Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் படைநகர்வு..?!

Featured Replies

திருமலைத்துறை முகத்தைப் பாதுகாக்க என்று சம்பூரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் தற்போது மட்டக்களப்பு- திருமலையை இணைக்கும்..வாகரை நோக்கிய புதிய படைநகர்வுக்கு முஸ்தீவு செய்வதாகவும்..தாம் புதிதாகக் கைப்பற்றிய இடங்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்களை கதிரவெளி மற்றும் வாகரை நோக்கி நடத்துவதாகவும்..இதில் பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே..சம்பூரையும் அதன் அண்டிய பிரதேசங்களையும் கைப்பற்றிய படையினர் திருமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை இரு கூறாக்கி உள்ளது போல..வாகரையைக் கைப்பற்றி..புலிகளை மட்டக்களப்புக்குள்ளும்..திரு

  • Replies 53
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"This is a severe breach of the ceasefire agreement with the Sri Lankan military taking LTTE-controlled areas," S. Puleedevan, head of the LTTE peace secretariat, told Reuters. "They are not honoring the ceasefire agreement. They are forcing it to the brink of collapse," he added. "On our side we are fully committed to it."

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்

புலிகள் ஏதோ இராஜதந்திரம் நோக்கித்தான் இப்படி இருக்கினமோ...இல்ல படையினரைக் குழப்ப இப்படிச் செய்யினமோ தெரியல்ல..! ஆனால் அப்பாவி மக்களின் துன்பங்களை இலகுவாக அவர்கள் எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை..! மக்களின் இழப்புக்களைக் குறைக்க புலிகள் கொமிற் பண்ண வேணும்..இல்ல புலிகளை மக்கள் ஒமிற் பண்ணிடுவினம்..எத்தினை தரம் மக்களும்..துன்பங்களைச் சுமந்திட்டு இடம்பெயருறது...பாவம் அந்த மக்கள்..நிர்கதியாகி...பலிக்கடா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் நீர் மக்கள் கட்சி என்று ஒன்று ஆரம்பித்தீர் என்றால் மக்கள் மக்கள் மக்கள் என்று மேடையில் வாய் கிழிய பேசலாம்.

  • தொடங்கியவர்

மக்களின் குரல் ஒலிக்க வேண்டும். புலிகளின் குரல் ஒலிப்பது போல..! அகதி முகாம்களிக்குள் அடைபட்டுப் போய் நிம்மதியிழந்து..ஒரு நேர உணவுக்கும் வழியில்லாமல்..அவஸ்த்தைப்படும

கடந்த சில வாரங்களாக யாழ் களத்தில் நான் வலியுறுத்தி வரும் சமாதான கோசமே அரச யுத்தத்தை எதிர் கொள்ள தமிழர் தரப்புக்கு இன்றைய இக்கட்டான நிலையில் உள்ள சாத்தியமான தந்திரோபாயம் என்பதையே இத்தலைப்புக்குள் எனது கருத்தாக வைக்கவிரும்புகிறேன்.

சமாதானம் எமது தரப்பால் வெறும் கோசமாக வைக்கப்படுவதில் இருந்து எமக்கு முன் உள்ள நியமான யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளவது என்பதே எம்முன் விடை காணவேண்டிய கேள்வி.

தமிழர் தரப்பு நோர்வே-இந்திய தரப்பின் ஊடாக புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை கோருவதே தமிழர் தேசத்தில் புதிய ஒரு சூழலை உடனடியாக உருவாக்கும். அல்லாது போனால் எமது மக்கள் தினம் தினம் அழிவது பற்றி சர்வதேச சமூகம் எந்த கரிசனையும் எடுக்காது.

''சர்வதேசமே பதில் சொல்'' என்று நாம் தொண்டை கிழிய கத்திக் கத்தி களைக்க போவதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி..

தலைமைப்பீடத்தை ஆதரித்து கருத்துசொல்வதானால் சொல்லும். இல்லை வாயை சும்மா வைச்சுக்கொண்டு இரும்..

இங்கே இருந்துகொண்டு சும்மா எல்லாரும் கதைக்கலாம்..

தாயகத்திலை மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே சாவதற்கு தம்மை அற்பணித்த தலைவருக்கு உம்முடைய இலவச ஆலோசனை எவ்வளவுக்கு பயன்படும் என்னு எனக்குத் தெரியவில்லை.. அது அவர்களுக்கு வேவையும் இல்லை..

தாயகத்திலை மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே சாவதற்கு தம்மை அற்பணித்த தலைவருக்கு உம்முடைய இலவச ஆலோசனை எவ்வளவுக்கு பயன்படும் என்னு எனக்குத் தெரியவில்லை.. அது அவர்களுக்கு வேவையும் இல்லை..

