட்டத் தேவையில்லை ஆனால் வருமானமாக வருமான வரி (tax return) செய்யும் போது காட்ட வேண்டும் என நினைக்கிறேன். OSAP இலும் கழிவு தருவார்கள் ஆனால் 30% வராதெண்டு நினைக்கிறேன்.

நன்றி சபேஸ் அண்ணா தங்கள் தகவலிற்கு..

ஆமாம் 30% தவறான தகவல் என்று தான் நானும் நினைக்கிறேன்.  நான் முதல் இரு வருடங்களும் OSAP  எடுக்கவில்லை.  மூன்றாம் வருடம் OSAP எடுக்கவோ எடுக்காமல் விடவோ என இரு நிலையில் உள்ளேன். என்றாலும் 60வீதப் பணம் கட்டிவிட்டேன் (late payment தவிப்பதற்கு)

யாராவது  இதைப்பற்றி அனுபவம் உள்ளவர்கள் இங்கு பகிர்ந்து கொண்டால் எம்மைப் போலவுள்ள மாணவர்களுக்கு உதவும். :!:  Please don't give us inaccurate information about OSAP. :wink:

இக்கடன் தேவையில்லை எனினும் எடுக்க விரும்பினால்: :idea:

OSAP எடுத்து ஒரு சதமும் செலவளிக்காமல் சேமிப்புக்கணக்கில் வைப்பிலிடுவீர்களானால் OSAP எடுங்கள் எண்டே சொல்லுவேன். இரசிகை சொன்ன மாதிரி 3000$ millenium scholarship எடுக்கலாம் அத்துடன் grand எனச் சிறிய கழிவும் தருவார்கள் (அது உங்கள் பெறு பேறுகளைப் பொறுத்து மாறுபடும் என நினைக்கிறேன்). அதனால் படிப்பு முடிந்தவுடன் முழுக்கடனையும் திரும்பக்கட்டினா கொஞ்சம் மிஞ்சும். அதோடு படிப்பின் பின்னர் வருமானம் குறைவென்றாலும் interest relief க்கு பதியலாம். ஏற்றுக்கொண்டார்களானால் அரசாங்கமே அந்தக்கடனுக்கான வட்டியைக் கட்டும். (நீங்கள் அந்தக் காலப்பகுதிக்கு எதுவும் கட்டத்தேவையில்லை - அரசாங்கம் கட்டிய வட்டி திரும்பக் கட்டத்தேவையில்லை.

அப்படிப் பார்க்கும் போது இரசிகை முதலில் சொன்னது (எடுக்கக் கூடியளவை எடுத்தல்) 100% சரியெனலாம்.

அதைவிடுத்து, எடுத்து செலவு செய்வீர்களேயானால், தேவையில்லையெனில் OSAP எடுக்காதையுங்கோ எண்டே சொல்வேன்.

OSAP எடுக்காட்டீலும் உங்கள் பல்கலைக்கழகத்தில் bursary க்கு பதியலாம். earlya ஆ பதியிறது நல்லது. வெளியாட்கள் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கும் நன்கொடைகளிலிருந்தே இந்த உதவி வழங்கப் படுகிறது. அதனால் அவர்களின் நன்கொடையை பொறுத்து மற்றும் உங்கள் தேவையை விளக்கி நீங்கள் எழுதும் கடிதத்தைப்பொறுத்து தரும் தொகை மாறும். அத்துடன் கிழமைக்கு 2-3 மணித்தியாலங்களுக்கு வேலையும் செய்யலாம் (உங்கள் போக்கு வரத்து செலவுகளுக்கு காணும்) இதைப்பற்றி இரசிகைக்கு விளக்கம் தெரியலாம் என நினைக்கறேன்.

கனடாவில் உள்ள யோர்க் மற்றும் மக்மாஸ்ரருக்கு..அப்பிளிகேசன் புரஸஸ் பண்ணவும் பீஸ் எடுக்கினமே..அது உள்நாட்டு மாணவர்களுக்கும் இருக்கா..அல்லது வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டும் தானா..??! :?:

சுயிந்தன் சொன்ன மாதிரி எல்லாப் பல்கலைக்கழகமும் processing fee எடுப்பார்கள். இங்கு high school இல் இருந்து apply பண்ணும் போது சிறிய தொகைதான் கட்டிய ஞாபகம். வெளியால் இருந்து பண்ணம் போது 2-3 மடங்கு கூடுதலாக இருக்கும்.