இங்கிலாந்தில இருந்து கொண்டு ஈழப்போராட்டத்தை முன்னெடுக்கிறாராம்...! போராட்டதுக்கு காசு குடுக்க ஏலாது... எங்கையாவது அகிம்சை வளியில பேரணி போராட்டங்கள் நடத்தினால் எல்லாம் போக மாட்டினம்... இலவசமாக ஆலோசனையும்... விமர்சனமும் மட்டும் வைப்பினம்... இதுதான் இப்பத்தைய புது வேசம்...!

  • தொடங்கியவர்

குருவி..

தலைமைப்பீடத்தை ஆதரித்து கருத்துசொல்வதானால் சொல்லும். இல்லை வாயை சும்மா வைச்சுக்கொண்டு இரும்..

இங்கே இருந்துகொண்டு சும்மா எல்லாரும் கதைக்கலாம்..

தாயகத்திலை மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காகவே சாவதற்கு தம்மை அற்பணித்த தலைவருக்கு உம்முடைய இலவச ஆலோசனை எவ்வளவுக்கு பயன்படும் என்னு எனக்குத் தெரியவில்லை.. அது அவர்களுக்கு வேவையும் இல்லை..

தலைமைப்பீடம் தன்னை யாரேனும் ஆதரிக்கனும் என்று காத்திருக்கிறதில்லை. அவைக்கு தெரியும் என்ன செய்யனும் என்பது. நீங்கள் தலைமைப்பீடத்துக்கு உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். வன்னியில் மக்கள் செய்வது போல..! தலைமைப் பீடத்தை இதற்குள் இழுக்காதேங்கோ. அந்தத் தகுதி இங்கு யாருக்கும் இல்லை..! :idea:

தலைமைப்பீடம் தன்னை யாரேனும் ஆதரிக்கனும் என்று காத்திருக்கிறதில்லை. அவைக்கு தெரியும் என்ன செய்யனும் என்பது. நீங்கள் தலைமைப்பீடத்துக்கு உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். வன்னியில் மக்கள் செய்வது போல..! தலைமைப் பீடத்தை இதற்குள் இழுக்காதேங்கோ. அந்தத் தகுதி இங்கு யாருக்கும் இல்லை..!

உமது நக்கல்களை கொன்ஞ்சம் நிப்பாட்டி போட்டு உனது உத்தையை கொன்ஞ்சம் கழுவினா உன் வீடு உருபடும்

யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வெளியேறியா போதும் உம்மை போன்ற குறையில் பிறந்த சில உருவங்கள் என்ன பேசியதுகள் என்ரு எல்லோருக்கும் தெரியும் :P :P

நக்கலை கொஞ்சம் குறைப்பு சனி பிடிச்ச நக்கல் பேசி பேசி வீட்டில் சிலதை கோட்டை விடாதே :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள்..

நாளை புலியின் பதுங்கலுக்கான காரணத்தை உலகம் புரிந்துகொள்ளுகின்றபோது.. தலைவன் வெற்றிகளை கொண்டுவந்து குவிக்கிறபோது.. உமது உந்த கோரமுகத்தை எந்த பற்றைக்குள்கொண்டுபோய் ஒளிக்கப்போறீர்?

உமக்கு அவமானம் காத்திருக்கிறது! பொறுத்திரும்..

புலி பகையைகண்டு ஒருபோதும் பதுங்கியதில்லை.. புலி பதுங்குவது பாய்வதற்குதான்! இதுதான் வரலாறு!

இல்லையேல் 35 வருடம் ஒரு விடுதலைப்போராட்டத்தை நடாத்தியிருக்க முடியாது!

  • தொடங்கியவர்

வெற்றி வரட்டும்..மக்கள் பாதுகாக்கப்படட்டும்..குருவிக

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

போர் அல்லது சமாதானம் என்னும் தனித்தனியான இரு வேறு பாதைகள் தொடங்கும் ஒரு முச்சந்தியில் எமது போராட்டம் தற்போது தடம் பதித்து நிற்கிறது. நாம் கடந்து வந்த பாதை பற்றி எமக்கு இருந்த தெளிவு தொடர்ந்து எந்த பாதையில் பயணிக்க போகிறோம் என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பநிலையில் இருந்து நாம் மீள எமக்கு உதவாதது ஏன்?

இதுவரை காலமும் யுத்தத்தால் நாம் ஈட்டிய முதலீடுகள் பத்திரமாக எமது அடுத்த சந்ததிக்கு முதுசமாக்கப்பட வேண்டுமெனின் சமாதானத்தின் கதவுகளை நாம் அகல திறக்க வேண்டிய வேளை இது.

தமிழீழம் எனும் தேச உருவாக்கத்துக்கு யுத்தமூலம் செய்யப்பட வேண்டிய சத்திரசிகிச்சை அனைத்து செய்தாகிவிட்டது. குழந்தையை வெளியே எடுப்பதற்கு மிகுந்த பொறுமையும் அமைதியுமே இப்போது எமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

அது ஒரு நீண்ட வரலாற்றுப்பணி. அதற்குரிய முன்நிபந்தனைகளை ஆயுதப்போராட்டம் மூலம் நிறைவேற்றி முடிதாயிற்று. அடுத்த களத்தில் நாம் சமாதானம் என்ற போர் முரசை முழங்கி உலகத்தின் கவனத்தை எமக்கு சார்பாக திருப்பவேண்டிய காலகட்டம்.

சிங்களம் எமக்கெதிரான யுத்தத்தில் மட்டுமல்ல சமாதானத்திலும் தோல்வியை சந்திக்க வைக்கவேண்டும்.ஒரு அரசியல் சமாதான தீர்வுக்கு ஊடாக எமது இருப்பு காப்பாற்றப்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. அத்தீர்வு எமது காலத்தில் கிட்டவேண்டும். அதனூடாக ஒரு அரசியல் போராட்டத்துக்குரிய குறைந்தபட்ச தமிழ் மக்கள் தொகை காப்பாற்றப்படும்.

மேற்கூறிய நிபந்தனைகளை இன்று நிராகரிப்போமால் எமது இனம் இலங்கை தீவில் முற்றாக துடைத்து அழிக்கப்படும் அவலத்துக்கு உள்ளாவோம்.

ஆக சிங்களத்துக்கு எதிரான சமாதான யுத்தத்தை தீவிரமாக முடுக்கிவிட்டு சர்வதேசத்தில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தி எமது தேச இருப்பபை நிலைநாட்டுவோம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளுக்கு கடல்வழித்துணைக்காக இந்து சமுத்திரத்தில் நிலைகொண்டுள்ள பிரித்தானிய போர்கப்பல்கள் தமது எண்ணிக்கையை மேலும் இரண்டு அதிகரித்துள்ளது. அந்த கடல் பிராந்தியத்தில் இந்திய கடற்படைகளுடன் இணைந்த கூட்டு வேலைத்திட்டதின் ஒரு பகுதி நிறைவேற்றத்துக்கே மஹிந்த அவசரமாக பிரித்தானியா வந்ததாக தற்போது தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் முன்மொழிந்த புலிகளுக்கு எதிரான சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் மஹிந்த சிந்தனைக்குள் பின் கதவால் எப்படி வந்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றி வரட்டும்..மக்கள் பாதுகாக்கப்படட்டும்..குருவிக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருவருக்கும் அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால் வேறுவேறு கோணங்கள்தான் தெரியும்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் வாழும் அகதிகளுக்கு இந்தச் சமாதானப் பூச்சாண்டி விளங்காது. சம்பூரை அடிச்சுப்பிடிக்க வேணும் எண்டது மட்டும்தான் ஒரே நோக்கமாகத் தெரியும்.

வன்னியிலயே சனம் புறுபுறுத்துக்கொண்டுதான் இருக்கு.

நிச்சயமாக தலைமையின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் வித்தியாசமுண்டு.

ஆனால் எனக்கு ஒன்று விளங்கவில்லை. எடுத்ததுக்கெல்லாம் ஜெயசிக்குறு, ஓயாத அலை முறியடிப்பு மற்றும் யாழ்ப்பாண இடப்பெயர்வு எல்லாத்தையும் உதாரணம் காட்டி வாதிடுறதுதான் அது.

அப்பவும் உப்பிடித்தான் கனபேர் சொன்னவை, பிறகு வாயடைச்சவை என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இப்பவும் போராட்டம் அந்தக்கால நிலையிலதான் இருக்கோ எண்ட ஐயம் எனக்கு வருது. திரும்பவும் யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இழப்பும் பிறகு முல்லைத்தீவு மாதிரி ஒரு அடியும் ஜெயசிக்குறு மாதிரி அவனின்ர ஒரு முன்னேற்றமும் பிறகு ஓயாத அலைகள் தாக்குதலும் பிறகு இன்னொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் அதுவும் அஞ்சு வருசம் இழுபட்டு திரும்பவும் இதேமாதிரி ஒரு நிலையிலவந்து நாங்கள் கருத்துச் சண்டை பிடிக்கிற நிலையும் இனிமேல் வந்து.......