(என்னண்டுதான் எல்லாரும் பந்தி பந்திய எழுதிறிங்களோ தெரியாது. இந்தக் கொஞ்சம் எழுதியே களைத்து விட்டேன் அத்துடன் நேரமும் நிறைய எடுக்குது. :( :oops: :roll: :( )

OSAP எடுத்து ஒரு சதமும் செலவளிக்காமல் சேமிப்புக்கணக்கில் வைப்பிலிடுவீர்களானால் OSAP எடுங்கள் எண்டே சொல்லுவேன்.

படிக்க காசு இல்லை என்று தானே தாறாங்கள்? பிறகு ஏன் அதை சேமிப்பில போடுறீங்கள்? :?: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க காசு இல்லை என்று தானே தாறாங்கள்? பிறகு ஏன் அதை சேமிப்பில போடுறீங்கள்? :?: :roll:

திருத்திப் போட்டேன் :(

உண்மைதான். வசதி இல்லாதவர்கள் படிப்பதற்கான வசதியாகத்தான் இக்கடனைத் தருகிறார்கள். தேவை இல்லாமலும் இந்த loan ஜ எடுப்பதா வேண்டாமா என்ற கேள்விக்குத்தான் பதில் எழுதினேன்.

இதை ஒரு scamming எண்டு சொல்ல முடியாது. திரும்பக்கட்ட வேண்டிய ஒரு கடன். முழு நேரமாகப் படிக்கிற காலத்திற்கு வட்டி இல்லை ஆனால் அதையும் சேர்த்து அதிக வட்டியாக பின்னர் கட்ட வேண்டும். சேமிப்பில் இட்டு வட்டி தொடங்கும் போது முழுவதையும் திரும்பக் கட்டினால் இலாபம் என்றே சொன்னேன். உதாரணத்திற்கு சில கடைகளில் கடனுக்கு பொருள் வாங்கினா 6 மாதம் வட்டி இல்லை 12 மாதம் வட்டி இல்லை என்பார்கள். ஆனால் அந்தக்காலம் முடிய 29 - 30 வீதம் வட்டி அறவிடுவார்கள். என்னிடம் பணம் இருந்தாலும் அந்தக்கடைகளில் கடனுக்கு வாங்கிவிட்டு வட்டி தொடங்க 1 நாள் இருக்கும் போது முழுவதையும் திரும்ப கட்டி விடுவேன் (ஆம் சில கடைகளில் processing fee எடுப்பார்கள் அது வட்டியை விட கூடுதலாக இருக்கும்).

Anyway, அது போலத்தான் இதுவும். கொஞ்சம் scamming தான் ஆனாலும் 100% scamming இல்லை. :roll: :( விடமாட்டிங்களே!!! :evil: :( :P

எனது அனுபவத்தில் சொல்கின்றேன். கடன் வாங்கமால் முடிந்தவரை சொந்த பணத்தில் படிப்பது தான் நல்லது. ஒரு வருடத்திற்கு உங்களுக்கு 5000 டொலர்ஸ் முடியுது என்றால் அவர்கள் உங்களுக்கு 10000 தருவார்கள். ஆகவே 5000 நீங்கள் வீண் செலவு செய்வீர்கள். நானும் அப்படித்தான் முதல் இருவருடங்களுக்கு மட்டும் கடன் எடுத்தேன். தேவைக்கு அதிகமாக தந்தார்கள். படிப்பு முடிந்தவுடன் interest relief என்ற ஒரு திட்டத்தின் கீழ் இருந்தேன். அதாவது உங்கள் வருமானம் 16000 டொலர்ஸ்க்கு குறைவாக இருந்தால் லோன் உடனே கட்டத்தேவையில்லை. ஆனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருமானத்தை கட்டி அதை புதுபிக்க வேண்டும். இப்படி ஒரு முறை நான் அவர்களுக்கு அனுப்பிய விபரங்கள் ஏதோ காரணத்தால் அவர்களிடம் போய் சேரவில்லை. ஆனால் நான் அனுப்பி விட்டேன் என்று நினைத்து அதைப்பற்றி கவலைப்படலை. நாட்டை விட்டு 4 மாதம் போயிட்டு திரும்பி வரும்போது வீட்டிற்கு கலொக்சன் நோட்டிஸ் தான் வந்திருந்தது.