அப்பப்பா! எல்லாம் ஒரு சுழற்சிதானுங்கோ.

வரலாறு திரும்பத்திரும்ப நடக்கிறதெண்டு சொல்லிறதுதான். அதுக்காக இப்பிடியே சுழண்டு கொண்டிருக்க ஏலுமோ?

தலைமைப்பீடம் தன்னை யாரேனும் ஆதரிக்கனும் என்று காத்திருக்கிறதில்லை. அவைக்கு தெரியும் என்ன செய்யனும் என்பது. நீங்கள் தலைமைப்பீடத்துக்கு உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். வன்னியில் மக்கள் செய்வது போல..! தலைமைப் பீடத்தை இதற்குள் இழுக்காதேங்கோ. அந்தத் தகுதி இங்கு யாருக்கும் இல்லை..!

உமது நக்கல்களை கொன்ஞ்சம் நிப்பாட்டி போட்டு உனது உத்தையை கொன்ஞ்சம் கழுவினா உன் வீடு உருபடும்

யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வெளியேறியா போதும் உம்மை போன்ற குறையில் பிறந்த சில உருவங்கள் என்ன பேசியதுகள் என்ரு எல்லோருக்கும் தெரியும் :P :P

நக்கலை கொஞ்சம் குறைப்பு சனி பிடிச்ச நக்கல் பேசி பேசி வீட்டில் சிலதை கோட்டை விடாதே

ஆகா என்னது வீட்டில் வினித் விரிவாய் சொல்லுங்கோவன் :lol::lol::lol::lol: :P :P

  • தொடங்கியவர்

ஒவ்வொருவருக்கும் அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால் வேறுவேறு கோணங்கள்தான் தெரியும்.

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் வாழும் அகதிகளுக்கு இந்தச் சமாதானப் பூச்சாண்டி விளங்காது. சம்பூரை அடிச்சுப்பிடிக்க வேணும் எண்டது மட்டும்தான் ஒரே நோக்கமாகத் தெரியும்.

வன்னியிலயே சனம் புறுபுறுத்துக்கொண்டுதான் இருக்கு.

நிச்சயமாக தலைமையின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் வித்தியாசமுண்டு.

ஆனால் எனக்கு ஒன்று விளங்கவில்லை. எடுத்ததுக்கெல்லாம் ஜெயசிக்குறு, ஓயாத அலை முறியடிப்பு மற்றும் யாழ்ப்பாண இடப்பெயர்வு எல்லாத்தையும் உதாரணம் காட்டி வாதிடுறதுதான் அது.

அப்பவும் உப்பிடித்தான் கனபேர் சொன்னவை, பிறகு வாயடைச்சவை என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இப்பவும் போராட்டம் அந்தக்கால நிலையிலதான் இருக்கோ எண்ட ஐயம் எனக்கு வருது. திரும்பவும் யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இழப்பும் பிறகு முல்லைத்தீவு மாதிரி ஒரு அடியும் ஜெயசிக்குறு மாதிரி அவனின்ர ஒரு முன்னேற்றமும் பிறகு ஓயாத அலைகள் தாக்குதலும் பிறகு இன்னொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் அதுவும் அஞ்சு வருசம் இழுபட்டு திரும்பவும் இதேமாதிரி ஒரு நிலையிலவந்து நாங்கள் கருத்துச் சண்டை பிடிக்கிற நிலையும் இனிமேல் வந்து.......

அப்பப்பா! எல்லாம் ஒரு சுழற்சிதானுங்கோ.

வரலாறு திரும்பத்திரும்ப நடக்கிறதெண்டு சொல்லிறதுதான். அதுக்காக இப்பிடியே சுழண்டு கொண்டிருக்க ஏலுமோ?

நண்பரே ஆண்டாண்டுகளாக..சொந்த தேசத்துக்கு அப்பால்..அனுபவத்தால் அன்றி..வெறும் செய்திகளால் வளர்க்கப்பட்ட சிலரினது பார்வைகளில்...பல கோணங்கள் இருக்க வாய்ப்பில்லை. உங்கள் கருத்து அவர்களைச் சிந்திக்க வைத்தால் நலம்..! :wink: :idea:

ஆனால் எனக்கு ஒன்று விளங்கவில்லை. எடுத்ததுக்கெல்லாம் ஜெயசிக்குறு, ஓயாத அலை முறியடிப்பு மற்றும் யாழ்ப்பாண இடப்பெயர்வு எல்லாத்தையும் உதாரணம் காட்டி வாதிடுறதுதான் அது.

அப்பவும் உப்பிடித்தான் கனபேர் சொன்னவை, பிறகு வாயடைச்சவை என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இப்பவும் போராட்டம் அந்தக்கால நிலையிலதான் இருக்கோ எண்ட ஐயம் எனக்கு வருது. திரும்பவும் யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இழப்பும் பிறகு முல்லைத்தீவு மாதிரி ஒரு அடியும் ஜெயசிக்குறு மாதிரி அவனின்ர ஒரு முன்னேற்றமும் பிறகு ஓயாத அலைகள் தாக்குதலும் பிறகு இன்னொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் அதுவும் அஞ்சு வருசம் இழுபட்டு திரும்பவும் இதேமாதிரி ஒரு நிலையிலவந்து நாங்கள் கருத்துச் சண்டை பிடிக்கிற நிலையும் இனிமேல் வந்து.......

அப்பப்பா! எல்லாம் ஒரு சுழற்சிதானுங்கோ.

வரலாறு திரும்பத்திரும்ப நடக்கிறதெண்டு சொல்லிறதுதான். அதுக்காக இப்பிடியே சுழண்டு கொண்டிருக்க ஏலுமோ?

அப்ப நீண்டகாலமாக பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தமும் ஏற்கனவே நடந்தது என்கிறீர்களா...????

ஒரு போதும் இல்லாது இப்போது புலிகள் மௌனமாக இருக்க சரியான காரணம் இருக்கு. என்பதை யாராவது இங்கு சுட்டிக்காட்டி ஒரு பிரதேசம் விடப்பட்டால், அது போல பெரிய பிரதேசத்தை கைப்பற்ற முடிந்த புலிகளுக்கு முடியாதது எண்று எதுவும் இல்லை என்பதை இங்கு சொல்லவந்தால், நீங்கள் உங்கள் கற்பனை வளத்தை ஏன் மெருகேற்றுகிறீர்கள்.... முட்டையில் மயிர் புடுங்கிறதைப்போல...

எதிரி திட்டமிட்ட ரீதியில் ஒரு தாக்குதல் திட்டத்தை ஒழுங்கு செய்து தனது படை பலத்தை ஒரு இடத்தில் குவித்து தாக்குதல் செய்கின்றான்... அப்படியானால் அவன் புலிகளை எதிர்த்தாக்குதலுக்கு இளுத்து அழிப்பதுதான் அவனது நோக்கத்தில் முக்கியமான ஒண்று... அதில் சிக்கி புலிகள் அழியவேணும் என்பதா உங்கள் நோக்கம்...???

எதிரியின் பலவீனங்களை பார்த்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தி எதிரியை பலவீனப்படுத்துவது ஆயுதங்களை பெறுவதும் மனவளவில் பலவீனப்படுத்துவதும் பின்னர் பின்வாங்குவதும் புலிகளின் பிரதான நடவடிக்கைகள் எண்றாலும். புலிகள் கைப்பற்றிய பிரதேசங்களை வைத்திருக்க மாட்டார்கள் என்பதும். அது முடியாத்தது அல்ல எண்று நிறூபித்தும் இருக்கிறார்கள்... என்பதைதான் நீங்கள் குறிப்பிட்ட விடயத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள்.... தேவை இல்லாமல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை...!

நீங்கள் வளமையாக வளமான கருத்துக்களை சொல்பவர் என்பதால் உங்களுக்கு பதில் அளிக்க விரும்பினேன்.... சிலரை போல விழுந்த மாட்டில் குறிசுட முயல்பவர் நீங்கள் இல்லை என்பதாலும்....

ஒரு சந்தேகம், நல்லவன் சுண்டல் போன்றவர்கள் உட்பட பலர் இங்கு கேக்கிறார்கள் நாட்டில இடம்பெயர்ந்து மரத்துக்கு கீழ இருக்கிற சனத்தோடை அரசியல் இராஜதந்திரம் பேச முடியாது. இடங்களை இழக்கிறம் என்ன நடக்குது என்று?

ஊரில இடம் பெயர்ந்தவை உங்களுக்கு அறிவிச்சவையா இதுக்கு ஒருக்கா விளக்கம் கேட்டு சொல்ல சொல்லி இல்லாட்டி மரத்துக்கு கீழ இருந்து அவதிப்படுறவை யாழ்களத்தை வாசிச்சு அறிஞ்சு கொள்ளுவினமோ?

ஊரில இருக்கிறவையின்ரை அரசியல் இராஜதந்திர இராணுவ சந்தேகங்களை தீர்க்கிறதுக்கு புலத்தில இருக்கிறவை ஆய்வு செய்ய சொல்லி கேட்கப்பட்டிருக்கா?

ஏன் முல்லைத்தீவு ஜெயசுக்குரு ஆனையிறவு என்று புலம்புறியள் புடுங்குபடுறியள்.