ஒரு தரம் கலெக்சனுக்கு போனால் அவ்வளவு தான். கடைசி வரைக்கும் திருப்பி எடுக்க மாட்டார்கள். International student load போல் உதவாத கம்பனி ஒன்றுமே இல்லை. ஒரு இரு மாதத்ததிற்குள்ளே கலெக்சனுக்கு அனுப்பி விடுவார்கள். முழுத் தொகையையும் உடனே கட்டும்படி வற்புறுத்தினார்கள். பின்னார் அவர்களுடன் கதைத்து மாத முறையில் கட்டுவதற்கு சம்மதித்தார்கள். இப்போதும் கட்டிக் கொண்டு இருக்கின்றேன். :cry: :cry:

கடனை கட்ட நினைப்பவர்கள் கடைசி வரைக்கு தவணை முறைக்கு ஒப்புக் கொள்ளாதிர்கள். ஏனெனில் வட்டி தான் கட்டி கொண்டு இருப்பீர்கள். interest relief இருந்து கொண்டு காசை சேர்த்து ஒன்றாகவும் இரண்டாகவோ கட்டுவது தான் லாபம்.

மற்றும் நீங்கள் சொன்ன 40 வீதம் கழிவு தேவையென்றால் நீங்கள் 43000 எடுத்து இருக்கணும். உங்களுக்கு வரும் வேர்க்கர்ஸ் நல்லவர்கள் என்றால் 35000க்கும் கழிவு தருவினம். இந்த லொள்ளு பிடித்த லோனால் நல்லவோ நொந்து போய் எழுதுகின்றென். கேளுங்கள்.

  • தொடங்கியவர்

OSAP எடுக்காட்டீலும் உங்கள் பல்கலைக்கழகத்தில் bursary க்கு பதியலாம். earlya ஆ பதியிறது நல்லது. வெளியாட்கள் உங்கள் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கும் நன்கொடைகளிலிருந்தே இந்த உதவி வழங்கப் படுகிறது. அதனால் அவர்களின் நன்கொடையை பொறுத்து மற்றும் உங்கள் தேவையை விளக்கி நீங்கள் எழுதும் கடிதத்தைப்பொறுத்து தரும் தொகை மாறும். அத்துடன் கிழமைக்கு 2-3 மணித்தியாலங்களுக்கு வேலையும் செய்யலாம் (உங்கள் போக்கு வரத்து செலவுகளுக்கு காணும்) இதைப்பற்றி இரசிகைக்கு விளக்கம் தெரியலாம் என நினைக்கறேன்.

சபேஸ் அண்ணா உங்கள் தகவல்களுக்கு நன்றி. நீங்கள் சொன்னவ சரியே. சபேஸ் அண்ணா சொன்ன மாதிரி பல்கலைக்கழகத்தில் பேசறி எடுக்கலாம் ஆனால் அதற்கு நீங்கள் உங்களுக்கு எவ்வளவு செலவு எவ்வளவு வரவு என்ன என்ன பிரச்சினை எண்டு வடிவாக விளக்கமா எழுதி கொடுக்கணும். அப்படி எழுதி கொடுத்தால் மக்சிமம் 2000$ குள்ள தருவினம். எனக்கு அந்த பேசறி இதுவரை 800$ மேல வந்ததே இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு எண்ட சொந்த கதை சோகக் கதை எல்லாம் எழுதிக் கொடுத்தன். :( :cry:

ஒம்ம் குறிப்பிட்ட அளவு நேரம் வேலை செய்யலாம். அதோட பல்கலைக்கழகத்தில work study புரோகிராமாக்கு அப்பிளை பண்ணிணீங்கள் என்றால் பல்கலைக்கழகத்திலே வேலை செய்யலாம். அவர்கள் நீங்கள் எவ்வளவு மக்சிமம் சலறி எடுக்கலாம் எண்டும் குறிப்பிட்டு தருவார்கள்.

  • தொடங்கியவர்

ஆகா ரமா ரொம்ப நொந்துதான் போனீங்கள். உங்கள் தகவலுக்கு நன்றி, ஆமாம் எடுக்கும் போது தெரியாது. கட்டுறதை நினைத்தால் இப்பவே லோன் எடுக்க மனமில்லை. பட் வேற வழி?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.