புலத்தில இருக்கிற எருமையளை தாயகத்தில இருக்கிற மக்களுக்கு தெளிவு படுத்திற ஆய்வு செய்ய சொல்லி யார் கேட்டது? அடுத்ததாக புலிகள் அது செய்யேல்லை இது செய்யேல்லை அப்படி செய்து போட்டாங்கள் இப்படி செய்து போட்டாங்கள் என்று பினாத்துறியள். என்ன வீடு கட்ட காசு குடுத்தனீங்கள் கொந்துராத்துக்காரர் சொத்தியா கட்டிப்போட்டாங்கள் சின்னனா கட்டி போட்டாங்கள் பிந்திக்கட்டிப்போட்டாங்கள் வேகமாக கட்டிறாங்கள் இல்லை என்ற நினைப்போ?

புலத்தில இருக்கறவை எல்லாரையும் கேட்டுக் கொண்டது மக்களின் அவலத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லுங்கோ. சிறீலங்க இனவாத அரசின் அடக்கு முறைகள் இன அழிப்புகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவாங்கோ என்று. ஆனா இங்கை நடக்கிற கருத்துப்பதிவுகள் எல்லாம் முற்றிலும் வேறு கேணத்தில் தான் இருக்கு:

-1- ஓடுறான் ஓடுறான் அடியடா எண்டதை வைச்சு கொக்கரிச்சியள்.. எதிர்வு கூறினியள் அதை பிடிக்கிறம் புடுங்கிறம் இந்தா பார் எண்டு

-2- ஏன் அடிக்கேல்லை அறிக்கை விடுறாங்கள் பின்வாங்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைக்கிறியள்

-4- அந்த டிவிசன் இந்த டிவிசன் ஆட்டிலறி ஆனையிறவு எண்டு ஆய்வு செய்வியள்

-5- சங்கரி டக்கிளஸ் எண்டு வசைபாடி திருப்த்திப்படுறியள்

இதுகளாலை யாருக்கு என்ன லாபம்?

தாயகத்தில அவதிப்படுற மக்களில கரிசனைப்பட்டு புலத்தில இருந்து கொண்டு களத்தில நிக்கிற புலிகளிடம் கேள்வி கேக்கிறயளா? ஏன் நீங்கள் வாழுற சர்வதேசத்தை நோக்கி கேள்வி கேக்கிறியள் இல்லை?

ஏன் உங்கள் விரக்த்தி ஏமாற்றம் சர்வதேசம் நோக்கி திரும்புது இல்லை?

எதை சந்தேகப்படுகிறீயள் புலிகள் அந்த மக்களுக்கான உதவிகளை செய்யமாட்டார்கள் என்பதையா...???

இல்லை புலிகள் இளந்த இடங்களை மீட்க்க மாட்டார்கள்... அவர்களுக்கு அந்த திறன் இல்லை என்பதையா..?? எண்டதை முதலில் தெளிவு படுத்துங்கோ...!

புணர்வாழ்வுக்களகத்தை விடுங்கோ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டமிடல், நடவடிக்கைகள் என்ன என்பதை பார்த்தபின்ன இந்த கேள்விகளை கேக்க பழகுவது நல்லது...!

இடம்பெயர்ந்த உடனேயே உதவிகள் கிடைக்க வேணும் என்பது முடியக்கூடியதா...???சில மாதங்களுக்கு முன்னர் புலிகள் அந்த மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயண்றதை இங்கை பலபேர் மக்களை இந்தியாபோக தூண்டுவதாய் விமர்சித்ததை மறந்து விட்டீர்களா..????

நீரும் எழுதவேணும் கேள்வி கேக்க வேணும் எண்டதுக்கா விளக்கெண்ணையள் மாதிரி எழுத தொடங்கி விட்டீர் ஏதோட நடத்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல,

"முன்பும் புலிகள் இதைவிட அதிக இக்கட்டான நிலையைச் சந்தித்த காலங்களில அதிலிருந்து மீண்டு வந்தார்கள். எனவே இப்போதும் மீண்டு வருவார்கள்" என்ற கோணத்தில் சொல்லும்போது அந்த இக்கட்டான காலநிலையாக யாழ்ப்பாணம் விடுபட்ட காலத்தையும் ஜெயசிக்குறு வெற்றியடைந்து வன்னியை விழுங்கி நின்ற காலத்தையும் சுட்டிக் காட்டலாம்.

ஆனால் இங்கே சிலரின் கருத்து எப்படி எனக்குப் புரிகிறதென்றால், யாழ்ப்பாணம் போல லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் ஒரு பிரதேசத்தைவிட்டு முற்றாக வெளியேறி ஆண்டுக்கணக்கில் அகதிகளாக வாழ்வதையும் (இப்போதைய இடப்பெயர்வே அரை இலட்சத்தைத் தாண்டிவிட்டது) பெரியதொரு பிரதேசத்தைக் கைவிட்டு போராளிகள் பின்வாங்குவதையும் இன்றைய நிலையில் ஒரு ராஜதந்திரமாகச் சொல்கிறார்கள்.

அன்று யாழ்ப்பாணம் விட்டுவிட்டு வந்தது முற்றுமுழுதாக இயலாமையால். 'அன்று யாழ்ப்பாணத்தைத் தக்க வைத்திருக்கலாம், ஆனால் ராஜதந்திரமாக விட்டுவிட்டு வந்தோம்' என்று இன்று கதைவிட முடியாது. அதுபோல ஜெயசிக்குறு இராணுவம் முன்னேறி வன்னிப்பிரதேசங்களைக் கைப்பற்றியதுகூட புலிகளின் கைகளை மீறிய நிலையில்தான். இயலுமானவரை தடுத்தார்கள், கடும் இழப்பை ஏற்படுத்தினார்கள், ஆனால் தக்க சமயங்களில் பின்வாங்கினார்கள்.

பின் எல்லாம் சரியாக வந்தபோது தாக்கி நிலங்களை மீளக்கைப்பற்றினார்கள்.

இன்றுள்ள நிலைமை அப்படியில்லை. இது இயலாமையால் பின்வாங்கவில்லை. தமது இராணுவப்பலத்தால் இராணுவம் முன்னேறி நிலங்களைப் பிடிக்கவில்லை. ஆனால் இன்றும் முன்புபோல பெரிய பிரதேசத்தை விட்டுவெளிறினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?

சம்பூரில் இப்போதுவரை பின்வாங்கியது சரி. அதுவொரு பிரச்சினையே அன்று. இராணுவம் தொடர்ந்தும் முன்னேறி வெருகல் வரையாவது கட்டுப்படுத்த முற்படுவான். அதையும் விட்டுக்கொண்டிருந்தால் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக்கு இடம்பெயர்ந்த நிலைக்கு எமது போராட்டம் போய்விடும். யாழ்ப்பாண இடப்பெயர்வு உதாரணங்கள் ஊடாக சிலர் இப்படியொரு நிலைக்கு எம்மை ஆயத்தப்படுத்துகின்றனர். உண்மையிலேயே அப்படியொரு பெரிய இட இழப்பையும் இடப்பெயர்வையும் முந்தைய உதாரணத்தைச் சொல்லி நியாயப்படுத்துகின்றனர்.

"இங்கே புலிகள் உண்மையில் பலமிழந்துவி்ட்டார்கள், அவர்களால் இனி வெல்லவே முடியாது, அழித்தொழிக்கப்படப் போகிறார்கள்" என்று யாராவது சொன்னார்களா? மாறாக புலிகளின் பின்வாங்கல் மட்டில் ஒரு விசனத்தை வெளியிட்டார்கள். அவர்களை 'ரத்வத்த' ரேஞ்சில் நினைத்துக்கொண்டு, ' யாழ்ப்பாணம் விட்ட போதும் நீங்கள் இப்படித்தான் சொன்னீர்கள். பிறகு மூக்குடைபட்டீர்கள்' என்று சொல்வது எப்படியிருக்கிறது?

இப்போதுள்ள நிலையிலிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னேடுப்பது பற்றியல்லாவா நாங்கள் கற்பனை கண்டுகொண்டிருக்கிறோம். சரி, பேச்சுக்காக, குறைந்தபட்சம் வெருகல் வரை இராணுவம் முன்னேறி நிலங்களைப் பிடித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை இழந்ததுபோல ஓர் இழப்பு. அந்தநிலையிலிருந்து நாங்கள் மீண்டு போராட்டம் நடத்தும்போது மீண்டுமொரு முறை இதேபோல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்து சமாதானப் பூச்சாண்டி நடத்த வேண்டிய தேவை வராதா? நிச்சயமாக நாங்கள் சிலவருடங்கள் பின்நோக்கிப் போனதாகத்தானே அர்ததம்?

இங்கே "இந்த உதாரணங்கள், நிலப்பகுதியை இழப்பதை நியாயப்படுத்தும் நோக்கிலானவை அல்ல" என்று யாராவது சொன்னால் நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். அந்த உதாரணங்கள் தொடர்பிலான என் விளக்கம் மட்டில் தவறை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரைலட்சம் மக்களின் இடப்பெயர்வையும் துன்பங்களையும் யாழ்ப்பாண இடப்பெயர்வோடு ஒப்பிடுவதும், இப்பின்வாங்கலும் யாழ்ப்பாணம் போல ஒரு தந்திரப்பின்வாங்கல்தான் என்று சொல்வதும் உண்மையில் எனக்குப் புரியவில்லை. அக்கருத்துக்களில் இருந்து அம்மக்கள் இன்னும் பலகாலம் இப்படி அகதிகளாக இருக்க வேண்டியிருக்கும் என்ற விளக்கத்தைத்தான் பெற்றுக்கொண்டேன். அத்தோடு இன்னும் நிலஇழப்புக்களையும், பெரியதொரு இடப்பெயர்வையும் நியாயப்படுத்துவதாகவும் புரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல எமது போராட்டப் பாதையில் நாங்கள் பலவருடங்கள் பின்னோக்கிப் போவோம் என்பதுதான் இந்தநிலையில் என் கருத்து.

அப்படியொரு நிலைவந்தால் அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழப்போவதைத்தவிர வேறு வழியில்லை (பெருமளவு யாழ்ப்பாணத்தார் எடுத்த் முடிவுபோல).

இப்போது தாம் கைப்பற்றிய பகுதிகளில் இராணுவம் முஸ்லீம், சிங்கள மக்களைக் குடியேற்றினால் அது மிகப்பெரிய பின்னடைவாக எமது போராட்டத்துக்கு அமையும்.

இவைதொடர்பில் கரிசனையுள்ள ஒரு சாதாரணத் தமிழன், புலிகளின் தொடர்ச்சியான பின்வாங்கலைச் சாடுவதோடு, உடனடியாக அப்பகுதிகளை மீட்க வேண்டுமென்பதைத்தான் தன் கருத்தாகச் சொல்வான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான்,

என் முதன்மைக் கருத்து மரங்களுக்குக் கீழ இருக்கிற மக்களின்ர அரசியல் விழிப்புணர்ச்சி குறித்தன்று.

பின்வாங்கிய புலிகள்மேல விசனம் தெரிவிப்பதுமன்று.

ஆனால் நடந்துகொண்டிருந்த சண்டையையில் நான் இரண்டுவரி எழுதவேண்டி வந்துவிட்டது.

நான் எழுதியது என்னவென்றால், 'யாழ்ப்பாண இடப்பெயர்வு, பின் முல்லைத்தீவு அடி, ஜெயசிக்குறுவில் இராணுவத்தின் வெற்றி, பிறகு புலிகளின் நிலமீட்பு' என்பவற்றை உதாரணம் காட்டி தற்போதைய பிரச்சினைக்குக் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தது பற்றியது.

அதைச் சொல்ல வெளிக்கிட்டு சுத்திவளைச்சு வேற எங்கயோ போயிட்டுது.

இவற்றால் எந்த இலாபமுமில்லை என்பதைத் தெளிவாகவே உணர்கிறேன்.

  • தொடங்கியவர்

அதுமட்டுமில்ல...

மக்கள் அழிவுகளைக் காட்டி புகலிடமெங்கும் போராடிச்சினம்..இப்ப தமிழீழத்தின்ர பகுதியை எதிரி மக்கள இடம்பெயர வைச்சு..தரைமட்டமாக்கி..கைப்பற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவன் விடுதலைப்போராட்டத்தில் வரும் பின்னடைவுகளின் போதும் ராஜதந்திர பின்வாங்களின் போதும் எமது மக்கள் பலர் போராட்டத்தின் பால் நம்பிக்ளை இழக்கிறார்கள். உதாரணம் யாழ் பின்வாங்கல். அதனால் தான் உடனடியாக முல்லைத்தீவில் தாக்குதல் நடாத்தப்பட்டது. காரணம் மக்களாகிய நீங்கள் தெம்பாக இருந்தால்தான் போராட்ம் முன்னெடுக்கலாம். ஆனால் இப்பொதும் முன்பு போல் மக்கள் தமிழழுழ விடுதலைப்புலிகளின் ராஜதந்திர மௌனத்தை புரிந்து கொள்ளாமல் விசனமடைய தொடங்கி இருக்கிறார்கள். சான் தேல் சொன்னது போல் மக்கள் சோர்வடைந்தால் போராட்டம் தொய்வடையும். அதற்காக இப்போது மக்களை திருப்திபடுத்த உடன்படிக்கையை மீறி தாக்குதல் நடாத்த முடியாது. அதனால் தான் முன்பு நடந்ததை அறிக்ளையாக சொல்லி மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். இந்த காலகட்டத்pதல் இது தான் செய்ய முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.